கம்போடியாவின் பொருளாதாரம்

கம்போடியாவின் பொருளாதாரம் (The economy of Cambodia) தற்பொழுது தடையில்லா சந்தைப் பொருளாதரத்தைப் பின்பற்றுகிறது. இதனால் கம்போடியாவில் கடந்த பத்தாண்டுகளில்[5] விரைவான பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. 2012 ஆம் ஆண்டில் கம்போடியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 13 மில்லியன் டாலர்கள் ஆகும். தனிநபர் வருமானம்,[6] வேகமாக அதிகரித்து எனினும், பெரும்பாலான அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது இவ்வளர்ச்சி குறைவாகவே உள்ளது. நெசவு மற்றும் சுற்றுலாத் தொழில்கள் இரண்டும் கம்போடியாவின் மிகப்பெரிய பொருளீட்டும் தொழிலாக உள்ளன[7]. அதேவேளையில் விவசாயம், கிராமப்புறத்தில் வசிக்கும் பல கம்போடியர்களுக்கு நிலையான வருவாயை ஈட்டித்தரும் தொழிலாக நிலைத்து இருக்கிறது. வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் உணவுத்துறை தொடர்பான நடவடிக்கைகளில் சேவைத்துறை மிகுந்த கவனம் செலுத்தியது. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை கடற்கரைக்கு அருகில் கண்டறிந்துள்ளதாக சமீபத்தில் கம்போடியா தகவல் கொடுத்துள்ளது.[8]

கம்போடியா பொருளாதாரம்
வான் தோற்றம் புனோம் பென்
நாணயம்ரியெல்
நிதி ஆண்டுநாட்காட்டி ஆண்டு
சார்ந்துள்ள வர்த்தக அமைப்புகள்உலக வணிக அமைப்பு, தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு, AFTA
புள்ளி விவரம்
மொ.உ.உPPP $36.590 பில்லியன் (2012) பெயரளவு~ $14.250 பில்லியன் (2012)
மொ.உ.உ வளர்ச்சி7.3% (2012)
நபர்வரி மொ.உ.உPPP $2,490 (2012) பெயரளவு~ $1,150 (2012)
துறைவாரியாக மொ.உ.உவிவசாயம்: 34.7%
தொழிற்சாலை: 24.3%
சேவைத்துறை: 41.0% (2012 திட்டம்.)
பணவீக்கம் (நு.வி.கு)4.1%
தொழிலாளர் எண்ணிக்கை8.8 மில்லியன் (2010)
தொழில் வாரியாகத் தொழிலாளர் எண்ணிக்கைவிவசாயம்: 57.6%
தொழிற்சாலை: 15.9%
சேவைத்துறை: 26.5% (2010)
வேலையின்மை3.5%
முக்கிய தொழில்துறை
பட்டியல்
  • Construction
    Casino gaming
    Cement
    Fishing
    Garments
    Gem mining
    Rice milling
    Rubber
    நெசவுத் தொழில்
    சுற்றுலா
    மரச்சாமான்கள்
தொழில் செய்யும் வசதிக் குறியீடு138th[1]
வெளிக்கூறுகள்
ஏற்றுமதி$8.433 பில்லியன் (2012)
ஏற்றுமதிப் பொருட்கள்துணிகள்,மரம், ரப்பர், அரிசி, மீன், புகையிலை, காலணிகள்
முக்கிய ஏற்றுமதி உறவுகள் United States 33.0%
 United Kingdom 10.3%
 Germany 8.2%
 China 7.7%
 Canada 7.7%
 Belgium 6.1% (2013 est.)[2]
இறக்குமதி$8.840 பில்லியன் (2012)
இறக்குமதிப் பொருட்கள்பெட்ரோலியப் பொருட்கள், சிகரெட்டுகள், தங்கம், கட்டுமானப் பொருட்கள், இயந்திரங்கள், மோட்டார் வாகனங்கள், மருந்துப் பொருட்கள்
முக்கிய இறக்குமதி உறவுகள் Thailand 27.2%
 China 21.7%
 Vietnam 19.3%
 Singapore 8.5%
 Hong Kong 5.8%
 Taiwan 4.6% (2013 est.)[3]
மொத்த வெளிக்கடன்$5.071 பில்லியன் (2012)
பொது நிதிக்கூறுகள்
வருவாய்$2.216 பில்லியன் (2012)
செலவினங்கள்$2.934 பில்லியன் (2012)
பொருளாதார உதவி2011 ஆம் ஆண்டுக்காக $934 மில்லியன் தொகை சர்வதேச நன்கொடையாளர்கள் மூலம் மானியங்கள் மற்றும் சலுகைக் கடன்கள் உறுதியுடன்.
கடன் மதிப்பீடுB+ (உள்நாடு)
B+ (வெளிநாடு)
BB- (T&C Assessment)
(இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு)[4]
அந்நியச் செலாவணி கையிருப்புUS$3.84 பில்லியன் (2010)
'

1995 ஆம் ஆண்டில், நாட்டின் பொருளாதாரம் திட்டமிட்ட பொருளாதார அமைப்பில் இருந்து அதன் தற்போதைய சந்தை சார்ந்த அமைப்புக்கு மாற்றப்பட்டது.[9] இம் மாற்றங்களைத் தொடர்ந்து பணவீக்கம் 26% குறைந்து 1994 இல் 6% ஆக இருந்த வளர்ச்சி சதவீதம் 1995 இல் 7% ஆக உயரும் என திட்டமிடப்பட்டது. வெளிநாட்டு உதவி வருகையின் காரணமாக இறக்குமதி அதிகரித்தது. குறிப்பாக நாட்டின் ஆடைத் தொழிலில் ஏற்றுமதியும் மேலும் அதிகரித்தது. இறக்குமதி குறிப்பாக, நாட்டின் ஆடைத் தொழில் இருந்து, காரணமாக வெளிநாட்டு உதவி வருகை, மற்றும் ஏற்றுமதி அதிகரித்தது, மேலும் அதிகரித்துள்ளது.

பொருளாதார செயல்பாட்டுத் திறன்கள் மேம்படுத்தப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 1997-98 ஆம் ஆண்டுகளில் கம்போடியாவின் பொருளாதார வளர்ச்சி மெல்ல மெல்ல பின்னடையத் தொடங்கியது. பிராந்திய பொருளாதார நெருக்கடி, உள்நாட்டு கலவரங்கள், மற்றும் அரசியல் உட்பூசல் போன்றவை இதற்குக் காரணங்களாக இருந்தன. இக்காலத்தில் வெளிநாட்டு முதலீடுகள் குறைந்தன. 1998 இல் வறட்சி காரணமாக பிரதானமான அறுவடையும் குறைந்தது. ஆனால் 1999 இல் 30 ஆண்டுகளுக்குப் பிறகான ஒரு அமைதி நாட்டில் நிலவியது. இதனால் பொருளாத மறுமலர்ச்சி ஏற்பட்டு வளர்ச்சியானது மீண்டும் 4 சதவீதமாக உயர்ந்தது.

தற்போது, கம்போடியாவின் வெளியுறவுக் கொள்கை தாய்லாந்து, வியட்நாம் போன்ற அதன் அண்டை நாடுகளுடன் நட்புறவு கொள்வதிலும், அதே போல் பிராந்திய அளவிலான தெகிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்புடனும் மற்றும் உலகளாவிய வர்த்தக அமைப்புகளுடன் தன்னை ஒருங்கிணைத்துக் கொள்ளவும் கவனம் செலுத்துகிறது. வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சியில் கம்போடியா சில தடைகளை எதிர்கொண்டது. சிறந்த கல்விமுறைத் திட்டமிடல் மற்றும் திறமையான பயிற்சி பெற்ற தொழிலாளர்களின் தேவை அவசியம் முதலியவற்றை உணர்ந்தது. குறிப்பாக போதிய அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளின்றி போராடும் வறுமை நிறைந்த கிராமப்புறங்களில் இத்தேவை அதிகம் எனவும் உணரப்பட்டது. ஆயினும்கூட கம்போடியா, தொடர்ச்சியாக முதலீட்டாளர்களை ஈர்த்தது. குறைந்த கூலி, அதிக வேலையாட்கள், அருகாமையில் ஆசிய மூலப்பொருட்கள் மற்றும் சாதகாமான வரி வசூல் ஆகியன இதற்குக் காரணங்களாயின[10]

பொருளாதார வரலாறு

பிரான்சிடம்விருந்து 1953 இல் சுதந்திரம் பெற்றபிறகு கம்போடியாவின் அரசியல் சமூக பொருளாதாரம் ஐந்து கட்டங்களாக பகுக்கப்படுகிறது.

  1. கம்போடியா இராச்சியம் (1953-1970)
  2. கெமெர் குடியரசு (1970-1975)
  3. சனநாயக கம்பூச்சியா (1975-1979)
  4. கம்பூச்சிய மக்கள் குடியரசு (1979-1989), பின்னர் கம்போடியா மாநிலம் (1993 1989) என்று பெயர் மாற்றப்பட்டது
  5. கம்போடியா நாடு.

1989 இல் கம்போடிய மாநிலத்தில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டன, திட்டமிட்ட பொருளாதார அமைப்பு தடையற்ற சந்தைப் பொருதாளார அமைப்புக்கு மாற்றப்பட்டது[11] . இப்பொருளாதார சீர்திருத்தத்தின் தொடர்ச்சியாக தனியார் சொத்துடைமை உரிமைகள் அறிமுகப்படுத்தப்பட்டன, மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டன. மேலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு போன்ற பிராந்திய அமைப்பு மற்றும் உலக வர்த்தக மையம் போன்ற உலகளாவிய அமைப்புகளுடன் தன்னை ஒருங்கிணைத்துக் கொள்ள கம்போடியா கவனம் செலுத்தியது. இக்கொள்கைகளால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் இருந்தது. 1997 இல் நிலவிய உள்நாட்டுப் பூசல்கள், பொருளாதார நிலைத்தன்மையின்மையிலும் கம்போடியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.1 சதவீதமாக இருந்தது. எனினும்,1999 முதல் நிலைமை மேம்பட்டது. கம்போடிய பொருளாதாரம் வருடத்திற்கு சுமார் 6-8% சராசரி வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது[12].

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை