கெபேர்னெட் சுவிக்னோன்

கெபேர்னெட் சுவிக்னோன் (Cabernet Sauvignon) உலகில் மிகவும் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ள சிவப்பு வைன் திராட்சை வகையாகும். இது கிட்டத்தட்ட அனைத்து முதன்மையான வைன் தயாரிக்கும் நாடுகளிலும் விளைவிக்கப்படுகிறது. கனடாவின் ஒகனாகன் பள்ளத்தாக்கிலிருந்து லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கு வரை பல்வேறு வானிலைகளில் பயிராகிறது. கெபேர்னெட் சுவிக்னோன் பொர்தோவின் வைன்களில் மெர்லோட் மற்றும் கெபேர்னெட் பிரான்க் வகை மதுக்களுடன் கலக்கப்பட்டு உலகளவில் பிரபலமானது. பிரான்சிலிருந்து இவ்வகை திராட்சை ஐரோப்பாவிற்கும் பின்னர் அமெரிக்க கண்டங்களுக்கும் பரவியது. கலிபோர்னியாவின் சான்டா குரூசு மலைப்பகுதிகளிலும் நாபா பள்ளத்தாக்கிலும் நியூசிலாந்தின் ஆக்சு விரிகுடாப் பகுதியிலும் ஆத்திரேலியாவின் மார்கெரெட் ஆற்றுப் பகுதியிலும் கூனவார்ரா பகுதியிலும் சிலியின் மைப்போ பள்ளத்தாக்கிலும் கொல்ச்சகுவா பள்ளத்தாக்கிலும் விளைகிறது. 20ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியும் இதுவே உலகில் மிகவும் பரவலாக பயிரிடப்பட்ட மதிப்புமிக்க சிவப்பு வைன் திராட்சையாகும். 1990களில் தான் இதனை மெர்லோட் வகை திராட்சை மிஞ்சியது.[1]இருப்பினும்,கெபேர்னெட் சுவிக்னோன் மிகவும் பரவலாக பயிரிடப்பட்டுள்ள வைன் திராட்சையாக திகழ்கிறது. 2015இல் உலகளவில் மொத்தம் 341000 எக்டேர் பரப்பில் விளைவிக்கப்படுகிறது.[2]

கெபேர்னெட் சுவிக்னோன்
திராட்சை (விட்டிசு)
கெபேர்னெட் சுவிக்னோன் திராட்சைகள்
Color of berry skinBlack
வேறு பெயர்பூஷே, பூஷ், பெதித்-பூஷே, பெதித்-கெபேர்னெட், பெதித்-வீதுர், வீதுர், சுவிக்னோன் ரூஜ்
குறிப்பிடத்தக்க பகுதிகள்பொர்தோ, டக்சனி, சான்டா குரூசு மலைகள், நாபா பள்ளத்தாக்கு, சோனோமா, ஆத்திரேலியா, தென்னாப்பிரிக்கா திராட்சை மதுக்கள்
குறிப்பிடத்தக்க வைன்கள்வகைப்படுத்தப்பட்ட பொர்தோ பண்ணை, கலிபோர்னிய மரபு மதுக்கள்
உகந்த மண்சரளைக்கல்
பிரச்சினைகள்பழுக்காதிருத்தல், மாவு வெண்பூஞ்சை, யுடைபெல்லா நுண்ணுயிரி
Wine characteristics
பொதுஅடர்ந்த, கருநீல, துவர்ப்புள்ள
குளிட் காலநிலைதாவரம்சார், குடை மிளகாய், தண்ணீர்விட்டான் கொடி
இடைக் காலநிலைபுதினா, மிளகு, யுகலிப்டசு
சூடான காலநிலைபழக்கூழ்

விளைச்சல்

இத்தொழிலில் மிகவும் முதன்மையான ஓர் நிலையை எட்டியிருப்பினும் இது 17ஆம் நூற்றாண்டில்தான் அறிமுகமானது. தென்மேற்கு பிரான்சில் கெபேர்னெட் பிராங்க் என்ற திராட்சை வகையும் சுவிக்னோன் பிளாங்க் என்ற திராட்சை வகையும் குறுக்கிணைக்கப்பட்டு இவ்வகை உருவாக்கப்பட்டது. இதை விளைவிப்பது எளிமையானது என்பதாலேயே இது பரவலாக பயிரிடப்படுகிறது. இந்த திராட்சைகளுக்கு தோல் அடர்த்தியாக இருப்பதாலும் கொடி கடினமாக இருப்பதாலும் இயற்கையாகவே தாமதித்து பூப்பதால் பனிப்பொழிவையும் பூச்சித் தாக்கத்தையும் எதிர்கொள்வதாலும் இதன் வேளாண்மை எளிமையாக உள்ளது. மேலும் இதன் தோற்றமும் சுவையும் அனைத்து விளைச்சல்களிலும் ஒரே போல உள்ளது. இதனால் பயன்பாட்டாளர்களும் இதன் சுவையை இதன் பெயருடன் எளிதாக தொடர்பு படுத்துகின்றனர். வெளிநாடுகளில் பயிரிடப்படும் வகைகளும் இந்தப் பெயருக்கேற்ற சுவையையும் பண்புகளையும் கொண்டுள்ளன. இதனால் சிலர் உள்ளூர் வகைகளுக்கு ஆதரவின்றி இது ஆக்கிரமிப்பதாக குறை காண்கின்றனர்.[3]

மது

கெபேர்னெட் சுவிக்னோன் மது கனமானதாகவும் (full-bodied) துவர்ப்பாகவும் கவனிக்கத்தக்களவில் அமிலத்தனமை கொண்டதாகவும் உள்ளது. இதனால் இதனை நீண்டநாள் வைத்திருக்கும் போது இதன் சுவை கூடுகிறது. குளிர்மையான சூழலில் இம்மது கிசுமிசு வாடையும் கூடவே பச்சைக் குடை மிளகாய் வாடையும் கொண்டதாக உள்ளது; நாளானால் புதினா, செடார் போல சுவை தருகின்றது. இடைப்பட்ட வெப்பநிலையில் கிசுமிசுவுடன் கருமைநிறச் செர்ரி, கரும் ஆலிவ் வாடையும் மிகவெப்பமானச் சூழலில் புளித்த பழக்கூழ் போன்றும் கிடைக்கிறது. ஆத்திரேலியாவின் தெற்குப் பகுதியில் கூனாவார்ரா பகுதியில் விளைவிக்கப்படும் திராட்சையின் மது யுகலிப்டசு அல்லது பச்சைக் கற்பூர வாடை தருகின்றது.[4]

இணைந்த உணவுகள்

ஆட்டிறைச்சி போன்ற கொழுப்புமிக்க செவ்விறைச்சிகள் கெபேர்னெட் சுவிக்னோனுடன் நன்றாக இணைகின்றன; மதுவின் துவர்ப்பினை உணவின் புரதங்களும் கொழுப்பும் சமநிலைப்படுத்துகின்றன.

கெபேர்னெட் சுவிக்னோன் மிகவும் தீவிரமான சுவை கொண்டிருப்பதால் இலகுவான மென்மையான உணவின் சுவையை மறைத்துவிடும். மதுவிலுள்ள அதிகமான டானின் மற்றும் ஓக் தாக்கம் எந்தவகை இணையும் என்பதை தீர்மானிக்கிறது. இது புதியதாக இருக்கையில் இவை அனைத்துமே உச்சநிலையில் இருக்கின்றன; நாளாக ஆக இது மென்மைப்படுகின்றது. மென்மையானபின்னர் இதனுடன் மற்ற உணவுகளையும் உட்கொள்ளலாம். பெரும்பாலும் மதுவின் எடையையும் (ஆல்ககால் மற்றும் கடினம்) உணவின் கனத்தையும் சமப்படுத்த வேண்டும். மிகவும் உறைப்பான உணவுடன் கெபேர்னெட் சுவிக்னோன் சமமாவதில்லை. மிதமான மிளகு தாளித்த உணவுகள் நன்கு செல்கின்றன. பொதுவாக கெபேர்னெட் சுவிக்னோனுடன் மிளகிட்ட மாட்டிறைச்சி மிகவும் விரும்பப்படுகின்றது; மிளகிட்ட துனா மீனும் மற்றொரு பரவலான உணவாகும்.[5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை