சகீன் அஃப்ரிடி

சகீன் ஷா அஃப்ரிடி (Shaheen Shah Afridi (உருது: شاہین آفریدی; பஷ்தூ: شاهین اپریدی; பிறப்பு: ஏப்ரல்6, 2000) என்பவர் பாக்கித்தானியத் துடுப்பட்ட வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் அணிக்காகத் தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.[1][2] இவர் மணிக்கு 90கிமீ வேகத்தில் பந்து வீசக்கூடிய திறன் பெற்றவராக அறியப்படுகிறார்[3]. இவர் துடுப்பாட்டத்தில் சகலத் துறையராக அறியப்படுகிறார்.[4][5] ஆகஸ்டு 2018 இல் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் இவர் உட்பட முப்பத்து மூன்று வீரர்களுக்கு 2018-19 ஆம் ஆண்டிற்கான மத்திய ஒப்பந்த விருதினை வழங்கியது.[6][7]

சகீன் அஃப்ரிடி

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்

சகீன் அஃப்ரிடி பஷ்தூன் இனத்தைச் சேர்ந்தவர்.[8] அவர் ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் கைபர் மாவட்டத்தில் உள்ள லாண்டி கோட்டல் என்ற ஊரில் வளர்ந்தார். இவரின் பெற்றோர்களுக்கு பிறந்த ஏழு சகோதரர்களில் இவர் இளையவர் ஆவார்; அவரது மூத்த சகோதரர், இவரைவிட15 வயது மூத்தவர், மேலும் அவர் 2004 ஆம் ஆண்டில் அவர் பாகிஸ்தானுக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடிய ரியாஸ் அப்ரிடி ஆவார்.[9] ஷாஹீன் தனது துடுப்பாட்ட வாழ்க்கையை லாண்டி கோட்டலில் உள்ள டடாரா மைதானத்தில் இருந்து தொடங்கினார், இது டாடாரா மலைகளின் அருகில் உள்ளது .[10]

ரியாஸ் அஃப்ரிடி 2015 ஆம் ஆண்டில் இவரை 16 வயதுக்குட்பட்ட ஹார்ட்-பால் கிரிக்கெட்டுக்கு அறிமுகப்படுத்தினார், ஷாஹீன் அதுவரை டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடினார்.[11] அங்கு இவர் சிறப்பான திறனை வெளிப்படுத்தியதன் மூலம் நவம்பர் 2015 இல் ஆஸ்திரேலியாவின் 16 வயதுக்குட்பட்ட சுற்றுப்பயணத்திற்கான துடுப்பாட்ட தொடரில் இவர் தேர்வானார், அங்கு அவர் ஒருநாள் மற்றும் இருபது -20 தொடர்களில் 2–1 எனும் கணக்கு அணி வெற்றி பெற உதவினார் மேலும் அந்தத் தொடரில் முத்தமாக 4 இலக்கினை கைப்பற்றினார்[11]

உள்ளூர்ப் போட்டிகள்

டிசம்பர் 2016 இல் 2016 ஆம் ஆண்டில் ஆசியக் கோப்பை தொடரில் 19 வயதிற்கு உட்பட்ட பாக்கித்தான் அணியில் இவர் இடம்பெற்றார்.[12] சிங்கப்பூர் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 27 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 9 இலக்குகளில் வெற்றி பெற்றார் [13]

செப்டம்பர் 2017 இல் வங்காளதேச பிரீமியர் லீக் தொடரில் தாக்கா டைனமைட்ஸ் அணிக்காக இவர் விளையாட ஒப்பந்தம் ஆனார்.[2][14][15] பின் 2017-18 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற குவைத்-இ-அசாம் தொடரில் கான் ரிசர்ச் லேபாரடரீஸ் அணிக்காக இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார்.[16] இதன் இரண்டாவது போட்டியில் 39 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 8 இலக்குகளைக் கைப்பற்றினார்.[17] இதன் மூலம் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாக இது அமைந்தது.[5][18]

2017 ஆம் ஆண்டில் டிசம்பரில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்டத் தொடரில் இவருக்கு விளையாடும் அணியில் இடம் கிடைத்தது[19]. இந்தத் தொடரில் 12 இலக்குகளைக் கைப்பற்றினார்.[20] இதன்மூலம் அதிக இலக்குகளைக் கைப்பற்றியவர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். அதே ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இவரை வளர்ந்து வரும் நட்சத்திர வீரர் என அறிவித்தது.[21]

2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாக்கித்தான் சூப்பர் லீக் தொடரில் இவர் லாகூர் கலாந்தர்ஸ் அணிக்காக இவர் இருபது 20 போட்டிகளில் அறிமுகமானார்.[22] அதற்கு அடுத்த தொடரில் முல்தான் சுல்தான் அணிக்கு எதிரான போட்டியில் நான்கு ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் லாகூர் அணி 6 இலக்குகளால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார்.[23][24]

2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாக்கித்தான் கோப்பைத் தொடரில் பலூசிஸ்தான் (பாகிஸ்தான்) அணியில் இடம்பெற்றார்.[25][26] ஏப்ரல் 25, 2018 இல் பலூசிஸ்தான் அணிக்காக பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார்.[27]

ஜூலை 2019 இல், யூரோ டி 20 ஸ்லாம் துடுப்பாட்ட போட்டியின் தொடக்க பதிப்பில் ரோட்டர்டாம் ரைனோஸ் அணிக்காக விளையாடத் தேர்வு செய்யப்பட்டார்.[28][29] இருப்பினும், அதற்கு அடுத்த மாதம் போட்டி ரத்து செய்யப்பட்டது.[30]

சர்வதேசப் போட்டிகள்

2018 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 தொடரில் இவர் அறிமுகமானார்.[31][32] ஏப்ரல் 3 இல் தனது முதல் போட்டியில் விளையாடினார்[33]. ஆசியக் கிண்ணம் 2018 இல் பாக்கித்தான் அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. செப்டம்பர் 21 இல் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[34].[35][36]

2018 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இவர் அறிமுகமானார்.[37]

ஏப்ரல் 2019 இல், அவர் 2019 துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றார்.[38][39] 5 ஜூலை 2019 அன்று, பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில், உலகக் கோப்பை போட்டியில் 35 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஆறு இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய இளாம் பாக்கித்தானிய வீச்சாளர் என்ற பெருமையை ஷாஹீன் பெற்றார்.[40] உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்காக ஒரு பந்து வீச்சாளரின் சிறந்த பந்துவீச்சு புள்ளிவிவரங்களும் இவைதான்.[41] உலகக் கோப்பையைத் தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அஃப்ரிடியினை வளர்ந்து வரும் நட்சத்திர வீரராக அறிவித்தது.[42]

தேர்வுத் துடுப்பாட்டம்

2018 ஆம் ஆண்டில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .டிசம்பர் 3 அபுதாபியில் உள்ள துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 2 பந்துகளில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பின் பந்துவீச்சில் 23 ஓவர்களை வீசி 52 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஓர் இல்லகினைக் கைப்பற்றிய இவர் ஆறு ஓவர்களை மெய்டனாக வீசினார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் ஆறு பந்துகளில் 2 ஓட்டங்கள் எதுஎடுத்து வும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பின் பந்துவீச்சில் 20 ஓவர்களை வீசி 85 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இரு இலகினைக் கைப்பற்றிய இவர் ஐந்து ஓவர்களை மெய்டனாக வீசினார். இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 123 ஓட்டங்களில் வெற்றி பெற்றது

சான்றுகள்

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சகீன்_அஃப்ரிடி&oldid=3929483" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை