கொதிநீர் அணு உலை

மென்னீர்அணுக்கரு உலை வகை

கொதிநீர் அணு உலை (boiling water reactor, BWR) மின்னுற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மென்னீர்அணுக்கரு உலைகளில் ஒருவகையாகும். மின்னுற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் அணு உலைகளில் மற்றொரு மென்னீர் அணு உலையான அழுத்த நீர் அணுஉலைக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகவும் பயன்படுத்தப்படும் அணு உலையாகும். இரண்டிற்குமான வேறுபாடாக, கொதிநீர் அணு உலையில் உலைக் கருவம் நீரை நீராவியாக மாற்றி சுழலி மின்னாக்கியை இயக்குகிறது. அழுத்த நீர் அணு உலையில் உலைக்கருவம் நீரைக் கொதிக்க விடுவதில்லை. இந்த சுடாக்கப்பட்ட நீர் கருவத்திற்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அழுத்தம் குறைக்கப்படுவதால் நீராவியாக மாறி சுழலியை இயக்குகிறது. 1950களின் இடையில் இடாகோ தேசிய ஆய்வகமும் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனமும் இணைந்து உருவாக்கின. தற்போது இத்தகைய அணு உலைகளின் வடிவமைப்பிலும் கட்டமைப்பிலும் ஜிஇ இடாச்சி அணுக்கரு ஆற்றல் (GE Hitachi Nuclear Energy) நிறுவனம் சிறப்புக் கவனம் பெற்று வருகிறது.

மேலோட்டம்

கொதிநீர் அணுஉலை ஒன்றின் வரைபடம்.
1. அழுத்த உலைக்கலன் (RPV)
2. அணு எரிபொருள் கூறு
3. கட்டுப்பாடு குச்சிகள்
4. சுழற்சி ஏற்றிகள்
5. கட்டுப்பாடு குச்சி இயக்கிகள்
6. நீராவி
7. ஊட்டுநீர்
8. மிகை அழுத்த சுழலி (HPT)
9. குறை அழுத்த சுழலி
10. மின்னாக்கி
11. தூண்டுகை
12. ஆவி சுருக்கி
13. குளிர்வி
14. முன்-சூடாக்கி
15. ஊட்டுநீர் ஏற்றிகள்
16. குளிர்நீர் ஏற்றிகள்
17. காங்கிறீற்று தடுப்பு
18. மின்சார பிணைய இணைப்பு

கொதிநீர் அணு உலையில் கனிமங்கள் நீக்கப்பட்ட நீர் குளிர்வியாகவும் நியூத்திரன் மட்டுப்படுத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது. அணுக்கருப் பிளவினால் ஏற்படும் வெப்பம் குளிர்வி நீரை சூடாக்கி கொதிக்கச் செய்கிறது. இதனால் உண்டாகும் நீராவி நேரடியாக சுழலி மின்னாக்கியை இயக்குகிறது. பின்னர் இந்த நீராவி ஓர் ஆவி சுருக்கியில் குளிர்விக்கப்பட்டு மீண்டும் நீராக மாற்றப்படுகிறது. இந்த நீர் மீண்டும் உலைக் கருவத்திற்கு அனுப்பப்பட்டு சுழற்சி முழுமையடைகிறது. குளிர்விக்கும் நீர் சுமார் 75 atm (7.6 MPa, 1000–1100 பவுண்ட்/ச.அங்) அழுத்தத்தில் வைக்கப்பட்டிருப்பதால் கருவத்தில் சுமார் 285 °C (550 °F) வெப்பத்தில் கொதிக்கிறது. இதற்கு எதிராக ,அழுத்த நீர் அணு உலையில் முதன்மைச் சுற்றில் நீர் சுமார் 158 atm (16 MPa, 2300 psi) மிகை அழுத்தத்தில் வைக்கப்படுவதால் கொதிப்பதில்லை. 2011 சப்பானிய அணு உலை விபத்திற்கு முன்பாக கருவச் சேத நிகழ்வடுக்குகள் 10−4 க்கும் 10−7 க்கும் இடையே மதிப்பிடப் பட்டிருந்தது (அதாவது, ஒவ்வொரு 10,000 முதல் 10,000,000 வரையிலான உலையாண்டுகளுக்கு ஒரு கருவச் சேதம்).[1]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கொதிநீர்_அணு_உலை&oldid=2745170" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை