கதவு

கதவு () என்பது, கட்டிடமொன்றினுள் அல்லது கட்டிடத்தின் ஒரு பகுதியான அறையொன்றினுள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதற்கான ஓர் அமைப்பு ஆகும். இது பொதுவாகக் கட்டிடத்தின் இரண்டு பகுதிகளுக்கு இடையேயுள்ள சுவரில் அல்லது கட்டிடத்தின் வெளிப்புறச் சுவரில் அமைக்கப்படும் துவாரம் ஒன்றை மூடி அமைக்கப்பட்டிருக்கும். கதவுகள் கட்டிடங்களில் மட்டுமன்றி, ஊர்திகள், அலுமாரிகள், கூண்டுகள் போன்றவற்றிலும் காணப்படும்.[1][2][3]

வாயில் கதவுகள் விருந்தினருக்கு வரவேற்பளிக்கும் உணர்வைக் கொடுப்பதற்காக அழகுபடுத்தப்பட்டு இருக்கும்.

கதவுகளின் நோக்கம்

கதவுகள் பலவகையான நோக்கங்களை நிறைவேற்றுகின்றன. இவற்றுட் சில செயற்பாடு சார்ந்தவை. வேறுசில அழகியல் மற்றும் வேறு அம்சங்கள் சார்பானவை.

  • கதவுகள் அவை பொருத்தப்பட்டுள்ள துவாரத்தின் ஊடாக மனிதர் மற்றும் விலங்குகள் போய்வருவதற்கு உதவுகின்றன.
  • திறந்திருக்கும்போது கட்டிடத்தினுள் காற்றோட்டத்துக்கு உதவுகின்றன.
  • குறிப்பிட்ட அறைகளுள் காற்று, நீர், வெப்பம், வேண்டாத ஒலி முதலியன போகாமல் அடைக்க உதவுகின்றன.
  • அறைகளை வெப்பப்படுத்தவோ, வளிப் பதனம் செய்யவோ ஏற்றவகையில் அறைகளைக் காற்றுக் கசியாமல் அடைக்க உதவுகின்றன.
  • வேண்டாதவர்கள் நுழைவதைத் தடுக்கின்றன.
  • எதிரிகள், திருடர்களிடமிருந்து பாதுகாப்பு.
  • தீ பரவலைத் தடுத்தல்.
  • கதவுகள், சிறப்பாக வாயில் கதவுகள் அழகூட்டும் அம்சமாக வடிவமைக்கப்படுகின்றன.
  • சில பண்பாடுகளில் கதவுகள் குறியீட்டுச் செயற்பாடுகளையும் கொண்டிருப்பதுண்டு.

கேலரி

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Doors
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கதவு&oldid=3889800" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை