கவலை

தவறான கணிப்பால் ஏற்படுகின்ற ஒரு மன நோய் தான் கவலை. உறுதியின்மை அல்லது ஏதேனும் அபாயத்தைச் சந்திக்க நேரிடும்போது நாம் உணரும் ஒருவகை சாதாரண உணர்ச்சிதான் கவலை. வேதாத்திரி மகரிஷி கவலை என்பதை கற்பனையான வலை என்று குறிப்பிடுகிறார்.[1]

அழும் குழந்தையொன்றின் கண்ணீரைச் சித்தரிக்கும் படம்.

கவலை அல்லது துயரம் என்பது இழப்பு, உதவியற்ற நிலை, பயனற்ற நிலை போன்ற உணர்ச்சிகளை வெளிக்காட்டும் ஒரு மன உணர்வாகும். இந்நிலையில் மனிதர்கள் பொதுவாக அமைதியாகவும், ஆற்றலற்ற நிலையிலும், ஏனையோரிடமிருந்து விலகியும் இருக்கத் தலைப்படுவர். அத்துடன் அழுகை மூலமும் அவர்களது இந்த மனநிலை வெளிக்காட்டப்படும்.

மனநிலை தற்காலிகமாக பாதிக்கப்பட்டிருப்பின் அது கவலை எனவும், தொடர்ந்த, ஆழமான மனநிலை பாதிப்பு இருப்பதுடன், தமது வழக்கமான செயல்களை செய்யும் திறனை இழந்தும் இருப்பின் அது மனச்சோர்வு எனவும் கருதப்படும்.

போல் எக்மான் வகுத்துள்ள ஆறு அடிப்படை உணர்ச்சிகளான மகிழ்ச்சி, கவலை, கோபம், ஆச்சரியம், பயம் மற்றும் அருவருப்பு ஆகியவற்றில் கவலையும் அடங்கும்.[2].

உசாத்துணை

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கவலை&oldid=3548478" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை