குருமாலி மொழி

குர்மாலி மொழி (Kurmali language , தேவநாகரி: कुड़मालि, வங்காளி: কুর্মালী,কুড়মালি , ஒரியா :କୁଡ଼ମାଲି / କୁର୍ମାଲି, kur(a)mālī) ஓர் இந்திய-ஆரிய மொழி. இது இந்தியாவின் கிழக்கே பேசப்படுகின்றது. குருமாலி பொதுவாக குடுமி மகாத்தோ மக்களுடன் தொடர்பான மொழி. குடுமி மகத்தோ மக்கள் சார்க்கண்டிலும், ஓரிசாவிலும், மேற்கு வங்காளத்திலும் குர்மி மோகந்தா என்றும் மோகந்தா என்றும் அறியப்படுகின்றார்கள். அசாமில் உள்ள குடுமி மக்களாலும் பேசப்படுகின்றது. இவர்கள் அசாமுக்கு பீகார், ஒரிசா, மேற்குவங்காளம் ஆகிய இடங்களிலிருந்து தேயிலைத் தோட்டத்தில் பணி செய்ய கொண்டுவரப்பட்டனர். குர்மாலி மொழியானது சாரியபாதா என்னும் நூலில் ஆலப்பட்டுள்ள மொழிக்கு மிக நெருக்கமானதாக இருக்கும் என்று சில அறிவாளிகள் கருதுகின்றனர்[5]. அப்பகுதி வணிக மொழியாக இதனைப் பஞ்சபார்கனியா (வங்காளி: পঞ্চপরগনিয়া) என்றழைக்கின்றனர். ஐந்து மாவட்டங்களை உத்படுத்திய பகுதியில் இது பயன்பட்டதால் இப்பெயர். இதனைத் தமாரியா என்று அழைத்தனர். குருமாலி மொழி குர்மி குமுகத்தின் ஒரு மரபார்ந்த மொழி

குருமாலி
பஞ்சபார்கனியா
কুড়মালি, কুর্মালী, कुड़मालि, କୁଡ଼ମାଲି
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்அசாம், சார்க்கண்டு, ஒரிசா, மேற்கு வங்காளம்[1]
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
556,089  (2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு)[2]
கணக்கெடுப்பில் சிலர் வங்காளி, ஒடியா, இந்தி ஆகியமொழிகளூடன் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்[சான்று தேவை].
இந்திய-ஐரோப்பியம்
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 இந்தியா
மொழிக் குறியீடுகள்
ISO 639-3Either:
kyw — குருமாலி
tdb — பஞ்சபார்கனியா
மொழிக் குறிப்புkudm1238  (குடுமாலி)[3]
panc1246  (பஞ்சபார்கனியா)[4]
{{{mapalt}}}
Kurmali-speaking region of India

மொழி பரவியிருக்கும் பகுதி

குருமாலி மொழி சார்க்கண்டு மாநிலத்தின் தென் கிழக்கே உள்ள செரைக்கேலா கார்சுவான், கிழக்கு சிங்குபும், மேற்கு சிங்குபும், இராஞ்சி பகுதிகளிலும், ஒரிசாவின் வடகிழக்குப்பகுதியில் உள்ள மயூர்பான், கெந்துசார், சாச்சுபூர், சுந்தர்கார் பகுதிகளிலும், மேர்கு வங்காளத்தின் மேற்குப்பகுதியில் உள்ள புருலியா, மெதினிப்பூர் மாவட்டங்களிலும் பேசப்படுகின்றது.

மாற்றுப்பெயர்கள்

இம்மொழிக்குள்ள பிற பெயர்கள்: பெடியா (இசுலாமியரில் ஒரு பகுதியான பெடியா குழும மக்கள் பேசும் மொழி), தருவா, கோட்டா, பன் சவாசி, தந்தி, தாயீர், சிக்கு பராயிக்கு.

குருமாலியின் கிளை மொழி மயூர்பஞ்சா பகுதி மொழி

மயூர்பஞ்சா பகுதியின் மொழி குருமாலி மொழியின் கிளைமொழியான மன்பும் பகுதி முருமாலிதார் என்னும் மொழியுடன் நெருங்கிய ஒப்புமை கொண்டுள்ளது.[6]

வணிக மொழி

பஞ்சபார்கனியா என்பது புண்டு, தமார், சில்லி, சோனாகத்து, ஆர்க்கி, அங்காரா, இராஞ்சி மாவட்டத்தைச் சேர்ந்த சார்க்கு ஆகிய பகுதி மக்களின் பொது தொடர்பாடல் வண்இக மொழி.

மொழியின் சில சொற்கள்

மொழியின் சில சொற்கள்
குருமாலிகுருமாலி (தேவநாகரி)பொருள்
கினாकिनाஎன்ன
கனकन?யார்
காஹேकाहेஏன்
கிசான்किसनஎப்படி
இஹா ஆஉம்ஏइहां आउंएஇங்கே வா
மஞ கா⁴ர ஜாஇஹம்ʼमञ घार जाइहंநான் வீட்டுக்குப் போகிறேன்
மஞ கா²இ ரஹலிमञ खाइ रहलिநான் சாப்பிட்டேன்
மஞ கா²இலம்ʼमञ खाइलंநான் சாப்பிட்டுவிட்டேன்
மஞ ஜாம/ஜாப³मञ जाम/जाबநான் செல்வேன்

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=குருமாலி_மொழி&oldid=3110571" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை