கடற்சிங்கம்

கடற்சிங்கம்
புதைப்படிவ காலம்:
Late Oligocene-Holocene
கலிஃபோர்னிய கடற்சிங்கம்
Zalophus californianus
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
Otariidae
துணைக்குடும்பம்:
Otariinae
இனங்கள்

Eumetopias
Neophoca
Otaria
Phocarctos
Zalophus

கடற்சிங்கம் (Sea lion) என்பது கடற்பாலூட்டி வகையைச் சேர்ந்த குடும்பம் ஆகும். இவை இரண்டு சிறிய வெளிக் காதுகள், துடுப்பு போன்ற நீண்ட நான்கு கால்கள், தடித்த மேல் தோல், அடர்த்தியான சிறிய முடிகள் மற்றும் கொழுப்பு நிறைந்த அடர்ந்த உடலும் கொண்ட ஊனுண்ணிகளாகும். துடுப்பு போன்ற கால்களால் கடற்சிங்கங்கள் கடல் நீரில் நன்கு நீந்த இயலும். கடல் மீன்கள், மெல்லுடலிகள் மற்றும் நண்டுகள் ஆகியன கடற்சிங்கத்தின் முக்கிய இரைகளாகும்.

கடற்சிங்கங்கள் வட துருவம் மற்றும் தென் துருவக் கடற்கரைகளிலும், வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலிலும் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா, தெற்கு நியூசிலாந்து கடற்கரைகளிலும் காணப்படுகிறது.[1] இவற்றின் வாழ்நாள் 20-30 ஆண்டுகளாகும்.

ஆண் கடற்சிங்கத்தின் அதிகபட்ச எடை 300 கிலோ கிராமும் நீளம் 8 அடியும் ஆகும். பெண் கடற்சிங்கத்தின் அதிக பட்ச எடை 100 கிலோ கிராமும், நீளம் 6 அடியும் ஆகும். ஸ்டெல்லர் வகை கடல் சிங்கத்தின் எடை 1000 கி கி., மற்றும் நீளம் 10 அடியாக உள்ளது. கடற்சிங்கங்கள் ஒரே நேரத்தில் தன் உடல் எடையில் 5-8% (15–35 lb (6.8–15.9 kg)) வரையிலான உணவை உண்ணக்கூடியது.

ஸ்டெல்லார் கடற்சிங்கங்கள், அலாஸ்கா

வெளிப்புற காதுகள் கொண்ட கடற்சிங்கங்களின் குடும்பத்தில் கடல்நாய்கள் மற்றும் நீண்ட தந்தம் போன்ற இரண்டு பற்களைக் கொண்ட பனிக்கடல் யானை ஆகிய இனங்கள் அடங்கியுள்ளது.[2] கடற்சிங்கங்கள் சனவரி முதல் மார்ச் முடிய உள்ள காலத்தில் கடற்கரைகளில் குட்டியிடுகிறது. உலகில் தற்போது 1,65,000 கடற்சிங்கங்கள் இருப்பதாக கணக்கிட்டுள்ளனர்.

மனிதனுடான உறவுகள்

வித்தை காண்பிக்கும் கடற்சிங்கங்கள், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா

20ஆம் நூற்றாண்டின் நடுவில் வேட்டைக்காரர்களால் பெருமளவு கடற்சிங்கங்கள் கொல்லப்பட்டது.[3] தற்போது அனைத்து நாடுகளும் கடற்சிங்கங்களை வேட்டையாடுவதை தடை செய்துள்ள போதும், சுற்றுச் சூழல் காரணமாக கடற்சிங்கங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. உலகில் பல நாடுகளில் கடற்சிங்கங்களுக்கு விளையாட்டு பயிற்சிகள் வழங்கி, காட்சிக் கூடங்களில் மக்கள் முன்னிலையில் வித்தை காட்டுகிறார்கள். கடலில் நீந்தும் மனிதர்களை கடற்சிங்கங்கள் தாக்குவதில்லை.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளின் சுற்றுலாத்துறை கடற்சிங்கங்களால் வளர்ந்து வருகிறது.

படக்காட்சியகம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேல் வாசிப்பிற்கு

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கடற்சிங்கம்&oldid=3547512" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை