கிமு 490

நாட்காட்டி ஆண்டு

ஆண்டு கிமு 490 (490 BC) என்பது யூலியன் நாட்காட்டிக்கு முன்னரான உரோமை நாள்காட்டியில் ஓர் ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு கமேரினசு, பிளாவசு ஆகியோரின் ஆட்சி ஆண்டு (Year of the Consulship of Camerinus and Flavus) எனவும் சில வேளைகளில் பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 264" எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு கிமு 490 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.

ஆயிரமாண்டு:1-ஆம் ஆயிரமாண்டு கிமு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
  • 510கள் கிமு
  • 490கள் கிமு
  • 480கள் கிமு
  • 470கள் கிமு
ஆண்டுகள்:
  • 493 கிமு
  • 492 கிமு
  • 491 கிமு
  • 490 கிமு
  • 489 கிமு
  • 488 கிமு
  • 487 கிமு

நிகழ்வுகள்

கிரேக்கம்

  • ஏதெனியர்களையும் எரேத்திரியர்களையும் தாக்கும் பொருட்டு முதலாம் டேரியசு தனது கடற்படைகளை ஏஜியன் கடலை நோக்கி அனுப்பினான்.
  • ஆசிய மைனரின் இயோனியக் கிரேக்கர்கள் பாரசீகர்களுக்கு எதிராக கிமு 499 இல் கிளர்ச்சியைத் தொடங்கிய போது, எரேத்திரியா ஏதென்சுடன் இணைந்து கிளர்ச்சியாளர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கியது. இதற்குப் பழிவாங்கும் முகமாக டேரியசு கிரேக்கத்தை முற்றுகையிட்ட போது எரேத்திரியா நகரைச் சூறையாடி, தீயிட்டு அழித்தான். அங்கிருந்த மக்களை அடிமைகளாக்கினான்.
  • செப்டம்பர் 12மாரத்தான் போர் இடம்பெற்றது. 20,000 இற்கும் அதிகமான படையினருடன் பாரசீக இராணுவம் கிரேக்கத்தின் மாரத்தான் குடாவில் தரையிறங்கியது.
  • பைடிப்பிடசு என்பவன் தூதுவனாக உதவி கோரி ஏதென்சில் இருந்து எசுபார்த்தா வரை ஓடித் திரும்பினான். இவ்வாறு மொத்தம் 480 கிமீ தூரம் ஓடியதாக கிரேக்க-பாரசீகப் போர்கள் குறித்த ஆவணங்களைத் தந்த முக்கிய கிரேக்க வரலாற்றாளர் எரோடோட்டசு குறிப்பிடுகிறார்.[1][2] போர் முடிந்தது அவன் வெற்றிச் செய்தியைப் பரப்புவதற்கு ஏதென்சுக்குத் திரும்ப ஓடி அங்கு இறந்தான்.
  • பாரசீகர்களின் தோல்வியை அடுத்து, இப்பியாசு லெம்னோசில் இறந்தான்.

ஐரோப்பா

  • அண்ணளவான நாள்
    • இமில்க்கோ என்ற கார்த்தாசீனிய மாலுமி நடுநிலக் கடலில் இருந்து ஐரோப்பாவின் வடமேற்குக் கரையை அடைந்த முதலாவது நாடுகாண் பயணி ஆவார்.

பிறப்புகள்

  • எம்பெடோகிளசு, கிரேக்க மெய்யியலாளர் (இ. அண். கிமு 430)
  • எலியாவின் சீனோ, [[பண்டைக் கிரேக்கம்|கிரேக்க மெய்யியலாளர் (இ. அண். கிமு 430)

இறப்புகள்

மேற்கோள்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
கிமு 490
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கிமு_490&oldid=3882603" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை