கிரேக்க மொழி

உலகில் தோன்றிய மிகப்பழமையான முதல் மூத்த மொழி. எழுத்து வடிவம் தந்த முதல் மொழி

கிரேக்க மொழி அல்லது கிரேக்கு அல்லது எல்லினிக்கா (Greek) என்பது கிரீசு நாட்டுக்கும் கிழக்கு மத்தியதரைக் கடலின் மற்ற பகுதிகளுக்கும் சொந்தமான இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்திலுள்ள தற்சார்புடைய ஒரு கிளை மொழியாகும். உலகில் தோன்றிய உலகின் முதல் மூத்த மொழிகளில் கிரேக்கமும் ஒன்று ஆகும். உலகில் மனிதன் தோன்றிய ஆப்பிரிக்க கண்டத்தில் மாந்தன் பேசிய மொழி கிரேக்கம். ஏறத்தாழ 6,746 ஆண்டுகள் வரலாறு கொண்ட தொன்மையான மொழி கிரேக்க மொழியாகும். வாழும் இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்திலேயே மிகநெடிய வரலாறு கொண்ட மொழியும் கிரேக்க மொழியேயாகும். மேலும் இம்மொழியில் 74 நுற்றாண்டுகளாக எழுதப்பட்ட ஆவணங்கள் உள்ளன.[2]. இம்மொழியின் எழுத்து முறை கிரேக்க மொழி எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இலீனியர் பி மற்றும் சைப்ரியாட் அசையெழுத்துகள் போன்ற பிற எழுத்துமுறை அமைப்புகள் முற்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன [3].

கிரேக்கம் (எல்லினிக்கா)
Ελληνικά
Εlliniká
நாடு(கள்)கிரீசு, சைப்பிரசு, அல்பேனியா, பல்கேரியா,
மாசிடோனியா, இத்தாலி, துருக்கி, ஆர்மேனியா,
சியார்ச்சியா, உக்ரைன், மால்டோவா,
ருமேனியா, உருசியா,
எகிப்து, சோர்தான், தென் ஆப்பிரிக்கா,
கசக்குத்தான், பிரான்சு, புலம்பெயர் கிரேக்கர்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
15 மில்லியன்[1]  (date missing)
இந்தோ-ஐரோப்பிய
  • முதுமுதல் கிரேக்கம்
    • கிரேக்கம் (எல்லினிக்கா)
கிரேக்க அகரவரிசை
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 கிரேக்கம்
 சைப்ரஸ்
 ஐரோப்பிய ஒன்றியம்
சிறுபான்மை மொழியாக அறியப்பட்ட நாடுகள்:
 அல்பேனியா
 இத்தாலி
 துருக்கி
மொழிக் குறியீடுகள்
ISO 639-1el
ISO 639-2gre (B)
ell (T)
ISO 639-3Either:
grc — பழைய கிரேக்கம்
ell — தற்கால கிரேக்கம்

கிரேக்க எழுத்துக்கள் பினீசிய எழுத்துக்களிலிருந்து உருவானவையாகும். இலத்தீன், சிரிலிக், ஆர்மீனியன், காப்டிக், கோதிக் மற்றும் இது போன்ற பல எழுத்து முறை எழுத்தமைப்புகளுக்கும் இதுவே அடிப்படையாக அமைந்தது. மேற்கத்திய உலகம் மற்றும் கிறித்துவம் ஆகியவற்றின் வரலாற்றில் கிரேக்க மொழி ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இலியட் , ஒடிசி போன்ற மேற்கத்திய காவியங்களின் நெறிமுறைகள் பண்டைய கிரேக்க இலக்கியத்தில் அடங்கியுள்ளன. விஞ்ஞானம், வானியல், கணிதம், தர்க்கம், அடித்தள உரையாடல்கள் போன்ற மேற்கத்திய தத்துவம் அரிசுடாட்டிலின் படைப்புகள் போன்றவற்றை எல்லாம் தொகுக்கவும் கிரேக்க மொழி ஏற்புடையதாக உள்ளது. கிறித்துவ விவிலியத்தின் புதிய ஏற்பாடு கிரேக்கத்திப் கொய்யென் மொழியில் எழுதப்பட்டது. உரோமானிய உலகின் மரபுகளுடன் இலத்தீன் எழுத்துகளையும் சேர்த்து, கிரேக்க நூல்களையும் பழங்கால சமுதாயத்தையும் ஆய்வு செய்வதே பாரம்பரிய ஒழுக்கமாகும்.

தொல்பழங்காலத்தின்போது மத்தியதரைக் கடல் உலகிலும் அதற்கு அப்பால் இருந்த பல இடங்களிலும் கிரேக்க மொழி பரவலாக ஓர் இணைப்பு மொழியாகப் பேசப்பட்டது. இறுதியாக இம்மொழி பைசான்டைன் பேரரசின் அதிகாரப்பூர்வ பேச்சுமொழிப் பாணியாக இடைக்கால கிரேக்கத்திற்குள் உருவானது [4]. கிரீசு, சைப்ரசு ஆகிய இரண்டு நாடுகளுக்கு கிரேக்கமொழி அதன் நவீன வடிவத்தில் அலுவலக மொழியாக விளங்குகிறது. ஏழு நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ள சிறுபான்மை மொழியாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 24 அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக இடம்பிடித்தும் சிறப்புப் பெற்றுள்ளது. கிரேக்க மொழி உலக அளவில் சைப்ரசு, இத்தாலி, அல்பேனியா, துருக்கி போன்ற நாடுகளில் வாழும் மக்கள் மற்றும் கிரேக்க புலம்பெயர்ந்தோர் என இன்று 13.2 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

கிரேக்க மொழியின் வேர்கள் பெரும்பாலும் பிற மொழிகளுக்கு புதிய சொற்களைத் தருகின்றன. கிரேக்கமும் இலத்தீனும் சர்வதேச அறிவியல் சொற்களுக்கு முக்கிய ஆதாரங்களாக இருக்கின்றன.

வரலாறு

சுமார் கி.மு. மூவாயிரம் ஆண்டுகள்[5] அல்லது அதற்கு முன்னரே[6] பால்கன் குடாவில் கிரேக்க மொழி பேசப்பட்டது. கிரேக்க மொழியின் மிகப்பழைய அசையெழுத்து வடிவம் கிரேக்கத்தின் மெசேனியாவில் கண்டெடுக்கப்பட்டது. இதன் காலம் கி.மு 1450 இற்கும் 1350 இற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்[7]. இதனடிப்படையில் எழுத்துச் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆகப்பழைய வாழும் மொழியாகக் கிரேக்க மொழி அமைகிறது. இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் கிரேக்க மொழியின் தொன்மைக்கு சான்றாகக் கிடைத்துள்ள எழுத்துப்பூர்வ ஆவனம் இப்போது அழிந்துவரும் அனடோலியன் மொழிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

காலம்

மூலக் கிரேக்க மொழி பேசப்பட்ட பரப்பு – மொழியியலாளர் விளாடிமிர் ஐ சியார்ச்சீவ்

மரபு வழியில் கிரேக்க மொழி பின்வரும் காலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

  • மூலகிரேக்கம்: இது பதிவு செய்யப்படாத ஆனால் அறியப்பட்ட அனைத்து கிரேக்க வகைகளின் கடைசி மூதாதையர்களின் காலம் ஆகும். கிரேக்க தீபகற்பத்தில் புதிய கற்கால சகாப்தம் அல்லது வெண்கலக் காலம் ஆகியவற்றில் எலியனிக் குடியேறிகள் நுழைந்ததால் மூலக் கிரேக்கத்தின் ஒற்றுமை முடிவடைந்தது[8].
  • மைசீனிய கிரேக்கம்: மைசீனிய நாகரிக்கத்தினர் பேசிய மொழி மைசீனியக் கிரேக்க மொழியாகும். இலீனியர் பி என்ற அசையெழுத்து அமைப்புமுறையில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. கி.மு. பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த மைசீனிய கிரேக்கமொழி கிரேக்க மொழியின் மிகப்பழைய வடிவமாகும்.
  • பண்டைய கிரேக்க மொழி: இது பல்வேறு வட்டாரங்களில் பண்டைய கிரேக்க நாகரிகத்தைச் சேர்ந்த தொல் பாரம்பரிய மக்களால் பேசப்பட்ட வட்டார மொழியாகும். ரோமப் பேரரசு முழுவதும் பரவலாக பண்டைய கிரேக்க மொழி அறியப்பட்டிருந்தது. மேற்கத்திய ஐரோப்பாவில் மத்திய காலத்தில் பண்டைய கிரேக்க மொழி பேசப்படுவது வழக்கொழிந்திருந்தது. ஆனால் பைசண்டைன் உலகில் அதிகாரப்பூர்வமாக நிலைத்து நின்று பயன்படுத்தப்பட்டது. கான்சுடான்டிநோபிள் வீழ்ச்சி மற்றும் மேற்கு ஐரோப்பாவிற்கு கிரேக்க குடியேற்றம் ஆகியவற்றினால் மீதமுள்ள ஐரோப்பாவிலும் பண்டைய கிரேக்க மொழி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • கோயினி கிரேக்க மொழி: அயோனிக் வட்டார மொழியுடன் அட்டிக் வட்டார மொழியும் கலந்து உருவான ஏதென்சின் கிளை மொழி முதலாவது கிரேக்க பொது வட்டார மொழியாக உருவானது. இது மத்திய தரைக்கடல் மற்றும் அண்மைய கிழக்கிந்திய பகுதிகளில் இணைப்பு மொழியாகப் பயன்படுத்தப்பட்டது. கோயயினி கிரேக்க மொழி ஆரம்பத்தில் இராணுவம் மற்றும் பெருமளவிலான அலெக்சாந்தர் வெற்றி கொண்ட பிராந்தியங்களில் அறியப்பட்டது. மற்றும் அறியப்பட்ட உலகத்தில் எலனிசுடிக் காலனித்துவம் குடியேறிய பின்னர் அது எகிப்திலிருந்து இந்தியாவின் எல்லை வரை மக்களால் பேசப்பட்டது. கிரீசை ரோமானியர்கள் வெற்றி கொண்ட பின்னர், கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகள் அதிகாரப்பூர்வமற்ற மொழிகளாக இருமொழிக் கொள்கை ரோமானிய நகரில் பயன்பாட்டில் இருந்தது. கொய்னி கிரேக்க மொழி ரோமானியப் பேரரசில் முதல் அல்லது இரண்டாவது மொழியாக மாறியது.
  • இடைக்கால கிரேக்க மொழி: பைசண்டின் கிரேக்க மொழி என்றும் இது அறியப்படுகிறது: கோய்னி கிரேக்கத்தின் தொடர்ச்சியாக 15 ஆம் நூற்றாண்டில் பைசண்டின் பேரரசின் அழிவு வரை இடைக்கால கிரேக்க மொழி நீடித்தது. மேலும் இடைக்கால கிரேக்கமானது பல்வேறு பேச்சு மற்றும் எழுத்து வடிவங்களின் ஒரு தொடர்ச்சியான வட்டார வழக்காகும் கோயினுடைய மொழி தொடர்ச்சியிலிருந்து தொடங்கி ஏற்கனவே பல கிரேக்க மொழிகள் நவீன கிரேக்கத்தை நெருங்கி வந்தன. பெரும்பாலான எழுத்து கிரேக்கமொழிகள் பைசண்டின் பேரரசின் உத்தியோகபூர்வ மொழியாகப் பயன்படுத்தப்படன. பைசண்டின் பேரரசு கோயினின் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட நடுத்தர-நிலப்பரப்பு ஆகும்.
  • நவீன கிரேக்க மொழி: புதிய எலினிக் காலம் இடைக்கால கிரேக்கத்திலிருந்து உருவானது. இடைக்கால கிரேக்க மொழி காலத்தின் முடிவு நவீன கிரேக்கத்தின் தொடக்கமானது பெரும்பாலும் 1453 ஆம் ஆண்டில் பைசண்டின் பேரரசு வீழ்ச்சிக்கு அடையாளமாகக் குறிப்பிடப்படுகிறது, இந்நாள் தெளிவான மொழியியல் எல்லையை குறிக்கவில்லை என்றாலும், மொழியின் நவீன அம்சங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தோற்றம் பெற்றன. .11 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், பைசண்டின் காலகட்டத்தில் நவீன கிரேக்கப் பயன்பாடுகளைக் காணலாம். இது நவீன கிரேக்கர்கள் பயன்படுத்தும் மொழியாகும் மற்றும் நவீன கிரேக்க மொழிகள் தவிர அதன் பல கிளைமொழிகளும் உள்ளன.

புவியியற் பரம்பல்

கிரேக்க மொழி சுமார் 13 மில்லியன் மக்களால் பேசப்படுகின்றது. இவர்களில் பெரும்பான்மயோர் கிரேக்கம், அல்பேனியா, சைப்பிரசு ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். புலம்பெயர் கிரேக்கர்களாலும் கிரேக்கம் பேசப்படுகிறது. பாரம்பரிய கிரேக்கக் குடியேற்றங்கள், அல்பேனியா, பல்கேரியா, துருக்கி ஆகிய நாடுகளின் எல்லைப்புறங்களிலும் கருங்கடல் பகுதி நாடுகளான உக்ரைன், இரசியா, உரோமானியா, சியார்சியா, ஆர்மேனியா, அசர்பைசான் ஆகிய நாடுகளிலும் மத்திய தரைக்கடலை அண்டிய தென் இத்தாலி, சிரியா, இஸ்ரேல், எகிப்து, லெபனான், லிபியா ஆகிய நாடுகளிலும் காணப்படுகின்றன. மேலும் ஐக்கிய இராச்சியம், செருமனி, கனடா, ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆர்ஜென்டீனா, பிரேசில், சிலி மற்றும் தென்னாபிரிக்கா நாடுகளில் கிரேக்க மொழி பேசும் புலம்பெயர் கிரேக்கர்கள் வாழ்கின்றனர்.

அலுவல் மொழி நிலை

கிரேக்க மொழி கிரேக்க நாட்டில் அலுவல் மொழியாக உள்ளது. இது ஏறத்தாழ கிரேக்கத்தின் மொத்தச் சனத்தொகையாலும் பேசப்படுகிறது[9]. மேலும் இது துருக்கி மொழியுடன் இணைந்து சைப்பிரசு நாட்டின் அலுவல் மொழியாகவும் உள்ளது[10]. இவ்விரு நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் 24 அலுவல் மொழிகளில் ஒன்றாகவும் உள்ளது[11]. இத்தாலியின் சில பகுதிகளிலும் அல்பேனியாவிலும் இது சிறுபான்மையின மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இரட்டை நடை

நவீன சகாப்தத்தில் கிரேக்க மொழியானது இரட்டைநடை வழக்கிற்குள் நுழைந்தது. பேச்சு மொழியியல் நிலைத்தும் எழுத்து மொழி வழக்கொழிந்தும் உள்ள மொழியாக இம்மொழியின் நிலை மாறியது. .

இயல்புகள்

கிரேக்க மொழியின் ஒலியனியல், உருபனியல், சொற்றொடரியல் மற்றும் சொற்றொகுதி என்பவற்றின் அடிப்படையில், இம்மொழி பண்டைய காலத்திலிருந்து தற்காலம் வரை பழைமையைப் பேணும் அதேவேளை புதுமையைப் புகுத்த இடம் கொடுப்பதாகவும் உள்ளது.

எழுத்து முறை

மைசீனிய கிரேக்க காலத்தினதான அசையெழுத்து முறையான நேரான பி (Linear B) என்ற எழுத்துமுறை கி.மு. பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இம்முறையிலான எழுத்துக்களைக் கொண்ட மைசீனிய கிரேக்கம், கிரேக்க மொழியின் மிகப்பழைய வடிவமாகும்.ஏறத்தாழ நேரான பி எழுத்துமுறையை ஒத்த சைபீரிய அசையெழுத்து முறை கி.மு. பதினோராம் நூற்றாண்டளவில் சைபீரியாவில் கிரேக்க மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்டது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கிரேக்க_மொழி&oldid=3844495" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை