குஜராத் சுல்தானகம்

குஜராத் சுல்தானகம் (Gujarat Sultanate) தற்கால இந்தியாவின் குஜராத் மாநிலப் பகுதிகளை, கிபி 1407 முதல் 1573 முடிய ஆண்ட இசுலாமிய முடியாட்சி ஆகும்.

குஜராத் சுல்தானகம்
ગુજરાત સલ્તનત (குசராத்தி மொழி)
سلطنت گجرات (பாரசீக மொழி)
1407–1573
கொடி of Gujarat Sultanate
கொடி
1525ல் குஜராத் சுல்தானகம்
1525ல் குஜராத் சுல்தானகம்
தலைநகரம்பதான் (1407–1411)
அகமதாபாத் (1411–1484, 1535–1573)சாம்பனேர் (1484–1535)
பேசப்படும் மொழிகள்பழைய குஜராத்தி
பாரசீகம் (அலுவல் மொழி)
சமயம்
இந்து சமயம்
இசுலாம்
சமணம்
அரசாங்கம்முடியாட்சி
முசாபரித்து வம்சம் 
• 1407–1411
முதலாம் முசாபர் ஷா (துவக்கம்)
• 1561-1573
மூன்றாம் முசாபர் ஷா (இறுதி)
வரலாறு 
• 1407ல் தில்லி சுல்தானகத்திலிருந்து, குஜராத்தை முதலாம் முசாபர் கான் விடுவித்து தன்னாட்சியுடன் ஆண்டார்.
1407
• அக்பர், குஜராத் சுல்தானகத்தை முகலாயப் பேரரசில் இணைத்தார்.
1573
முந்தையது
பின்னையது
[[தில்லி சுல்தானகத்தில் குஜரத்]]
[[துக்ளக் வம்சம்]]
[[முகமது பின் துக்ளக் ஆட்சியில் குஜராத் சுல்தானகம்]]
[[போர்த்துகேய இந்தியா]]
தற்போதைய பகுதிகள்குஜராத், தமனும் தியூவும் மற்றும் மும்பை  இந்தியா
தியூ முற்றுகையின் போது, போர்த்துகேய இந்தியாவின் படைகளால், 1567ல் குஜராத் சுல்தான் பகதூர் கொல்லப்படுதல்

வரலாறு

தில்லி சுல்தானகத்தை ஆண்ட முகமது ஷா துக்ளக் என்பவர், கிபி 1391ல் பதான் நகரத்தை தலைமையிடமாகக்[1][2][3] கொண்ட குஜராத் பிரதேசத்தின் ஆளுநராக ஜாபர் கான் என்ற முதலாம் முசாபர் ஷாவை நியமித்தார்.

தைமூரின் படையெடுப்பால், தில்லி சுல்தானகம் வீழ்ச்சியடைந்த நேரத்தில், கிபி 1407ல் தில்லி சுல்தானகத்தின் குஜராத் ஆளுநர், குஜராத் சுல்தானகத்தை தன்னாட்சி கொண்ட அரசாக அறிவித்தார்.முதலாம் முசாபர் ஷாவின் பேரன் முதலாம் அகமது ஷா 1411ல் அகமதாபாத் நகரத்தை நிறுவினார்.[4] அவரது வாரிசான இரண்டாம் முகமது ஷா, குஜராத்தின் இராசபுத்திர சிற்றரசர்களை அடக்கினார். சுல்தான் மகமது பேக்டா[3][5] ஆட்சியில் குஜராத் சுல்தானகம் செழிப்புடன் விளங்கியது.

இராசபுத்திரர்களை அடக்கி, தியூ கடற்கரையில் கப்பற்கடையை நிறுவினார். 1509ல் போர்த்துகேயர்கள், தியூ போரில், தியூவை குஜ்ராத் சுல்தான்களிடமிருந்து கைப்பற்றினர். 1526ல் குஜராத் சுல்தான் சிக்கந்தர் ஷா கொல்லப்பட்டதிலிருந்து, குஜராத் சுல்தானகம் வீழ்ச்சி கண்டது. 1535ல் முகலாயப் பேரரசர் உமாயூன் குஜராத் சுல்தானகத்தின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றினார்.

பின்னர் 1537ல் குஜராத் சுல்தான் பகதூர் ஷா, போர்த்துகேயர்களால் கொல்லப்பட்டார்.[3][6]

முகலாயப் பேரரசர் அக்பர், மூன்றாம் முசாபர் ஷா[7] ஆட்சியின் போது, 1573ல் குஜ்ராத் சுல்தானகத்தை வென்று, முகலாயப் பேரரசில் இணைத்ததுடன் குஜராத் சுல்தானகத்தின் ஆட்சி முடிவுற்றது.

ஆட்சியாளர்கள்

  1. ஜாபர் கான் எனும் முதலாம் முசாபர் ஷா 1391 - 1411
  2. முதலாம் அகமது ஷா 1411 - 1443
  3. இரண்டாம் முகமது ஷா 1443 - 1451
  4. இரண்டாம் அகமது ஷா 1451 - 1458
  5. முதலாம் முகமது ஷா எனும் முகமது பேக்டா 1458 - 1511
  6. இரண்டாம் முசாபர் ஷா 1511 - 1526
  7. பகதூர் ஷா 1526 - 1537
  8. மூன்றாம் முகமது ஷா 1537 - 1554
  9. மூன்றாம் அகமத் ஷா 1554 - 1561
  10. மூன்றாம் முசாபர் ஷா 1561 - 1573

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதாரநூற்பட்டி

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=குஜராத்_சுல்தானகம்&oldid=3877034" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்