சீலாந்து வேள்புலம்

சீலாந்து வேள்புலம் (Principality of Sealand) என்பது எச்எம் ரஃப்சு கோட்டை எனப்படும் இடத்தில் உள்ள ஒரு அங்கீகரிக்கப்படாத பிரதேசம் ஆகும். இது ஐக்கிய இராச்சியம், இங்கிலாந்தின் சஃபோக் கரையில் இருந்து 13 கிமீ தொலைவில் வடகடலில் உள்ள ஒரு முன்னாள் இரண்டாம் உலகப் போர்க்கால மவுன்செல் கடல் துறைகளில் ஒன்றாகும்.[6][8]

சீலாந்து வேள்புலம்
Principality of Sealand
நுண் நாடு
சீலாந்தின் கொடி
Flag
சீலாந்தின் சின்னம்
சின்னம்
Motto: E Mare Libertas
(English: கடலில் இருந்து, விடுதலை)
பண்: "E Mare Libertas" by பசில் சிமோனென்கோ
நிலைதற்போது
Location of சீலாந்து வேள்புலம்
Location of சீலாந்து வேள்புலம்
கோரப்பட்ட நிலம்550 சதுரமீட்டர்
(அனைத்தும் வாழக்கூடிய பகுதிகள்)[1]
மக்கள்தொகை27 (கோரியது)[1]
நிறுவிய ஆண்டு2 செப்டம்பர் 1967[2]
தலைமைபேட்சு குடும்பம், இளவரசர் மைக்கேல்[3]
ஒழுங்கமைவுசிலராட்சி, அரசியல்சட்ட முடியாட்சி
மொழிஆங்கிலம்[4]
நாணயம்சீலாந்து டாலர்
(அமெரிக்க டாலருடன் நிலைப்படுத்தப்பட்டது)[5]
நாணயக் குறியீடுஎதுவுமில்லை
தலைநகர்எச்எம் ரஃப்சு துறை[6]
Demonymசீலாண்டர், சீலாண்டிக்கு[1]
Claimed GDPUS$600,000
(US$22,200 நபர்வரி)[2]
நேரவலயம்கிஇநே[7]
சீலாந்து வேள்புலம்

1967 முதல் பாடி ரோய் பேட்சு என்பவராலும், அவரது குடும்பத்தினராலும் இப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு சுதந்திரத் தனிநாடாகக் கோரப்பட்டது.[6] பேட்சு 1967 ஆம் ஆண்டில் தனது தனிப்பட்ட வானொலி நிலையம் ஒன்றை நிறுவும் நோக்கோடு கடற்கொள்ளைக்கார வானொலி ஒலிபரப்பாளர்களிடம் இருந்து கைப்பற்றினார். 1975 ஆம் ஆண்டில் இவர் சீலாந்து என்ற பெயரில் அரசு ஒன்றை நிறுவி அரசியலமைப்புச் சட்டம், மற்றும் பல தேசிய சின்னங்களையும் அமைத்தார்.[6] பேட்சு முதுமை அடைந்த நிலையில், ஆட்சிப் பொறுப்பைத் தனது மகன் மைக்கேலிடம் கொடுத்துவிட்டு இங்கிலாந்தின் எசெக்சு நகருக்குத் திரும்பினார். பேடு 2012 ஆம் ஆண்டில் தனது 91வது அகவையில் மரணமானார்.[9]

சீலாந்து உலகின் மிகச் சிறிய நாடாக,[10] அல்லது நுண் நாடாகக் கருதப்பட்டாலும்,[11] இது எந்தவொரு சுதந்திர நாடாலும் இதுவரையில் அங்கீகரிக்கப்படவில்லை. அப்போது வழக்கில் இருந்த பிராந்திய கடல் எல்லைக் கட்டுப்பாட்டின் படி, இப்பிரதேசத்தின் மீது உரிமை கோர இங்கிலாந்துக்கு அதிகாரம் இல்லை என இங்கிலாந்தின் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால், ஐக்கிய இராச்சியம், மற்றும் செருமனி ஆகியன நடைமுறைப்படி தம்மை அங்கீகரித்துள்ளதாக சீலாந்து அரசு கூறி வருகிறது.[6]

கடல் மீது அமைந்துள்ள ஒரு கட்டிடம் தான் இந்நாட்டு மக்களின் வாழிடமாகும். இக்கட்டிடத்தில் 30 அறைகள் உள்ளன. இந்நாட்டினை தற்போது ஆண்டு வரும் மைக்கேல் குடும்பம் உட்பட 50 குடிமக்களே இந்நாட்டில் வசித்து வருகின்றனர்.[12]

சமயம்

ஆரம்பம் முதல் இங்கிலாந்து திருச்சபையைச் சார்ந்திருந்த சீலாந்து, 1997 ஆம் ஆண்டில் சமயச் சார்பற்ற நாடாகத் தன்னை அறிவித்துக் கொண்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சீலாந்து_வேள்புலம்&oldid=3849136" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை