செமிட்டிய மக்கள்

செமிட்டிய மக்கள் (Semitic people) என்னும் தொடர் செமிட்டிய மொழிகளில் ஒன்றைப் பேசிய அல்லது பேசுகின்ற இன, பண்பாட்டுக்கு குழுவைச் சேர்ந்த மக்களைக் குறிக்கும்.[1][2][3][4] 1770 ஆம் ஆண்டில் கொட்டின்சென் வரலாற்றுப் பள்ளி உறுப்பினர்களால் முதலில் பயன்படுத்தப்பட்ட இச்சொல், ஆதியாகமத்தில் உள்ள நோவாவின் மூன்று மகன்களில் ஒருவனான "செம்" என்பவனின் பெயரைத் தழுவி உருவானது.[5] இச்சொல், இப்போது மொழியியலாளர்களின் வட்டத்துக்கு வெளியே பெரிதும் பயன்படுவதில்லை.[6][7][8] ஆனாலும், தொல்லியலில் இச்சொல், "பண்டைய செமிட்டிய மொழி பேசும் மக்கள்" என்பதன் ஒருவகைச் சுருக்கமாகப் பயன்படுகின்றது.[8]

இனத்துவமும் இனமும்

கார்லெட்டன் எசு. கூனின் இனம் சார்ந்த வகைப்பாட்டில், செமிட்டிய மக்கள் காக்கேசிய இனத்தின் உறுப்பினர்களாகக் கருதப்படுகின்றனர். இவர்கள் இந்தப் பகுதியில் உள்ள இந்திய-ஐரோப்பிய, வடமேற்குக் காக்கேசிய, கார்த்தெவெலிய மொழிகளைப் பேசும் மக்களிடம் இருந்து தோற்றத்தில் வேறுபட்டவர்கள் அல்ல. மொழி சார்ந்த ஆய்வுகள் பண்பாட்டு ஆய்வுகளுடன் நெருக்கமாகப் பின்னப்பட்டிருப்பதால், இச்சொல் மதம், செமிட்டிய மொழி பேசும் இனத்துவம் ஆகியவற்றுடன், நெருங்கிய புவியியல், மொழிப் பரம்பலால் தொடர்புகொண்டுள்ள வேறுபட்ட பண்பாடுகளின் வரலாற்றையும் விளக்கும் ஒன்றாக ஆகியுள்ளது.[9]

சில மரபியல் ஆய்வுகள் (செமிட்டிய மொழிகளைப் பேசும் மக்களின் டி.என்.ஏயின் பகுப்பாய்வு மூலம்) இவர்களிடையே ஒரு பொதுக் குல மரபு இருப்பதைக் கண்டறிந்துள்ளன. குறிப்பிடத்தக்க பொது ஊன்குருத்து முடிவுகள் எதுவும் கண்டறியப்படாவிட்டாலும், மத்திய கிழக்கைச் சேர்ந்த செமிட்டிய மொழி பேசும் மக்களான அரேபியர், யூதர், மண்டாயீன்கள், சமரித்தான்களசிரியர்/ சிரியாக்குகள் என்பவர்களிடையே Y-நிறமூர்த்த இணைப்புக்கள் காணப்பட்டுள்ளன. யூதர்களினதும், பெதூன்களும் உள்ளிட்ட பாலத்தீன அரேபியர்களதும் ஒரு டி.என்.ஏ ஆய்வு இவர்கள் அயல் அரேபியர்களைவிட ஒருவருக்கு ஒருவர் நெருக்கமானவர்கள் என்பதைக் காட்டுகின்றது.[10][11]

செமிட் எதிர்ப்பும், செமிட்மயமாக்கமும்

"செமிட் எதிர்ப்பு", "செமிட் எதிர்ப்பியம்" ஆகிய சொற்கள் ஒரு குறுகிய பொருளில், செமிட்டிய மக்களில் ஒரு பிரிவினரான யூதர்கள் மீது பகையுணர்வு அல்லது பாகுபாடு காட்டுவதைக் குறிக்கிறது.[12]

ஏர்னெசுட் ரெனான் போன்ற, 19 ஆம் நூற்றாண்டின் மானிடவியலாளர்கள், இன இயல்புகளை வரையறுப்பதற்குக் கதைகள், அறிவியல், நாட்டுப்புறக் கலை போன்றவற்றைப் பயன்படுத்தி, மொழியியல் குழுக்களை இனத்துவம், பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தினர். பண்டைய நாகரீகங்களான மெசொப்பொத்தேமியா, இசுரேல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் ரெனான், செமிட்டிய மக்களின் ஓரிறைக் கொள்கையினால், அவர்கள் ஆரிய இனத்தைவிடத் தாழ்ந்தவர்கள் எனக் குறிப்பிட்டார். அவர்களுடைய கொள்கை யூதரின் சிற்றின்ப இச்சை, வன்முறை, தீவினைக்கு அஞ்சாமை, சுயநலம் ஆகிய இயல்புகளிலி இருந்து உருவானது என அவர் கூறினார். இவ்வாறான யூதருக்கு எதிரான ரெனானின் முற்சார்பு நிலைப்பாட்டை இசுட்டெயின்செனீதர் (Steinschneider) என்பவர் "செமிட்டிய எதிர்ப்பு மனச்சாய்வு" என்றார்.[13]


1879 இல், செமானியப் பத்திரிகையாளர் வில்லியம் மார் என்பவர், யூதாயிசத்தின் மீதான செருமனிசிசத்தின் வெற்றிக்கான வழி என்னும் துண்டுப் பிரசுரத்தில் செருமானியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையிலான போராட்டம் என்பது பற்றிப் பேசி இச்சொல்லின் அரசியல்மயப்படுத்தலைத் தொடங்கி வைத்தார். அவர் யூதர்களைத் தாராண்மைவாதிகள் என்றும், வேர் அற்றவர்கள் என்றும் அவர்கள் செருமானியர்களை மீட்க முடியாத அளவுக்கு யூதமயப் படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டினார். 1879 இல் மாரைப் பின்பற்றுபவர்கள் யூத எதிர்ப்பு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக "செமிட்டிய எதிர்ப்புக் குழு"[14] வை நிறுவினர்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=செமிட்டிய_மக்கள்&oldid=3357814" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை