கியூபா ஏவுகணை நெருக்கடி

கியூபா ஏவுகணை நெருக்கடி (Cuban Missile Crisis, அக்டோபர் நெருக்கடி என கியூபாவிலும், கரீபிய நெருக்கடி (உருசியம்: Kарибский кризис) என சோவியத் ஒன்றியத்திலும் அறியப்படுவது) எனப்படும் பதிமூன்று நாட்கள் ஆனது சோவியத் ஒன்றியமும், கியூபாவும் சேர்ந்த அணிக்கும், ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையே அக்டோபர் 1962ல் பனிப்போரின் போது நிகழ்ந்த மோதல் ஆகும். ஆகஸ்ட் 1962ல் கியூப ஆட்சியை வீழ்த்த ஐக்கிய அமெரிக்கா செய்த பன்றிகள் விரிகுடா படையெடுப்பு, மங்கூஸ் செயற்பாடு போன்ற வெற்றியடையாத செயற்பாடுகளுக்கு பிறகு கியூப அரசாங்கமும் சோவியத் ஒன்றிய அரசாங்கமும் சேர்ந்து இரகசியமாக ஏவுகணைத் தளங்களை அமைக்க ஆரம்பித்தன. இந்த தளங்களில் பல நடுத்தர மற்றும் இடைப்பட்ட தரத்தில் உள்ள அணு ஏவுகணைகள் (MRBMs and IRBMs) அமெரிக்க கண்டம் முழுவதையும் தாக்கும் வகையில் நிலைநிறுத்தப்பட்டன. இந்த செயல் ஆனது 1958ல் ஐக்கிய அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் ஐக்கிய ராச்சியத்திலும், 1961ல் இத்தாலி மற்றும் துருக்கியிலும் மாஸ்கோ வரை தாக்கும் வகையில் நிலைநிறுத்தப்பட்ட பிறகே ஆரம்பிக்கப்பட்டது. பாதுகாப்பு உளவுத்துறை[2] அக்டோபர் 14, 1962ல் ஐக்கிய அமெரிக்க வான் படையின் லாக்ஹெட் யு-2 விமானம் கியூபாவில் சோவியத் ஒன்றிய ஏவுகணைத் தளங்கள் கட்டுமானத்தில் இருப்பதை படமெடுத்தது.

கியூபா ஏவுகணை நெருக்கடி
பனிப்போர் பகுதி

CIA reference photograph of Soviet R-12 intermediate-range nuclear ballistic missile (NATO designation SS-4) in சிவப்பு சதுக்கம், மாஸ்கோ
நாள்அக்டோபர் 14–28, 1962
கியூப முற்றுகை நவம்பர் 20, 1962ல் முடிவுக்கு வந்தது
இடம்கியூபா
பிரிவினர்
 United States
 Turkey
 Italy
Supported by:
 NATO
 Soviet Union
 Cuba
Supported by:
வார்சா உடன்பாடு
தளபதிகள், தலைவர்கள்
இழப்புகள்
1 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது
1 விமானம் சேதமானது
1 விமானி கைது செய்யப்பட்டார்

பெர்லின் முற்றுகை, சூயஸ் நெருக்கடி மற்றும் யோம் கிப்பூர் போர் போன்ற முக்கிய பனிப்போர் நிகழ்வுகளுடன் இந்த நெருக்கடியும் சேர்ந்து பனிப்போரானது அணு ஆயுத போராக மாறும் அளவிற்கு திருப்பிவிட்டது எனலாம்.[3] மேலும் இது முதல் முதாலாக ஆவணமாக்கப்பட்ட ஒருவருக்கொருவர் அழித்துக் கொள்வதற்கான (mutual assured destruction) அச்சுறுத்தல் ஆகும். இதுவே சர்வதேச ஆயுத ஒப்பந்தத்தை தீர்மானிப்பதில் முக்கிய காரணியாக இருந்தது.[4][5]

குருசேவ் கென்னடிக்கு எழுதிய கடிதம்

ஐக்கிய அமெரிக்கா கியூபாவை வான் மற்றும் கடல் மார்க்கமாக தாக்க நினைத்தது, ஆனால் அதற்கு பதிலாக இராணுவ முற்றுகையிட முடிவு செய்தது. சட்ட மற்றும் பிற காரணங்களுக்காக இதனை தனிமைப்படுத்ததல் என அமெரிக்கா அழைத்தது.[6] ஐக்கிய அமெரிக்கா கியூபாவிற்கு ஆயுதம் வழங்குவதை அனுமதிக்க முடியாது என அறிவித்தது. அதே நேரத்தில் சோவியத் ஒன்றியம், கியூபாவில் ஏற்கனவே அமைத்துள்ள மற்றும் அமைத்துக்கொண்டிருக்கும் ஏவுகணைத் தளங்களை அழிக்க வேண்டுமென வற்புறுத்தியது. இதற்கு கேர்ம்ளின் ஒத்துக்கொள்வார் என கென்னடி நிர்வாகம் மெலிதான நம்பிக்கையையே வைத்திருந்தது. மேலும் ஒரு இராணுவ மோதலை எதிர்பார்த்திருந்தது. சோவியத் ஒன்றியத்தின் நிக்கிட்டா குருசேவ் கென்னடிக்கு எழுதிய கடிதத்தில் உங்களின் சர்வதேச கடல் மற்றும் வான் வெளி முற்றுகையானது[6] மனித குலத்தை அணு ஆயுதப் போர் எனப்படும் நரகத்தில் தள்ள வழிவகுக்கிறது என எழுதியிருந்தார்.

கென்னடியின் தேர்வுகள்

அவர்களின் ஏவுகணைத் தளங்களைப் பற்றித் தெரிந்தவுடன் அமெரிக்கா மிகக் கோபம் கொண்டது. கென்னடியின் ஆலோசகர்கள் ஏவுகணைகளின் படங்களை முதலில் பார்த்த வேளையில் அவை முழுமையாக தயார் நிலையில் உள்ளன என்று நம்பவில்லை, ஆனால் அவர்களின் ஏவுகணைகள் இரண்டு வாரங்களில் தயாராகிவிடும் என்று ஊகித்துக் கொண்டன்ர். அதனால் கென்னடி தான் வேகமாகச் செயற்படவேண்டும் என்று உணர்ந்து கொண்டார். அவரின் தேர்வுகள் முதலில் தெளிவாக இருக்கவில்லை. அதனால் அவர் தேர்வுகளைக் கொடுப்பதற்காக EXCOMM (தேசிய பாதுகாப்புச் சபையின் நிர்வாக குழு) தொடங்கினார்.

தேர்வுகள்நன்மைகள்தீமைகள்
ஒன்றும் செய்யாமைபோரானது தவிர்க்கப்படும்கென்னடியை சோவியத் ஒன்றியம் மற்றும் உலகின் பிற பகுதிகளில் பலவீனமாக பார்ப்பார்கள். அமெரிக்காவில் அணுவாயுத ஏவுகணைத் தாக்குதல்களைத் தவிர்க்கலாம்.
தாக்குதல்சில ஏவுகணைத் தளங்களை அழிக்கலாம்ஏராளமான சிப்பாய்கள் இறக்க நேரிடும். கியூபா அமெரிக்கா மீது அணுவாயுதத் தாக்குதலை மேற்கொள்ளலாம். மில்லியன் கணக்கான மக்கள் இறக்க நேரிடும். அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்திற்கு இடையே ஒரு போர் உருவாகலாம்.
இராஜதந்திர அழுத்தங்கள்போரைத் தவிர்க்கவும் ஏவுகணைகளை நீக்க சோவியத்தை கூறவும் முடியும்சோவியத் ஒன்றியம் ஒருவேளை விட்டுக் கொடுக்காவிடில் இறுதியில் அமெரிக்காவை விடப் பெரிய வல்லரசாக உருவாகிவிடலாம்.
முற்றுகைஇறப்புக்கள் இருக்காது. சோவியத் இராணுவ உபகரணங்கள் மற்றும் பிற பொருட்களைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்ளும்.கியூபாவில் ஏற்கனவே இருந்த ஏவுகணை தளங்கள் இன்னும் காணப்படும். இந்த முற்றுகையை சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான ஒரு போர் நடவடிக்கை எனக் கருதக்கூடும்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை