செக்சுட்டசு எம்பிரிக்கசு

இரண்டாம் நூற்றாண்டு உரோமானிய மெய்யிலாளர், மருத்துவர்

செக்சுட்டசு எம்பிரிக்கசு (Sextus Empiricus, பண்டைக் கிரேக்கம்Σέξτος Ἐμπειρικός; அண். கிபி 160 – 210), ஒரு மருத்துவரும் மெய்யியலாளரும் ஆவார். இவர் அலெக்சாந்திரியா, உரோம், ஏதென்சு எனப் பலவேறு இடங்களில் வாழ்ந்தவராகக் கூறப்படுகிறார். இவரது மெய்யியல் நூல்கள் மட்டுமே பண்டைய கிரேக்க, உரோம ஐயுறவுவாதத்தை அறிய உதவும் கருவிகளாக உள்ளன.

செக்சுட்டசு எம்பிரிக்கசு
Sextus Empiricus
பிறப்புஅண். கிபி 160
இறப்புஅண். கிபி 210 (அகவை 49–50)
அலெக்சாந்திரியா அல்லது உரோம்
காலம்பண்டைய மெய்யியல்
பகுதிமேற்கத்திய மெய்யியல்
பள்ளிஐயுறவியல், புலனறிவாதப் பள்ளி
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
பிரோனியப் பத்து முறைமைகள்
செல்வாக்குச் செலுத்தியோர்
செல்வாக்குக்கு உட்பட்டோர்

தனது மருத்துவ நூலின்படி, இவர் புலனறிவாதப் பள்ளியைச் சேர்ந்தவராக மதிப்பிடப்படுகிறார். அவர் பெயரும் அதைக் குறிப்பதைக் காணலாம். என்றாலும் தனது எழுத்துகளில் இருமுறை தன்னை முறையியல் பள்ளிக்கு (methodic school) நெருக்கமாகக் குறிப்பிட்டுக் கொள்கிறார். இது ஒருவகையில் அவரது மெய்யியல் கண்ணோட்டத்தோடு ஒத்துப்போகிறது எனலாம்.

நூல்கள்

செக்சுட்டசு எம்பிரிக்கசுவின் மூன்று நூல்களாவன: "பிர்ரோனிய அடிப்படைகள்" (Outlines of Pyrrhonism, பொதுவாக இது PH எனும் அஃகுப் பெயரால் அழைக்கப்படுவது). மற்ற இருநூல்கள் ஒரே தலைப்பில், "கணிதவியலாளரை எதிர்த்து" (Adversus Mathematicos), என அழைக்கப்படுகின்றன. ஒருவேளை இதில் ஒன்று முடிவுறாத நூலாக இருக்கலாம்.

"கணிதவியலாளரை எதிர்த்து" (Πρὸς μαθηματικούς, Pros mathematikous) எனும் நூலின் முதல் ஆறும் வழக்கமாக பேராசிரியர்களை எதிர்த்து என அழைக்கப்படுகிறன. ஒவ்வொன்றுக்கும் ஒரு தனியான மரபுப் பெயருமுண்டு:[2]

நூல்மரபுத் தலைப்புமூலத் தலைப்பு
Iஇலக்கணிகளை எதிர்த்துΠρὸς γραμματικούς/ Pros grammatikous
IIஅணிநயப்பாளரை எதிர்த்துΠρὸς ῥητορικούς/ Pros rhetorikous
IIIவடிவியலாளரை எதிர்த்துΠρὸς ἠθικούς/ Pros ethikous
IVஎண்ணியலாளரை எதிர்த்துΠρὸς ἀριθμητικούς/ Pros arithmetikous
Vகணியவியலாளரை (சோதிடரை) எதிர்த்துΠρὸς ἀστρολόγους/ Pros astrologous
VIஇசைக்கலைஞர்களை எடிர்த்துΠρὸς μουσικούς/ Pros mousikous

"கணிதவியலாளரை எதிர்த்து" I–VI என்ற தொகுப்பு "கணிதவியலாளரை எதிர்த்து" VII–XI எனும் தொகுப்பினும் வேறுபட்டதாகக் கருதப்படுகிறது. பின்னது "வறட்டுவாதிகளை எதிர்த்து" (Πρὸς δογματικούς, Pros dogmatikous) எனும் தலைப்பால் சுட்டப்படுவதாலேயே இப்படி கருதலாயிற்று. எஞ்சிய பிறநூல்கள் I–II, III–IV, V என எண்ணிடப்பட்டுள்ளன. என்றாலும் இதற்கு முன்னே எத்தனை நூல்கள் காணவில்லை என்பது உறுதிப்படவில்லை. அதேபோல இதற்குப் பிறகு எத்தனை நூல்கள் அமைந்திருந்தன என்பதும் தெரியவில்லை. பொதுவாக இவை "ஐயுறவுவாத நூல்கள்" (Σκεπτικὰ Ὑπομνήματα /Skeptika Hypomnēmata) எனும் பொதுத் தலைப்பில் அமைந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.[3]

VII-VII  ஏரணவியலாளரை எதிர்த்துΠρὸς λογικούς/ Pros logikous
IX-Xஇயற்பியலாளரை எதிர்த்துΠρὸς φυσικούς/ Pros Physikous
XIஅறவியலாளரை எதிர்த்துΠρὸς ἠθικούς/ Pros Ethikous

"கணிதவியலாளரை எதிர்த்து", "பிரோனிய அடிப்படைகள்" ஆகிய இருநூல்கள் மட்டுமே கையெழுத்துப்படிகளில் உள்ளன. மற்றவை கிடைக்கவில்லை.

மெய்யியல்

செக்சுடசு எம்பிரிக்கசு அனைத்துவகை அறிவுக்கும் பொருந்தும் அக்கறைகளை எழுப்பினார். டேவிடு இயூமுக்கு நெடுங்காலத்துக்கு முன்பே இவர் விரிமுறை ஏரணத்தின் சரித்தன்மையை ஐயத்துக்குள்ளாக்கினார்.[4] மேலும் அனைத்துவகை அறிவுவாதத்துக்கும் எதிராக பின்னேகல் (regress) விவாதத்தை முன்வைத்தார்:

உண்மையை மதிப்பிடுவதாகக் கூறும் ஒருவர் அந்த உண்மை அறிவதற்கான வரன்முறை ஒன்றை பெற்றிருக்கவேண்டும். இந்த வரன்முறை தீர்ப்பாளரின் ஒப்புதல் பெற்றதாகவோ அல்லது ஒப்புதல் பெறாத்தகவோ இருக்கவேண்டும். அது ஒப்புதல் பெறாதாக இருந்தால், அது எப்படி உண்மைத்தகவுடையதாகும்? தீர்ப்பின்றியே யாதொன்றையும் நம்பலாமா? ஒருவேளை அது ஒப்புதல் பெற்றதாக இருந்தால், அப்படி ஒப்புதல் தந்த வாயில் ஒப்புதல் பெற்றதாகவோ அல்லது ஒப்புதல் பெறாத்தகவோ இருக்கவேண்டும். இப்படி இந்த வாதம் முடிவே இன்றி .ஈறிலிவரை. தொடரும்..[5]

பிர்ரோனியத்தின் பத்து முறைமைகள்

பிரோனியம் கோட்பாடாக அமைவதைவிட ஒரு மனப்பான்மை அல்லது மருத்துவமுறை போல உள்ளது. பொருள்களும், காரணங்களும் இணைஎதிர்வுப் பான்மைகளைக் கொண்டிருப்பதால் பிரோனியம் எதற்கும் எதிர்தரப்பை உருவாக்கி தீர்ப்பை ஒத்திப் போடுகிறது. "நாம் ஒன்று தோற்றங்களைத் தோற்றங்களாலும் அல்லது சிந்தனைப் பொருள்களைச் சிந்தனைப் பொருள்களாலும் அல்லது அவற்றின் மற்றமைகளாலும் எதிர்க்கிறோம்."[6] இதன் பத்து முறைமைகள் தீர்ப்பை ஒத்திப் போடத் தூண்டிட, அதன்வழி ஒத்திப்போடும் மனநிலையை உருவாக்கி, தொடர்ந்து துறவு அல்லது பற்றற்ற (ataraxia) நிலைக்குத் தள்ளிவிடுகிறது. ஒருவர் ஒரு கோட்பாட்டை எதிர்க்கும் நிலையில் இல்லாவிட்டால், பிரோனியர்கள் பின்வருமாறு பதிலிறுப்பர். "உங்களது சிந்தனைப் பள்ளியை நிறுவியவரின் பிறப்புக்கு முன்பே அது நிலவினாலும் அவரது கோட்பாடு மதிப்புள்ள கோட்பாடாகத் தோன்றாதது போலவே, நீங்கள் இப்பொது முன்மொழியும் எதிர்க்கோட்பாடும் முன்பே நிலவியதுதான் ஆனால் இதுவரை நமக்கு தெளிவுபடத் தோன்றாமலே இருந்துவந்ததுதான். இப்போது சரியானதாகப் பட்டாலும் இதை ஏற்கவேண்டிய காட்டாயம் ஏதும் எமக்கு இல்லையே."[7] இந்தப் பத்து முறைமைகள் அல்லது "பூடகங்கள்" முதலில் அனெசிடெமசுவால் தரப்பட்டுள்ளன.

  1. "விலங்குகள் ஒவ்வொன்றும் வேறுபடுவதால் ஒத்த பொருட்கள் ஒத்த மனப்பதிவுகளை அவை ஒவ்வொன்றிலும் உருவாக்குவதில்லை."[8]
  1. மாந்தர் ஒவ்வொருவரும் வேறுபடுவதால் ஒத்தபொருட்கள் ஒவ்வொருவரிலும் ஒத்த மனப்பதிவுகளை உருவாக்குவதில்லை.[9]
  1. புலன்களிடையிலும் வேறுபாடுகள் நிலவுவதால் ஒத்த பொருட்கள் ஒத்த மனப்பதிவுகளை உருவாக்குவதில்லை.[10]
  1. இருப்புகளும் சூழல்களும் நிலமைகளும் மாறுவதால் அதேபொருட்களே வெவேறாகத் தோன்றுகின்றன. கருவிகாட்டும் ஒரே வெப்பநிலை, குளிரான பனிக்காலத்தில் நெடுநேரம் இருந்த பிறகு இலையுதிர்கால வானிலையினும் வேறுபாடான உணர்வைத் தருகிறது. காலம் இளமையில் மெதுவாகவும் முதுமையில் வேகமாகவும்மைவதாகத் தோன்றுகிறது. அனைவருக்கும் இனிக்கும் தேன் மஞ்சட்காமாலை உள்ளவருக்குக் கடுக்கிறது. காய்ச்சை கண்டவர் உடல் கொதித்தாலும் அவர் குளிரால் நடுங்குகிறார்.[11]
  1. "இருப்புகள், தொலைவுகள், இருப்பிடங்கள் சaர்ந்தும் ஒத்த பொருட்களே வெவேறாகத் தோன்றுகின்றன."ஒரே கோபுரம் அருகில் செவ்வகமாகவும் தொலைவில் வட்டமாகவும்தோன்றுகிறது. நிலா கண்ணால் பார்க்க முழுமையான கோளமாகத் தெரிகிறது.தொலைநோக்கியால் பார்க்க்குழிப்பள்ளங்களோடு அமைகிறது.[12]
  1. “எந்தவொரு பொருளும் தனியாக நம்மைத் தாக்காமல் மற்றதுடன் சேர்ந்தே தாக்குவதால், புறப்பொருளும் மற்றதும் இணைந்த கலவை அல்லது சேர்மானம் காணும் பொருளைப் போல தோன்றுகிறது. எனவே உண்மையில் அந்தப் புறப்பொருள் தனித்து எத்தகையது என அறியவியலாது."[13]
  1. "பொருள்களின் அளவையும் கட்டமைப்பையும் சார்ந்து எனும்போது "கட்டமைப்பு" என்பது உட்கூறுகளின் இணைதகவைக் குறிக்கிறது." எனவே, எஉத்துகாட்டாக, ஆட்டின் கொம்பு உடலில் உள்ளபோது கருப்பாகாமைய, அதை சீவிப் பார்க்கும்போது வெண்மையாக இருக்கிறது. அதேபோல உறைந்த நீர் திண்மையாகவும் வெண்ணிறத்திலும் அமைய, உருகிய நீர் பளிங்குபோல நீர்மையுடன் மிளிர்கிறது.[14]
  1. "அனைத்துப் பொருள்களுமே சார்புடையன என்பதால் பொருள்கள் தனிநிலையில் எப்படி நிலவுகிறது எனும் தீர்ப்பை ஒத்திபோட வேண்டி நேர்கிறது.[15] தன்னளவில் தெளிவாகத் தனித்து நிலவும் பொருள்களுக்கு எதிராக, வேறுபட்டு நிலவும் பொருள்கள் சார்பான பொருள்களிடமிருந்து வேறுபடுகின்றனவா, இல்லையா? அப்படி அவை வேறுபடாவிட்டால் அவையும் சார்பானவையே; மாறாக அவை வேறுபட்டால், அப்போது வேறுபடும் ஒவ்வொன்றும்கூட ஏதாவதொன்றுடன் சார்ந்திருப்பதே....; அதேபோல, தனித்து நிலவும் பொருள்களும்கூட சார்புடையவையே."[16]
  1. "தொடர்ந்து நிலவல் அல்லது அருகித் தோன்றல் சார்ந்து." வால்வெள்ளி சூரியனைவிட விந்தை மிக்கது. ஆனால் நம் சூரிய வெதுவெதுப்பை நாள்தோறும் உணர்வதால் சூரியனைவிட எப்போதோ அருகித் தோன்றும் வால்வெள்ளியே நம் கவனத்தைக் கவர்கிறது.[17]
  1. "பத்தாம் முறைமை என ஒன்று உண்டு. இது வறட்டுக் கருத்து, தொன்ம நம்பிக்கைகள், சட்டங்கள், பழக்க வழக்கங்கள், நடத்தை அல்லது ஒழுக்க விதிகள் சார்ந்த அறக் கண்ணோட்டத்தைச் சார்ந்தது."[18]

இந்த பத்து முறைமைகளுக்கும் மேலாக, கீழ்வரும் மூன்று முறைமைகள் அமையும்:

  • I:மதிப்பிடும் அறிவோனைப் பொறுத்தவை (modes 1, 2, 3 & 4).
  • II: மதிப்பிடும் அறிபொருளைப் பொறுத்தவை (modes 7 & 10).
  • III: அறிவோன் அறிபொருள் இரண்டையும் பொறுத்தவை (modes 5, 6, 8 & 9)

இந்த மூன்று முறைமைகளுக்கும் கீழே உறவு முறைமை அமையும்.[19]

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை