குழிப்பந்தாட்டம்

(கோல்ஃப் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குழிப்பந்தாட்டம் அல்லது கோல்ஃப் (Golf) விளையாட்டு சுமார் 500 வருடங்களுக்கு முன் இசுக்காட்லாந்திலிருந்து தொடங்கியது. கோல்ஃப் மட்டை 'க்ளப்' (Club) எனப்படும், இந்த அடிகோல் (கிளப்) கொண்டு வெண்பந்தை மைதானத்திலுள்ள இடர்களில் மாட்டிக் கொள்ளாமல் சிறிய குழிக்குள் தள்ளுவதே ஆட்டம். பொதுவாக நன்கு பராமரிக்கப்படும், கவனத்துடன் உருவாக்கப்பட்ட 9 அல்லது 18 குழிகள் கொண்டது ஒரு ஆட்டமைதானம் (கோர்சு). இந்தக் குழிகளில் ஒவ்வொன்றாக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தட்டுகள் அல்லது அடிகள் (Stroke) மூலம் பந்தை விழச் செய்பவரே வெற்றி பெற்றவர். ஒவ்வொரு குழிக்கும் ஒரு பார் அல்லது சமம் மதிப்பு உண்டு. இது 3 இலிருந்து 5 வரை இருக்கும். 18 குழிகளுள்ள ஒரு ஆட்டமைதானத்திற்கு 72 அடிகள் சமம் ஆகும். இந்த எண்ணிக்கையில் ஆடுபவருக்கு குறை (ஹண்டிகேப்) 0 ஆகும். ஒருவர் 75 அடிகளில் அனைத்துக்குழிகளிலும் பந்தை இட்டால் அவரது குறை 3 ஆகும்.

குழிப்பந்தாட்டம்
குழிப்பந்தை அடித்த பிறகு நிறைவு நிலையில் ஒரு வீரர்
முதலில் விளையாடியது15 ஆம் நூற்றாண்டு, இசுக்காட்லாந்து
விளையாட்டைப் பற்றிய குறிப்புகள்
தொடர்புஇல்லை
பகுப்பு/வகைதிறந்த வெளி ஆட்டம்
கருவிகள்கால்ஃப் கிளபின், கோல்ஃ ​​பந்து
தற்போதைய நிலை
ஒலிம்பிக்1900, 1904, 2016,[1] 2020 [2]
அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில் அமைந்துள்ள சாகிராசு கோல்ப் மைதானத்தின் புகழ்பெற்ற 17வது குழி

கோல்ஃப் மைதானங்கள் மிகப் பெரியவையாக இருப்பதால், வீரர்கள் சில சமயம் சிறு மின்கல ஊர்திகளில் குழிகளுக்கிடையே பயணம் செய்வதும் உண்டு. இது வணிக உலகில் மிக மதிப்பு பெற்ற விளையாட்டாக இருப்பதால், இப்போட்டிகளில் பரிசுத் தொகையும், புகழும் அதிகம்.

  • இந்த விளையாட்டில், தொடக்கக் காலங்களில் பெண்கள் விளையாட அனுமதிக்கப்படவில்லை. இந்த விடயத்தைத் தெரிவிக்கும் ஆங்கிலச் சொற்றொடரான Gentlemen Only, Ladies Forbidden என்பதிலுள்ள சொற்களின் முதலெழுத்தைக்கொண்டே இந்த விளையாட்டிற்கு GOLF எனப் பெயரிடப்பட்டது. தற்காலத்தில் பெண்களும் ஆட அனுமதிக்கப்படுகின்றனர்.

வரலாறு

நவீன குழிப்பந்தாட்டமானது 15-ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் ஸ்காட்லாந்தில் தோன்றியது. ஆனால் இதன் தொடக்க கால வரலாறானது தற்போது வரை தெளிவாக வரைவிலக்கணம் செய்ய இயலாத. விவாதத்திற்குரிய ஒன்றாகவும் உள்ளது. சில வரலாற்று ஆசிரியர்கள் உரோம் நாட்டில் இருந்த பகானிகா எனும் விளையாட்டின் மறுவடிவமாக உள்ளதாகக் கருதினர். [3] ஏனெனில் இந்த விளையாட்டிலும் குனிந்துகொண்டு ஒரு குச்சியின் மூலமாக தோல்பந்தினை அடிப்பர்.கிமு 1-ஆம் நூற்றாண்டில் ரோமப் பேரரசு உலகின் பெரும் பகுதிகளை வென்றதால் இந்த விளையாட்டானது ஐரோப்பாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் வென்றிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. [4] மற்ற சிலர் ச்சூயிவன் என்றும் இதனை கருதினர். ("chui" என்றால் அடித்தல் மற்றும் "wan" என்றால் சிறிய பந்து ) சீன மூதாதையர்கள் சிலர் இந்த விளையாட்டினை 8-ஆம் நூற்றாண்டு முதல் 14-ஆம் நூற்றாண்டு வரை விளையாடினர்.[5]

குழிப்பந்தாட்ட பயிற்சி வகுப்பு

குழிப்பந்தாட்ட மைதானம்
  1. குழிப்பந்தாட்டத்தின் தொடக்கப் பகுதி
  2. நீரோடைகள் அல்லது எல்லைக் கோடுகள்
  3. கடினமான பகுதி
  4. வரம்புகள்
  5. குண்டு காப்பரண்
  6. நீரோடைகள் அல்லது நீர் இடையூறு
  7. சமதளப் பரப்பு
  8. பசுமைப் பரப்பு
  9. குழிப்பந்தாட்டத்தின் கொடியின் கீழ்ப் பகுதி
  10. குழி

பார்(PAR)

குழிப்பந்தாட்டத்தில் பார் (PAR) என்பது பந்தானது குழிக்குள் செல்வதற்காக அடிக்கப்படும் எண்ணிக்கைகளைக் குறிக்கும்.

பெரும்பாலான குழிப்பந்தாட்ட பயிற்சி வகுப்புகள் -3, -4, மற்றும் -5 குழிகள் கொண்டதாக இருக்கும். சில -6 கொண்டதாக இருக்கும். யப்பானில் -7 குழிகள் கொண்டதாக மட்டுமே உள்ளது. வழக்கமாக தொடக்கப் பகுதியிலிருந்து இருக்கும் குழிகளின் தூரங்கள் பின்வருமாறு

ஆண்கள்

  • குழி 3 – 250 கெஜம் (230 மீ) அல்லது அதற்கும் கீழ்
  • குழி 4 – 251-450 கெஜம் (230- 411 மீ)
  • குழி 5 – 451- 690 கெஜம் (412- 631 மீ)
  • குழி 6 – 691 கெஜம் (632 மீ) அல்லது அதற்கும் மேல்

பெண்கள்

  • குழி 3 – 210 கெஜம் (190மீ) அல்லது அதற்கும் கீழ்
  • குழி 4 – 211-400 கெஜம் (193-366 மீ)
  • குழி 5 – 401-575 கெஜம் (367-526 மீ)
  • குழி 6 – 575 கெஜம் (526 மீ) அல்லது அதற்கும் மேல்

விதிமுறைகள்

குழிப்பந்தாட்டம் விளையாடுவதெற்கென சில பொதுவான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதனை மீறுபவர்களுக்கு அபராதங்களும் விதிக்கப்படும். அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் மெக்சிக்கோ நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளின் குழிப்பந்தாட்ட விதிமுறைகளை வகுப்பதும், நிர்வகிப்பது போன்றவைகளை ஆர் அண்ட் ஏ R&A அமைப்பின் பணியாகும். அந்த இரு நாடுகளுக்கும் யு எஸ் ஜி ஏ (USGA) இந்த பணியினை மேற்கொள்ளும்.

வரலாறு

குழிப்பந்தாட்டத்திற்கான ஒரு பொதுவான விதிமுறைகள் வருவதற்கு முன்னர் குழிப்பந்தாட்டக் கழகங்கள் தங்களுக்கென தாங்களே சில விதிமுறைகளை வகுத்துக் கொண்டனர். அவர்களுக்குத் தேவையான சில விதிகளை தளர்வும் செய்தனர். உ.ம்: இலைகள் ,சிறிய கற்கள். 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புனித.ஆண்ட்ரூஸ் குழிப்பந்தாட்ட சங்கம் (பின்னர் R&A என்று அழைக்கப்பட்டது) லீத் ஜென்டில்மேன் குழிப்பந்தாட்ட சங்கம் (பின்னர் எடின்பர்க் குழிப்பந்தாட்ட வீரர்கள் சங்கம்) ஆகியவை தாங்களாகவே இணைத்துக் கொண்டன.

மார்ச் 7 , 1744 இல் லீத் ஜென்டில்மேன் குழிப்பந்தாட்ட சங்கம் (பின்னர் எடின்பர்க் குழிப்பந்தாட்ட வீரர்கள் சங்கம்) குழிப்பந்தாட்டம் விளையாடுவதில் உள்ள விதிகள் மற்றும் நிபந்தனைகள் என்ற தலைப்பில் பதின்மூன்று விதிகள் காணப்பட்டன. [6][7]இதனுடைய கையெழுத்துப் பிரதி இசுக்கொட்லாந்தின் தேசிய நூலகத்தில் உள்ளது. [8]

  • குழிப்பந்தாட்ட சங்கத்தின் குழிகளின் நீளத்திற்கு தகுந்தாற்போல பற்றியினை(tee) வைக்க வேண்டும்.
  • பற்றியானது (tee) மைதானத்தின் மீது இருக்கும் வகையில் இருக்க வேண்டும்.
  • பற்றியில் வைக்கப்பட்ட பந்தினை மாற்றம் செய்தல் கூடாது.
  • மைதானத்தில் இருக்கக்கூடிய கற்கள் போன்றவற்றை நீக்கம் செய்தல்கூடாது.

மட்டைகள்

ஒரு கோல்ஃ ​​பந்தை விரைந்து இயக்க தயாராக நிலைப்படுத்தப்பட்ட ஒரு மர புட்டர் வகை மட்டை

புட்டர் (Putter) என்று மூன்று வகை மட்டைகள் உபயோகப்படுத்தப்படும். இவற்றிலும் மட்டை நுனியின் தடிமன் மற்றும் கணம் பல வேறுபாடுகள் உண்டு. ஆட்டவீரர்கள் ஓர் ஆட்டத்தில் 14 மட்டைகள் வரை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்படுவர்.

மரம் - இவ்வகை மட்டைகளைப் பயன்படுத்தி முதல் சில த்ட்டுகளை அல்லது அடிகளை ஆடுவார்கள். இது பந்தை நீண்ட தொலைவு அடிக்க பயன்படுத்தப்படும். சாதாரணமாக 220 மீட்டர் முதல் 180 மீட்டர் வரை பந்தை செலுத்த இதனைப் பயன்படுத்தலாம்.

இரும்பு - இது 1 முதல் 10 வரை எண் கொண்ட வேறுபட்ட எடை கொண்டது. 175 மீட்டர் தூரம் முதல் குழி உள்ள பசுந்தரை (Putting Green) வரை பந்தைச் செலுத்த இரும்பு அடிகோல்களைப் (கிளப்-களை) பயன்படுத்தலாம்.

புட்டர் - குழி அமைந்துள்ள பசுந்தரையை (Putting Green) அடைந்த பின்னர் இவ்வகை மட்டையைக் கொண்டு பந்தின் மிக அருகில் நின்று மெதுவாக தட்டி பந்தை குழியை நோக்கி உருட்டுவார்கள்.

கோல்ஃப் மட்டை வீச்சு (Swing)

பந்தை நீண்ட தொலைவு செல்லுமாறு அடிப்பதற்கு, அருமையான மட்டை வீச்சு முறையை பயில்வது மிக முக்கியம். பந்தை முதலில் அடிக்கும் போது டீ (Tee) எனும் ஒரு சிறிய ஆணியைத் தரையில் பொருத்தி அதன் மீது பந்தை வைத்து அடிக்க வேண்டும். அப்பொழுது அதன் பின்னரும் நமது வீச்சின் முழு வேகமும் பந்தை செலுத்த, அந்த வீச்சு தரையிலோ அல்லது ஆணியிலோ படாமல் பந்தின் மீது மட்டும் பட வேண்டும். சிறந்த வீரர்கள் அருமையான வீச்சு உடையவர்களாக இருப்பார்கள்.

புள்ளிகள்

குழிப்பந்தாட்டத்தில் வழங்கப்படும் புள்ளிகளானது குழிக்குள் பந்தினை செலுத்த ஒவ்வொரு வீரர்கள் எடுத்துக் கொள்ளும் பாரினைப் (par) பொறுத்து வழங்கப்படும். வீரர் ஒருவர் தன்னுடைய முதல் வாய்ப்பிலேயே பந்தினை குழிக்குள் செலுத்தினால் அது ஏஸ் எனப்படும். இதே போன்று மற்ற புள்ளிகளுக்கும் பெயர்கள் உண்டு.[9]

எண்ணியல் குறியீடுபெயர்
−4காண்டோர்
−3அல்பட்ராஸ்
−2ஈகிள்
−1பர்டி
Eபார்
+1போகி
+2டபிள் போகி
+3ட்ரிபிள் போகி

விளையாட்டில் பயன்படுத்தப்படும் சொற்கள்

  • பார் (par)- காட்டாக 4 அடிக்குள் பந்தை குழிக்குள் தள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பெற்று இருந்தால், விளையாடுபவர் 4 அடிகள் மட்டுமே எடுத்துக்கொண்டால் அதற்கு பார் என்று பெயர்.
  • பேர்டி (birdie) - விளையாடுபவர் 3 அடிகள் எடுத்துக்கொண்டால் அதற்கு பேர்டி என்று பெயர். அதாவது பார் என்பதற்கு ஓர் அடி குறைவாக தேவைப்படுமாறு அடித்தால்.
  • ஈகிள் (eagle) - விளையாடுபவர் 2 தட்டுகள் அல்லது அடிகள் எடுத்துக்கொண்டால் அதற்கு ஈகிள் என்று பெயர். அதாவது பார் என்பதற்கு இரண்டு அடிகள் குறைவாக எடுத்தல். பார்-உக்கு மூன்று அடி குறைவாக எடுத்துக்கொண்டால் அதை இரட்டை ஈகிள் (double eagle) என்பர்.
  • போகி (boggy)- விளையாடுபவர் 5 அடிகள் எடுத்துக்கொண்டால் அதற்கு போகி என்று பெயர். அதாவது பார்-உக்கு அதிகமாக ஓர் அடி எடுத்தால். பார்-உக்கு அதிகமாக இரண்டு அடிகள் எடுத்தால் அதை இரட்டை போகி (double boggy) என்பர்.

புகழ்

2005 ஆம் ஆண்டில் கோல்ஃப் டைஜஸ்ட் -ன் அறிக்கையின் படி எந்தெந்த நாடுகளில் அதிகப்படியான குழிப்பந்தாட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன என் கூறியுள்ளது. அவைகள் பின்வருமாறு இசுக்கெட்லாந்து, நியூசிலாந்து, ஆத்திரேலியா, அயர்லாந்து, கனடா, வேல்ஸ், அமெரிக்கா, ஸ்வீடன், இங்கிலாந்து.

மற்ற பிராந்தியங்களிலும் குழிப்பந்தாட்டத்திற்கான பயிற்சி வகுப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சீனாவில் பயிற்சிவகுப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதே இதற்கு ஒரு உதாரணம் ஆகும். 1984 ஆம் ஆண்டில் முதன் முதலாக சீனாவில் குழிப்பந்தாட்ட பய்யிற்சி வகுப்பு துவங்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டின் முடிவில் 600 பேர் இருந்தனர். 21-ஆம் நூற்றாண்டில் சீனாவில் குழிப்பந்தாட்டம் அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்டது. ஆனால் 2004 - 2009 ஆம் ஆண்டிற்கான இடைப்பட்ட கால கட்டத்தில் இந்த எண்ணிக்க்கையானது மூன்று மடங்கு அதிகரித்தது. பின்பு மறைமுகமாக இந்த தடையினை சீன அரசாங்கம் தடைகளை விலக்கிக் கொண்டது. [10]

சர்வதேச நிகழ்வுகள்

உலக அளவிலான குழிப்பந்தாட்ட பயிற்சி வகுப்புகள்

நாடுபயிற்சி வகுப்புகளின் எண்ணிக்கைசதவீதம்
அமெரிக்க ஐக்கிய நாடு15,37245%
யப்பான்2,3837%
கனடா2,3637%
இங்கிலாந்து2,0846%
ஆத்திரேலியா1,6285%
ஜெர்மனி7472%
பிரான்சு6482%
ஸ்காட்லாந்து5522%
தென் ஆப்ரிக்கா5122%
சுவீடன்4911%
சீனா4731%
அயர்லாந்து4721%
தென் கொரியா4471%
எசுப்பானியா4371%
நியூசிலாந்து4181%
அர்கெந்தீனா3191%
இத்தாலி2851%
இந்தியா2701%
மற்ற நாடுகளில்4,11012%
மொத்தம்34,011

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=குழிப்பந்தாட்டம்&oldid=3739661" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை