இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2020

2020 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் (2020 Sri Lankan parliamentary election) இலங்கையின் 16-வது நாடாளுமன்றத்திற்காக (இலங்கைக் குடியரசின் 9-வது நாடாளுமன்றத்திற்காக) 225 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 2020 ஆகத்து 5 இல் நடைபெற்றது.[1][2][3] 16,263,885 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர். இவர்களில் 31.95% பேர் இளம் வாக்காளர்கள் ஆவர்.[4][5]

இலங்கையின் 16-வது
நாடாளுமன்றத் தேர்தல்

← 20155 ஆகத்து 2020

இலங்கை நாடாளுமன்றத்துக்கான அனைத்து 225 தொகுதிகளுக்கும்
பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை
வாக்களித்தோர்75.89%
 First partySecond party
 
தலைவர்மகிந்த ராசபக்சசஜித் பிரேமதாச
கட்சிஇலங்கை பொதுசன முன்னணிஐக்கிய மக்கள் சக்தி
தலைவரான
ஆண்டு
20192020
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
குருணாகல்கொழும்பு
முந்தைய
தேர்தல்
95[a]புதிய கட்சி
வென்ற
தொகுதிகள்
14554
மாற்றம்5054
மொத்த வாக்குகள்6,853,6902,771,980
விழுக்காடு59.09%23.90%
மாற்றம்16.71%23.90%

 Third partyFourth party
 
தலைவர்இரா. சம்பந்தன்அனுர குமார திசாநாயக்க
கட்சிதமிழ்த் தேசியக் கூட்டமைப்புதேசிய மக்கள் சக்தி
தலைவரான
ஆண்டு
20012009
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
திருகோணமலைகொழும்பு
முந்தைய
தேர்தல்
166[b]
வென்ற
தொகுதிகள்
103
மாற்றம்63
மொத்த வாக்குகள்327,168445,958
விழுக்காடு2.82%3.84%
மாற்றம்1.80%1.03%

தேர்தல் பிரிவுகள் வென்ற கட்சிகள்

– இபொசமு – ஐமச – ததேகூ – இசுக – ஈமசக

– ஏனையவை

முந்தைய பிரதமர்

மகிந்த ராசபக்ச
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி

பிரதமர்-தெரிவு

மகிந்த ராசபக்ச
இலங்கை பொதுசன முன்னணி

ஆளும் இலங்கை பொதுசன முன்னணி 145 இடங்களைக் கைப்பற்றி மிகப் பெரும்பான்மையைக் கைப்பற்றி வெற்றி பெற்றது.[6][7][8], எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி 54 இடங்களையும், தேசிய மக்கள் சக்தி 3 இடங்களையும் கைப்பற்றின.[9][10][11] முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றில் மிகப்பெரும் தோல்வியைக் கண்டது. இது ஒரேயொரு இடத்தை மட்டுமே கைப்பற்றியது.[12]

நாட்டில் பரவிய கொரோனாவைரசுப் பெருந்தொற்று காரணமாக தேர்தல்கள் இரண்டு தடவைகள் பிற்போடப்பட்டு, இறுதியில் 2020 ஆகத்து 5 இல் நடத்தப்பட்டது.[13][14]

இத்தேர்தலில் 75% மக்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டனர். இது 2015 தேர்தலை விட சிறிது குறைவானதாகும்.[15]

2018 நவம்பரில், அன்றைய அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்து அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தினார்.[16] பின்னர் மீயுயர் நீதிமன்றம் நாடாளுமன்றக் கலைப்பை இரத்துச் செய்து, அடுத்த தேர்தல் தேதியை 2020 இற்கு மீண்டும் தள்ளிப் போட்டது.[17] 2020 மார்ச் 2 இல் 15-வது நாடாளுமன்றம் புதிய அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் கலைக்கப்பட்டு, மார்ச் 12 முதல் 19 வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 2020 ஏப்ரல் 25 இல் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனாலும், கோவிடு-19 பெருந்தொற்று காரணமாக தேர்தலுக்கான நாள் பிற்போடப்பட்டு,[18][19] புதிய நாள் சூன் 20 என அறிவிக்கப்பட்டது. கொரோனாவைரசுத் தொற்று நீங்காதமையால், மீண்டும் 2020 ஆகத்து 5 இற்கு தேர்தல் தள்ளிப்போடப்பட்டது.[20][21]

காலக்கோடு

2018
  • 9 நவம்பர் 2018 - அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்து 2019 சனவரி 5 இற்குத் தேர்தல் தேதியை அறிவித்தார்.[22]
  • 13 திசம்பர் 2018 - மீயுயர் நீதிமன்றம் அரசுத்தலைவரின் கட்டளை அரசியலமைப்புக்கு எதிரானதெனத் தீர்ப்பளித்து, நாடாளுமன்றத்தை மீண்டும் இயங்கச் செய்தது.[23]
  • 16 திசம்பர் 2018 - மகிந்த ராசபக்ச பிரதமராகப் பதவியேற்றதை மீயுயர் நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கியது. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக மீண்டும் பதவி ஏற்றார்.[24][25]
2019
2020
  • 30 சனவரி 2020 - ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது.[27]
  • 10 பெப்ரவரி 2020 - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் புதிய தேர்தல் கூட்டணியை அறிவித்தார்.[28]
  • 17 பெப்ரவரி 2020 - சிறீலங்கா பொதுசன சுதந்திரக் கூட்டமைப்பு மகிந்த ராசபக்சவின் தலைமையில் புதிய அரசியல் கட்சியாகப் பதிவு செயப்பட்டது.[29]
  • 2 மார்ச் 2020 - 15-வது நாடாளுமன்றம் நள்ளிரவுடன் கலைக்கப்படுவதாக அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச சிறப்பு வர்த்தமானி மூலம் அறிவித்தார்.[18] வேட்புமனுக்கள் 2020 மார்ச் 12 முதல் மார்ச் 19 வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அறிவித்தார்.[18]
  • 3 மார்ச் 2020 - நாடாளுமன்றம் அரசுத்தலைவரினால் கலைக்கப்பட்டது. 2020 ஏப்ரல் 25 இல் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் கடைசி நாள் மார்ச் 18.[30]
  • 19 மார்ச் 2020 - கோவிடு-19 தொற்றின் காரணமாக தேர்தல்கள் காலவரயறையின்றித் தள்ளிப்போடப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்தார்.[31]
  • 20 ஏப்ரல் 2020 - 2020 சூன் 20 ஐ புதிய தேர்தல் நாளாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்தார்.[32][33]
  • 6 மே 2020 - தேர்தல்கள் சூன் 20 இல் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது.[34]
  • 9 மே 2020 - தேர்தல்கள் சூன் 20 இல் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சம்பிக்க ரணவக்க (ஜாதிக எல உறுமய), குமார வெல்கம ஆகியோர் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது.[35]
  • 18 மே 2020 - சூன் 20 தேர்தல் நாளுக்கு எதிரான 8 மனுக்கள் மீதான வழக்குகள் மீயுயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.[36]
  • 22 மே 2020 – தேர்தலுக்கு எதிரான முறைப்பாடுகளை விசாரணையின்றித் தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் மீயுயர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.[37]
  • 2 சூன் 2020 – மீயுயர் நீதிமன்றம் தேர்தலுக்கு எதிரான வழக்குகளை விசாரணையின்றித் தள்ளுபடி செய்தது.[38]
  • 10 சூன் 2020 – தேர்தலுக்கான புதிய தேதியாக ஆகத்து 5 ஐ தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.[39]
  • 30 சூலை 2020 - தேர்தல் பரப்புரைகள் அனைத்தும் 2020 ஆகத்து 2 நள்ளிரவுடன் முடிவடைய வேண்டும் என தேர்தல் ஆணையகம் அறிவித்தது.[40]
  • 6 ஆகத்து 2020 - வாக்குகள் எண்ணும் பணிகள் காலை 9:00 மணிக்கு நாடளாவிய அளவில் ஆரம்பமாயின.[41]

பின்னணி

2018 அரசியலமைப்பு நெருக்கடியின் போது, மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்து, மகிந்த ராசபக்சவை பிரதமராக அறிவித்தார். ராசபக்ச தனது பெரும்பான்மையை wநாடாளுமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை.[16]

ஆனாலும், நாடாளுமன்றக் கலைப்பை எதிர்த்து மீயுயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. 2018 திசம்பர் 13 இல், நாடாளுமன்றக் கலைப்பு சட்ட விரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.[42]

கோவிட்-19

2020 மார்ச் 19 இல், இலங்கையில் கோவிட்-19 பெருந்தொற்று அதிகரித்திருந்தாலும், திட்டமிட்டபடி வேட்பு மனுக்கள் 2020 மார்ச் 18 வரை ஏற்றுக் கொள்ளப்பட்டன.[43] வேட்பு மனுக்கள் தாக்கல் முடிவடைந்த அடுத்த நாள் மார்ச் 19 இல் தேர்தல்கள் ஆணையகம் தேர்தலை ஒத்தி வைத்தது.[44] 2020 ஏப்ரல் 25 தேர்தல் நாள் 2020 சூன் 20 இற்குத் தள்ளிப் போடப்பட்டது. கோவிட்-19 தாக்கம் குறையாததனால், மீண்டும் 2020 ஆகத்து 5 வரை தள்ளிப்போடப்பட்டது.

தேர்தல் விபரங்கள்

9-வது நாடாளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 2019 ஆம் ஆண்டின் தேர்தல் வாக்காளர் பட்டியலிற்கமைய 16,263,885 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர். இவர்களில் கம்பகா மாவட்டத்தில் அதிகூடிய வாக்காளர்களும் (1,785,964), வன்னியில் அதி குறைந்த வாக்காளர்களும் (287,024) வாக்களிக்கத் தகுதி பெற்றனர். அரசியல் கட்சிகள் சார்பில் 3,652 வேட்பாளர்களும், சுயேட்சைக் குழுக்கள் சார்பில் 3,800 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.[45]

தேர்தல் முறைமை

பல-அங்கத்தவர்கள் கொண்ட 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து 196 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை மூலம் போட்டியிடும் கட்சிகள், மற்றும் சுயேட்சைக் குழுக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[46][47] ஏனைய 29 உறுப்பினர்களும் தேசியப் பட்டியல் மூலம் கட்சிகள், மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெற்ற வாக்குகளின் விகிதாசாரப்படி நியமிக்கப்படுகின்றனர்[48]

18 வயதிற்கு மேற்பட்ட இலங்கைக் குடியுரிமை பெற்ற ஒருவர், ஒவ்வொரு ஆண்டும் சூன் 1 அன்று எந்த இடத்தில் சாதா­ரண வதி­வா­ள­ராக இருக்­கின்­றாரோ அந்த இடத்தில் தனது வாக்கைப் பதிவு செய்து கொள்­ளலாம்.[49] தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமல்ல. ஒவ்­வொரு வாக்­கா­ளரும் தத்தம் ஆளடை­யா­ளத்தை செல்­லு­ப­டி­யான ஆளடை­யாள ஆவணம் ஒன்றின் மூலம் நிரூ­பிக்க வேண்டும்.[49] வாக்காளர் ஒருவர் தமக்கு விருப்பமான ஒரு கட்சிக்கும், அக்கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஆகக்கூடியது மூவருக்கு தனது விருப்பத்தேர்வுகளையும் இடலாம். ஆனாலும் வேட்பாளர் விருப்பத்தேர்வு கட்டாயமானது அல்ல.[49]

தேர்தல் மாவட்ட அடிப்படையில் இட ஒதுக்கீடு

மாகாணம்தேர்தல் மாவட்டம்ஒதுக்கப்பட்ட
இடங்கள்[50]
வடக்குயாழ்ப்பாணம்

வன்னி

07

06

வடமத்திஅனுராதபுரம்

பொலன்னறுவை

09

05

வடமேல்குருநாகல்

புத்தளம்

15

08

கிழக்குமட்டக்களப்பு

அம்பாறை (திகாமடுல்ல)

திருகோணமலை

05

07

04

மத்தியகண்டி

மாத்தளை

நுவரெலியா

12

05

08

மேல்கொழும்பு

கம்பகா

களுத்துறை

19

18

10

ஊவாபதுளை

மொனராகலை

09

06

சப்ரகமுவஇரத்தினபுரி

கேகாலை

11

09

தென்காலி

மாத்தறை

அம்பாந்தோட்டை

09

07

07

மொத்தம்196

முடிவுகள்

அதிகாரபூர்வ முடிவுகள் 2020 ஆகத்து 6 மாலை முதல் வெளிவர ஆரம்பித்தன. முதலில் காலி மாவட்டத்திற்கான அஞ்சல்-வழி வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்தன.[51]

மகிந்த ராசபக்ச தலைமையிலான இலங்கை பொதுசன முன்னணி (இபொசமு) 59.09% வாக்குகளுடன் 145 இடங்களைக் கைப்பற்றி முதலாவதாக வந்தது. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 23.9% வாக்குகளுடன் 54 இடங்களைக் கைப்பற்றியது.[52][53][54] இபொசமு வாக்கெடுப்பு மூலம் 128 இடங்களையும் தேசியப் பட்டியல் மூலம் 17 இடங்களையும் பெற்று 113 என்ற அறுதிப் பெரும்பான்மையை இலகுவாகக் கடந்து வென்றது.[55]

தேர்தல் முடிவுகள் இலங்கை அரசியலில் ராஜபக்ச குடும்பத்தின் செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் தேவையான அரசியலமைப்பு மாற்றங்களைச் செயல்படுத்த தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடைய சிறிய தோழமைக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் ஐந்து இடங்கள் மட்டுமே பொதுசன முன்னணிக்குத் தேவைப்படுகிறது. நாடாளுமன்றத்தினதும் பிரதமரினதும் பங்கை வலுப்படுத்துவது, நீதித்துறை நியமனங்கள், காவல்துறை, பொது சேவைகள் மற்றும் தேர்தல்களை நடத்துவதற்கு பொறுப்பான சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தல் போன்ற 2015 இல் இயற்றப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்களை முறியடிக்க இப்பெரும்பான்மை பயன்படுத்தப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.[56] முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஒரேயொரு இடத்தை (தேசியப் பட்டியல் மூலமாக) மட்டுமே பெற்று வரலாற்றில் பெரும் தோல்வியைச் சந்தித்தது.[57][58] வட, கிழக்கில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை பலத்த இழப்புகளை சந்தித்தது.சதே வேளையில் அரசு-சார்புக் கட்சிகள் சில இடங்களைக் கூடுதலாகப் பெற்றுள்ளது.

தேசிய வாரியாக முடிவுகள்

2020 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[59][60][61]
கட்சிகளும் கூட்டணிகளும்வாக்குகள்%இருக்கைகள்
தேர்தல் மாவட்டம்தேசியப் பட்டியல்மொத்தம்+/–
 6,853,69059.0912817145 50
 2,771,98023.9047754புதியது
 445,9583.84213 3
 327,1682.829110 6
 ஐக்கிய தேசியக் கட்சி (ரணில் அணி)249,4352.15011 105
 67,7660.58112 2
நமது சக்தி மக்கள் கட்சி
67,7580.58011 1
 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்67,6920.58101 1
 இலங்கை சுதந்திரக் கட்சி[iv]66,5790.57101 1
 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி61,4640.53202 1
முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு55,9810.48101 1
 
51,3010.44101 1
 அகில இலங்கை மக்கள் காங்கிரசு[vi]43,3190.37101 1
 தேசியக் காங்கிரஸ்[i]39,2720.34101 1
 சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு[vii]34,4280.30101
ஐக்கிய அமைதிக் கூட்டணி31,0540.27000
 அகில இலங்கைத் தமிழர் மகாசபை30,0310.26000
 தேசிய அபிவிருத்தி முன்னணி14,6860.13000
 முன்னிலை சோசலிசக் கட்சி14,5220.13000
தமிழர் சோசலிச சனநாயகக் கட்சி11,4640.10000
 தமிழர் விடுதலைக் கூட்டணி9,8550.08000
இலங்கை சோசலிசக் கட்சி9,3680.08000
மக்கள் நல முன்னணி7,3610.06000
சிங்கள தேசிய முன்னணி5,0560.04000
 புதிய சனநாயக முன்னணி4,8830.04000
ஐக்கிய இடது முன்னணி4,8790.04000
 இலங்கை லிபரல் கட்சி4,3450.04000
 தேசிய மக்கள் கட்சி3,8130.03000
 சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி3,6110.03000
தேசிய சனநாயக முன்னணி3,4880.03000
 இலங்கைத் தொழிற் கட்சி3,1340.03000
 சனநாயக இடது முன்னணி2,9640.03000
புதிய சிங்கள மரபு1,3970.01000
 ஐக்கிய சோசலிசக் கட்சி1,1890.01000
தாய்நாடு மக்கள் கட்சி1,0870.01000
 ஈழவர் சனநாயக முன்னணி1,0350.01000
 சோசலிச சமத்துவக் கட்சி7800.01000
 லங்கா சமசமாஜக் கட்சி[iii]7370.01000
அனைத்துக் குடிகளும் மன்னர்களே அமைப்பு6320.01000
 சனநாயக ஒற்றுமைக் கூட்டணி1450.00000
 சுயேச்சைகள்223,6221.93000
செல்லுபடியான வாக்குகள்11,598,929100%19629225
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்744,3736.03%
மொத்த வாக்குகள்12,343,302
பதிவு செய்த வாக்காளர்கள்/வாக்குவீதம்16,263,88575.89%
அடிக்குறிப்புகள்:

மாவட்ட வாரியாக முடிவுகள்

ஐக்கிய மக்கள் சக்தி வென்ற மாவட்டங்கள்
இலங்கை பொதுசன முன்னணி வென்ற மாவட்டங்கள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்ற மாவட்டங்கள்
2020 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் மாவட்ட வாரியான முடிவுகள்[59][60][61]
தேர்தல்
மாவட்டம்
மாகாணம்இபொசமுஐமசததேகூமவிமுஏனையவைமொத்தம்வாக்குவீதம்
Votes%SeatsVotes%SeatsVotes%SeatsVotes%SeatsVotes%SeatsVotes%Seats
அம்பாறைகிழக்கு126,01232.65%3102,27426.50%225,2556.54%05,0601.31%0127,39633.00%2385,997100.00%778.28%
அனுராதபுரம்வடமத்தி344,45867.95%7119,78823.63%224,4924.83%018,1643.58%0506,902100.00%978.19%
பதுளைஊவா309,53862.06%6144,29028.93%319,3083.87%025,6595.14%0498,795100.00%980.43%
மட்டக்களப்புகிழக்கு33,42411.22%128,3629.52%079,46026.66%23480.12%0156,41852.49%2298,012100.00%576.83%
கொழும்புமேற்கு674,60357.04%12387,14532.73%667,6005.72%153,4284.52%01,182,776100.00%1973.94%
காலிதெற்கு430,33470.54%7115,45618.93%229,9634.91%034,2995.62%0610,052100.00%974.43%
கம்பகாமேற்கு807,89665.76%13285,80923.27%461,8335.03%172,9365.94%01,228,474100.00%1873.01%
அம்பாந்தோட்டைதெற்கு280,88175.10%651,75813.84%131,3628.39%010,0162.68%0374,017100.00%779.68%
யாழ்ப்பாணம்வடக்கு13,5643.78%0112,96731.46%38530.24%0231,74664.53%4359,130100.00%768.92%
களுத்துறைமேற்கு448,69964.08%8171,98824.56%233,4344.77%046,1356.59%0700,256100.00%1076.79%
கண்டிமத்திய477,44658.76%8234,52328.86%422,9972.83%077,6129.55%0812,578100.00%1277.02%
கேகாலைசபரகமுவா331,57366.29%7131,31726.25%214,0332.81%023,2844.65%0500,207100.00%976.70%
குருணாகல்வடமேல்649,96566.92%11244,86025.21%436,2903.74%040,1284.13%0971,243100.00%1575.45%
மாத்தளைமத்திய188,77965.53%473,95525.67%17,5422.62%017,7976.18%0288,073100.00%576.69%
மாத்தறைதெற்கு352,21773.63%672,74015.21%137,1367.76%016,2863.40%0478,379100.00%775.95%
மொனராகலைஊவா208,19374.12%554,14719.28%111,4294.07%07,1162.53%0280,885100.00%680.93%
நுவரெலுயாமத்திய230,38954.47%5132,00831.21%35,0431.19%055,53713.13%0422,977100.00%880.49%
பொலன்னறுவைவடமத்தி180,84773.66%447,78119.46%16,7922.77%010,0994.11%0245,519100.00%578.99%
புத்தளம்வடமேல்220,56657.26%580,18320.81%29,9442.58%074,52819.35%1385,221100.00%867.47%
இரத்தினபுரிசபரகமுவை446,66868.86%8155,75924.01%317,6112.72%028,5764.41%0648,614100.00%1177.38%
திருகோணமலைகிழக்கு68,68132.25%186,39440.56%239,57018.58%12,2261.05%016,1217.57%0212,992100.00%478.62%
வன்னிவடக்கு42,52420.46%137,88318.23%169,91633.64%36620.32%056,85227.35%1207,837100.00%678.34%
தேசியப் பட்டியல்17711329
மொத்தம்6,853,69359.09%1452,771,98423.90%54327,1682.82%10445,9583.84%31,200,1332.15%1311,598,93691.80%22575.89%

பதவுயேற்பு

மகிந்த ராசபக்ச நான்காவது தடவையாக இலங்கைப் பிரதமராக 2020 ஆகத்து 9 ஆம் நாள் களனி ரஜ மகா விகாரையில் பதவியேற்றுக் கொண்டார்.[62][63]

பன்னாட்டுத் தாக்கங்கள்

நாடுகள்

  •  India – இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பிரதமர் மகிந்த ராசபக்சவைத் தொலைபேசியில் அழைத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.[64]
  •  United States – இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் பொதுசன முன்னணியின் வெற்றிக்காக வாழ்த்துகளைத் தெரிவித்து அறிக்கை விட்டது. அமைதியான முறையிலும், சுமூகமாகவும் தேர்தல்கள் நடைபெற்றதற்கு தூதரகம் மகிழ்ச்சி தெரிவித்தது.[65]

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை