ஜூலி பெயெட்

கனடியன் கூட்டமைப்பின் 29 வது ஆளுநர் ஜெனரல்

ஜூலி பெயெட் (Julie Payette, பிறப்பு: அக்டோபர் 20, 1963) தற்போதைய கனடாவின் கவர்னர் ஜெனரலாவார். இவர் கனடியன் கூட்டமைப்பின் 29 வது ஆளுநர் ஜெனரல் ஆவார்..[2][3][4] ஜூலை 13, 2017 அன்று, பிரதம மந்திரி ஜஸ்டின் துரூடோ, இராணி ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் கனடாவின் அடுத்த கவர்னர் ஜெனரலாக பெயெட்டை நியமித்துள்ளதாக அறிவித்தார்.[2][3][5] 2017, அக்டோபர் 2 ஆம் நாள் பெயெட் கனடாவின் ஆளுநராகப் பதவியேற்றார்.[6] ஜூலி பெயெட், இப்பதவி வகிக்கும் நான்காவது பெண் மற்றும் ஆறாவது பிரெஞ்சு மொழிபேசும் பிராங்கோபோன் ஆவார்.

மேதகு, மாண்புமிகு
ஜூலி பெயெட்
Julie Payette in Ottawa in 2017
29 ஆவது கனடாவின் கவர்னல் ஜெனரல்
பதவியில் உள்ளார்
பதவியில்
அக்டோபர் 2, 2017
ஆட்சியாளர்ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
பிரதமர்ஜஸ்டின் துரூடோ
முன்னையவர்திராவிட் ஜான்ஸ்டன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 20, 1963 (1963-10-20) (அகவை 60)
மொண்ட்ரியால், கியூபெக், கனடா
துணைவர்(s)பிராங்கோயில்ஸ் பிரிஸெட்(திருமண முறிவு 1999)
வில்லியம் பிலின் (திருமண முறிவு.2015)
பிள்ளைகள்1 மகன் (aged 20)[1]
வாழிடம்ரெடோ ஹால்
கல்விமக்கில் பல்கலைக்கழகம் (BEng)
ரொறன்ரோ பல்கலைக்கழகம் (MASc)
ஜூலி பெயெட்
கனடிய விண்வெளி மையம்
விண்வெளிவீரர்
விண்வெளி நேரம்
25 நாட்கள் 11 மணிகள் 57 நிமிடங்கள்
தெரிவு1992 கனடிய விண்வெளிக் குழு
பயணங்கள்STS-96, STS-127
திட்டச் சின்னம்

பெயெட் ஒரு பொறியியலாளரும், வணிகரும், கனடிய வின்வெளி வீரரும் கனடிய வின்வெளி நிறுவனத்தின் முன்னாள் உறுப்பினராகவும் உள்ளார். எஸ்.டி.எஸ் -96 மற்றும் எஸ்.டி.எஸ்-127 ஆகிய இரண்டு விண்வெளி விமானங்களிலும் பெயெட் 25 நாட்களுக்கு மேலாக தங்கியிருந்துள்ளார். அவர் கனடிய விண்வெளி நிறுவனத்தின் (CSA) தலைமை விண்வெளி வீரராக பணியாற்றியுள்ளார், மேலும் ஹூஸ்டனில் உள்ள நாசாவின் குழுக் கட்டுப்பாட்டு மையத்தில் விமானக் கட்டுப்பாட்டாளராகவும் பணியாற்றியுள்ளார்.

2013, ஜூலை மாதம் மொண்ட்ரியால் அறிவியல் மையத்திற்கு தலைமை நிர்வாக அதிகாரியாக பெயெட் நியமிக்கப்பட்டார்.ஏப்ரல் 2014 இல், அவர் கனடா தேசிய வங்கியின் இயக்குநர்கள் குழுவில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.[7]

கல்வியும் தொடக்க காலப் பணிகளும்

1963 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி , கியூபெக்கில் உள்ள மொண்ட்ரியால் எனுமிடத்தில் பெயெட் பிறந்தார்.[8] அன்குன்சிக் , மவுண்ட்-செயிண்ட்-லூயிஸ் கல்லூரியிலும், ரெஜினா அசூம்ப்டா கல்லூரியிலும் தனது உயர்கல்வியைப் பெற்றார்.[9][10] 1982 ஆம் ஆண்டில் அவர் பிரித்தானியாவின் சவுத் வேல்சில் உள்ள அட்லாண்டிக் கல்லூரியில் சர்வதேச இளங்கலைப் பட்டயப் படிப்பை முடித்தார்.[11]

தனது இளங்கலைக் கல்விக்காக மக்கில் பல்கலைக் கழகத்தில் பெயெட் சேர்ந்தார். அங்கு 1986 ஆம் ஆண்டில் அவர் மின்னணுப் பொறியியலில் இளங்கலைப் பொறியியல் பட்டம்பெற்றார். 1990 ஆம் ஆண்டு டொராண்டோ பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியல் துறையில் பயன்பாட்டு அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அவரது ஆய்வானது, மொழியியல் நுண்ணறிவு, செயற்கை நுண்ணறிவு ஆகிய துறையில் கவனம் செலுத்தியது.[9][12][13] அவர் 55,000 உறுப்பினர்கள் கொண்ட கியூபெக் பொறியாளர் அமைப்பின் உறுப்பினராக உள்ளார் [14]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜூலி_பெயெட்&oldid=3687587" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை