கீவ் மாகாணம்

கீவ் மாகாணம் (Kyiv Oblast or Kiev Oblast) உக்ரைன் நாட்டின் நடு வடக்கில் அமைந்த மாகாணம் ஆகும். இதன தலைநகரம் கீவ் நகரம் ஆகும்.உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் நகரத்தை கைப்பற்ற, 24 பிப்ரவரி 2022 முதல் உருசியா படையெடுப்பு நடத்தி வருகிறது.

கீவ் மாகாணம்
Київська область
மாகாணம்
கீவிஸ்கா மாகாணம்[1]
Flag of Kyiv Oblast
கொடி
Coat of arms of Kyiv Oblast
சின்னம்
நாடு உக்ரைன்
தலைநகரம்கீவ்
அரசு
 • ஆளுநர்வசில் வொலோதின்[2]
 • கீவ் மாகாணக் குழு84 உறுப்பினர்கள்
 • அவைத் தலைவர்ஹன்னா ஸ்டாரிகோவா
பரப்பளவு
 • மொத்தம்28,131 km2 (10,861 sq mi)
பரப்பளவு தரவரிசை8-வது
மக்கள்தொகை (2021)[3]
 • மொத்தம்17,88,530
 • தரவரிசை10வது
 • அடர்த்தி64/km2 (160/sq mi)
Demographics
 • அலுவல் மொழிஉக்குரேனிய மொழி
 • Salary growth+28.73
நேர வலயம்கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம் (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு07-09
பிரதேச குறியீடு+380 44 (கீவ் நகரம்)
+380 45 (கீவ் நகரத்திற்கு வெளியே)[4]
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுUA-32
வாகனப் பதிவுAI
மாவட்டங்கள்25
மொத்த நகரங்கள்26[5]
மண்டல நகரங்கள்12[5]
சிறு நகரங்கள்30
கிராமங்கள்1,127[5]
FIPS 10-4மாகாணக் குறியீடு UP13
இணையதளம்kyiv-obl.gov.ua

புவியியல்

28,100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கீவ் மாகாணம், உக்ரைன் நாட்டில் வடமத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. இது கீவ் நகரத்தின் பரப்பளவை விட 35 மடங்குப் பெரிய்தாகும். கீவ் மாகாணத்தின் வடக்கில் பெலரஸ் நாடும், தென்கிழக்கில் போல்தவா மாகாணம், தெற்கில் செர்கசி மாகாணம், கிழக்கிலும், வடகிழக்கிலும் செர்னிகிவ் மாகாணம், தென்மேற்கில் வின்னித்சியா மாகாணம், மேற்கில் சைதோமிர் மாகாணம் எல்லைகளாக உள்ளது. தினேப்பர் ஆறு கீவ் மாகாணத்தின் வடக்கிலிருந்து தெற்காக 246 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாய்கிறது. கீவ் நீர்த்தேக்கம் மற்று கனிவ் நீர்த்தேக்கம் மற்றும் 750 சிறுஏரிகள் கீவ் மாகாணத்தின் நீர் ஆதாரமாக உள்ளது.

தட்ப வெப்பம்

சனவரி மாதத்தில் குளிர்காலத்திய வெப்ப நிலை {convert|-6.1|°C|°F}} ஆகவும், கோடைக்காலத்திய வெப்ப நிலை 19.2 °C (66.6 °F) ஆகவும் இருக்கும்.

நிர்வாகப் பிரிவுகள்

கீவ் மாகாணம் 25 மாவட்டங்கள், 26 நகரங்கள், 12 மண்டல நகரங்கள், 12 சிறு நகரங்கள் மற்றும் 1,127 கிராமங்கள் கொண்டது.

செர்னோபில் மண்டலம்

கீவ் மாகாணத்தின் வடமேற்கின் கோடியில் அமைந்த செர்னோபில் நகரத்தில் உள்ள அணு உலை 26 ஏப்ரல் 1986 அன்று வெடித்து அணுக்கதிரியக்கம் வெளியே பரவியதால் செர்னோபில் மண்டலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டது. தற்போது இந்நகரம் மனிதர் வாழாது உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

கீவ் மாகாணத்தின் மொத்த் மக்கள் தொகை 17,88,530 ஆகும். அதில் உக்குரேனிய மொழி|உக்ரேனியர்கள்]] 16,84,800 (92.5%) பெரும்பான்மையாகவும், உருசியர்கள், யூதர்கள், பெல்ரசியர்கள் மற்றும் பிறர் சிறுபான்மையினத்தவராக உள்ளனர். கீவ் போன்ற நகர்புறங்களில் 10,53,500 (57.6%) மக்களும், கிராமபுறங்களில் 7,74,400 (42.4%) மக்களும் வாழ்கின்றனர்..[6]கீவ் மாகாண மக்கள் தொகையில் ஆண்கள் 46.3% மற்றும் பெண்கள் 53.7% ஆக உள்ளனர்.

பொருளாதாரம்

தொழில்துறை

கீவ் மாகாணம் அணுசக்தி மின் ஆற்றல், எரிசக்தி துறை, உணவு, வேதியியல், பெட்ரோ-கெமிக்கல் தொழில்கள், பொறியியல் இயந்திரங்கள், உலோகத் தொழிற்சாலைகள் அதிகம் கொண்டது.

வேளாண்மை

1999-ஆம் ஆண்டின் கீவ் மாகாணத்தின் தானிய உற்பத்தி 1,118,600 டன்கள் ஆகும். கரும்பு 15,70,900 டன்களும், சூரியகாந்தி வித்துக்கள் 1,81,000 டன்களும் விளைந்தது.

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

கீவ் மாகாணம் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கீவ்_மாகாணம்&oldid=3842740" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை