சென்னை மத்திய தொடருந்து நிலையம்

சென்னை மத்திய தொடருந்து நிலையம் (அதிகாரப்பூர்வமான பெயர்:புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்) என்பது இந்தியாவின், முக்கியமான மற்றும் பெரிய தொடருந்து (இரயில்) நிலையங்களுள் ஒன்றாகும். இது சென்னை நகரில் அமைந்துள்ளது. இந்த தொடருந்து நிலையம், இந்தியாவின் தென்னக இரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த தொடருந்து நிலையம், இன்று சென்னை நகரின் மிகப்பழமையான கட்டிடங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது.

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்
நிலையத்தின் பிரதான நுழைவாயில்
அமைவிடம்
ஆள்கூறு13°04′59.5″N 80°16′31.8″E / 13.083194°N 80.275500°E / 13.083194; 80.275500
வீதிஈ. வே. ரா. பெரியார் சாலை, பார்க் டவுண்
நகரம்சென்னை
மாவட்டம்சென்னை
மாநிலம்தமிழ்நாடு
ஏற்றம்MSL + 34
நிலையத் தகவல்கள் & வசதிகள்
நிலையம் வகைமுனையம்
அமைப்புதரையில் உள்ள நிலையில்
நிலையம் நிலைசெயல்படுகிறது
வேறு பெயர்(கள்)மதராஸ் சென்ட்ரல், சென்னை சென்ட்ரல்
வாகன நிறுத்தும் வசதிஉண்டு
Connectionsடாக்சி நிறுத்தும், மாநகரப் போக்குவரத்துக் கழகம்
இயக்கம்
குறியீடுMAS
கோட்டம்சென்னை (மதராஸ்)
மண்டலம்தென்னக இரயில்வே
தொடருந்து தடங்கள்30
நடைமேடை17
வரலாறு
திறக்கப்பட்ட நாள்1853[1]
முந்தைய உரிமையாளர்மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வே
மின்சாரமயமாக்கல்1931 [2]
அமைவிடம்
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் is located in சென்னை
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்
சென்னை வரைபடத்தில் உள்ள இடம்
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் is located in தமிழ் நாடு
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் is located in இந்தியா
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்
1880ல் பக்கிங்காம் கால்வாயின் மேற்கிலிருந்து சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்
சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம், 1905

வரலாறு

சென்னையின் முதல் தொடருந்து நிலையம் இராயபுரத்தில் பொ.ஊ. 1856-ல் அமைக்கப்பட்டது. மதராஸ்-வியாசர்பாடி வழித்தடம் உருவாக்கத்தின் சென்னையின் இரண்டாவது இரயில் நிலையமாக சென்னை மத்திய தொடருந்து நிலையம், பார்க்டவுனில் உருவாக்கப்பட்டது. இந்த இரயில் நிலையம் ஹென்ரி இர்வின் என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது. 2019இல், இந்நிலையம் 'புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சேவைகள்

இத்தொடருந்து நிலையத்திலிருந்து, பிற மாநிலங்களுக்குச் செல்லும் இரயில்களும், சென்னையின் புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் இரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்தியாவின் முக்கிய நகரங்கள் பலவற்றிற்கு இங்கிருந்து இரயில்கள் இயக்கப்படுகின்றன. அண்டை மாநிலங்களான கேரளா, கருநாடகம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா செல்லும் இரயில்கள் இங்கிருந்தும், இவ்வழியாகவும், தமிழ்நாட்டின் கோவை, ஈரோடு, கரூர், சேலம், மதுரை, நாமக்கல், ஜோலார்பேட்டை, அரக்கோணம், காட்பாடி ஆகிய நகரங்களுக்குச் செல்லும் இரயில்கள் இங்கிருந்தும் இயக்கப்படுகின்றன. சென்னையின் புறநகர் இரயில்களும் எண்ணூர், கும்மிடிப்பூண்டி மற்றும் அம்பத்தூர், திருவள்ளூர் மார்க்கத்தில் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. சென்னைக் கடற்கரை மார்க்கமாகவும், புறநகர் இரயில்கள் இயக்கப்படுகின்றன.

வசதிகள்

சென்னை மத்திய ரயில் நிலையத்தின் அருகில் பேருந்து நிலையமும், 'ஆட்டோ ரிக்சா', 'டாக்ஸி' நிறுத்தும் இடமும் உள்ளன. சீருந்து, இருசக்கர வாகனம் மற்றும் மிதிவண்டி ஆகிய வாகனங்களை நிறுத்துமிடங்களும் உள்ளன.

சென்னை மத்திய இரயில் நிலையத்திலிருந்து புறப்படும் வண்டிகள்

  • சென்னை-புதுதில்லி Grand Trunk விரைவுத் தொடர்வண்டி வழி போபால் சந்திப்பு : எண்:12615/12616
  • சென்னை-புதுதில்லி தமிழ்நாடு விரைவுத் தொடர்வண்டி : எண்:12621/12622
  • சென்னை-ஐதராபாத் நிஜாமுதீன் ராஜதானி விரைவுத் தொடர்வண்டி : எண்:12433/12434
  • சென்னை-ஐதராபாத் நிஜாமுதீன் கரீப் ரத் (ஏழைகளின் தேர்) : எண்:12611/12612
  • சென்னை-மும்பை மெயில் : எண்:11028/11027
  • சென்னை-மும்பை விரைவுத் தொடர்வண்டி : எண்:10422/1041
  • சென்னை-ஹவுரா கோரமண்டல் விரைவுத் தொடர்வண்டி : எண்:12842/12841
  • சென்னை-ஹவுரா Mail : எண்:12840/12839
  • சென்னை-கோயம்புத்தூர் விரைவுத் தொடர்வண்டி|விரைவு தொடர்வண்டி : எண்: 12679/12680 (புறப்பாடு 14:30)
  • சென்னை-கோயம்புத்தூர் சேரன் விரைவுத் தொடர்வண்டி : எண்: 12673/12674 (புறப்பாடு 22:10)
  • சென்னை-கோயம்புத்தூர் கோவை விரைவுத் தொடர்வண்டி : எண்: 12675/12676 (புறப்பாடு 06:15)
  • சென்னை-கோயம்புத்தூர் (ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பாடு 22:20)
  • சென்னை-கோயம்புத்தூர்/ மேட்டுப்பாளையம் நீலகிரி விரைவுத் தொடருந்து : எண்: 12671/12672
  • சென்னை-மங்களூர் West Coast விரைவுத் தொடர்வண்டி (இந்தியா)|West Coast விரைவுத் தொடர்வண்டி] : எண்: 16627/16628 வழி கோயம்புத்தூர்
  • சென்னை-மங்களூர் மெயில் : எண்: 12601/12602
  • சென்னை-மங்களூர் விரைவுத் தொடர்வண்டி : எண்: 12685/12686 tri-weekly
  • சென்னை-அகமதாபாத் நவஜீவன் விரைவுத் தொடர்வண்டி : எண்: 12656/12655
  • சென்னை-சாப்ரா கங்கா காவிரி விரைவுத் தொடர்வண்டி : எண்: 12669/12670
  • சென்னை-திருமலா - திருப்பதி சப்தகிரி விரைவுத் தொடர்வண்டி : எண்: 16057/16058
  • சென்னை-திருமலா - திருப்பதி விரைவுத் தொடர்வண்டி : எண்: 16053/16054
  • சென்னை-திருமலா - திருப்பதி விரைவுத் தொடர்வண்டி : எண்: 16203/16204
  • சென்னை-ஐதராபாத் சார்மினார் விரைவுத் தொடர்வண்டி : எண்: 12759/12760
  • சென்னை-ஐதராபாத் ஐதராபாத் விரைவுத் தொடர்வண்டி : எண்: 12603/12604
  • சென்னை-ஈரோடு ஏற்காடு விரைவுவண்டி வழி சேலம் : எண்: 16669/16670
  • சென்னை-பெங்களூர் பிருந்தாவன் அதிவிரைவு தொடர்வண்டி : எண்: 12639/12640
  • சென்னை-பெங்களூர் இலால் பாக் விரைவுத் தொடர்வண்டி : எண்: 12607/12608
  • சென்னை-பெங்களூர் பெங்களூர் மெயில் : எண்: 12657/12658
  • சென்னை-பெங்களூர் சதாப்தி விரைவுத் தொடர்வண்டி : எண்: 12027/12028
  • சென்னை-பெங்களூர் விரைவுத் தொடர்வண்டி (மாலை) : எண்: 12609/12610
  • சென்னை-சத்திய சாய் ப்ரஸந்தி நிலையம் விரைவுத் தொடர்வண்டி(வார இறுதியில் மட்டும்) : எண்: 12691/12692
  • சென்னை-மைசூர் சதாப்தி விரைவுத் தொடர்வண்டி : எண்: 12007/12008
  • சென்னை-மைசூர் காவிரி விரைவுத் தொடர்வண்டி : எண்: 16222/16221
  • சென்னை-ஆலப்புழா ஆலப்புழா விரைவுத் தொடர்வண்டி: எண் : 16041/16042
  • சென்னை-திருவனந்தபுரம் திருவனந்தபுரம் Mail : எண்: 12623/12624
  • சென்னை-திருவனந்தபுரம் விரைவுத் தொடர்வண்டி : எண்: 12695/12696 Via கோயம்புத்தூர்
  • சென்னை-திருவனந்தபுரம் விரைவுத் தொடர்வண்டி (வாரமொருமுறை) : எண்: 12697/12698
  • சென்னை-திருப்பத்தூர் ஏலகிரி விரைவுத் தொடர்வண்டி : எண்: 16089/16090
  • சென்னை-காக்கிநாடா சிர்கார் விரைவுத் தொடர்வண்டி : எண்: 16043/16044
  • சென்னை-ஜம்மு தாவி அந்தமான் விரைவுத் தொடர்வண்டி : எண்: 16031/16032
  • சென்னை-சண்டிகர்/தேராதூன் விரைவுத் தொடர்வண்டி : எண்: 12687/12688
  • சென்னை-விஜயவாடா பினாகினி விரைவுத் தொடர்வண்டி : எண்: 12712/12711
  • சென்னை-விஜயவாடா ஜன சதாப்தி விரைவுத் தொடர்வண்டி : எண்: 12077/12078
  • சென்னை-புவனேஸ்வர் விரைவுத் தொடர்வண்டி : எண்: 12829/12830
  • சென்னை-ஜெய்ப்பூர் விரைவுத் தொடர்வண்டி : எண்: 12967/12968
  • சென்னை-லக்னோ விரைவுத் தொடர்வண்டி : எண் : 16093/16094
  • சென்னை-வாஸ்கோ-ட-காமா விரைவுத் தொடர்வண்டி : எண்: 17311/17312 (வாரமொருமுறை)
  • சென்னை-ஹூப்ளி விரைவுத் தொடர்வண்டி : எண்: 17313/17314 (வாரமொருமுறை)
  • சென்னை-நாகர்கோயில் விரைவுத் தொடர்வண்டி : எண்: 12689/12690 (வாரமொருமுறை) வழி ஈரோடு
  • சென்னை-யஷ்வந்த்பூர் விரைவுத் தொடர்வண்டி : எண்: 12291/12292 (வாரமொருமுறை) வழி கிருஷ்ணராஜபுரம்

மேலும் பார்க்க

குறிப்புகளும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

இந்திய இரயில்வேயின் அதிகாரப்பூர்வத் தளம்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை