ஜோசப் எஸ்திராடா

ஜோசப் "எராப் " எஜெர்சிடோ எஸ்திராடா (Joseph Erap Ejercito Estrada, பிறப்பு: ஒசே மார்செலோ எஜெர்சிடோ; ஏப்ரல் 19, 1937) பிலிப்பினோ அரசியல்வாதியும் 1998 முதல் 2001 வரை பிலிப்பீன்சின் 13வது குடியரசுத் தலைவராக இருந்தவரும் ஆவார். 2013 முதல் நாட்டின் தலைநகரமான மணிலாவின் நகரத்தந்தையாக உள்ளார்.[1]

மாண்புமிகு
ஜோசப் எஜெர்சிடோ எஸ்திராடா
13வது பிலிப்பீனியக் குடியரசுத் தலைவர்
பதவியில்
சூன் 30, 1998 – சனவரி 20, 2001
Vice Presidentகுளோரியா மகபகல்-அர்ரொயோ
முன்னையவர்பிடெல் வி. ராமோசு
பின்னவர்குளோரியா மகபகல்-அர்ரொயோ
மணிலா மேயர்
பதவியில் உள்ளார்
பதவியில்
சூன் 30, 2013
துணை மேயர்பிரான்சிஸ்கோ டோமகோசோ
முன்னையவர்ஆல்பிரடோ லிம்
11வது பிலிப்பீனிய துணைக் குடியரசுத் தலைவர்
பதவியில்
சூன் 30, 1992 – சூன் 30, 1998
குடியரசுத் தலைவர்பிடெல் வி. ராமோசு
முன்னையவர்சால்வடோர் லாரெல்
பின்னவர்குளோரியா மகபகல்-அர்ரொயோ
குடியரசுத் தலைவரின் குற்றத்தடுப்பு குழுத் தலைவர்
பதவியில்
1992–1997
குடியரசுத் தலைவர்பிடெல் வி. ராமோசு
பிலிப்பீனிய மேலவை உறுப்பினர்
பதவியில்
சூன் 30, 1987 – சூன் 30, 1992
சான் யுவான், மெட்ரோ மணிலா மேயர்
பதவியில்
திசம்பர் 30, 1969 – மார்ச்சு 26, 1986
முன்னையவர்பிரவுலியோ இசுடோ. டோமிங்கோ
பின்னவர்ரெய்னால்டோ சான் பாசுகுவல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஒசே மார்செலோ எஜெர்சிடோ

ஏப்ரல் 19, 1937 (1937-04-19) (அகவை 87)
டோன்டொ, மணிலா, பிலிப்பீன்சு பொதுநலவாயம்
அரசியல் கட்சிபிஎம்பி (1991–நடப்பு)
பிற அரசியல்
தொடர்புகள்
நேசனலிஸ்டா கட்சி (1969–1987)
லிபரல் கட்சி (1987–1991)
ஐக்கிய தேசியக் கூட்டணி (2012-நடப்பு)
துணைவர்லோயி எஸ்திராடா லார்னி என்ரிக்சு
பிள்ளைகள்ஜிங்கோய்
ஜாக்கி
ஜோசப் விக்டர்
முன்னாள் கல்லூரிமபுவா தொழினுட்பக் கழகம் (முடிக்காது வெளியேறல்)
வேலைநடிகர்
தொழில்தொழிலதிபர்
கையெழுத்து
இணையத்தளம்அலுவல் வலைத்தளம்

எஸ்திராடா முப்பதாண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட திரைபடங்களில் நடித்துள்ள புகழ்பெற்ற நடிகர் ஆவார். தமது திரைத்துறைப் புகழைக் கொண்டு அரசியலில் ஏற்றம் பெற்றார்; சான் யுவான் நகரத்தந்தையாக 16 ஆண்டுகள் பணியாற்றினார். ஐந்தாண்டுகள் மேலவை உறுப்பினராகவும் பின்னர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்துள்ளார்.

1998 தேர்தலில் பெரும் வாக்கு வேறுபாட்டுடன் வெற்றி பெற்று சூன் 30, 1998 அன்று எஸ்திராடா குடியரசுத் தலைவரானார். 2000இல் மோரோ இசுலாமிக் விடுதலை முன்னணிக்கு எதிராக "இறுதிப் போர்" தொடுத்தார்; அதன் தலைமையகத்தையும் மற்ற முகாம்களையும் கைப்பற்றினார்.[2][3] இருப்பினும், ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு செனட்டினால் பழிச்சாட்டப்பட்டார்; 2001இல் செனட் நீதிபதிகள் இரண்டாம் உறையை திறக்க மறுத்தநிலையில் அரசுத்தரப்பு பழிச்சாட்டு மன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்து "மக்கள் அதிகாரம் 2" மூலம் வெளியேற்றப்பட்டார். அரசு உடன்பாடுகளின் இறையாண்மை உத்திரவாதங்களை நீக்கிய எஸ்திராடாவின் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட அரசியல், வணிக, இராணுவ, திருச்சபை மேற்குடிகள் எட்சா 2 [கு 1] கிளர்ச்சிகளை ஊக்கப்படுத்தினர்.[4][5] மணிலா இசுடாண்டர்டு இதழில் எமில் யுரடோ 1999இலேயே எஸ்திராடாவிற்கு எதிராக சதி இயக்கம் உருவாகி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.[6]

2007ஆம் ஆண்டில் $80 மில்லியன் கையாடியதாக சிறப்பு நீதிமன்றம் வாழ்நாள் சிறைத்தண்டனையுடன் தீர்ப்பு வழங்கியது. பின்னாளில் குடியரசுத் தலைவர் குளோரியா மகபகல்-அர்ரொயோ மன்னிப்பு வழங்கினார். 2010ஆம் ஆண்டில் மீண்டும் பிலிப்பீனியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட எஸ்திராடா பெனிக்னோ அக்கீனோ IIIவிற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் வந்து தோல்வியுற்றார்.

குறிப்புகள்

மேற்சான்றுகள்

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜோசப்_எஸ்திராடா&oldid=3453227" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை