1964
1964 (MCMLXIV) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
நிகழ்வுகள்
- சனவரி 22 – கென்னத் கவுண்டா வட ரொடீசியாவின் முதலாவது அதிபரானார்.
- சனவரி 30 – தெற்கு வியட்நாமில் ஜெனரல் நியுவென் கான் (Nguyen Khanh) இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.
- பெப்ரவரி 11 – கிரேக்கர்களுக்கும் துருக்கியர்களுக்கும் இடையில் சைப்பிரசில் போர் மூண்டது.
- மார்ச் 27 – அமெரிக்க சரித்திரத்தில் அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் (9.2 ரிக்டர் அளவு) அலாஸ்காவில் இடம்பெற்றதில் 125 பேர் கொல்லப்பட்டனர்.
- ஏப்ரல் 5 – பூட்டான் பிரதமர் ஜிக்மி டோர்ஃபி இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- ஏப்ரல் 7 – ஐபிஎம் ('IBM) தனது சிஸ்டம்/360 ஐ அறிவித்தது.
- ஏப்ரல் 26 – தங்கானிக்கா, சன்சிபார் இரண்டும் இணைக்கப்பட்டு தான்சானியா நாடாகியது.
- சூன் 8 – இலங்கையில் பழம்பெரும் இடதுசாரிக் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சி இரண்டாகப் பிரிந்தது. அதிருப்தியாளர்கள் இலங்கை புரட்சிகர சமசமாசக் கட்சி என்ற புதிய கட்சியை ஆரம்பித்தனர்.[1]
- சூலை 6 – ஆப்பிரிக்காவின் மலாவி நாடு விடுதலை அடைந்தது.
- சூலை 28 – அமெரிக்காவின் நாசா ரேஞ்சர்-7 என்ற விண்கலம் நிலவை புகைப்படம் எடுத்தது.
- திசம்பர் 22-25 – தனுஷ்கோடி புயல்: இந்தியாவின் தென்முனையில் தனுஷ்கோடியையும், இலங்கையின் வடக்குப் பகுதியையும் பெரும் புயல் தாக்கியதில் 1,800 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். தனுஷ்கோடி நகரம் முழுவதும் புயலால் அழிந்து போனது.
பிறப்புகள்
- ஏப்ரல் 6 – டேவிட் வூடார்ட், அமெரிக்க எழுத்தாளர், இசைக்கலைஞர்
- மே 29 – ஆறுமுகன் தொண்டமான், இலங்கை அரசியல்வாதி (இ. 2020)
இறப்புகள்
- ஏப்ரல் 21 – பாரதிதாசன், தமிழ்க் கவிஞர் (பி. 1891)
- நவம்பர் 25 – துவாரம் வேங்கடசுவாமி நாயுடு கருநாடக இசை வயலின் வாத்தியக் கலைஞர் (பி: 1893)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் – சார்லசு டவுன்சு, நிக்கொலாய் பாசொவ், அலெக்சாந்தர் புரொகோரொவ்
- வேதியியல் – டோரதி ஓட்ச்கின்
- மருத்துவம் – கொன்ராட் புளொக், பியோதர் லினென்
- இலக்கியம் – இழான் பவுல் சார்த்ர
- அமைதி – மார்ட்டின் லூதர் கிங்
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
1964 நாட்காட்டி
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை