இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்

(இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (Indian Union Muslim League) இந்தியாவின் முஸ்லிம் தேசியவாத அரசியல் கட்சி. இக்கட்சி வடக்கு மற்றும் தெற்கு கேரளாவின் பகுதிகளில் செல்வாக்கு பெற்றுள்ள கட்சியாகும்.இந்தியாவில் முஸ்லிம் மக்களுக்காக 1906-ல் நவாப் சலீம் முல்லாகான் "அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்"கை ஆரம்பித்தார். அவருக்கு பின்னர் முகமது அலி ஜின்னா , அதனை நடத்தி வந்தார். பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின், இதன் தலைவரானார் காயிதே மில்லத்.

Indian Union Muslim League (IUML)
இந்திய ஒன்றிய இஸ்லாமிய கூட்டிணைவு
தலைவர்கே. எம். காதர் மொகிதீன்
நிறுவனர்நவாப் சலீம் முல்லாகான்
மக்களவைத் தலைவர்ஈ. டி. மொகமது பசீர்
மாநிலங்களவைத் தலைவர்அப்துல் வஹாப்
தொடக்கம்10 மார்ச்சு 1948 (76 ஆண்டுகள் முன்னர்) (1948-03-10)
தலைமையகம்மரைக்காயர் லெப்பை தெரு,சென்னை.
இளைஞர் அமைப்புமுசுலிம் இளையோர் லீக்
பெண்கள் அமைப்புமுசுலிம் பெண்கள் லீக்
அரசியல் நிலைப்பாடுவலது
இ.தே.ஆ நிலைமாநில கட்சி [1]
கூட்டணிஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா)மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி (தமிழ்நாடு)
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
3 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
1 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
()
15 / 140
கேரளா
தேர்தல் சின்னம்
IUML Election Symbol- ஏணி
இணையதளம்
indianunionmuslimleague.in
இந்தியா அரசியல்

சுதந்திர இந்தியாவில்

இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குப் போகாமல் இந்தியாவில் தங்கிவிட்டதால், அவர்களுக்காக கட்சி பெயரில் இருந்த "அகில" என்பதை நீக்கிவிட்டு 1949-ல் "இந்திய யூனியன் முஸ்லிம் லீக்" என்று மாற்றினார் காயிதே மில்லத். இதன் முதல் மாநாடு சென்னையில் உள்ள ராஜாஜி ஹாலில் நடந்தது., பெரும்பாலும் இசுலாமியர்கள் பங்கு வகிக்கும் இந்திய அரசியல் கட்சியாகும். தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் அதிக முனைப்புடன் செயல்படுகிறது.

தலைவர்கள்

காயிதே மில்லத்துக்கு பின்னர் இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் அகில இந்தியத் தலைவராக இப்ராஹிம் சுலைமான் சேட், பனாத்வாலா, முன்னாள் மத்திய இரயில்வே துறை இணை அமைச்சர் ஈ. அகமது ஆகியோர் பணியாற்றினர். தற்போது கே. எம். காதர் மொகிதீன் அகில இந்தியத் தலைவராக உள்ளார்.[2][3]

தமிழகத்தில் அப்துல்சமது, கே. எம். காதர் மொகிதீன் ஆகியோர் தமிழக தலைவராக பணியாற்றினர்.

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல்

1952 ஆம் ஆண்டு முதல் 1967 வரை சட்ட மன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள்

வருடம்வெற்றி பெற்றவர்வெற்றி பெற்ற தொகுதி
1952கண்ணியமிகு காயிதே மில்லத் முகம்மது இசுமாயில்சென்னை மாகாண சட்ட சபை
1967ஏ.ஜி. சாகிப் என்கிற அப்துல் கபூர் சாகிப்ராணிப்பேட்டை
1967ஹபிபுல்லா பெய்க்துறைமுகம்
1967எம். எம். பீர்முஹம்மதுமேலப்பாளையம்

தமிழ் நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்

1971 ஆம் ஆண்டு முதல் 2021 வரை சட்ட மன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள்

வருடம்வெற்றி பெற்றவர்வெற்றி பெற்ற தொகுதிசின்னம்/ஆதரவு
1971அப்துல் ஜப்பார் (அரசியல்வாதி)அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)ஏணி
1971எம். ஏ. அபுசாலிபுவனகிரிசுயேட்சை (மு.லீக்-திமுக ஆதரவு)
1971கே. ஏ. வகாப்ராணிப்பேட்டைசுயேட்சை (மு.லீக்-திமுக ஆதரவு)
1971அப்துல் லத்தீப் (அரசியல்வாதி)வாணியம்பாடிசுயேட்சை (மு.லீக்-திமுக ஆதரவு)
1971முகமது கோதர் மைதீன்மேலப்பாளையம்உதயசூரியன் (மு.லீக் ஆதரவு)
1971திருப்பூர் ஏ. எம். மைதீன்துறைமுகம்சுயேட்சை (மு.லீக்-திமுக ஆதரவு)
1977அப்துல் லத்தீப் (அரசியல்வாதி)வாணியம்பாடிசுயேட்சை (லீக் ஆதரவு)
1984அப்துல் சமதுதிருவல்லிக்கேணிஉதயசூரியன்
1984வி. எஸ். டி. சம்சுல் ஆலம்பாளையங்கோட்டைஉதயசூரியன்
1989அப்துல் லத்தீப் (அரசியல்வாதி)சேப்பாக்கம்உதயசூரியன் (மு.லீக்-திமுக ஆதரவு)
1989பி. அப்துல் சமதுவாணியம்பாடிஉதயசூரியன் (மு.லீக்-திமுக ஆதரவு)
1989எம். முகம்மது சித்தீக்பூம்புகார்உதயசூரியன் (மு.லீக்-திமுக ஆதரவு)
1989ஹமீதுஇப்ராஹிம்கடலாடிஉதயசூரியன் (மு.லீக்-திமுக ஆதரவு)
2006அப்துல் பாசித்வாணியம்பாடிஉதயசூரியன் (மு.லீக்-திமுக ஆதரவு)
2006கலீலுர் ரஹ்மான்அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)உதயசூரியன் (மு.லீக்-திமுக ஆதரவு)
2016கே. ஏ. எம். முகம்மது அபூபக்கர்கடையநல்லூர்ஏணி

நாடாளுமன்ற உறுப்பினர்கள் (மக்களவை)

1952 ஆம் ஆண்டு முதல் 2021 வரை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள்

வருடம்வெற்றி பெற்றவர்வெற்றி பெற்ற தொகுதிகள்சின்னம்/ஆதரவு
1967எஸ். எம். முகம்மது செரிப்இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிசுயேட்சை
1971எஸ். எம். முகம்மது செரிப்பெரியகுளம் மக்களவைத் தொகுதிஏணி
2004கே. எம். காதர் மொகிதீன்வேலூர் மக்களவைத் தொகுதிஉதய சூரியன்
2009எம். அப்துல் ரஹ்மான்வேலூர் மக்களவைத் தொகுதிஉதய சூரியன்
2019நவாஸ் கனிஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதிஏணி

நாடாளுமன்ற உறுப்பினர்கள் (மாநிலங்களவை)

வருடம்வெற்றி பெற்றவர்சின்னம்/ஆதரவு
1964ஆ. கா. அ. அப்துல் சமதுஏணி
1970ஆ. கா. அ. அப்துல் சமதுஏணி
1968எஸ். ஏ. காஜா மொய்தீன்ஏணி
1972ஏ. கே. ரிபாயிஏணி
1974எஸ். ஏ. காஜா மொய்தீன்ஏணி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016

2016 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து வாணியம்பாடி, கடையநல்லூர், விழுப்புரம்,பூம்புகார், மணப்பாறை ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது.[4]இதில் கடையநல்லூரில் முகமது அபுபக்கர் வெற்றிபெற்று இக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]

போட்டியிட்ட தொகுதிகள்வெற்றி பெற்ற தொகுதிகள்வாக்குகள்வாக்கு %
513138080.7 %[6]

கேரள சட்டமன்றத் தேர்தல், 2016

2016,கேரளா சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சி ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன் கூட்டணி அமைத்து 24 தொகுதிகளில் போட்டியிட்டது.இதில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

போட்டியிட்ட தொகுதிகள்வெற்றி பெற்ற தொகுதிகள்வாக்குகள்வாக்கு %
241814968647.4 %[7]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து மூன்று தொகுதிகளில் ஏணி சின்னத்தில் போட்டியிட உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது.[8][9]

ஆதாரம்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை