பண்டைக் கிரேக்க மொழி

பண்டைக் கிரேக்க மொழி (Ancient Greek) என்பது தோராயமாக பொ. ஊ. மு. 1,500 முதல் பொ. ஊ. மு. 300 வரையிலான காலத்தில் பண்டைக் கிரேக்கம் மற்றும் பண்டைய உலகில் பயன்படுத்தப்பட்டு வந்த கிரேக்க மொழியின் வடிவங்களை உள்ளடக்கியதாகும். இது அடிக்கடி தோராயமாக பின்வரும் காலங்களாகப் பிரிக்கப்படுகிறது: மைசேனிய கிரேக்கம் (அண். 1400–1200 பொ. ஊ . மு.), இருண்ட காலங்கள் (அண். 1200–800 பொ. ஊ. மு.), தொல் அல்லது காவிய காலம் (அண். 800–500 பொ. ஊ. மு.) மற்றும் பாரம்பரிய காலம் (அண். 500–300 பொ. ஊ. மு.).[2]

பண்டைக் கிரேக்கம்
Ἑλληνική
எலனிகே
பார்த்தினனில் ஏதெனா பார்த்தெனோசுவின் சிலையின் கட்டுமானம் குறித்த ஒரு கல்வெட்டு, 440/439 பொ. ஊ. மு.
பிராந்தியம்கிழக்கு நடுநிலக் கடல்
Indo-European
  • எலனியம்
    • பண்டைக் கிரேக்கம்
ஆரம்ப வடிவம்
முன்-கிரேக்கம்
  • பண்டைக் கிரேக்கம்
கிரேக்க எழுத்துக்கள்
மொழிக் குறியீடுகள்
ISO 639-2grc
ISO 639-3grc (நவீன காலத்துக்கு முந்தைய அனைத்து நிலைகளையும் உள்ளடக்கியது)
மொழிக் குறிப்புanci1242[1]
{{{mapalt}}}
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.
ஓமரின் ஒடிசியின் தொடக்கம்

ஓமர் மற்றும் பொ. ஊ. மு. 5ஆம் நூற்றாண்டின் ஏதெனிய வரலாற்றாளர்கள், நாடக ஆசிரியர்கள் மற்றும் தத்துவவாதிகளின் மொழி பண்டைக் கிரேக்கம் ஆகும். ஆங்கிலேய சொல் தொகுதிக்குப் பல சொற்களை இது பங்களித்துள்ளது. மறுமலர்ச்சி காலம் முதல் மேற்குலகத்தின் கல்வி நிலையங்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு தரப்படுத்தப்பட்ட பாடமாக இது உள்ளது.

எலனியக் காலம் (அண். 300 பொ. ஊ. மு.) முதல் பண்டைக் கிரேக்கத்திற்குப் பிந்தைய மொழியானது கொயினே கிரேக்கம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு தனியான வரலாற்று நிலையாகக் கருதப்படுகிறது. இதன் தொடக்க வடிவமானது அத்திய கிரேக்கத்தை ஒத்தும், இதன் கடைசி வடிவமானது நடுக் கால கிரேக்கத்தை ஒத்திருந்த போதிலும் இது இவ்வாறாகக் கருதப்படுகிறது. பண்டைக் கிரேக்கத்தின் வட்டார மொழிகளும் ஏராளமாக உள்ளன. அத்திய கிரேக்கமானது கொயினே கிரேக்கமாக வளர்ச்சி அடைந்தது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

செந்நூல்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை