ஐபிஎம் லோட்டஸ் டொமினோ

லோட்டஸ் டொமினோ ஐபிஎம் இன் வர்தகரீதியிலான மின்னஞ்சல் மற்றும் கூட்டாக இணைந்து பணிபுரிதற்கான வசதிகளுடன் விருப்பத்திற்கேற்பப் பிரயோகங்களை விருத்தி செய்யும் வசதியுள்ள வழங்கி (சேவர்) மென்பொருளாகும். டொமினோ ஆரம்பத்தில் லோட்டஸ் நோட்ஸ் இன் வழங்கி (சேவர்) பகுதியாகவே அறிமுகம் செய்யப்பட்டது. இம்மென்பொருளானது லோட்டஸ் நோட்ஸ் மென்பொருளுக்கான பிரயோக மென்பொருளாகவும், இணைய வழங்கியாகவும் தொழிற்படக்கூடியது. இது கோப்புக்களை NSF என்னும் நீட்சியுடைய கோப்புக்களாகச் சேமிக்கும். லோட்டஸ் டொமினோவின் 7 ஆவது பதிப்பில் இருந்து ஐபிஎம் டிபி2 சேவரையும் வழங்கியாகப் பாவிக்கக் கூடியது.

லோட்டஸ் டொமினோ தயாரிப்புக்கள்

  • லோட்டஸ் டொமினோ
    • கொலாபறேசன் எக்ஸ்பிரஸ்
    • எண்டபிறைஸ் சேவர்
    • மெசேஜிங் எக்ஸ்பிரஸ்
    • யுட்டிலிட்டி எக்ஸ்பிரஸ்
    • யுட்டிலிட்டி சேவர்
  • லோட்டஸ் டொமினோவை மைக்ரோசாப்ட் அவுட்லுக் ஊடக அணுகுவதற்கான மென்பொருள்.
  • லோட்டஸ் டொமினோ டிசைனர்
  • லோட்டஸ் டாக்கியூமண்ட் மெனேஜர்
  • லோட்டஸ் வெப்மெயில் (மின்னஞ்சலை இணையமூடாகப் பெறுவதற்காக)
  • டொமினோ பிளாக்

லோட்டஸ் டொமினோ இன் சேவைகள்

லோட்டஸ் டொமினோ சேவர் பல்வேறுபட்ட சேவைகளை வழங்கும். அவற்றில் பிரதானமானவை கீழ்வருமாறு.

  • மின்னஞ்சற் சேவை (லோட்டஸ் நோட்ஸ், பாப்3, ஐமாப். இணைய உலாவி, அவுட்லுக் கிளையண்ட்ஸ் மற்றும் எஸெம்டிபி (SMTP) ஆதரவு.
  • லோட்டஸ் நோட்ஸ் பிரயோகங்களிற்கான வழங்கி (சேவர்)
  • தரவுத் தள வழங்கி (நோட்ஸ் சேமிப்பு வசதி)
  • டிரைக்டி சேவர்

பொருத்துக்கள்(Addons) மூலம் மேலே குறிப்பிட்ட சேவைகளை விட மேலும் வசதிகளைக் கூட்டிக்கொள்ளலாம்.

பிரதான வெளியீடுகள்

  • லோட்டஸ் டொமினோ 7.0.x
  • லோட்டஸ் டொமினோ 6.5.x
  • லோட்டஸ் டொமினோ 6.0.x
  • லோட்டஸ் டொமினோ 5.0.x
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை