பளியர்

இந்தியப் பழங்குடிகள்

பளியர் தமிழ்நாட்டிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உயர்ந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் ஆவார். தென்னிந்தியாவின் மிகப் பழமையான சமூகங்களில் பளியர் சமூகமும் ஒன்று. இவர்கள் தமிழ் மொழியைப் பேசுகிறார்கள்.

பளியர் பெண்

திண்டுக்கல் மாவட்டம் பழனி மேற்கு மலையின் சரிவிலும், தொடர்ந்து, தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதிகளிலும் இவ்வினத்தினர் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர், மலைவாழ் இனங்களில் மிகப் பழங்குடியினர் இவர்களே. பழனியர் என்பதே பளியர் என மாறி வழங்குகிறது என்றும் சிலர் சொல்கின்றனர். இவர்களில் காட்டுப்பளியர், புதைப்பளியர் என்னும் இரு பிரிவினர் உள்ளனர். தேனடைகளை எடுக்கப் பயங்கரமான பாறைகளிலும் ஏறக் கூடிய திறனுடையவர்கள். விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடுவர். இவர்கள் காய், கனி, தேன், தானியங்களை உண்பது வழக்கம். மரங்களின் மீது பரண்களை அமைத்தும், பாறை இடுக்குகளிலும், குகைகளிலும் குடியிருப்பைக் கொண்டிருக்கிறார்கள். குட்டையான உருவம், சுருண்ட முடி, தடித்த உதடு, கருப்பு நிறம், குறைந்த ஆடை இவைகளைக் கொண்டு பளியர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இந்த இன மக்கள் குக்குருவான் பறவையை திட்டுவான் குருவி என்று அழைக்கிறார்கள். [1]

இசை

இந்த மக்களின் ஒரே பொழுதுபோக்கு இசை மட்டுமே. புல்லாங்குழல், சத்தக்குழல், கொம்பு, மேளம், மத்தளம், தப்பு, தமுக்கு உள்ளிட்ட பழமையான இசைக்கருவிகளும் அவை சார்ந்த ஆதி இசையும் இன்றளவும் இவர்களிடம் உயிர்ப்போடு உள்ளன. இந்த இசைக்கருவிகளை இவர்களே உருவாக்கி இசைக்கின்றனர்.

வழிபாடு

மலைவனம் முழுவதும் வனதேவாதிகள் (தெய்வங்கள்) நிறைந்திருக்கின்றன என்று இவர்கள் நம்புகிறார்கள். மேலும் இசையால், வனதேவாதிகளை தங்களின் வாழ்விடத்துக்கே வரவைத்துப் பேசமுடியும் என்றும் நம்புகின்றனர். எழுகரை நாடன், பளிச்சியம்மன் இந்த தெய்வங்களே இவர்களின் முதன்மைத் தேவாதிகள். இந்த தேவாதிகள் உள்ளிட்ட 12 வனதேவாதிகள் உள்ளது என்கின்றனர். இவர்களின் தெய்வ வழிபாட்டில் இசை முதன்மைஆனதாக உள்ளது. தெய்வ வழிபாட்டின் போது ஒவ்வொரு விதமான இசை வாசிக்கப்படும். அப்போது, ஆணோ, பெண்ணோ யாராவது ஒருவர் தானாக முன்வந்து ஆடுகிறார். தெய்வங்கள் தங்களுக்குப் பிடித்த இசையை கேட்கும்போது, யாராவது ஒருவருக்குள் வந்திறங்குவதாக இவர்கள் நம்புகிறார்கள்.

வனதேவாதிகளை வரவழைக்க அந்த தேவாதிகளுக்குப் பிடித்த குழலை மட்டும்தான் இசைக்கவேண்டும் என்று நம்புகின்றனர். குழல் வாசித்து வனதேவாதிகளை வரவழைப்பதை இவர்கள் வெறியாட்டு என்று அழைக்கின்றனர்.

வெறியாட்டின்போது ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொருவிதமாக குழல் வாசிக்கின்றனர். அந்தக் குழலிசையைக் கேட்டு எங்கயிருந்தாலும் அந்த தெய்வங்கள் மயங்கி வரும் என்றும், ஒவ்வொரு தேவாதிக்கும் ஒரு ஆட்டம் உள்ளது. அருள் வந்து ஆடுகிறவர்கள் அந்தந்த தேவாதிக்கான ஆட்டத்தைத்தான் ஆடுவார்கள். அதைக்கொண்டே எந்த தேவாதி வந்திருக்கிறது என்பதை அறிகின்றனர். [2]

மேற்கோள்


கேரளத்தில் ஆதிவாசிகள்

அடியர்• அரணாடர்• ஆளார்எரவள்ளர்இருளர்காடர்கனலாடிகாணிக்காரர்• கரவழி• கரிம்பாலன்காட்டுநாயக்கர்கொச்சுவேலன்கொறகர்• குண்டுவடியர்• குறிச்யர்• குறுமர்• சிங்கத்தான்• செறவர்‌• மலையரயன்• மலைக்காரன்• மலைகுறவன்• மலைமலசர்• மலைப்பண்டாரம்• மலைபணிக்கர்• மலைசர்• மலைவேடர்• மலைவேட்டுவர்• மலையடியர்• மலையாளர்• மலையர்• மண்ணான்• மறாட்டி• மாவிலர்• முடுகர்• முள்ளுவக்குறுமன்• முதுவான்• நாயாடிபளியர்பணியர்• பதியர்• உரிடவர்• ஊராளிக்குறுமர்• உள்ளாடர்• தச்சனாடன் மூப்பன்• விழவர்• சோலநாயக்கர்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பளியர்&oldid=3577735" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை