உலகக் கலை நாள்

உலகக் கலை நாள் (World Art Day) என்பது நுண்கலைகளின் ஒரு பன்னாட்டுக் கொண்டாட்ட நாள் ஆகும், இது பன்னாட்டுக் கலைச் சங்கத்தால் (IAA) உலகம் முழுவதும் ஆக்கபூர்வமான கலைச் செயல்பாடு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டது.[1][2]

மெக்சிக்கோவில் குவாதலகாராவில் அமைந்துள்ள பன்னாட்டுக் கலைச் சங்கத்தின் 17வது பொதுச் சபையில் ஏப்ரல் 15-ஆம் நாளை உலகக் கலை நாளாக அறிவிக்கும் முன்மொழிவு முன்வைக்கப்பட்டது, முதல் கொண்டாட்டம் 2012 இல் நடைபெற்றது. இந்த முன்மொழிவிற்கு துருக்கிய ஓவியர் பெத்ரி பாய்க்காம் புரவலராக இருந்தார். இம்முன்மொழிவு பொதுச் சபையால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.[1][3][4]

லியொனார்டோ டா வின்சியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்நிகழ்விற்கான நாள் முடிவு செய்யப்பட்டது. உலக அமைதி, கருத்துச் சுதந்திரம், சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், பல்லினப்பண்பாடு மற்றும் கலையின் முக்கியத்துவத்தின் சின்னமாக டாவின்சி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][4]

உலகக் கலைக் கலை நாள் இணைய வழியிலும், முக்கியமாக கூகுள் கலைச் செயல்திட்டம் போன்றவை மூலம், முன்னெடுக்கப்படுகிறது.[5]

2012 ஏப்ரல் 15 அன்று நடந்த முதல் உலகக் கலை நாள், அனைத்து கலைச் சங்கத் தேசியக் குழுக்களாலும், பிரான்சு, சுவீடன், சிலோவாக்கியா, தென்னாப்பிரிக்கா, சைப்பிரசு, வெனிசுவேலா உட்பட்ட உலக நாடுகளின் 150 கலைஞர்களாலும் ஆதரிக்கப்பட்டது.[1][3][4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=உலகக்_கலை_நாள்&oldid=3928083" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை