குஞ்ஞாலி மரைக்காயர்

கோழிக்கோட்டு சாமுத்ரி மன்னனின் கடற்படையின் முசுலீம் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டப் பெயர்

குஞ்ஞாலி மரைக்காயர் என்பது கோழிக்கோட்டு சாமுத்ரி மன்னனின் கடற்படைத் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டப் பெயர். நால்வர் குஞ்ஞாலி மரைக்காயர் பதவி வகித்திருந்தனர்.  பதினாறாம் நூற்றாண்டுகளில் இவர்கள் போர்த்துகீசியர்களுக்கு எதிராக 1502 இல் தொடங்கி 1600கள் வரை சாமரின் கடற்படையில் சிறப்பாக போர் புரிந்தனர்.

இந்திய கடற்படையால் அமைக்கப்பட்ட குஞ்ஞாலி மரைகாயர் நினைவுத்தூண் இடம்:கோட்டக்கல், வடகறா,கேரளம்
குஞ்ஞாலி மரைக்காயர்களின் மூதாதையர்  இல்லம் ,தற்போது அருங்காட்சியகம்

பட்டம்

குஞ்சாலிகளுக்கான பட்டங்கள் சாமரின் மன்னர்களால் வழங்கப்பட்டன. மரக்கலம் என்ற வார்த்தையை தழுவி மரைக்காயர் என அழைக்கப்பட்டனர்.[சான்று தேவை]

கீழே குஞ்ஞாலி மரைக்காயர்கள் பதவி வகித்த காலமும் அவர்களின் இயற்பெயரும் தரப்பட்டுள்ளது.

வரிசைஇயற்பெயர்பதவிக்காலம்
முதலாம் குஞ்ஞாலிகுட்டி அஹம்மத் அலி1520-1531
இரண்டாம் குஞ்ஞாலிகுஞ்ஞாலி மரைக்காயர்1531-1571
மூன்றாம் குஞ்ஞாலிபட்டு குஞ்ஞாலி1531-1571
நான்காம் குஞ்ஞாலிமுஹம்மது அலி1595-1600

அரபு முசுலீம்கள் தனி ஆதிக்கம் செலுத்தி வந்த மலையாளக் கடலில் போர்ச்சுக்கீசியர் வணிகஞ் செய்ய வந்தனர். இது அரபு முசுலீம்களுக்குப் பிடிக்கவில்லை. முதலில் கொச்சி மன்னனும் போர்ச்சுகீசியர்களை எதிர்த்தான். நாலாம் குஞ்ஞாலி போர்ச்சுக்கீசியர்களை எதிர்த்துப் போரிட்டார். ஆனால், குஞ்ஞாலி அரசைக் கைப்பற்ற முயற்சிப்பதாக மன்னனிடம் கூறி மன்னனோடு இணைந்து நான்காம் குஞ்ஞாலியைத் தோற்கடித்தனர். [சான்று தேவை]

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை