சுட்டாங்கல் (பீங்கான்)

சுட்டாங்கல் அல்லது பீங்கான் (ceramic) ஒரு மாழையல்லாத கனிமச் சேர்மத்தாலான திடப் பொருளாகும். இது மிகுதியான வெப்பப்படுத்தல் மற்றும் தொடர்ச்சியான குளிர்வித்தல் வினையால் செய்யப்படுகிறது. சுட்டாங்கல் பொருட்கள் படிக மற்றும் குறைபடிக அமைப்பு (எ.கா. பீங்கான்) கொண்டவையாகவோ அல்லது துகளமைப்பு (எ.கா. ஆடிகள்) கொண்டவையாகவோ இருக்கக் கூடும்.

18ம் நூற்றாண்டின் சீன குயிங் பேரரசைச் சார்ந்த ஒரு சுட்டாங்கற் பாண்டம்
சுட்டாங்கற்களால் வெப்பக்காப்பு செய்யப்பட்ட சுடுகலன்.

மிகப் பழமையான சுட்டாங்கற்கள், களிமண்ணால் செய்யப்பட்ட மண்பாண்டங்கள் ஆகும். இவை நெருப்பினால் சுட்டு உறுதிப்படுத்தப்பட்டன. தற்காலங்களில், சுட்டாங்கற்கள் வீட்டு பயன்பாட்டு பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் செய்வதற்கு பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இருபதாம் நூற்றாண்டில் சுட்டாங்கற்களை பல புதிய துறைகளில் பயன்படுத்தத் துவங்கினர். எடுத்துக்காட்டாக, இவை மேம்பட்ட சுட்டாங்கல் பொறியியலிலும், குறைமின்கடத்திகள் செய்வதற்கும் பயன்படுகின்றன.

சுட்டு செய்யப்படுவதன் பொருட்டு சுட்டாங்கல் எனப் பெயர்பெற்ற இவை ஆங்கிலத்தில் செராமிக்ஸ் (ஆங்கிலம்:Ceramics) என அழைக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை