காணிக்காரர்

காணிக்காரர் (Kanikaran) எனப்படுவோர் தமிழக, கேரள மாநிலங்களின் தென்கோடியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் வாழுகின்ற பழங்குடியினர் ஆவர்.[1] இவர்கள் தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் காணப்படுகின்றனர். இம்மக்கள் காணி, கணியன், காணிக்கர், வேலன்மார், மலையரசன் முதலிய பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். காணிக்காரன் என்பதன் பொருள் நிலத்துக்குச் சொந்தக்காரன் என்பதாகும். இவர்கள் பேசும் மொழி காணிக்காரர் மொழி எனப்படுகிறது.

காணிக்கார ஆண் ஒருவர்

இவ்வின மக்கள் குட்டையான உருவமும், சுருண்ட மயிரும் கருந்த நிறமும் கொண்டவர்கள். பச்சை குத்திக் கொள்ளுதலும் கடுக்கன் அணிந்து கொள்ளுதலும், இவர்தம் பழக்கங்களில் குறிப்பிடத்தகுந்தன. இவர்கள் தாங்கள் வாழுமிடத்தை காணிக்குடி என அழைப்பர். மணமாகாத ஆண்களுக்கு தனியாகக் குடியிருப்புகள் உண்டு. மணமாகோதோர் இரவில் அங்குதான் தங்கவேண்டும். காணிக்காரர்கள் மூன்றாண்டுக்கு ஒரு முறை தாங்கள் வாழுமிடத்தை மாற்றுகின்றனர். வேளாண்மை இவர்தம் முக்கியத்தொழில். மரவள்ளிக் கிழங்கு முக்கிய உணவு. இவர்களிடத்தில் கொக்கரை எனும் தனித்துவம் வாய்ந்த இசைக்கருவியும் உண்டு.

இம்மக்களுக்கு ஆவி உலகக் கோட்பாட்டிலும் மறுபிறப்பிலும் நம்பிக்கை உண்டு. இறந்தவர்களை எரிக்கவோ புதைக்கவோ செய்கின்றனர்.

இவர்கள் தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் வகுப்பில் உள்ளனர்.

இதனையும் பார்க்க

உசாத்துணை

  • தமிழ்நாட்டுப் பழங்குடி மக்கள், முனைவர் சு.சக்திவேல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108, முதற்பதிப்பு: 1998

வெளி இணைப்புகள்


கேரளத்தில் ஆதிவாசிகள்

அடியர்• அரணாடர்• ஆளார்எரவள்ளர்இருளர்காடர்கனலாடிகாணிக்காரர்• கரவழி• கரிம்பாலன்காட்டுநாயக்கர்கொச்சுவேலன்கொறகர்• குண்டுவடியர்• குறிச்யர்• குறுமர்• சிங்கத்தான்• செறவர்‌• மலையரயன்• மலைக்காரன்• மலைகுறவன்• மலைமலசர்• மலைப்பண்டாரம்• மலைபணிக்கர்• மலைசர்• மலைவேடர்• மலைவேட்டுவர்• மலையடியர்• மலையாளர்• மலையர்• மண்ணான்• மறாட்டி• மாவிலர்• முடுகர்• முள்ளுவக்குறுமன்• முதுவான்• நாயாடிபளியர்பணியர்• பதியர்• உரிடவர்• ஊராளிக்குறுமர்• உள்ளாடர்• தச்சனாடன் மூப்பன்• விழவர்• சோலநாயக்கர்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=காணிக்காரர்&oldid=3708037" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை