குமரி மாவட்டத் தமிழ்


தமிழ்
கொடுந்தமிழ்
செந்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்
முத்தமிழ்
துறை வாரியாகத் தமிழ்
அறிவியல் தமிழ்
ஆட்சித் தமிழ்
இசைத்தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
சட்டத் தமிழ்
செம்மொழித் தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
மருத்துவத் தமிழ்
மீனவர் தமிழ்
முசுலிம் தமிழ்
பிராமணத் தமிழ்
வட்டார வழக்குகள்
திருநெல்வேலித் தமிழ்
அரிசனப் பேச்சுத் தமிழ்
குமரி மாவட்டத் தமிழ்
கொங்குத் தமிழ்
செட்டிநாட்டுத் தமிழ்
சென்னைத் தமிழ்
மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்
நாஞ்சில் தமிழ்
மணிப்பிரவாளம்
மலேசியத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
சுனூன் தமிழ்
பாலக்காடு தமிழ்
பெங்களூர் தமிழ்

தொகு

'குமரித் தமிழ்' (Kumari Tamil) அல்லது 'வேணாட்டுத் தமிழ்' என்பது தமிழின் வட்டார வழக்குகளுள் ஒன்றாகும். தமிழகத்தின் வேறு பகுதிகளில் வழங்காத சொற்களெல்லாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கில் உள்ளன. இப்பகுதி மலையாள நாட்டின் வாயிலாகவும் இருப்பதால் மலையாளச் சொற்களும், இலக்கணமும் இப்பகுதியின் பேச்சு வழக்கில் மிகுதியாகக் கலந்திருக்கின்றன. இன்றைய 'குமரித் தமிழ்' மூன்று வகைகளில் பேசப்படுகிறது.

1தோவாளை, அகத்தீசுவரம் வட்டங்களில் உள்ள வெள்ளாளர் மக்கள் பேசும் நாஞ்சில் நாட்டுத் தமிழ்.
2குமரி மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழும் நாடார் மக்கள் பேசும் வேணாட்டுத் தமிழ்.
3கடலோரக் கிராமங்களை உள்ளடக்கிய (முக்குவர், பரதவர்) வட்டார மீனவர் தமிழ்.

ஒட்டுமொத்தமாக இந்த எல்லா வகைகளிலும் தமிழ்ச் சொற்களின் / இலக்கணத்தின் மருவலே அதிகம் காணப்படுகிறது. ஆனாலும் மலையாள வழக்கும் கலந்து உள்ளது.

கீழ்க்காணும் விளக்கங்களில், 'மலையாள வழக்கு' என்பது 'மலையாளத்தில் இருந்து மருவியது' என்று பொருள்படாது. மாறாக, 'இந்தச் சொல் பிற வட்டார வழக்கில் (அவ்வளவாகப்) பயன்படுத்தப்படாமல், குமரித் தமிழிலும், மலையாளத்திலும் (மட்டுமே) வழக்கத்தில் உள்ளது' என்றே பொருள்படுகிறது. அச்சொற்கள் அடிப்படையில் தமிழ் வேர் கொண்ட சொற்களாகவோ, சமசுகிருத வேர் கொண்ட சொற்களாகவோ, மலையாளத்தின் தனித்துவமான சொற்களாகவோ இருக்கலாம்.

குமரித் தமிழ்ச் சொற்கள் மற்றும் விளக்கம்.

குமரித் தமிழ்ச் சொல்பொதுத் தமிழ்ச் சொல்சொல் விளக்கமும் சான்றும்
அக்கானிபதநீர்பனை மற்றும் தென்னை மரப் பாளைகளில் இருந்து பெறும் வடிநீர்.
அங்கணம் / அங்ஙணம்உள்முற்றம், கழிவுநீர் மடைதிருக்குறள்: "அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் அல்லார்முன் கோட்டி கொள"
அங்கன / அங்கிணஅங்கே"மோனே, அங்கன போவாதே" - "மகனே அங்கே போகாதே"
அங்கோடிஅந்த வழியாக"அவ அங்கோடி பேயிட்டிரிக்யும்போது பாம்பு ஒண்ணு குறுக்கால போச்சாம்." இங்கு 'பேயிட்டிரிக்யிம்போது' (போய்க்கொண்டிருக்கும்போது) இல் 'போ'க்குப்பதிலாக 'பே' என்றும், 'இருக்கும்' என்பது 'இரிக்கும்' அல்லது 'இரிக்யிம்' என்றே பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, கேரள எல்லை வட்டங்களில் இவ்வழக்கு உள்ளது
அசல்துணி உலர்த்தும் கொடி
அசைதுணி போடும் கொடி
அடிச்சு மாத்துவதுதிருடுவது
அண்டிப் பருப்புமுந்திரிப் பருப்பு
அண்டைஅடுப்பு
அத்தம்கடைசிஅற்றம்
அத்தாழை / அத்தாழம்அந்தி உணவு, அற்றாலம்அத்தாழப் பட்டினி - அந்தி உணவு இல்லாதவர்.
அத்துவெட்டிஅற்று/அறுத்து எனபனவற்றின் திரிபு. பொதுத்தமிழிலும் உள்ளது
அந்தாலஅந்த வழியாக / அப்படி / அதற்குப்பிறகு
அப்பச்சிதாத்தாமலையாள வழக்கு
அப்பம்அப்போது"லே கொப்பன் அப்பமே வந்தாச்சி" - "உன் அப்பா அப்போதே வந்தாயிற்று". அரிசி மாவில் செய்யப்படும் பண்டத்திற்கும் அப்பம் என்ற பெயருண்டு
அம்மாசிஅம்மாவாசை
அம்படம் / அம்புடம்அவ்வளவுஅம்மட்டம் என்பதன் திரிபு
அயத்துமறந்துஅயத்து போச்சி - மறந்து போயிற்று
அல்லாஅல்லவா
அல்லாமஅல்லாமல், இல்லாமல்மருவல்
அலட்டல்பேசிக்கொண்டே இருப்பதுபொதுத்தமிழிலும் உள்ளது
அலவாக்கரைகடற்கரைஅலைவாய்க்கரை
அவயம்பெருத்த ஓசை
அவயான்பெருச்சாளி
அவியஅவர்கள்பொதுத்தமிழிலும் உள்ளது
அற்றம் / அத்தம்கடைசி, இறுதி, முடிவு, கரை"தெருவுக்க அத்தத்துல தான் அந்த கடை இருக்கு" - "தெருவின் கடைசியில் தான் அந்த கடை உள்ளது".
அரங்கு வீடுசேமிப்பு அறை, பூசை அறை
அரதிதுன்பம், விருப்பமின்மை
அரிஷ்டம்போலிச் சாராயம்அடிப்படையில் 'அரிஷ்டம்' என்பது ஆயுர்வேத மருத்துவ முறையில் தயாரிக்கப்படும் ஒரு திரவ மருந்தின் வகை. சில காலம் முன்பு, இந்த மருந்தான அரிஷ்டத்தை தயாரிக்கும் உரிமத்தை வைத்துக்கொண்டு சில சமூக விரோதிகள் சாராயம் தயாரிக்கலானர். இப்போது மக்களின் போராட்டங்களின் பயனாக அவ்வுரிமைகள் அரசால் திரும்பப்பெறப்பட்டு, அரிஷ்டம் தயாரிப்பிற்கும் தடை உள்ளது.
அளி / அழிகம்பி போட்ட பெரிய சாளரம்அளிபோட்ட வீடு
அளுவஒரு உயர்தர வகை மீன்
அறுப்புதிட்டு, வசை, திட்டுதல், அறுவடை"எங்கையா இன்னிக்கி ஒரே அறுப்பு" - "என் தந்தை இன்று என்னை நன்றாக திட்டினார்"
அன்னாஅதோ, அங்கே"அன்னா நிக்காம்லே" - "அங்கே நிற்கிறான் டா"
அனக்கம்சத்தம், அசைவு, இயக்கம்"என்ன அனக்கமே இல்லை!" - "என்ன அமைதியாக இருக்கிறது!"
ஆக்கத்திசிறிய வகை அரிவாள்மலையாள வழக்கு. குறிப்பாக தென்னை ஓலை அரிய பயன்படுத்தப்படுகிறது.
ஆக்கர் கடைகாயலான் கடை
ஆகுல்லாஆகிறது அல்லவா
ஆட்டும்சரியென ஆமோதித்தல், ஆகட்டும்ஆகட்டும் என்பதன் மருவல்
ஆயினி சக்கை / ஐனிச் சக்கைஈரப்பலாபலாப்பழத்தில் ஒரு சிறிய வகை
ஆராசனைஇறை அருள்"அவியளுக்கு ஆராசனை வந்துட்டு" - "அவர்களுக்கு இறையருள் வந்துவிட்டது"
ஆராங்குஒரு மீன் வகை
ஆவிஆகி"அவுருக்கு விபத்து ஆவிட்டு" - "அவருக்கு விபத்து ஆகி விட்டது"
இங்கன / இங்கிணஇங்கே
இங்கோடிஇந்த வழியாக
இஞ்சஇங்கே"லேய், இஞ்ச வால" - "ஏய், இங்க வாடா"
இஞ்சோத்திருங்கோஇங்கே வந்து உக்காருங்கள்இஞ்ச+வந்து+இருங்கோ
இணிஞ்சு / இனிஞ்சிபிய்த்து / பறித்து, பிடுங்குதல், கொய்தல், 'அடத்து' எடுத்தல்,'கிள்ளி' எடுத்தல்"மட்டிப்பளத்த தார்ல இருந்து இணிஞ்சு தின்னு" - "மட்டிப்பழத்தை தாரில் இருந்து உரித்து உண்". "நடுத்தெங்கிலிரிந்து நாலு கருக்கு இணிஞ்சுப் போடு" - "நடுத்தென்னை மரத்திலிருந்து நான்கு இளநீர் தேங்காய்கள் பறித்துப் போடு"
இம்படம் / இம்புடம்இவ்வளவுஇம்மட்டம் என்பதன் திரிபு
இரிஇரு, உட்கார்மலையாள வழக்கு
இலையப்பம்தென்னை, பனை, பலா, பூவரசு, வாழை, பாதாம், தேரளி இலையில் அரிசி மாவு, வெல்லம் அல்லது உப்புக்காரம், தேங்காய், எள், இஞ்சி/சுக்கு சேர்த்து வேகவைத்து சமைக்கும் அப்பம்
இவியஇவர்கள்பொதுத்தமிழிலும் உள்ளது
இளச்சல்சீவுதல் / வாருதல்தல இளச்சாச்சா? - தலை வாரியாச்சா?
இன்னாஇதோ, இங்கே
ஈக்கல்தென்னை ஓலையின் நடுநரம்பு
ஈக்கான்பெட்டிபனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டி
ஈச்சீ
ஈரக்கொலைஈரல்
உச்சி / உச்சைமதியம்உச்சிவேளை என்பது நண்பகலைக் குறிக்கும். மலையாள வழக்கு
உத்திப்போலமிகச்சிறிய அளவு, கொஞ்சம்"பாயாசத்துல உத்திப்போல ஏலம் போட்டாப் போரும்" - "பாயாசத்தில் மிகச்சிறிய அளவு ஏலம் இட்டால் போதும்"
உணக்கு / ஒணக்குகாயவைபொதுத் தமிழிலும் உள்ளது. "மருதாணி எலைய நல்லா ஒணக்கி அப்பறம் பொடிக்கணம்". திருக்குறள்: "தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்"
உப்புக்குத்திகணுக்கால்
உழக்கு, பக்கா, மரக்கால்அரிசி அளவைகள்பொதுத் தமிழில் உள்ளன.
உழக்கான்பெட்டிபனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டி
உரியாடல்உரையாடல், பேச்சு"அவிய ரெண்டுவேரும் ஒடக்காச்சே, இப்போ உரியாடல் உண்டா?" - "அவர்கள் இருவருக்கும் இடையில் மனக்கசப்பாயிற்றே. இப்போது பேசிக்கொள்கிரார்களா?"
உருமாதிருமணத்தின் போது மணமகனின் தலையில் கட்டும் துணி
உலும்பு வாடைஇறைச்சி வாடை (கவுச்சி வாடை)
உள்ளுடுப்புபெண்களின் உள்ளாடை
உளுக்குசுளுக்குபொதுத்தமிழிலும் உள்ளது
உறைஒருவகை நண்டுஆங்கிலத்தில் 'மோல் க்றாப்' எனக் கூறுவர்.
ஊச்சாளிமற்றவர்களை விட தகுதியில் உயர்ந்தவன் என ஏளனமாகச் சொல்லுதல்மலையாள வழக்கு. "அவரு பெரிய ஊச்சாளி. நம்மட்ட எல்லாம் பேசமாட்டாரு"
ஊதாப்பட்டிபலூன்
எங்கன / எங்கிணஎங்கே
எங்கோடிஎந்த வழியாக
எடவாடு/எடபாடுவேலை/பணி
எத்துஉதைபொதுத் தமிழிலும் உள்ளது.
எதுப்புஎதிராக"அவரு வரும்போது எதுப்பு போகப்பிடாது" - "அவர் வரும்போது அவரின் எதிராகப் போகக்கூடாது"
எப்பம்எப்போது"பொறவுண்ணா எப்பம்?" - "பிறகென்றால் எப்போது?"
எம்படம்எவ்வளவுஎம்மட்டம் என்பதன் திரிபு
எரப்பாளிஇழிச் சொல் / வசைச் சொல், இரந்து உண்பவர்மலையாள வழக்கு
எல்லுஎலும்புமலையாள வழக்கு
எவியஎவர்கள்பொதுத்தமிழிலும் உள்ளது
எளளுப்போலசிறிதளவு
ஏசுதல்திட்டுதல்பொதுத் தமிழில் உள்ளது
ஏம்பக்கம்ஏப்பம்
ஏத்தன் பழம்நேந்திரன் பழம்வாழைப்பழத்தின் வகை
ஏனம்பாத்திரம்
ஐயம் / அய்யம்கெட்டது, கெட்டுப்போனது"ஐயே, அது ஐயப் பழம்", அழுகிய என்பதன் மருவல்.
ஐயா / அய்யாதகப்பன்
ஐயாவழி / அய்யாவழிஅய்யா வைகுண்டர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்ட சமய நெறி.
ஒக்கல்இடுப்பு"எப்போ பாத்தாலும் கொளந்தைய 'ஒக்கல்லயே' ஒக்காத்தி வெச்சிரிக்கியே.. அத கீளத்தான் உடேன்" - "எப்போது பார்த்தாலும் குழந்தையை இடுப்பிலேயே வைத்துக்கொண்டிருக்கிராயே.. அதனை கீழத்தான் விடேன்"
ஒக்கும் / ஒக்காதுமுடியும் / முடியாதுமலையாள வழக்கு
ஒட்டாங்கண்ணிஉடைந்த மண்பானையின் ஒரு துண்டு
ஒடக்கு / உடக்குசண்டை, மனக்கசப்பு"சந்தைல அவிய ரெண்டுவேருக்கும் ஒடக்காயிப்போச்சு" - "சந்தையில் அவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை வந்துவிட்டது"
ஒடயக்காறன்உரிமைக்காரன்
ஒடுக்கம்பிறகு, கடைசியில்மலையாள வழக்கு. "ஒடுக்கம், என்ன ஆச்சி?" - "அப்புறம், என்ன ஆயிற்று?"
ஒண்ணிஒன்றாக்குஒண்ணிசது - ஒன்றாகியது (அஸெம்பிள்ட்)
ஒருபாடு / ஒருவாடுநிறையமலையாள வழக்கு
ஒலுங்குகொசுபொது வழக்கிலும் உள்ளது
ஒறச்சுஉரக்கமலையாள வழக்கு. "லேய், அந்த மூணாவது பாடத்த ஒறச்சு படி பாப்பம்" - "ஏய், அந்த மூன்றாவது பாடத்தை உரக்கப் படி பார்ப்போம்"
ஒறப்புகாரம்உறைப்பு
ஓட்டன்காய்பிஞ்சு புளியங்காய்
ஓணப்பந்து விளையாட்டுஎருமைத்தோல் மற்றும் தேங்காய் நாரால் செய்யப்படும் பந்தினை ஏழுபேர் கொண்ட ஒரு அணி எறிந்திட, அதனை எதிரணி காலால் தடுத்திடும் விளையாட்டு.
ஓர்மை / ஓற்மைநினைவு-ஞாபகம்மலையாள வழக்கு. "ஓர்மை இருக்கா?"
கக்குமடிவேட்டியை மடித்துக் கட்டுதல்மீனவர் வழக்கு
கச்சவடம்வியாபாரம்மலையாள வழக்கு
கசேரி(சாய்வு) நாற்காலிமலையாள வழக்கு
கஞ்சித்தாள்ஈகநார் காகிதம் (பாலிதின் பேப்பர்)
கட்டைகுட்டை
கடலாசுகாகிதம்மலையாள வழக்கு
கடவப் பெட்டிபனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டி
கடுவன்ஆண் மிருகம்"கடுவன் பூனை" - "ஆண் பூனை"
கண்டெழுத்து(நில) மதிப்பீடு ான்

ற/அறிக்கை ||

கணியான் ஆட்டம்சுடலை மாடன், அம்மன் மற்றும் சாஸ்தா கோவில்களின் திருவிழாக்களில் பாடி ஆடப்படும் ஒரு கூத்தாட்டம்.கணியான் கூத்து
கத்தம் ஓதல்முழு ஆற்றலுடன் ஒருவருக்கு எடுத்துக்கூறல்உண்மையில் 'கத்தம் ஓதுதல்' என்பதாவது, இசுலாமியர் ஒருவர் இறந்தபின் அவருக்காக ஓதப்படும் மந்திரமாகும். ஆனால், பேச்சுவழக்கில் 'முழு ஆற்றலுடன் ஒருவருக்கு எடுத்துரைத்தல்' அல்லது 'மாரடித்தல்' என்ற பொருளில் கையாளப்படுகிறது. காட்டு: எளவெடுத்த பயட்ட காலைலிந்தே கத்தம் ஓதிஓதி எனக்க தொண்டத்தண்ணி வற்றியதுதான் மிச்சம்.
கதம்பல் / கதம்பதேங்காய் மட்டை
கயப்புகசப்பு என்பதன் திரிபுமலையாளத்தில் கய்ப்பு என்கிறார்கள்
கம்புக் கூடுகைக்குழி, அக்குள், கக்கம், கழக்கட்டு
கயலிஒரு வகை மீன்
கயறு / கேறுஏறுமலையாள வழக்கு
கரச்சிஅழுகை"நேத்து எம்பையன் மிட்டாஸ் வேண்டித்தரணம்னு ஒரே கரச்சி" - "நேற்று என் மகன், மிட்டாய் வாங்கித்தரவேண்டும் என ஒரே அழுகை"
கரமடிகடலில் கட்டுமரம் (அ) நாட்டுப்படகில் சென்று மடி (வலை) போட்டுவிட்டு அந்த வலையின் இரு அற்றங்களையும் நாட்டுப்படகில் கரைக்கு கொண்டுவந்து பாதுகாப்பாக வைத்துவிட்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பல பேர் (தோராயமாக 30 முதல் 40 பேர்) ஒன்றாக சேர்ந்து கரையிலிருந்தபடியே இழுக்கும் பெரிய வகை மடி (வலை)இது பகல் நேரங்களில் தான் நடக்கும். தற்போது இந்த கரமடி வகை வலைகள் கிட்டத்தட்ட முற்றிலும் அழிந்துவிட்டன. மேற்கு கடற்கரை மேல்மிடாலம் முதல் நீரோடி வரை உள்ள பகுதிகளில் ஒன்றிரண்டு இருக்கலாம்.
கருக்குஇளநீர், இளம் தேங்காய்
கருங்காய்பச்சை முந்திரிக் காய்
கல்சான்கால்சட்டைமீனவர் வழக்கு
கலவாய்ஒரு வகை மீன்
கலுங்குமதகு, அணை, உயரம் குன்றிய சுவர்பாலத்துக்கலுங்கு - பாலத்தின் இருபுறமும் அமைக்கப்பட்டிருக்கும் சிறு சுவர்கள்
கவக்கம்புபிரம்பு, லத்தி, ஊன்றுகோல், மூங்கில் கம்பு
கவுட்டைகால்கள் இடுப்பில் கூடும் இடம்
கறண்டைகணுக்கால்
கறுக்கு / கறுக்கல்இருளாகும் மாலை பொழுது, அந்தி, முன்னிரவு
கழச்சி / கச்சிகோலி குண்டு
கழஞ்சிதண்ணீர் ஊற்றி வைத்த பழைய சோறு
கழனி / கழநிகழுநீர், மாடுகள் குடிக்கும் ஒரு வகையான கலவை. சமையலில் வடி கட்டிய தண்ணீர், பழத்தோல்கள் எல்லாம் சேர்ந்தது
கழுமாடன்கழுமர மாடன் - காவல் கடவுள்கழுமரம்
கழைக் / களைக் கம்புமரங்களிலிருந்து காய்கனிகள் பறிப்பதற்காக உதவும் நீண்ட கம்பு
கறண்டகணுக்கால்
கள்ளத்தீனி / கள்ளப்பண்டம்நொறுக்குத்தீனி
களிம்புகுழைவான பூசிக்கொள்ளும்படியான மருந்துபொதுத்தமிழிலும் உள்ளது
களைதூண்டில்மீனவர் மொழி
கன்னாமண்டைஉச்சந்தலை
கன்யாரி / கன்யாமாரிகன்னியாகுமரி என்பதன் கொச்சை வடிவம்கன்னியாகுமரி
கனமாநிறையகனமா குடு - நிறைய கொடு
கஷண்டிதலை வழுக்கைமலையாள வழக்கு.
காஞ்ச வெள்ளம்வெந்நீர், சுடுதண்ணீர்
போதும்/பத்தும்
காத்தாடி மரம்சவுக்கு மரம்
காந்தல்எரியும் உணர்வுபொதுத்தமிழிலும் உள்ளது
காடந்தரம்காட்டுவிலங்கு
காணாம்கொள்ளுமலையாள வழக்கு
கிந்தி தொட்டுநொண்டி எடுத்து
கிண்டிகிளறி
கிண்ணிகரண்டி, வாயகண்ட சிறு கிண்ணம்
கிரேந்திசெவ்வந்தி எனும் செம்மஞ்சள் நிறப் பூ வகைபிறமாவட்டங்களில் கேந்தி எனவும் அழைக்கப்படுவதுண்டு. எ.கா: மக்கா, தோவாளச் சந்தைல கிரேந்நிக்க வெல ரொம்ப கொறஞ்சுபோச்சாண்டே
கிறங்கு / கெறங்கு / கறங்குசுற்று"வெயில்ல கடந்து கறங்காதே" - "வெயிலில் சுற்றாதே"
கிளாத்தி / க்ளாதிகெளுத்தி மீன்
குசுனிசமையல் அறைவேறு வழக்கிலும் உள்ளது
குங்குவப் பச்சைசுடலை மாடன் சிலைக்கு சார்த்தப்படும் சிகப்பான ஒரு கலவை
குட்டுவம், குத்துப்போணிபெரிய, வாய் அகன்ற பாத்திரம்
குண்ணைஆணுறுப்பு
குண்டனிகோள் சொல்லுதல், புறம் சொல்லுதல்பொதுவாக கோள்-சொல்லும் / கெட்ட-எண்ணம்-கொண்ட பெண்களைக் குறிக்கும் சொல்
குத்தாமீன் வகை
குத்துப்போணிபெரிய பாத்திரம்
குப்பிபுட்டிபொதுத் தமிழில் உண்டு.
கும்பாரிநண்பர்மீனவர்த் வழக்கு
கும்பிளி(நீர்) குமிழி
குருசுசிலுவைமலையாள வழக்கு. க்ராஸ் என்பதன் மருவல்.
குழை / கொழைஆடு மாடுகளுக்கு உணவாக வைக்கப்படும் இலை தழை
குழை இறக்கம்மரத்தில் இருந்து உபரி இலைகளை வெட்டுதல்
குளிவுசிறு கிண்ணம்
குளியை / குளிகைமாத்திரைமலையாள வழக்கு
குளுத்திகுளிர்"மழ பியாஞ்சி ஒரே குளுத்தியா இரிக்யுவு" - "மழை பெய்து ஒரே குளிராக இருக்கிறது"
குளுவன் / குளுவத்திகுறவன்/குறத்தி போன்ற நாடோடிகள்
குறுக்குபின் இடுப்பு, கீழ் முதுகு
குறுங்கட்டிஉயரம் மிகக்குன்றிய சிறு மேசை"ஒரு காலத்தில் சாப்பிடுபவர் தரையிலமர்ந்து, உணவை சிறு குறுங்கட்டி மீது வைத்து சாப்பிடுவார்களாம்"
குன்னிமுத்துகுந்துமணி / குன்றிமணி / குண்டுமணி
கூந்தை / கூந்தஉண்டு முடித்த நுங்கின் எஞ்சிய பகுதிகூந்த வண்டி - இரு கூந்தைகள் வைத்து சிறுவர்கள் விளையாடும் வண்டி
கூறம் காய்வதுகடலில்/ஆற்றில் குளித்துவிட்டு சுடு மணலில் படுத்து வெயில் காய்வதுமீனவர் வழக்கு
கூனிஉருவத்தில் சிறியதாய் இருக்கும் ஒருவகை இறால் (ஷ்ரிம்ப்)
கெளிறுமீசை வைத்த குளத்து மீன் வகை
கேரைஒரு மீன் வகைடுனா
கைலேஞ்சி / கைலேஞ்சு / கைலேஞ்ச்கைக்குட்டை
"கையும்-கணக்கும்""அளவே""போரும்ல! ஒங்கள்ளத்தீனி கையும்-கணக்கும் இல்லாம பேயிட்டிரிக்கி" - "போதும்! நீ நொறுக்குத்தீனியை ஒரு அளவே இல்லாமல் உட்கொள்கிறாய்"
கொச்சங்காய்குரும்பைத் தேங்காய்மலையாளத்தில் 'கொச்சு' என்றால் 'சிறியது' என்று பொருள்
கொச்சு முறிசிறிய அறைமலையாள வழக்கு.
கொண்டிகதவு மற்றும் சாளரங்களை இறுக்கிச் சார்த்தப் பயன்படும் கொக்கி போன்ற அமைப்பு
கொதம்புதென்னம் பாளை
கொப்பன்தகப்பன்'உங்கப்பன்' அல்லது 'எங்கப்பன்' என்பதன் மருஉ
கொப்புமரக்கிளை
கொப்புள்தொப்புள்கொப்பூழ் என்பதே தூயதமிழ்ச்சொல்
கொம்மைதாயார்'உங்கம்மை' அல்லது 'எங்கம்மை' என்பதன் மருஉ
கொமைஏளனம் செய், கிண்டல் செய்"சும்மா எப்ப பாத்தாலும் அவள கொமைக்யாதே டெ, அழுதுருவா" - "அவளை ஏளனம் செய்யாதே, அழுதுவிடுவாள்"
கொய்வுகொசு
கோடிபுதுத்துணிபொதுத்தமிழிலும் உள்ளது
கொடைகோயில் திருவிழா
கோம்பைபித்தன், அசடு, கிறுக்கன்
கோரி குடிமொண்டு குடி
கொல்லாம் / கொல்லமாவு / கொல்லாவுமுந்திரிகொல்லாங் கொட்டை - முந்திரிப் பருப்பு, கொல்லா மரம் - முந்திரி மரம், கொல்லாம் பழம் - முந்திரிப் பழம்
கொல்லைக்கு இருத்தல்மலமிருத்தல்
கொள்ளாம்நன்று / நன்றாக-உள்ளதுமலையாள வழக்கு.
கோளாம்பிதுப்புக் கிண்ணம்"லெய், அங்கன இரிக்கில்லா அந்த 'கோளாம்பிய' எடுல.. எச்சி துப்பனு"
சக்கரம்பணம்
சக்கரைவெல்லம்பொதுத் தமிழிலும் உள்ளது.
சக்கைப் / சக்கப் பழம்பலாப் பழம்மலையாள வழக்கு.
சக்கக்கோட்டைபலாப்பழக்கொட்டை
சக்கோளிஅரிசிமாவு, தேங்காய் மற்றும் இரால் / இறைச்சியால் தயாரிக்கப்படும் காரமான அசைவ உணவு
சங்குகழுத்துகடல்-சங்கு என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது
சட்டம்பிகேடி, தாதா, ரவுடிமலையாள வழக்கு. சட்டாம்பிள்ளை என்பது பள்ளிகளில் முதன்மையாக விளங்கிய பிள்ளைகளுக்கு வழங்கப்படும் பெயர். தலைவர் என்பது பொருள்.
சட்டவம்வாய் அகன்ற பெரிய பாத்திரம்
சட்டுவம் / சட்டாப்பைதட்டையான கரண்டிதோசைச் சட்டுவம் - தோசைக் கரண்டி
சடவுசொம்பல், உடல் உளைச்சல்
சண்டமுறியன்நேந்திரன் பழத் துண்டுகள் மற்றும் சர்கரை வெல்லப் பாகு ஆகியவற்றில் செய்யப்படும் பஞ்சாமிருதம் போன்ற ஒரு உணவுப்பொருள்மலையாளத்தில் பழநொறுக்கு என்பார்கள்
சத்தி / சர்த்தல்வாந்திஸ்ரத்தி எனும் மலையாளச் சொல்லின் திரிபு
சப்பட்டைகெட்டுப்போன, கெட்டவர்"அந்த வானொலிப்பெட்டி சப்பட்டையாப் போச்சு" - "அது வானொலிப்பெட்டி கெட்டுவிட்டது/பழுதாகிவிட்டது"; "அந்த ஆள் ஒரு சப்பட்டை" - "அந்த ஆள் கெட்ட குணமுள்ளவர்". ஆனால், 'சப்பட்டை' என்னும் வழக்குச்சொல் தமிழகத்தின் நடு மற்றும் வட மாவட்டங்களில் "சப்பையான" அல்லது "நசுங்கிய" எனும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
சப்புஞ்சவறும்குப்பையும் கூளமும்மலையாள வழக்கு
சமுட்டுதல் / சமுண்டு / சவுட்டுதல் / சவட்டுதல்மிதித்தல்
சரக்கு / வெடி / படக்கு / டாக்ஸிவேசி
சருவம்சிறிய பாத்திரம்
சவன்டீஸ் / ஸவன்டீஸ்ஏழு தட்டை கற்களை அடுக்கிவைத்து இரு அணிகளாகப் பிரிந்து ஒரு பந்தை வைத்து ஆடும் விளையாட்டு"ஸவன் டைல்ஸ்" என்னும் ஆங்கிலச் சொற்றொடரின் திரிபு. பொதுவழக்கிலும் உள்ளது
சவுக்கு முட்டாய்சவ்வு மிட்டாய்
சள்ளைதொல்லை"அவன் ஒரு சள்ளையாக்கும், கேட்டியா" - "அவன் ஒரு தொல்லை தருபவனாக்கும்"
சளம்வஞ்சகன், வீணானவன், உருப்படாதவன்(சரியான பொருளா?)
சறக்குதல்சறுக்குதல், வழுக்குதல்
சாடுதல்தாவுதல், குதித்தல்"மக்களே, அங்கெல்லாம் தொளியா இருக்கு, சாடிச்சாடி வராதே டெ, சறக்கி விளுந்துருவெ". என்றாலும், பொதுவழக்கில், சாடுதல் என்றால் திட்டுதல் என்று பொருள்.
சாணாங்கிசாணம்
சாணிப்பால்நீர் ஊற்றிக்கலக்கிய மாட்டுச்சாணம். இது வாசல் மொழுகப்பயன்படும்
சாப்பு / சேப்புசட்டை பை
சாயிப்புஇஸ்லாமியர்சாகிப் என்பது பொதுவான இசுலாமியப் பெயர். இதைக் கொண்டு இசுலாமியரைக் குறிக்கலாயினர்.
சாரம்லுங்கிதெற்காசியாவில் பரவலான சொல். வேற்று மொழிச் சொல்.
சாளைமீன் வகை, மத்தி
சிக்குபோதை
சிக்குவண்டிகுடிகாரன்
சிங்ஙன் பழம்வாழைப்பழத்தில் ஒரு நீண்ட வகை
சிங்காம்புள்கிட்டிப்புள் அல்லது கிட்டிப் புள்ளு அல்லது கில்லி விளையாட்டு
சிப்பல்விருந்துகளில் சோறு பரிமாறப் பயன்படும் அகன்ற கரண்டி
சிவீந்திரம்சுசீந்திரம் என்பதன் கொச்சை வடிவம்ஊரின் பெயரின் மருஉ
சில்லாட்டைதென்னை மரத்தில் இருக்கும் வலை போன்ற பகுதி, பன்னாடை
சிலேபியாக்கெண்டை(சிலேபிக்)கெண்டை மீன்பொதுவழக்கிலும் உள்ளது
சிறுபயறுபாசிப்பயறு
சின்ன உள்ளி / ஈருள்ளிசின்ன வெங்காயம்
சீணம் / ஷீணம்சோர்வு, உடல் உபாதைபொதுவழக்கிலும் உள்ளது
சீலாமீன் வகை, வஞ்சிரம்
சீனிக் கிழங்குசர்க்கரைவள்ளிக் கிழங்கு
சீனிச்சட்டிவாணலி
சீனிவரக்காய்கொத்தவரங்காய் / சீனி அவரைக்காய்பொதுவழக்கிலும் உள்ளது
சுட்டிபிடிபெண்கள் ஆடும் ஒரு விளையாட்டு
சுண்டுஉதடுமலையாள வழக்கு.
சும்மைசும்மா
சுருக்காஒரு வகை பலகாரம்
சுவர்முட்டிஒருவகை நாட்டுச்சாராயம்நெல்லை மாவட்டத்திலும் உண்டு
சூடு அடித்தல்போர் அடித்தல்
சூரம்பாடுசூரன் போர், சூரன் திருநாள்
செத்தோலசிறிது"கடைக்காரரே செத்தோல சுண்ணாம்பு குடுமே!" - "கடைக்காரரே சிறிது சுண்ணாம்பு கொடுங்களேன்!", செத்த என்பது சிறிதே என்பதன் மருவல். பிற தமிழ் வழக்குகளிலும் காணப்படும்.
செணம்சீக்கிரம் / விரைவாகக்ஷணம் எனும் சங்கதச்சொல்லின் பொருளை ஒத்தது
செயின்ற்செயின்ட் / புனித'ட'னாவின் மெல்லிய ஒலிக்கு 'ற'னாவை பயன்படுத்துவது வழக்கம். இது மலையாளத்தில் முழு பயன்பாட்டில் உள்ளது. செயின்ட் (സെയിന്റ്) - இங்கு 'ന്റ്' என்பது 'ன்ற்' என்பதைக் குறிக்கிறது. மேலும் டாட்டா(Tata) என்பதை டாற்றா (ടാറ്റാ) என்றே எழுதுகிறார்கள் ('റ്റ' - 'ற்ற'). இலங்கைத் தமிழிலும் இந்த முறை உள்ளது (மீட்டர் - மீற்றர்)
செரவி / செரவம்தேங்காயத் துருவி
செல்லிதென்னை மரத்தைத் தாக்கும் ஒருவகை வண்டு
செவிகாது"அவன் செவில என்னலே சென்ன", "அவன் காதில் என்ன கூறினாய்". பொதுவழக்கிலும் உள்ளது
செவிள் / செவளைகன்னம்+காது சேர்ந்த பகுதி, மீன்களுக்கு செவுள் இருக்கும் பகுதி"அவன் செவிட்ல பொளீர்னு அறஞ்சான்".
செறை / செறதொல்லை, எரிச்சல்
செறுத்தல்தடுத்தல், வழிமறித்தல்பொதுவழக்கிலும் உள்ளது
செறுப்பம் / சிறுப்பம்சிறு வயது
சொக்காரன், சொக்காரிசொந்தக்காரன், சொந்தக்காரி / சகோதரன், சகோதரி / ஒன்று விட்ட பெரியப்பா சித்தப்பா பிள்ளை / பங்காளி
சொளவு / சொளகுமுறம்
சோக்கேடு / சூக்கேடுநோய்சுகக்கேடுவல் இருந்து மருவியது, மலையாள வழக்கு
சோறு வைப்புதிருமணத்தின் முந்தைய தின விருந்து
டப்பர் வாளிஞெகிழி வாளி, பிளாஸ்டிக் வாளி
ஞாறாச்சஞாயிற்றுக்கிழமை. ஞாயிறாழ்ச்சா எனும் மலையாளச்சொல்லின் திரிபு
டப்பிசிறு பெட்டிபொது வழக்கிலும் உள்ளது
தட்டிப்பிழிச்சல் / தட்டிப்புளிச்சல்காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம் ஆகியவற்றிர்க்கு வீட்டில் தயாரிக்கப்படும் கைமருந்து
தட்டுமாடி
தட்டுமடிடலில் கட்டுமரத்தில் சென்று வலை போட்டுவிட்டு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு கட்டுமரத்தில் சென்று வலையை எடுத்து கரைக்கு கொண்டுவரும் சிறியவகை மடி (வலை)இதற்கு 2 அல்லது 3 பேர் போதும்
தடியங்காய்சாம்பற் பூசணிக்காய்மலையாள வழக்கு
தடுக்குபனை ஓலையால் செய்யப்பட்ட சிறு பாய்
தண்டுதுடுப்புதேங்காய்பட்டணம் வழக்கு
தணுப்புகுளிர்பொது வழக்கிலும் உள்ளது. மலையாளத்திலும் வழக்கத்தில் உள்ளது
தலகெறக்கம்தலைசுற்றல்
தலமண்டைதலை
தவுக்காதவளை
தள்ளைதாய்
தாக்கோல்சாவி
தாமிரபரணி ஆறுகுழித்துறை ஆறுநெல்லை மாவட்டத்தில் ஓடும் தாமிரபரணிக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை
தாளிஇலைச்சாறு, ஒரு வசைச்சொல் (தாயளி)
தாறாவாத்துஈழத்தமிழ் வழக்கு, மலையாள வழக்கு.
திராணிதைரியம், ஆற்றல், வலுபொது வழக்கிலும் உள்ளது
திருப்பன்கொண்டையில் வைத்து கட்டும் ஒரு அலங்காரப்பொருள்
துட்டி வீடுதுக்க வீடு
துண்டுகுற்றாலந்துண்டு, சுட்டித் துவர்த்து, ஓணத்துண்டுபொதுத் தமிழில் உள்ளது
துப்புணிஉமிழ்நீர்"மடையா, துப்புணி தெளிக்யாம ஒனக்கு பியாசத் தெரியாதா?". துப்புநீர் என்பதன் மருவல்.
துவர்த்து / தொவற்து / துவற்து / தொர்த்துதலைதுடைக்க பயன்படும் துண்டு, துவட்டுவது"மண்டைல இன்னும் ஈரம் போகல்ல பாரு.. அங்கன கடக்க பச்ச தொவற்தால தோற்திக்கோ". மலையாள வழக்கு
துவரன்பொரியல்மலையாள வழக்கு
துள்ளுமறி / துள்ளுமாறிபலி கொடுக்க பயன்படும் ஆட்டுக்கிடா அல்லது ஆட்டுக்குட்டிபொதுத் தமிழிலும் உள்ளது.
துளுவன் பழம்வாழைப்பழத்தில் ஒரு தடித்த வகைபொதுவழக்கிலும் உள்ளது
துறையல் / தொறவால்சாவிதிறவுகோல் என்றும் தமிழில் அழைக்கும் வழக்கம் உண்டு.
தூப்புதுடைப்பம்
தூரணிகடலுக்குள் அலை எழும் இடம்மீனவர் மொழி
தூரமா?வெளியே செல்கிறீர்களா? / எங்கே செல்கிறீர்கள்?
தூரைசிறிய மண்டபம்
திருவலைதேங்காய்த் துருவி
தின்னக்கு / உண்ணக்குதின்பதற்கு / உண்பதற்கு
தீட்டம்மலம்மலையாள வழக்கம்
தெங்கு / தெங்ஙுதேங்காய் / தென்னைமலையாள வழக்கு. ஔவையாரின் மூதுரை: "நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி; என்று தருங்கொல் எனவேண்டா - நின்று; தளரா வளர்`தெங்கு` தாள்உண்ட நீரைத்; தலையாலே தான்தருத லால்"
தெண்டல்ஓணான்
தெரக்குதேடு
தெரச்சிமீன் வகை
தெரளி இலைபிரிஞ்சி இலை
தெவக்கம்தேக்கம், தாகம், தேம்புதல், மூச்சுவாங்குதல்
தெறிஇளகிய மணல்மேடு, கெட்டவார்த்தைமலையாள வழக்கு.
தெறி மண்செம்மண்
தேரடுஇறுகிய மண்மேடு
தேழி / தேளிமீசை வைத்த குளத்து மீன் வகை
தொட்டிஒரு இழிச்சொல் / வசைச்சொல், வெட்டி / ஊதாரி / நாகரீகம்-இல்லாதவர்தண்ணீர் தொட்டி போன்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. "அவனா, அவன் ஒரு தொட்டிப் பய". தொட்டியர் என்போரும் உளர்.
தொரப்ப, துறப்ப, தொறப்பைதுடைப்பம், விளக்குமாறு
தொலிதோல்"பளத்த தின்னிட்டு தோலிய தொட்டீல போடு மக்கா, செரியா"
தொளவடைதுளையிட்ட வடைதொள - துளை என்பதன் மருவல்
தொளி / தொழிசேறு
தோளி உழவுமழைக்கால/பனிக்கால உழவு
தோண்டிபனை ஓலையில் செய்யப்படும் ஒரு தண்ணீர் சுமக்கும் குழிந்த பாத்திரம்பொதுத்தமிழில் 'தோண்டி' என்பது மண்ணால் செய்யப்படும் பாத்திரம்.
நம்பட்டிமண்வெட்டி
(வீட்டு) நடைவீட்டு வாசற் படிநடை என்பது வீட்டின் முற்றத்தில் இருந்து பின்வாசல் வரை உள்ள நேர் பாதையை, நடந்துசெல்லும் பாதையைக் குறிக்கும். பொதுத் தமிழிலும் உள்ளது.
நடூஸ்நடுவில், மையத்தில்
நம்மாட்டிமண்வெட்டி
நல்லமாவுமா
நளி(செல்லமாக) கேலி செய்தல்"தாத்தா சிறுவர்களிடம் நளி அடித்து அவர்களை மகிழ்வித்தார்" - "தாத்தா சிறுவர்களை கேலி செய்து அவர்களை மகிழ்வித்தார்"
நாணக்கேடுகேவலம்
நாயடிஒரு பழங்குடியினத்தின் பெயர்
நாரோயில் / நாறோல்நாகர்கோவில் என்பதின் கொச்சை வடிவம்நாகர்கோவில்
நிக்கர்அரைக்கால் சட்டைநிக்கர் (knicker) என்றால் பெண்களின் உள்ளாடை என்று பொருள்.
நிக்கான் / நிக்கா/நிக்கிறாள்நிற்கிறான்/ நிற்கிறாள், வேலை செய்கிறான் / வேலைசெய்கிறாள்"அவ துணிக்கடைல நிக்கா" - "அவள் துணிக்கடையில் வேலைசெய்கிறாள்". நிற்கிற என்பதன் மருவல்
நிச்சாம்பலம்நிச்சய தாம்பூலம்
நிலவாசோறு பரிமாறப்பயன்படும் கரண்டி
நுள்ளல்கிள்ளல்"மகன்: அம்மா, இவன் என்ன நுள்ளுகான், ரெம்ப வலிக்யு; தாய்: மோனே ரொம்ப நோவுகா?" - "மகன்: அம்மா, இவன் என்னை கிள்ளுகிறான், ரொம்ப வலிக்கிறது; தாய்: மகனே வலிக்கிறதா?"
நீக்கம்புதிமிர், வயிற்றுப்போக்கு, பெருமழை
நிழல் தங்கல்ஒரு அய்யாவழி வழிபாட்டுத் தலம்
நெக்கல்அழுத்தி பிதுக்கல்
நெட்டிகஞ்சி அல்லது கூழ் குடிப்பதற்கு சிலவகை இலைகளால் (மா, பலா, தென்னை) செய்யப்படும் கரண்டி போன்ற அமைப்பு
நெரிபிரிஅவசரகதி, நெரிசல்"அங்கன ஒரே நெரிபிரியா இருக்யு" - "அங்கே ஒரே மக்கள் நெரிசலாக இருக்கிறது"; "அக்கா நெரிபிரியா வேல செஞ்சிட்டிருக்கா" - "அக்கா அவசரகதியில் வேலை செய்துகொண்டிருக்கிறாள்".
நேரியல்நீண்ட துண்டு
நோவு / நோகல்வலிபொதுத்தமிழிலும் உள்ளது
பக்கராசுருக்குப் பை
பக்கிவண்ணத்துப்பூச்சி
பச்சம்நட்பு கொளல்
பசியாறல்உணவு உண்ணல், சாப்பிடல்பொதுத்தமிழிலும் உள்ளது
பஞ்சசாரைசீனி
பட்டைகஞ்சி குடிப்பதற்காக பனை ஓலையில் செய்யப்பட கரண்டி
படக்குபட்டாசு
படத்திஒரு வாழை வகை
படிக்கம்துப்புச் செட்டி, எச்சில் உமிழ்வதற்கு பயன்படும் அகண்ட வாய் கொண்ட பாத்திரம்
பண்டுமுன்பு, பழைய காலம்மலையாள வழக்கு
பத்தாயம்தானியங்கள் பாதுகாக்கும் அறை, குதிர்பொதுத் தமிழில் உண்டு.
பதிஒரு [அய்யாவழி]] வழிபாட்டுத் தலம்பதி என்பது தலைவனையும், தலைமையான இடத்தையும் குறிக்கும்.
பய்ய / பையமெதுவாக, மெல்ல"ஏல பைய பேயிட்டு வா என்னா" - "அடெ, மெதுவாக போய்விட்டுவா, சரியா". திருக்குறள்: "அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் `பைய` நகும்.". இரண்டாவது அடியில் தலைவி மெதுவாக சிரிக்கிறாள் என்பதை "பைய நகும்" என்கிறார் வள்ளுவர்.
பயறுவதுபயம் கொள்வது"நான் இருட்ல நின்னிட்ரிந்தேன்லா.. என்ன பியாய்னி நெனச்சு அவன் பயறிட்டான்.. லே.. பயறாதே டே" - "நான் இருட்டில் நின்றுகொண்டிருந்தேன் அல்லவா, என்னை பேய் என எண்ணி அவன் பயந்துவிட்டான்.. ஏய். பயந்து விடாதே"
பயினிபனை பதநீர்
பரவர்மீனவர்களிடையே இருக்கும் ஒரு சாதி வகை
பல்பனாபுரம்பத்மநாபபுரம்
பல்லாரி உள்ளிபெரிய வகை வெங்காயம்பல்லாரி என்னும் ஊரில் விளையும் வெங்காயம்.
பலவஞ்சனம்மளிகை, பலசரக்குமலையாள வழக்கு
பலிசைவட்டிமலையாள வழக்கு
பராதிகுறை, புகார், முறைப்பாடுசங்கதச்சொல். மலையாள வழக்கு. "அவன் இவனப்பத்தி பராதி சொன்னான்" - "அவன் இவனைப்பற்றி புகார் சொன்னான்"
பரானம்படபடப்பு
பரிகேடு / பரியடுஇழிவு, கேவலம், அவமானம்மீனவ வழக்கு
பறதல்(வீட்டில்) பயனற்று அடைந்து கிடக்கும் பழைய பொருட்கள்
பறதிஅவசரம், பதற்றம்போதுவழக்கிலும் உள்ளது
பாச்சாகரப்பான்பூச்சி
பாஞ்சுப்பழம் / பாஞ்சிப்பழம்சீதாப் பழம்"அன்னா செபஸ்டியான் வீட்ல பாத்தியா, பாஞ்சுப்பழம் கொத்துகொத்தா காச்சுக் கெடக்கு"
பாம்பிரிதிண்ணை, வராந்தாதேங்காய்ப்பட்டண வழக்கு
பாம்புகுடிகாரன்"அவன் ஒரு பாம்பு, லேய்" - "அவன் ஒரு குடிகாரன்"
பாம்புராணிஅரணை, பாம்பரணை
பாரைமீன் வகை
பாளயன்கொட்டன்புளிப்பும் இனிப்புமான ஒரு வாழைப்பழம்
பாறக்கோல் / பாரைக்கோல்கடப்பாரை
பிறுத்தி / புறுத்திஅன்னாசி
பின்னஅப்புறம், அப்போ"சரி, பின்ன விடு" - "சரி, அப்போ விடு"; "பின்ன பாத்துக்கலாம்" - "அப்புறம் பாத்துக்கலாம்"
பின்னல்லாம? / பின்னல்லாதக்கி?எரிச்சலோடு ஆமோதித்தல், "அந்த பதிலைத் தவிர வேறென்னவாக இருக்கமுடியும்?""நபர்1: எல்லா சோத்தையுமா சாப்டுட்டெ? நபர்2: பின்னல்லாதக்கி? அவ்ளோ பசி" - "நபர்1: சோற்றை முழுவதுமாக நீயா உண்டாய்? நபர்2: எனக்கு அவ்வளவு பசி. அதைத் தவிர வேறு என்ன என்னால் செய்திருக்கமுடியும்?".
பீயாத்திகத்தி'பிச்சாத்தி' எனும் மலையாள வழக்கின் மருஉ
புட்டான்தட்டான் பூச்சி
புள்ளியோசிறு பிள்ளைகள்பிள்ளைகள் என்பதன் மருவல். ஆம்புள்ளியோ, பெம்புள்ளியோ.. "ஆண் பிள்ளைகள், பெண்பிள்ளைகள்"
புள்ளோமகனே / மகளே, செல்லமாக யாரையும் அழைப்பது
புளியமுத்துபுளியம்பழ கொட்டைபுளியங்கொட்டையை முத்து என்றும் அழைக்கும் பழக்கம் உள்ளது. பல்லாங்குழி விளையாடுவோர் புளியங்கொட்டையை முத்து என்றே அழைப்பர்.
புளியாணம்ரசம்இசுலாமியர்களிடையே பிரபலமான ஒருவகையான சுவை, மணம் மற்றும் மருத்துவ குணங்கள் கொண்ட ரசம். காயல்பட்டினம், தேங்காய்பட்டினம் மக்களிடையே இந்த ரசம் மிகப் பிரபலம்.
புறத்தால / புறத்தோடி / பொறத்தால / பொறத்தோடிபின்னால், வெளியே"இந்த குப்பைய பொறத்தால இருக்ய குப்பத்தொட்டீல போய் கொட்டு" - "இந்த குப்பையை வீட்டிற்கு பின்னால் இருக்கும் குப்பைத்தொட்டியில் போய் கொட்டு"; புறம் - வெளி
பூஞ்சட்ட / பூஞ்சட்டைதுடப்பம் செய்ய பயன்படும் ஒருவகை மெல்லிய புல், மெல்லிய மயிர்
பூவெண்ணெய்நறுமணம் சேர்த்த கூந்தல் எண்ணெய்
பிழாவுபனை ஓலையால் மாவு உலர்த்தப் பயன்படும் பொருள்
பின்னஅப்புறம்
பெனஞ்சுபிசைந்து
பெர / பெரைஅறை / பந்தல் / ஓய்வுக்கூடம்மலையாள வழக்கு
பெறமபிறகு / பின்னால்
பெகளம்அமைதியின்மை / கொந்தளிப்பு / குழப்பம்மலையாள வழக்கு.
பேடுபூச்சி அரித்த ஒரு மரத்தின் கெட்டுப்போன பகுதி, முதிராமல் கெட்டுப்போன தேங்காய்"அந்த மரத்துல பேடு விளுந்துருக்கு"
பேயன் பழம்வாழைப்பழத்தில் ஒரு தடித்த வகைபொதுவழக்கிலும் உள்ளது
பேயிட்டு / பேயிற்றுபோய்விட்டு. 'போ' என்பது 'பே' என திரிந்துள்ளது"அவ பேயிற்றாளா? நா பேயிட்டாறேன்" - "அவள் போய்விட்டாா? நான் போய்விட்டு வருகிறேன்"
பைத்தாறன் / பைத்யாறன்பைத்தியக்காரன்
பொக்கன்சின்னம்மை நோய்
பொடவுபொந்து
பொடி உழவுவெயில் கால உழவு
பொத்தைஉடல்பருத்த, குண்டு, தடித்த
பொதப்புபோர்வை
பொழி தட்டல் / மறம் அடித்தல்விளை நிலத்தை சமன்படுத்துதல்
பொறவு / பொறபுபிறகு, அப்புறம்"பொறவு, அந்த கதைல என்னாச்சினி செல்லு" - "பிறகு, அந்த கதையில் என்ன ஆயிற்று என்று சொல்லு"
பொறத்தாலபின்னால்"அந்த போட்டோல அந்த வளத்தியான ஆளுக்க பொறத்தால ஒருத்தன் நிக்க்யானில்லா, அது நானாக்கும்"
போஞ்சிஎலுமிச்சை பழரசம்
போட்டுஅது போகட்டும், கவலை கொள்ளாதே
பொடதிபின் மண்டைபிடறி என்பதன் மருவல்.
போணிவாய் அகன்ற உயரம் குறைந்த பாத்திரம்
போயிலபுகையிலை
மக்கா / மக்களேமகனே / மகளே, செல்லமாக யாரையும் அழைப்பது"மக்கா, ஒங்க வீட்ல எல்லாரும் சௌக்கியமா?"
மகுடம்கணியான் ஆட்டத்தில் இசைக்கப்படும் பறை/தப்பட்டை போன்ற ஒரு மேளம்
மங்களாவரவேற்பு அறை
மசைஇளம்பெண்டிரைக் குறிக்கும் கொச்சையான சொல்
மஞ்சணாத்திமல்பரிபொதுவழக்கில் மஞ்சணாறி என அழைக்கப்படுகிறது
மஞ்சுகூரையை இரு பக்கத்திலிருந்தும் தாங்கிப்பிடிக்கும் முக்கோண வடிவிலான சுவர் அமைப்பு
மட்டுப்பாவு / மட்டுப்பாமாடி, உப்பரிகை, மொட்டை மாடி
மட்டம்தடவை"அவன் வீட்டுக்கு போகாதேன்னு, எத்தன மட்டம் ஒங்கிட்ட சொல்லிருக்கேன்?" - "அவன் வீட்டுக்கு போகாதே என்று எத்துனை தடவை உன்னிடம் சொல்லியிருக்கேன்?"
மட்டிப் பழம்வாழைப்பழத்தில் ஒரு சிறிய வகைகுமரி மாவட்டத்தில் மட்டுமே கிடைக்கிறது.
மடிசோம்பல் / மீன் வலை
மண்ணாந்தைஅறிவிலி; முட்டாள்
மண்டகனம்தலைவலி + ஜலதோஷம், திமிர்அவ மண்டகனம் புடிச்சவ - அவள் திமிர் பிடித்தவள்
மண்டக்குத்து / மண்டயிடிதலைவலி
மணக்கா சோப்புசவக்காரம், சலவை சோப்பு
மணிக்கூர்மணி நேரம்மலையாள வழக்கு
மணிமேடைமணிக் கூண்டு
மம்பெட்டிமண்வெட்டிபொதுவழக்கிலும் உள்ளது.
மயினிமச்சினி(மச்சினன்), கொழுந்தி, கொழுந்தியாள், மாப்பிளையின் தங்கை, அத்தை பொண்ணு, மாமன் பொண்ணு, மனைவியின் அக்கா"மதினி" என்பதின் மரூஉ
மரக்கறிகாய்கறிஈழத்தமிழ் வழக்கு, மலையாள வழக்கு.
மரச்சீனிக் கிழங்குமரவள்ளிக் கிழங்குபொதுவழக்கிலும் உள்ளது.
மல்லாரிஆர்ப்பரிப்பு, ஆர்ப்பாட்டம் செய்தல், உரத்த ஓசையோடு பேசுதல்"நடு ரோட்ல நின்னிட்டு மல்லாரி வெச்சிட்டிருந்தான்" - "சாலையின் நடுவில் நின்றுகொண்டு ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தான்"
மலத்துகவுத்து"அடிமுறை தெரிஞ்சா மட்டும் அவன மலத்தித் தள்ளீருவேறு!" - "அடிமுறை (தற்காப்புக்கலை) தெரிந்தால் மட்டும் அவனை அடித்து கவுத்தி தள்ளிவிடுவேராக்கும்!", மலத்து - கவிழ்த்து என்பதை விட நிமிர்த்து என்பது உசிதம். மலந்து கிடந்தான் என்பது காண்க. போட்டு மலத்திட்டான் என்பதூஉம்.
மற்றவன் / மத்தவன் / மற்றவள் / மத்தவள் / மற்றது / மத்தது / மற்றவரு / மத்தவருஇங்கு இல்லாத இன்னொருவர், மூன்றாமவர்"அதோ, மத்தவரு வறாரு"
மனசிலாகுதல் / மனசிலாவுதல்புரிதல்"என்னா, நான் சொன்னது மனசிலாச்சா?" - "என்ன, நான் சொன்னது புரிந்ததா". 'மனசிலாகுதல்' என்பது ஒரு மலையாள வழக்குச் சொல்
மாப்பிள்ளைக்கு இருந்தாச்சா?பெண்ணுக்கு திருமணம் நடந்துவிட்டதா?இசுலாமியர் வழக்கு
மாம்பட்டைஒருவகை நாட்டுச்சாராயம்இச்சாராயத்தை காய்ச்சும்போது அதில் மாம்பட்டை அல்லது மஞ்சணாத்தி, காட்டுக் காஞ்சிரம் ஆகியவைகளை போடுவார்கள் என்பது பேச்சு.
மாறிஅதற்கு பதிலாக, அதற்கு மாறாக, ஆனால்"நேத்து நல்ல மழை பெய்யும்னு நெனச்சென், மாறி நல்ல வெயில்" - "நெற்று நல்ல மழை பெய்யும் என நினைத்தேன், அதற்கு மாறாக நல்ல வெயில் அடித்தது"
மிட்டாசு / மிட்டாஸ் / மிட்டாசிமிட்டாய்பொது வழக்கிலும் உள்ளது
மிளாகடா மான்தென்காசி , அம்பாசமுத்திரம் பகுதிகளிலும் இந்த.வழக்கு இருக்கிறது
முக்குமூலைபொதுத்தமிழிலும் உள்ளது. முக்கம் என்றும் அழைப்பர்.
முக்குவர்மீனவர்களிடையே இருக்கும் ஒரு சாதி வகை
முந்திரி கொத்துபயத்தம்பருப்பால் செய்யப்படும் ஒரு இனிப்புப் பலகாரம்
முட்டாசு / முட்டாஸ் / முட்டாசிமிட்டாய்பொது வழக்கிலும் உள்ளது
முடுக்குசந்து
முடை / மோடைபின்னுபொதுத் தமிழிலும் உள்ளது. கூடை செய் என்பதைக் காட்டிலும், கூடை முடைதல் என்பதே பொருத்தம். "கூடைய மோடை" - "கூடையைப் பின்னு"
முண்டுவேட்டிமலையாள வழக்கு.
முறிஅறை
முத்தம்முற்றம்
முள்ளன்ஒரு சுறாமீன் வகை
முனைபின்னுஓலை முனை - ஓலையை பின்னு
மூடுமரத்தின் வேரின் மேலே தெரியும் கனமான பகுதி
மூப்லுதகப்பன்
மேல / மேல்மேற்குபொதுத் தமிழிலும் உள்ளது.
மைக்கோட்டிகம்பளி பூச்சி
மொந்தன் பழம்வாழைப்பழத்தில் ஒரு தடித்த வகை
மொரால்மீன் வகை
மொளவுக்காமிளகாய்மிளகாய் என்பதன் மருவல்
மொளவாடிமிளகாய்ப்பொடி என்பதன் மருவல்
மொளுதிரிமெழுகுத்திரி என்பதின் திரிபு
மோந்திஅந்தி, சாயுங்காலம்
மோட்டுவளைவீட்டுக் கூரையின் உச்சிச் சேர்க்கைக்கு ஆதாரமாகவைக்கும் மரத்துண்டுமுகட்டுவளை என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு. வீட்டு முன்வாசாலில் உள்ள வளைவு.
மோளே(செல்லமாய்) மகளே
மோனே(செல்லமாய்) மகனே
யாமுல / யாம்ப்லஎன்ன டா
யானம்பாத்திரம்
ரஸகதலிப் பழம்வாழைப்பழத்தில் ஒரு சிறிய வகைரஸ்தாளி என்றும் அழைப்பர்.
லாந்தல்மந்தமான வான்நிலை
லாமடிஉலை மூடி, மீன்கறி வைக்கும் மண்சட்டியின் மூடிமீனவர் வழக்கு
லாறிலாரி
லெட்டுபந்துமுனை பேனாபொதுவழக்கிலும் உள்ளது. எ.கா: "லெட்டு இருக்கா?" - "பேனா ரீபில் இருக்கா?
வச்சூத்திபுனல் (funnel)வைத்து ஊற்றி என்பதன் திரிபு. முன்னைக் காலத் தமிழில் வைத்தூற்றி என்ற சொல் இருந்ததாக பாவாணர் சொல்கிறார்.
வசக்குதல்வதக்குதல்"வியண்டக்காய சட்டீல போட்டு கொஞ்சோல எண்ண ஊத்தி வசக்கி..." - "வெண்டைக்காயை சட்டியில் போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கி..."
வசக்கேடுவசதிகுன்றிய, அசௌகரியமான
வட்டிபனை ஓலையால் ஆன பாத்திரம்
வட்டிலுதட்டு
வட்டுமாத்திரை
வட்டைஉயரம் குறைந்த சம்படம்; சாப்பாட்டுச் சம்படம்
வண்ணம்உடல்பருத்த, குண்டு, தடித்த"அவ என்னா வண்ணம்!" - "அவள் உடல்பருத்து காணப்படுகிறாளே!"
வத்தல் / வற்றல்காய்ந்த மிளகாய்"அண்ணே ஒரு கிலோ வத்தல் கொடுங்க" - இங்கு "வத்தல்" என்பது காய்ந்த மிளகாயையே குறிக்கிறது. பொதுத் தமிழிலும் காய்ந்த மிளகாயைக் குறிக்கின்றனர். ஆனால், பொதுவாக, காய்ந்த காய்கறிகளை வற்றல் என்பது வழக்கம்.
வந்தேட்டி, வரத்தேட்டிவந்தேறிபிற பகுதிகளிலிருந்து வந்து குடியேறியவர்கள்
வல்லச்சாதியும்ஒருவழியாக
வழுதலங்காய் / வழுதனங்காய்நீண்ட கத்தரிக்காய், வழுதுணைக் காய்மலையாள வழக்கு. என்றாலும், மலையாளத்தில் எல்லா வகையான கத்தரிக்காய்களையும் வழுதலங்காய் என்றே அழைக்கின்றனர். ஆனால், குமரிமாவட்டத்தில், உருண்டை கத்தரிக்காய்களை 'கத்தரிக்காய்' என்றே அழைக்கின்றனர். பழைய தமிழில் வழுதனங்காய் என்றே அழைத்தனர்.
வார்ப்புபெரிய விருந்துகளுக்கு சோறு சமைத்திடப்பயன்படும் உயரம் குறைந்த மிகப் பெரிய பாத்திரம்
வார்ப்புச்சோறுதிருமணம் மற்றும் பிற விழா வீடுகளில் மிக அகண்ட பாத்திரத்தில் சமைத்த சோறு
வாரியல்துடைப்பம்வாரிக்கட்டை - துடப்பக்கட்டை.
வாலாம்பாதாம்வாலாமரம், வாலாங்கொட்டை, வாலாம்பருப்பு
வாலாமடைபொறுக்கி, சுட்டி, ரவுடி
வாறா/வாறாங்/வாறாவ/வருவுவருகிறாள்/வருகிறான்/வருகிறார்கள்/வருகிறது
விசர்ப்புவியர்வைமலையாள வழக்கு
வியாளாஒரு வகை மீன்வியாளா குட்டி காரை மீன் என்றும் கூறுவர்
விரவிபிசைந்து / கலந்துபொதுத் தமிழ்ச் சொல்
விலக்குஊரின் எல்லை
விளம்புபரிமாறு
விளை, வெளைவிளைநிலம் / தோப்பு
விறவுவிறகு என்பதன் திரிபு
வீச்சம்துர்நாற்றம், கெட்ட வாடைஒரு சில பொதுவழக்குகளிலும் உள்ளது
வீத்துஊற்றுலே மக்கா ஒரு வாளி வெள்ளத்தை கோரி வீத்து. மீனவர் வழக்கு
வீதிஅகலம்பொதுவழக்கிலும் உள்ளது
வீடிபீடி
வெக்கைசூடுபொதுவழக்கிலும் உள்ளது
வெகளம்வம்புக்கிழுப்பது, பகடிசெய்வது, தொல்லைகொடுப்பது
வெசேலவேகமாக
வெட்டுவலிப்பு நோய்அங்கன ஒருத்தன் வெட்டிட்டு கியடக்கான் - அங்கு ஒருவனுக்கு வலிப்பு வந்துள்ளது
வெட்டோத்தி / வெட்டுக்குத்தி / வெட்டுக்கத்திவெட்டருவாள்
வெடலைஇளநீர்விடலை என்பதன் மருவல். பொதுவாக, இளமை என்று பொருள்.
வெப்ராளம்மனப்புழுக்கம்மலையாள வழக்கு. "லெய், வெப்ராளப்படாதே!" - "மனப்புழுக்கம் கொள்ளாதே"
வெறச்சிற்று / வெறச்சிட்டுநின்றுவிட்டதுமழை வெறச்சிற்றா? - மழை நின்றுவிட்டதா?
வெறையல்நடுக்கம்
வெள்ளுள்ளி / வெளுத்துள்ளி / வெள்ளாஞ்ஞம் /

வெள்ளகூடு

பூண்டுநாகர்கோயில் வழக்கு /

மலையாள வழக்கு

வெளக்குமாறுதுடைப்பம்
வெளிக்கு போறேன்மலமிருக்க போறேன்
வேண்டுதல்வாங்குதல்வேண்டுதல் என்பது பெறுவதற்காகக் கோருதல் என்னும் பொருளைத் தரும். மீனவர் வழக்கு. "திங்கள்சந்தைக்கு போறேன், ஏதாவது வேண்டணுமா?" - "திங்கள்சந்தைக்கு போகிறேன், ஏதாவது வாங்கவேண்டுமா?". "புது சைக்கிளா? எங்க வேண்டினீரு?" - "புதிய மிதிவண்டியா? எங்கே வாங்கினீர்கள்?"
வேளம்பேச்சு"இந்த ஒரு மாதிரி ஆளுவள மெனெக்கெடுத்துற வேளம் செல்லக்கூடாது" - "இந்த மாதிரி நேரத்த வீணடிக்கும் பேச்செல்லாம் பேசக்கூடாது"
வேனா வெயில்கடுமையான வெயில்
வைசூரி / வசூரிபெரியம்மை நோய்பொதுத் தமிழிலும் உள்ளது. சித்த மருத்துவத்தில் பெரியம்மை நோயை வைசூரி என்றே குறிப்பிடுகின்றனர்.
ஜெம்பர் / ஜம்பர்இரவிக்கைபொதுவழக்கிலும் உள்ளது.
*ட்டீ / *டே* டிவாட்டீ - வாடி; யாண்ட்டீ - ஏன் டி; என்னடே - என்ன டி. இதில், '*டே' விளியானது, பெரும்பாலும் (இளம்)பெண்களுக்கிடையே பயன்பாட்டில் இருக்கும் ஒன்று என்றாலும், சில ஆண்களும் பயன்படுத்துவதைக்காணலாம். இவ்விரு விளிகளும் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஓரளவு காணப்படுகிறது.
*ல* டாவால - வா டா; யாம்புல - ஏன் டா. இவ்விரு விளிகளும் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஓரளவு காணப்படுகிறது என்றாலும், அங்கெல்லாம் '*ல' விளிக்குப்பதிலாக '*லே' விளிதான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
*இயம்*கிறோம்சாவியம் - சாகிறோம்.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை