ஜீன் பால் கெட்டி அருங்காட்சியகம்

ஜீன் பால் கெட்டி அருங்காட்சியகம் (J. Paul Getty Museum), பொதுவாக கெட்டி எனப்படும் ஓவியக் காட்சியகம், ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் பிரண்ட்வுட் பகுதியில் கெட்டி மையம் மற்றும் கெட்டி வில்லா எனும் இரு வளாகங்களில் செயல்படுகிறது. இதன் நிறுவனர் ஜீன் பால் கெட்டி ஆவார்.

ஜீன் பால் கெட்டி அருங்காட்சியகம்
ஜீன் பால் கெட்டி அருங்காட்சியகம் மற்றும் கெட்டி வில்லாவின் வான் காட்சி
Map
நிறுவப்பட்டது1974 (1974)
அமைவிடம்1200 கெட்டி மையம், லாஸ் ஏஞ்சலீஸ்; மற்றும் 17985 பசிபிக் கடற்கரை நெடுஞ்சாலை, லாஸ் ஏஞ்சலீஸ், கலிபோர்னியா
ஆள்கூற்று34°04′39″N 118°28′30″W / 34.07750°N 118.47500°W / 34.07750; -118.47500
வகைஓவியக் காட்சியகம்
வருனர்களின் எண்ணிக்கை2,023,467 (2016)[1]
இயக்குனர்திமோத்தி பாட்ஸ்
வலைத்தளம்www.getty.edu/museum/
கெட்டி அருங்காட்சியகத்தை ஆண்டிற்கு 1.08 மில்லியன் பார்வையிடுகின்றனர்.[2]

2016ல் மட்டும் கெட்டி அருங்காட்சியகத்தை இரண்டு மில்லியன் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.[1]

இவ்வருங்காட்சியகத்தில் மேற்குலகின் மத்திய காலம் முதல் தற்காலம் வரையிலான நெய்யோவியங்கள், கடிகாரங்கள் போன்றவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இவ்வருங்காட்சியகத்தின் கெட்டி வில்லா வளாகத்தில், பண்டைய கிரேக்கம், பண்டைய ரோம்மற்றும் பண்டைய எரித்திரியா நாடுகளின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[3]

வரலாறு

1974ல் ஜீன் பால் கெட்டி என்பவர் இவ்வருங்காட்சியகத்தை நிறுவினார்.[4] 1982ல் இவ்வருங்காட்சியகம் பார்வையாளர் கட்டணமாக 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாயாக ஈட்டியுள்ளது.[5] 1983ல் முந்தைய மேற்கு ஜெர்மனி நாட்டின் 144 மத்திய காலத்திய ஒளிரும் சித்திரங்களை, கெட்டி அருங்காட்சியகம் விலைக்கு வாங்கி வைத்தது.[6] 1997ல் இவ்வருங்காட்சியகம் தற்போதைய இடத்திற்கு மாற்றியது. கெட்டி அருங்காட்சியகம், ஊடாடும் மல்டிமீடியா தொழில்நுட்பங்களின் தொகுப்பானது, நிகழ்ச்சியைப் பற்றி பார்வையாளர்களுக்குத் தெரிவிக்கிறது.[7]

அருங்காட்சியகத்தின் முக்கிய கலைப்பொருட்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Getty Museum
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை