கிரா பூசந்தி

கிரா பூசந்தி அல்லது கிரா குறுக்குநிலம்; (மலாய்: Segenting Kra; ஆங்கிலம்: Kra Isthmus; தாய்லாந்து மொழி: คอคอดกระ) என்பது மலாயா தீபகற்பத்தையும்; தாய்லாந்து நாட்டையும் பிரிக்கும் ஒரு குறுக்கு நிலமாகும்.

மலாயா தீபகற்பத்தில் கிரா பூசந்தி

இந்தப் பூசந்தி தாய்லாந்து நாட்டின் தென்பகுதியில் அமைந்து உள்ளது. மேற்குப் பகுதியில் அந்தமான் கடல்; கிழக்கில் தாய்லாந்து வளைகுடா எல்லைகளாக உள்ளன.

அமைப்பு

கிரா பூசந்தியில் தாய்லாந்து கால்வாய் அமைக்கும் திட்டம்

கிரா பூசந்தியின் மேற்குப் பகுதி தாய்லாந்தின்ரானோங் மாநிலத்திற்குச் சொந்தமானது (Ranong Province). கிழக்குப் பகுதி சும்போன் மாநிலத்திற்குச் சொந்தமானது (Chumphon Province). இவை இரண்டும் தெற்கு தாய்லாந்தில் உள்ளன.[1]

திபெத்தில் இருந்து தீபகற்ப மலேசியா வழியாகச் செல்லும் தெனாசிரிம் மலைத்தொடருக்கு (Tenasserim Hills) இடையில் இந்தக் கிரா பூசந்தி அமைந்து உள்ளது. இதன் நீளம் 400 கிமீ (250 மைல்).[2]

தெனாசிரிம் மலைக்காட்டுச் சுற்றுச் சூழல்

கிரா பூசந்தி, தென் தாய்லாந்தின் அழகிய தெனாசிரிம் பசுமை மலைக்காட்டுச் சுற்றுச் சூழலில் அமைந்து உள்ளது.[3]

தாய்லாந்து கால்வாய்

2015-ஆம் ஆண்டில் கிரா பூசந்தியில் தாய்லாந்து கால்வாய் (Thai Canal) அமைப்பதற்கு ஒரு திட்டம் வகுக்கப் பட்டது. இந்தக் கால்வாய், தாய்லாந்து வளைகுடாவை அந்தமான் கடலுடன் இணைக்கும் திட்டமாகும். இந்தத் திட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டு உள்ளது.[4]

மேலும் காண்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கிரா_பூசந்தி&oldid=3738087" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை