ஐக்கிய இராச்சியத்தின் அரசர்

ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் (monarchy of the United Kingdom) (பொதுவாக பிரித்தானிய அரசர்) ஐக்கிய இராச்சியம், கடல்கடந்த மண்டலங்களின் அரசமைப்புகள் ஆகியவற்றின் மன்னர் ஆவார். பாலினத்தைப் பொறுத்து பட்டப்பெயராக அரசர் அல்லது அரசி என்பது அமையும். அரசர் சார்லசு III பிரித்தானிய அரசராக 8 செப்டம்பர் 2022 இல் பதவி ஏற்றார். அரசரும் பிரித்தானிய அரசக் குடும்பத்தினரும் பல்வேறு அலுவல்முறை, விழாக்காலங்களில் சார்பாளர், பேராண்மைக் கடமைகளை ஆற்றுகின்றனர். அரசர் நாட்டின் அரசமைப்புத் தலைவராக இருப்பதால் எச்சார்புமிலா விழாக்களில் மட்டுமே பங்கேற்கிறார். பிரித்தானிய அரசு வழங்கும் பல்வேறு விருதுகளையும் பதக்கங்களையும் வழங்குவதோடு நாட்டின் பிரதமரை நியமிப்பது போன்ற பணிகளையும் ஆற்றுகிறார். வழமைப்படி இவரே நாட்டின் படைத்துறை தலைமைத் தளபதியும் ஆவார். ஐக்கிய இராச்சியத்தின் முறையான செயல்பாட்டு அதிகாரம் மன்னரின் விருப்பப்படி இருப்பினும் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களுக்குட்பட்டும் வழக்கங்களுக்கும் முன்னுதாரங்களுக்கும் கட்டுப்பட்டே இவற்றைச் செய்ய முடியும்.

அரசர், ஐக்கிய இராச்சியம்
மன்னராட்சி

ஐக்கிய இராச்சியத்தின் அரச மரபுச்சின்ன மேலங்கி

நடப்பில்:


8 செப்டெம்பர் 2022 முதல்

அழைப்பு:ஹிஸ் மெஜஸ்டி
மரபுரிமை வாரிசு:இளவரசர் வில்லியம், கேம்பிரிட்ச் கோமகன்
வாழிடம்:பக்கிங்காம் அரண்மனை

அலுவல்முறை வசிப்பிடமாக


வலைத்தளம்:பிரித்தானிய மன்னராட்சி

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை