இலங்கை பொதுசன முன்னணி

இலங்கை பொதுசன முன்னணி (Sri Lanka Podujana Peramuna, சிறீலங்கா பொதுஜன பெரமுன, SLPP), என்பது இலங்கையின் ஓர் அரசியல் கூட்டணி ஆகும். முன்னாளில் சிறிய கட்சிகளாக இருந்த இலங்கை தேசிய முன்னணி, நமது இலங்கை சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் 2016 இல் இலங்கை பொதுசன முன்னணி என்ற பெயரில் இணைந்தன. இக்கூட்டணியில் முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவிற்கு ஆதரவான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் சில உறுப்பினர்களும் இணைந்தனர். இம்முன்னணியின் நிறுவனத் தலைவர் ஜி. எல். பீரிஸ் ஆவார்.[17] 2019 ஆகத்து 11 இல் மகிந்த ராசபக்ச தலைவரானார்.

இலங்கை பொதுசன முன்னணி
ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ
Sri Lanka Podujana Peramuna
தலைவர்மகிந்த ராசபக்ச[a]
தலைவர்ஜி. எல். பீரிஸ்
செயலாளர்சாகர காரியவசம்
குறிக்கோளுரைநமது நாட்டை நாமே உருவாக்குகிறோம்!
தலைமையகம்1316 நெலும் மாவத்தை, ஜயந்திபுரம், பத்தரமுல்லை[3][4]
இளைஞர் அமைப்புஇலங்கை மக்கள் வாலிப முன்னணி
கொள்கைசமூக மக்களாட்சி[5][6]
சிங்கள பௌத்த தேசியம்[7][8]
சமூக பழமைவாதம்[9]
இடதுசாரி தேசியவாதம்[10]
கூட்டாட்சி-எதிர்ப்புவாதம்[11]
ஏகாதிபத்திய எதிர்ப்புவாதம்[12]
சனரஞ்சகம்[13]
அரசியல் நிலைப்பாடுசமூகம்: வலது சாரி அரசியல்[14]
பொருளாதாரம்: இடதுசாரி அரசியல்[15]
தேசியக் கூட்டணிசிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு
நிறங்கள்     Maroon
நாடாளுமன்றம்
145 / 225
உள்ளூராட்சி சபைகள்[16]
239 / 340
தேர்தல் சின்னம்
மொட்டு
கட்சிக்கொடி
Sri Lanka Podujana Peramuna flag.png
இணையதளம்
www.slpp.org
இலங்கை அரசியல்

வரலாறு

இலங்கை தேசிய முன்னணி

இலங்கை தேசிய முன்னணி (Sri Lanka Jathika Peramuna, Sri Lanka National Front, SLNF) 2001 நாடாளுமன்றத் தேர்தலில் 15 தேர்தல் மாவட்டங்களில் போட்டியிட்டு, மொத்தம் 719 வாக்குகளை மட்டும் பெற்று எந்த இடங்கலையும் கைப்பற்றவில்லை.[18] 2004 நாடாளுமன்றத் தேர்தலில் 17 மாவட்டங்கலில் போட்டியிட்டு மொத்தம் 493 வாக்குகளை மட்டும் பெற்றது.[19] 2010 நாடாளுமன்றத் தேர்தலில் 19 மாவட்டங்கலில் போட்டியிட்டு மொத்தம் 5,313 வாக்குகளைப் பெற்று எந்த இடங்களையும் கைப்பற்றவில்லை.[20]

இதன் தலைவர் விமல் கீகனகே 2005 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு 6,639 வாக்குகளைப் பெற்று எட்டாவதாக வந்தார்.[21] 2015 அரசுத்தலைவர் தேர்தலில் இவர் மீண்டும் போட்டியிட்டு 1,826 வாக்குகள் பெற்று கடைசியாக (19வது) வந்தார்.[22]

நமது இலங்கை சுதந்திர முன்னணி

2015 இல் இலங்கை தேசிய முன்னணி நமது இலங்கை சுதந்திர முன்னணி (Our Sri Lanka Freedom Front, Ape Sri Lanka Nidahas Peramuna) எனப் பெயரை மாற்றி, சின்னத்தை துடுப்பாட்ட மட்டையில் இருந்து, பூ மொட்டிற்கு மாற்றியது.[23][24]

இலங்கை பொதுசன முன்னணி

2016 நவம்பரில் நமது இலங்கை சுதந்திர முன்னணி இலங்கை பொதுஜன முன்னணி (Sri Lanka Podujana Peramuna) என்ற பெயரில் கூட்டு எதிரணியுடன் இணைந்தது. இதன் தலைவராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் (மகிந்த ராஜபக்சவின் அணி) தேர்ந்தெடுக்கப்பட்டார்.[25][26] சட்டத்தரணி சாகர காரியவாசம் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[27][28] காரியவாசம் இலங்கை சுதந்திரக் கட்சியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஆவார்.[29][30][31] மகிந்த ராசபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்சவும் இக்கூட்டணியில் இணைந்து கொண்டார்.[32]

2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் இக்கூட்டணி பூ மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு,[33] மொத்தமுள்ள 340 சபைகளில் 126 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றது.[34]

2019 அரசுத்தலைவர் தேர்தலில் இக்கட்சியின் சார்பில் கோட்டாபய ராஜபக்ச போட்டியிட்டு 52.25% வாக்குகள் பெற்று அரசுத்தலைவர் ஆனார்.[35] அதன் பின்னர் நடந்த 2020 நாடாளுமன்றத் தேர்தலில் 145 இடங்களைக் கைப்பற்றி பெரு வெற்றி பெற்றது.[36][37][38]

தேர்தல் வரலாறு

இலங்கை அரசுத்தலைவர் தேர்தல்கள்
ஆன்டுவேட்பாளர்வாக்குகள்வாக்கு %முடிவு
2005விமல் கீகனகே6,6390.07%8-வது
2015விமல் கீகனகே1,8260.02%19-வது
2019கோட்டாபய ராஜபக்ச6,924,25552.25%வெற்றி
+நாடாளுமன்றத் தேர்தல்கள்ஆண்டுவாக்குகள்வாக்கு %வென்ற இடங்கள்+/–கட்சி முடிவு
20206,853,69059.09%
145 / 225
50அரசு

குறிப்புகள்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை