சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னையின் ஐ.பி.எல். கிரிக்கெட் அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) என்பது இந்திய கிரிக்கெட் வாரியம் உருவாக்கிய இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) எனப்படும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரில் சென்னை நகரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்முறை அணியாகும். 2008ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அணியின் முந்திய அணித்தலைவர் மகேந்திரசிங் தோனி ஆவார். தற்போதைய பயிற்றுனராக முன்னாள் நியூசிலாந்து வீரர் சுடீபன் பிளெமிங் உள்ளார். இந்த அணியின் உள்ளக அரங்காக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் துடுப்பாட்ட அரங்கம் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்Ruturaj Kaiwad
பயிற்றுநர்ஸ்டீபன் பிளெமிங்
உரிமையாளர்இந்தியா சிமெண்ட்ஸ்[1]
அணித் தகவல்
நிறங்கள்CSK
உருவாக்கம்2008
உள்ளக அரங்கம்எம் ஏ சிதம்பரம் மைதானம் (சேப்பாக்கம்)
கொள்ளளவு50,000
வரலாறு
இந்தியன் பிரீமியர் லீக் வெற்றிகள்5 (2010, 2011, 2018,2021,2023)
சாம்பியன்ஸ் லீக் இருபது20 வெற்றிகள்2 (2010, 2014)
அதிகாரபூர்வ இணையதளம்:சென்னை சூப்பர் கிங்ஸ்

இ20 உடை

5 முறை வாகைப் பட்டத்தை வென்றுள்ள சென்னை அணி, இந்தியன் பிரீமியர் லீக் அணிகளில் அதிக வெற்றி விகிதத்தைப் பெற்றுள்ள அணியாகும். இந்த அணி 2010 மற்றும் 2011 ஆகிய இரு ஆண்டுகளில் தொடர்ந்து சாம்பின்ஸ் லீக் இருபது20 கோப்பையை வென்றுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் தொடர்ந்து அதிக வெற்றிகளை (7) பெற்ற அணி என்ற சாதனையையும் 2013 ஆம் ஆண்டில் பெற்றது. மேலும் சாம்பியன்சு லீக் இருபது20 போட்டியின் கோப்பையை இருமுறை வென்றுள்ளது. இந்த அணியின் சார்பில் அதிக ஓட்டங்களை எடுத்தவர் சுரேஷ் ரைனாவும் அதிக ஆடுநர்களை வீழ்த்தியவர் டுவைன் பிராவோவும் உள்ளனர்.

2013 மே 24 அன்று, சென்னை அணியின் முதன்மை அதிகாரி, குருநாத் மெய்யப்பன், சூதாட்டம் மற்றும் ஏமாற்றுதல் ஆகிய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக இந்த அணியை இரண்டு ஆண்டுகள் தடை செய்து உச்சநீதிமன்றம் அமைத்த முத்கல் குழு உத்தரவிட்டது.[2] அதனால் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணி பங்கேற்கவில்லை. தடைகாலம் முடிந்த பிறகு மீண்டும் பங்கேற்றது.[3]

தொழில்முறை உரிமையின் வரலாறு

இந்தியன் பிரிமியர் லீக் தொடங்கியபோது வாங்கப்பட்ட 8 அணிகளில் சென்னை அணியும் ஒன்றாகும். இதன் 10 ஆண்டுகளுக்கான தொழில்முறை உரிமையை இந்திய சிமேன்ட்ஸ் நிறுவனம் 91 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது. 2010ஆம் ஆண்டு வரை இந்தத் தொழில்முறை உரிமையின் விளம்பர நட்சத்திர தூதுவராக இந்திய துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இருந்தார். மற்றொரு முன்னாள் இந்திய வீரரான வி.பி.சந்திரசேகர் அணியின் தலைமை தேர்வாளர் ஆவார்.

மக்களிடம் துடுப்பாட்டப் போட்டியை கொண்டு சேர்க்க அணிக்கான விளம்பர நட்சத்திர தூதுவர்களாக திரைப்பட நடிகர்களான விஜய்யும் நயன்தாராவும் நியமிக்கப்பட்டனர்.[4][5] . சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் அணியின் இல்ல அரங்கமாக காணப்படும். அணிக்கான கருப்பொருள் பாடலை வைரமுத்து எழுதியிருப்பதோடு மணி சர்மா இசையமைத்துள்ளார் கருப்பொருள் நிகழ்படத்தை ராஜிவ் மேனன் இயக்கியுள்ளார். 2010 ஆம் ஆண்டு அரவிந்த்-சங்கர் இசையில் வெளியிடப்பட்ட 'விசில் போடு' என்னும் விளம்பர பாடல் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

பெயரின் விளக்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பெயர் சங்கக் காலத் தமிழ் அரசர்களை குறிக்கிறது. அணியின் சின்னம் காட்டு ராஜாவான சிங்கம் ஆகும். இது தமிழகத்தை ஆண்ட பல்லவர்களின் சின்னமும் ஆகும். சூப்பர் கிங்ஸ் என்ற பெயர், இவ்வணியின் உரிமையாளர்களான இந்தியா சிமெண்ட்ஸ் நிருவனத்தின் கோரமாண்டல் கிங் என்ற பெயரில் இருந்தும் தழுவியுள்ளது.

உள்ளக அரங்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உள்ளக அரங்கம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் துடுப்பாட்ட அரங்கமாகும். இந்திய துடுப்பாட்ட வாரியத்தின் முன்னாள் தலைவரான திரு.எம்.ஏ.சிதம்பரத்தில் நினைவாக பெயரிடப்பட்டுள்ள இந்த அரங்கம், இந்தியாவில் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் மிகவும் பழைமையான அரங்கமாகும். தமிழ்நாடு துடுப்பாட்டக் கழகத்திற்கு சொந்தமான் இந்த அரங்கில் மே 2013 நிலவரப்படி 50,000 பார்வையாளர்கள் அமரும் வசதி உள்ளது. 2011 துடுப்பாட்ட உலக கிண்ணத்திற்காக புணரமைக்கப்பட்டபோது இதன் பார்வையாளர் கொள்ளளவு 36,000தில் இருந்து 50,000ஆக அதிகரிக்கப்பட்டது.

இங்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 62.75 சதவிகித வெற்றியை பதிவு செய்துள்ளது. ரசிகர்களால் "சேப்பாக்கம் கோட்டை" எனவும் "சிங்கத்தின் குகை" எனவும் அழைக்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இங்கு விளையாடிய 8 போட்டிகளிலும் (ராயல் சேலஞ்சர்சு பெங்களூர் அணிக்கு எதிரான இறுதிப் போட்டி உள்பட) வென்று, தன் உள்ளக அரங்கத்தில் அனைத்து போட்டிகளிலும் வென்ற முதல் அணி என்ற சாதனையை படைத்தது.

முடிவுகள்

ஆண்டுஇந்தியன் பிரீமியர் லீக்சாம்பியன்ஸ் லீக் இருபது20
2008இரண்டாம் இடம்இரத்து செய்யப்பட்டது (தே)
2009அரையிறுதிதே.இ
2010வாகையாளர்வாகையாளர்
2011வாகையாளர்குழு சுற்று
2012இரண்டாம் இடம்குழு சுற்று
2013இரண்டாம் இடம்அரையிறுதி
2014இரண்டாம் இடம்வாகையாளர்
2015இரண்டாம் இடம்தொடர் கைவிடப்பட்டது
ஆண்டுஇந்தியன் பிரீமியர் லீக்
2016தகுதி நீக்கப்பட்டது
2017தகுதி நீக்கப்பட்டது
2018வாகையாளர்
2019இரண்டாம் இடம்
2020ஏழாம் இடம்
2021வாகையாளர்
2022ஒன்பதாம் இடம்
2023வாகையாளர்
  • தே = தேர்வு பெற்றது;
  • தே.இ = தேர்வு பெறவில்லை

வீரர்கள் பட்டியல்

  • தங்கள் நாட்டு அணிக்காக பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பெயர்கள் தடித்த எழுத்துக்களால் குறிக்கப்பட்டுள்ளன.
எண்.பெயர்நாடுபிறந்த நாள்மட்டையாட்ட நடைபந்துவீச்சு நடைஒப்பந்த ஆண்டுவருமானம்குறிப்புகள்
மட்டையாளர்கள்
31ருதுராஜ் கெயிக்வாட்  இந்தியா31 சனவரி 1997 (1997-01-31) (அகவை 27)வலது கைபொருத்தமில்லை20196 கோடி (US$7,50,000)தலைவர்
21அஜின்கியா ரகானே  இந்தியா6 சூன் 1988 (1988-06-06) (அகவை 35)வலது கைவலது கை சுழற்பந்துவீச்சு202350 இலட்சம் (US$63,000)
66ஷேக் ரஷீத்  இந்தியா24 செப்டம்பர் 2004 (2004-09-24) (அகவை 19)வலது கைவலது கை சுழற்பந்துவீச்சு202320 இலட்சம் (US$25,000)
1சமீர் ரிஸ்வி  இந்தியா6 திசம்பர் 2003 (2003-12-06) (அகவை 20)வலது கைபொருத்தமில்லை20238.40 கோடி (US$1.1 மில்லியன்)
இலக்குக் கவனிப்பாளர்
7மகேந்திரசிங் தோனி  இந்தியா7 சூலை 1981 (1981-07-07) (அகவை 42)வலது கைவலது கை மிதவேகப்பந்துவீச்சு201812 கோடி (US$1.5 மில்லியன்)
88டேவன் கான்வே  நியூசிலாந்து8 சூலை 1991 (1991-07-08) (அகவை 32)இடது கைவலது கை மிதவேகப்பந்துவீச்சு20221 கோடி (US$1,30,000)வெளிநாடு
2ஆரவெல்லி அவனிஷ் ராவ்  இந்தியா2 சூன் 2005 (2005-06-02) (அகவை 18)இடது கைபொருத்தமில்லை202420 இலட்சம் (US$25,000)
பன்முக வீரர்கள்
18மொயீன் அலி  இங்கிலாந்து18 சூன் 1987 (1987-06-18) (அகவை 36)இடது கைவலது கை சுழற்பந்துவீச்சு20218 கோடி (US$1.0 மில்லியன்)வெளிநாடு
25சிவம் துபே  இந்தியா26 சூன் 1993 (1993-06-26) (அகவை 30)இடது கைவலது கை மிதவேகப்பந்துவீச்சு20224 கோடி (US$5,00,000)
10ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்  இந்தியா10 நவம்பர் 2002 (2002-11-10) (அகவை 21)வலது கைவலது கை மிதவேகப்பந்துவீச்சு20221.5 கோடி (US$1,90,000)
8ரவீந்திர ஜடேஜா  இந்தியா6 திசம்பர் 1988 (1988-12-06) (அகவை 35)இடது கைஇடது கை சுழற்பந்துவீச்சு201816 கோடி (US$2.0 மில்லியன்)
19அஜய் மண்டல்  இந்தியா25 பெப்ரவரி 1996 (1996-02-25) (அகவை 28)இடது கைஇடது கை சுழற்பந்துவீச்சு202320 இலட்சம் (US$25,000)
75டரில் மிட்செல்  நியூசிலாந்து20 மே 1991 (1991-05-20) (அகவை 32)வலது கைவலது கை மிதவேகப்பந்துவீச்சு202414 கோடி (US$1.8 மில்லியன்)வெளிநாடு
17ரச்சின் ரவீந்திரா  நியூசிலாந்து18 நவம்பர் 1999 (1999-11-18) (அகவை 24)இடது கைஇடது கை சுழற்பந்துவீச்சு20241.8 கோடி (US$2,30,000)வெளிநாடு
74மிட்செல் சான்ட்னர்  நியூசிலாந்து5 பெப்ரவரி 1992 (1992-02-05) (அகவை 32)இடது கைஇடது கை சுழற்பந்துவீச்சு20181.9 கோடி (US$2,40,000)வெளிநாடு
27நிஷாந்த் சிந்து  இந்தியா9 ஏப்ரல் 2004 (2004-04-09) (அகவை 20)இடது கைஇடது கை சுழற்பந்துவீச்சு202360 இலட்சம் (US$75,000)
வேகப்பந்துவீச்சாளர்கள்
9தீபக் சாஹர்  இந்தியா7 ஆகத்து 1992 (1992-08-07) (அகவை 31)வலது கைவலது கை மிதவேகப்பந்துவீச்சு201814 கோடி (US$1.8 மில்லியன்)
33முகேஷ் சௌத்ரி  இந்தியா6 சூலை 1996 (1996-07-06) (அகவை 27)இடது கைஇடது கை மிதவேகப்பந்துவீச்சு202220 இலட்சம் (US$25,000)
24துசார் தேஷ்பாண்டே  இந்தியா15 மே 1995 (1995-05-15) (அகவை 28)இடது கைவலது கை மிதவேகப்பந்துவீச்சு202220 இலட்சம் (US$25,000)
81மதீச பத்திரன  இலங்கை18 திசம்பர் 2002 (2002-12-18) (அகவை 21)வலது கைவலது கை வேகப்பந்துவீச்சு202220 இலட்சம் (US$25,000)வெளிநாடு
90முசுத்தாபிசூர் ரகுமான்  வங்காளதேசம்6 செப்டம்பர் 1995 (1995-09-06) (அகவை 28)இடது கைஇடது கை மிதவேகப்பந்துவீச்சு20242 கோடி (US$2,50,000)வெளிநாடு
98சிமர்ஜீத் சிங்  இந்தியா17 சனவரி 1998 (1998-01-17) (அகவை 26)வலது கைவலது கை மிதவேகப்பந்துவீச்சு202220 இலட்சம் (US$25,000)
54ஷர்துல் தாகூர்  இந்தியா16 அக்டோபர் 1991 (1991-10-16) (அகவை 32)வலது கைவலது கை மிதவேகப்பந்துவீச்சு20244 கோடி (US$5,00,000)
சுழற்பந்துவீச்சாளர்கள்
46பிரசாந்த் சோலங்கி  இந்தியா22 பெப்ரவரி 2000 (2000-02-22) (அகவை 24)வலது கைவலது கை சுழற்பந்துவீச்சு20221.2 கோடி (US$1,50,000)
61மகேசு தீக்சன  இலங்கை1 ஆகத்து 2000 (2000-08-01) (அகவை 23)வலது கைவலது கை சுழற்பந்துவீச்சு202270 இலட்சம் (US$88,000)வெளிநாடு
Source: சென்னை சூப்பர் கிங்ஸ்

நிர்வாக மற்றும் உதவிப் பணியாளர்கள்

  • உரிமையாளர் – சென்னை சூப்பர் கிங்ஸ் பிரைவேட் லிமிடட்
  • தலைமை பயிற்றுனர் – சுடீபன் பிளெமிங்
  • மட்டைவீச்சு பயிற்றுனர் – மைக்கேல் ஹசி
  • பந்துவீச்சு பயிற்றுனர் – டுவைன் பிராவோ
  • பந்துவீச்சு ஆலோசகர் – எரிக் சைமன்ஸ்
  • உடற்பயிற்சியாளர் – கிரெக் கிங்
  • உடற்பயிற்சி சிகிச்சையாளர் – டோமி சிம்செக்
  • செயல்திறன் பகுப்பாளர் – லட்சுமி நாராயணன்
  • அணி மேலாளர் – ரஸ்செல் ராதாகிருஷ்ணன்
  • அணி மருத்துவர் – மது தொட்டபில்லில்
  • ஏற்பாட்டியல் மேலாளர் – சஞ்சய் நடராஜன்

[6]

கால அட்டவணை மற்றும் முடிவுகள்

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளின் செயல்திறன் தொகுப்பு

ஆண்டுமொத்தம்வெற்றிகள்தோல்விகள்முடிவின்மைசமன்வெற்றி விகிதம்நிலைசுருக்கம்
200816970056.25%2வதுஇரண்டாமிடம்
200915861053.33%4வதுஅரை-இறுதியாளர்
201016970056.25%1வதுவாகையாளர்
2011161150068.75%1வதுவாகையாளர்
2012191081055.55%2வதுஇரண்டாமிடம்
2013181260061.11%2வதுஇரண்டாமிடம்
2014161060062.50%3வதுதகுதிச்சுற்று
2015171070058.8%2வதுஇரண்டாமிடம்
2016தகுதிநீக்கம்
2017தகுதிநீக்கம்
2018161150068.75%1வதுவாகையாளர்
2019171070058.82%2வதுஇரண்டாமிடம்
மொத்தம்165100641061.28%

கடைசியாக இற்றைப்படுத்தப்பட்டது: 12 மே 2019

எதிரணி வரிசைப்படி[7]

எதிரணிகாலம்போட்டிகள்வெற்றிதோல்விசமநிலைமுடிவின்மைவெற்றி விகிதம்
டெக்கான் சார்ஜர்ஸ்*2008–201210640060%
டெல்லி கேப்பிடல்ஸ்*2008–2015

2018-2019

211560071.42%
கிங்சு இலெவன் பஞ்சாபு2008-2015,

2018

211290059.52%
கொச்சி இட்டசுக்கேர்சு கேரளா*20112110050%
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்2008-2015,

2018

201370065.00%
மும்பை இந்தியன்ஸ்2008-2015,

2018

2811170039.28%
புனே வாரியர்சு இந்தியா*2011–20136420066.67%
ராஜஸ்தான் ராயல்ஸ்2008-2015,

2018-19

211470066.76℅
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்2008-2015,

2018-19

241580165.21%
சன்ரைசர்ஸ் ஐதராபாத்2013-2015,

2018

12930075.00℅
மொத்தம்2008-2015

2018–2019

165100640161.25%
*தற்போது செயலற்ற அணிகள்

சாம்பியன்சு லீக் இருபது20 போட்டி முடிவுகளின் தொகுப்பு

சாம்பியன்சு லீக் இருபது20 போட்டிகளில் அணியின் செயல்திறன் பகுப்பு[8]
ஆண்டுபோட்டிகள்வெற்றிதோல்விமுடிவின்மைவெற்றி விகிதம்குறிப்பு
2008 – – – – –இரத்து செய்யப்பட்டது
2010651083.33%வாகையாளர்
2011413025%குழு சுற்று
2012422050%குழு சுற்று
2013532060%அரை இறுதியாளர்
2014641166.66%வாகையாளர்
மொத்தம்19118057.89%
  • 2009ஆம் ஆண்டு சாம்பின்சு லீக் போட்டிகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதிபெறவில்லை.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை