எமிரேட்சு விளையாட்டரங்கம்

ஆஷ்பர்டன் குரூவ் (Ashburton Grove), விளம்பர ஆதரவின் காரணமாக எமிரேட்சு விளையாட்டரங்கம் (Emirates Stadium) என்று அறியப்படுவது, வடக்கு இலண்டனில் உள்ள கால்பந்து மைதானமாகும். இது பிரீமியர் லீக் அணியான ஆர்சனல் கால்பந்துக் கழகத்தின் விளையாட்டரங்கம் ஆகும். 60,000-க்கும் சற்றே அதிகமான கொள்ளளவு உடைய இம்மைதானம் 2006 ஆண்டு திறக்கப்பட்டு, ஆர்சனல் கால்பந்துக் கழகத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் வெம்பிளி மற்றும் ஓல்டு டிராஃபோர்டு மைதானங்களுங்குப் பிறகு இதுவே அதிக கொள்ளளவு கொண்டதாகும். 2004-இல் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இம்மைதானத்துக்கான நிதி கிடைப்பது சிரமமாகவிருந்தது. அக்டோபர் 2004-இல் எமிரேட்சு ஏர்லைன்சு நிதியாதரவு தருவதாக செய்தி வெளியிடப்பட்டது. £390 செலவில் 2006-ஆம் ஆண்டு மைதானம் கட்டி முடிக்கப்பட்டது. ஆர்சனல் அணியின் போட்டிகள் தவிர்த்து, பிரேசில் தேசிய கால்பந்து அணியின் ஐரோப்பிய போட்டிகள் அனைத்தும் இங்குதான் விளையாடப்பட்டு வருகின்றன.

ஆஷ்பர்டன் குரூவ்

எமிரேட்சு விளையாட்டரங்கம்
இடம்லண்டன்
அமைவு51°33′18″N 0°6′31″W / 51.55500°N 0.10861°W / 51.55500; -0.10861
எழும்பச்செயல் ஆரம்பம்சூலை 2003
திறவு22 சூலை 2006
உரிமையாளர்ஆர்சனல் கால்பந்துக் கழகம்
தரைDesso GrassMaster
கட்டிட விலை£ 390 million
                     £ 470 million (entire project to date)
கட்டிடக்கலைஞர்Populous (formerly HOK Sport)[1]
Structural engineerBuro Happold
Services engineerBuro Happold
Main contractorsSir Robert McAlpine
குத்தகை அணி(கள்)ஆர்சனல் கால்பந்துக் கழகம் (2006–)
அமரக்கூடிய பேர்60,361[2]
பரப்பளவு105 × 68 metres

வெளியிணைப்புகள்

உசாத்துணைகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை