டிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன்

டிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன் (Transformers: Revenge of the Fallen) என்பது 2009 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க அறிவியல் புதின திரைப்படமாகும். இந்த திரைப்படம் மைக்கேல் பே என்பவரால் இயக்கப்பட்டு, ஸ்டீவென் ஸ்பீல்பர்க் (Steven Spielberg) என்பவரால் தயாரிக்கப்பட்டது. இப்படம் டிரான்ஸ்ஃபார்மர் (2007) வரிசையின் பின்‌தொடர்ச்சியாகவும், நேரடி ஆக்‌ஷன் டிரான்ஸ்ஃபார்மர் வரிசையின் இரண்டாவது படமாகவும் உள்ளது. கதையின் கரு ஆட்டோபாட்கள் (Autobots) மற்றும் டிசெப்டிகான்களுக்கு (Decepticons) இடையேயான யுத்தத்தில் நடுவே மாட்டிக் கொள்ளும் சாம் விட்விக்கியை (Sam Witwicky) (ஷியா லாபியாஃப்) சுற்றியே உள்ளது. கதையில் இவர் சைபர்டிரானியன் (Cybertronian) அடையாளங்களைக் குறித்து கனவுகள் பெற்று நெடுங்காலமாக கைப்பற்றப்பட்ட நிலையிலிருக்கும் த ஃபாலன் என்ற தலைவர் மூலமாக ஆணைகளைப் பெற்றுவரும் டெசப்டிகான்ஸ் மூலமாக வலைவிரித்து தேடப்பட்டு வருகிறார். த ஃபாலன் டிசெபடிகான்களுக்கு ஒரு எனர்கான் மூலத்தை அளிக்கும் ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்து செயல்படுத்துவதன் மூலம் பூமியின் மீது பழிவாங்க நாடுகிறார். இந்த முழு செயல்பாடுகளில் பூமியிலுள்ள அனைத்து உயிரினமும் அழியக்கூடிய வாய்ப்பிருக்கிறது.

டிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன்
Transformers: Revenge of the Fallen
இயக்கம்மைக்கேல் பே
மூலக்கதைடிரான்ஸ்ஃபார்மஸ்
படைத்தவர் ஹாசுபுரோ
இசைசுடீவ் ஜப்லொன்ஸ்கி
நடிப்பு
ஒளிப்பதிவுபென் செரெசின்
படத்தொகுப்புபால் ரூபெல்
கலையகம்
  • ஹாசுபுரோ
  • டி போனவென்ட்யூரா பிக்சர்ஸ்
விநியோகம்
வெளியீடுசூன் 8, 2009 (2009-06-08)(தோக்கியோ)
சூன் 24, 2009 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்150 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$200 மில்லியன்[2]
மொத்த வருவாய்$836.3 மில்லியன்[2]

அமெரிக்க இயக்குநர்கள் சங்கம் மற்றும் திரை நடிகர்கள் சங்கம் ஆகியவைகளின் சாத்தியமான வேலைநிறுத்தங்களால் காலக் கெடுக்கள் மோசமடையக் கூடிய நிலை வந்த போது, எழுத்தாளர்களான ரொபர்ட்டோ ஆர்சி, அலெக்ஸ் குர்ட்ஸ்மேன் மற்றும் தொடரில் புதிதாக சேர்ந்த எஹ்ரன் க்ரூகர் அவர்களின் திரைப்படிவம் (ஸ்கிரிப்ட்மெண்ட்) மற்றும் உருவககாட்சியமைத்தலின் உதவியோடு சரியான நேரத்தில் பே தயாரிப்பை முடித்தார். படப்பிடிப்பு 2008 ஆம் ஆண்டு மே முதல் 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை நடைபெற்றது.

டிரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரிவஞ்ச் ஆஃப் த ஃபாலன் விமர்சகர்களிடையே “பொதுவாக இருவேறு கருத்துகளிருந்து எதிர்மறையான” மறுஆய்வுகளைப் பெற்றிருந்தாலும் வசூலில் வெற்றிப்படமாகத் திகழ்ந்தது. அது புதன்கிழமை வெளியிடப்பட்ட திரைப்படங்களின் வரலாற்றில் அதிகமான வசூலை குவித்தது, வட அமெரிக்காவில் $62 மில்லியன் மற்றும் உலகம் முழுவதும் கிட்டத்திட்ட $100 மில்லியன்; இது தற்போது த டார்க் நைட்ஸின் $67.8 மில்லியனுக்கடுத்து' வரலாற்றியே முதல் நாளில் மிக அதிகமாக வசூல் செய்த படமுமாகும்.இது தற்போது உலகமுழுவதும் (ஹாரி பாட்டர் அண்ட் த ஹாஃப்-பிளட் பிரின்ஸ் மற்றும் Ice Age: Dawn of the Dinosaurs) மற்றும் 2009 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவில் மிகவும் அதிகமாக வசூல் செய்த படத்துக்கு அடுத்து 2009 ஆம் ஆண்டில் மூன்றாவதாக அதிகம் வசூல் செய்த படமாகும். ஒரே மாதத்திற்குள் இந்த படம், அதற்கு முன்வந்த படத்தின் ஒட்டுமொத்த வசூலை விஞ்சிவிட்டது. 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று அமெரிக்க ஒன்றியத்திலும் 2009 நவம்பர் 30 அன்று ஐக்கிய இராச்சியத்திலும் டிவிடி மற்றும் ப்ளு-ரே வடிவில் வெளியிடப்பட்டது.

கதைக்கரு

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு டிரான்ஸ்ஃபார்மர்கள் என்ற ஒரு பழமையான இனம் எனர்கான் மூலங்களை அண்டம் முழுவதும் தேடிக்கொண்டிருந்தது வெளியாகிறது. த டைனஸ்டி ஆஃப் பிரைம்ஸ் (Dynasty of Primes) என்றழைக்கப்பட்ட அவர்கள் நட்சத்திரங்களை சக்தியிழக்க செய்து அவைகளை எனர்கானாக்கி சைபர்டிரானின் ஆல்ஸ்பார்க்கிற்கு சக்தியளிக்க சன் ஹார்வெஸ்டர்ஸ் என்ற இயந்திரங்களை பயன்படுத்தினார்கள். உயிர்கள் வாழும் உலகத்தை விட்டு விடுவதாக பிரைம்ஸ் ஒத்துக் கொண்டிருந்தனர். ஆனால் 17,000 கி.முவில் “த ஃபாலன்” என்று பட்டபெயரிடப்பட்ட, ஒரு சகோதரர் பூமிக்கு ஒரு சன் ஹார்வஸ்டரை உண்டாக்கினார். மீதமுள்ள சகோதரர்கள் சன் ஹார்வஸ்டரை முடுக்கிவிடும் மேட்ரிக்ஸ் ஆஃப் லீடர்ஷிப் என்ற சாவியை - பூமியைப் பழிவாங்குவதை உறுதியாகக் கொண்டிருந்த த ஃபாலன் -இடமிருந்து ஒளித்து வைப்பதற்காக தங்கள் உறுப்புகளை தியாகம் செய்தனர்.

இன்றைய நாளில் முந்தைய படத்தின் நிகழ்வுகள் முடிந்து இரண்டு வருடங்களுக்குப் பின்பு டிமஸ் பிரைம், பூமியில் மீதமிருக்கிற டிசெப்டினான்களைக் கொல்ல தன்னுடைய சொந்த ஆட்டோபாட்கள் அணி (ஆர்சி (Arcee), கிரோமியா (Chromia), எலிடா ஒன் (Elita One), சைட்ஸ்வைப் (Sideswipe), ஜோல்ட் (Jolt) மற்றும் ஸ்கிட்ஸ் (Skids), மட்ஃபிளாப் (Mudflap) என்ற இரட்டையர்கள் ஆகிய புது முகங்கள் உட்பட) மற்றும் மனித துருப்புகள் அடங்கிய NEST என்ற ஒரு இராணுவ நிர்வாகத்தை தலைமை தாங்குவதாக தெரிகிறது. ஷாங்காயில் ஒரு தூதுப்பணியிலிருக்கும் போது ஆப்டிமஸும் (Optimus) அவனுடைய குழுவினரும் டிசெப்டிகான்களின் சைட்வேஸையும் “த ஃபாலன் மறுபடியும் எழுந்திருப்பான்” என்ற எச்சரிக்கையை டெமாலிஷரிடமிருந்து பெற்று அவனையும் அழிக்கின்றனர். இங்கே அமெரிக்காவில் சாம் விட்விக்கி அழிக்கப்பட்ட ஆல்ஸ்பார்க்கின் ஒரு குச்சியைக் கண்டுபிடிக்கிறார். அதை தொடும் போதும் அந்த குச்சி அவருடைய மூளையை சைபர்டிரானியன் (Cybertronian) அடையாளங்களால் நிரப்புகிறது. அது அபாயமானதென்று கருதி சாம் அந்த ஆல்ஸ்பார்க் குச்சியை அவருடைய பெண் தோழி மிகேலா பேன்ஸிடம் (Mikaela Banes) பத்திரமாக வைத்துக் கொள்ள கொடுத்து அவளையும் பம்பல்பீயையும் விட்டு விட்டு கல்லூரிக்கு செல்கிறார். அங்கு வந்த போது சாம் ஒரு வேற்றுலக சூழ்ச்சி இணையத்தளம் நடத்தும் தன்னுடைய கல்லூரி அறைத் தோழரான (ரூம்-மேட்) லியோ ஸ்பிட்ஸையும், தன்னோடு பாலியல் தொடர்பு வைத்துக் கொள்ள முனையும் ஆலிஸ் என்ற பெண்மணியையும் சந்திக்கிறார். இப்புறம் வீட்டில் டிசெப்டிகான் வீலீ சில்லை (சார்டு) திருட முயல்கிறான், ஆனால் மிகேலா மூலமாக கைப்பற்றப்படுகிறான். தன்னையே கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சைபர்டிரானியன் மொழியில் எழுதிக் கொண்டிருந்ததால் மனதளவில் தொய்ந்து போன சாம் மிகேலாவை அழைக்கிறார். அவள் உடனே கிளம்புகிறாள்.

டிசெப்டிகான் ஒலிஅலை ஒரு அமெரிக்க செயற்கைக்கோளில் அத்து மீறி புகுந்து இறந்து போன டிசெப்டிகான் தலைவர் மெகாடரான் மற்றும் ஆல்ஸ்பார்க்கின் மற்றொரு துண்டின் இடங்களைக் கண்டுபிடிக்கிறது. டிசெப்டிகான்கள் அந்த சில்லை மீட்டெடுத்து அதை வைத்து மெகட்ரானை மறுபடியும் உயிருடன் கொண்டு வருகின்றனர். மெகட்ரான் விண்வெளிக்கு பறந்து ஸ்டார்ஸ்கிரீமுடனும் (Starscream) அதனுடைய தலைவனான த ஃபாலன் இன் த நெமிஸிஸுடனும் சேர்ந்து கொள்கிறார். மேட்ரிக்ஸ் ஆஃப் லீடர்ஷிப்பின் (Matrix of ஈயம்ership) இடத்தை த ஃபாலன் கண்டுபிடிப்பதற்காக சாமை கைப்பற்ற மெகட்ரானுக்கும் ஸ்டார்ஸ்கிரீனுக்கும் அறிவுறுத்துகிறார். சாமின் கிளர்ச்சிகள் மோசமடைய அடைய, மிகேலா அவர்கள் தங்குமிடத்திற்கு வருகிறார். அதே நேரத்தில், ஆலிஸ் டிசெப்டிகான் ஆளாக நடிக்கிறாளென்று புலப்படுகிறது. அவள் சாமை தாக்குகிறார். மிகேலா, சாம் மற்றும் அவனுடைய நண்பர் லியோ, ஆலிஸை அழித்துவிட்டு வெளியே கிளம்புகின்றனர். ஆனால் டிசெப்டிகான் கிரைண்டரால் கைப்பற்றப்படுகிறார்கள். “த டாக்டர்’ என்று அழைக்கப்படுகிற டிசெப்டிகான் சாமுடைய மூளையை எடுக்க தயாராகும்போது ஆப்டிமஸும் பம்பல்பீயும் அங்கு வந்து அவனை காப்பாற்றுகிறார்கள். அதிலிருந்து வரும் ஒரு சண்டையில் ஆப்டிமஸ் மெகட்ரான், கிரைண்டர் மற்றும் ஸ்டார்ஸ்கிரீனை ஈடுபடுத்துக்கிறான். ஆப்டிமஸ் கிரண்டரை கொன்று ஸ்டார்ஸ்கிரீமின் கையை வெட்டுவதில் வெற்றியடைகிறான். ஆனால் அவன் பின்னாலிருந்து தாக்கப்பட்டு பிறகு மெகட்ரானினால் நெஞ்சில் உருவக்குத்தப்பட்டு இறக்கிறான். ஆப்டிமஸை காப்பாற்ற முடியாத நிலையில் சாமை காப்பாற்ற ஆட்டோபாட் குழு வந்த போது மெகட்ரானும் ஸ்டார்ஸ்கிரீமும் அங்கிருந்து வெளியேறுகின்றனர்.

பிரைமின் இறப்புக்கு பின் த ஃபாலன் அவனுடைய சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறான். மெகாட்ரான் இந்த கிரகத்தின் மேல் ஒரு முழு மூச்சு தாக்குதலுக்கு ஆணையிடுகிறான். த ஃபாலன் உலகத்துடன் பேசி அவர்கள் சாமை டிசெப்டிகான்களிடம் ஒப்படைக்கவில்லை என்றால், அவர்களுடைய தாக்குதலை தொடரப்போவதாகக் கூறுகிறான். சாம், மிகேலா, லியோ, பம்பல்பீ மற்றும் வீலீ மறுபடியும் அணி திரள்கிறார்கள். லியோ தன்னுடைய இணையத்தள போட்டியாளரான “ரோபோவாரியர்” ஒரு நல்ல துணையாக இருப்பாரென்று ஆலோசனை வழங்குகிறார். “ரோபோவாரியர்” (RoboWarrior)என்பவர் முன்னாள் செக்டர் 7 பணியாளர் என்று தெரியவருகிறது. அந்த அடையாளங்களை ஒரு டிசெப்டிகானால் படிக்கமுடியும் என்று குழுவிற்கு தெரிவிக்கிறார். மிகேலா பிறகு வீலியை வெளிவிடுகிறார். வீலியால் அந்த மொழியை படிக்க முடியவில்லை. ஆனால் அது பிரைம்ஸுடைய மொழியென்று கண்டறிந்து ஜெட்ஃபையர் என்ற ஒரு டிசெப்டிகான் நாடியிடம் (சீக்கர்) குழுவை நேர்முகப்படுத்துகிறார். பிறகு அவர்கள் எஃப்.உட்வார்-ஹேசி மையத்தில் ஜெட்ஃபையரை கண்டுபிடித்து ஆல்ஸ்பார்க்கின் ஒரு சில்லை கொண்டு அதை மறு செயல்படுத்துகின்றனர். குழுவை இஜிப்டிற்கு தொலை அறிக்கை செய்தபின் த ஃபாலனை ஒரு பிரைம் மட்டுமே கொல்ல முடியுமென்று ஜெட்ஃபையர் விளக்கி அடையாளங்களை மொழிப்பெயர்க்கிறார். அந்த அடையாளங்கள் மேட்ரிக்ஸ் ஆஃப் லீடர்ஷிப்பின் அருகாமையிலுள்ள ஒரு வனாந்தரத்திலிருப்பதாக ஒரு புதிரை வெளியாக்குகிறது. அந்த துப்புகளை வைத்துக் கொண்டு குழு கல்லறைக்கு வருகிறது. அங்கு ஒரு வழியாக மேட்ரிக்ஸை கண்டுபிடிக்கிறார்கள். ஆனால் அது சாமுடைய கைகளில் நொறுங்கிவிடுகிறது. மேட்ரிக்ஸால் இன்னமும் ஆப்டிமஸை மறு உயிரளிக்க முடியுமென்று நம்பி சாம் அந்த மனலை கையில் அள்ளிக் கொண்டு சிமன்ஸ் மேஜர் வில்லியம் லெனாக்ஸை அழைக்கவும் மற்ற ஆட்டோபாட்களையும் ஆப்டிமஸின் உடலையும் கொண்டு வரவும் சொல்லும்படி அறிவுறுத்துகிறார்.

ஆட்டோபாட்களுடன் இராணுவம் வருகிறது. ஆனால் அதே வேளையில் டிசெப்டிகான்களும் வந்து சேருகின்றனர் யுத்தம் துவங்குகிறது. அந்த சண்டையின் போது டிசெப்டிகான் டிவாஸ்டேடர் உருவாக்கப்பட்டு பிரமிடுகள் ஒன்றிலிருந்து அது சன் ஹார்வஸ்டரை தோண்டி எடுக்கின்றது. ஆனால் அது ஏஜெண்ட் சிமன்ஸின் உதவியால் அமெரிக்க இராணுவத்தினால் அழிக்கப்படுகிறது. ஜெட்ஃபையர் வந்து மிக்ஸ்மாஸ்டரை அழிக்கிறது. ஆனால் அது ஸ்கார்பொனோக் மூலமாக சாகக்கிடக்க காயப்படுத்தப்படுகிறது. விமானப்படை டிசெப்டிகான்களை குண்டு மழையிடுகிறது (கார்பெட் பாம்) ஆனால் அந்த தாக்குதலிலிருந்து மெகட்ரான் தப்பித்து சாமை அழித்து விடுகிறான். ஒரு கனவில் சாம் மற்ற பிரைம்களை சந்திக்கிறார். அதில் அவர்கள் மேட்ரிக்ஸ் ஆஃப் லீடர்ஷிப் கண்டுபிடிக்கப்படுவதில்லை சாம் செய்தது போல சம்பாதிக்கப்படுகிறது என்று கூறுகின்றனர். அவர்கள் சாமிற்கு பிரைம்களின் கடைசி வம்சத்தாரான ஆப்டிமஸ் மேலிருந்த பக்தியை அங்கிகரிக்கின்றனர். மேலும் ஆப்டிமஸை மறுபடியும் உயிருக்கு கொண்டுவருவதற்கு முன் மேட்ரிக்ஸை ஆப்டிமஸுடைய பொறியுடன் சேர்க்க அறிவுறுத்துகின்றனர். மேட்ரிக்ஸ மணல் தூசியிலிருந்து மறுபடியும் ஒன்று சேர்க்கப்பட்டு சாம் அதை உபயோகித்து ஆப்டிமஸை உயிருக்கு கொண்டுவர முயல்கிறார். அப்போது த ஃபாலன் வந்து மேட்ரிக்ஸை திருடி டிசெப்டிகான் டிவாஸ்டேடர் மூலமாக வெளிக்கொணரப்பட்ட சன் ஹார்வெஸ்டரை செயல்படுத்தி ஆட்டோபாட் அணியை மேற்கொள்கிறான். அவனுடைய கடைசி சில நிமிடங்களில் ஜெட்ஃபையர் தன்னுடைய பாகங்களையும் பொறியையும் ஆப்டிமஸிடம் தன்னிச்சையாக அளிக்கிறான். அதிகரித்த ஆற்றல்களுடன் ஆப்டிமஸ் சன் ஹார்வெஸ்டரை அழித்து மெகாட்ரானையும் த ஃபாலனையும் எதிர்கொண்டு த ஃபாலனை கொல்கிறான். பின்பு சாம் மிகேலாவின் அன்பிற்கு பதிலளிக்கிறார், அப்போது மெகாட்ரானும் ஸ்டார்ஸ்கிரீமும் பின்வாங்கி யுத்தம் முடிவடையவில்லையென்று உறுதிமொழிகின்றனர்.

மனிதர்களும் டிரான்ஸ்ஃபார்மர்களும் ஒரு பொதுவான கடந்த காலத்தை பகிர்ந்து கொள்கிறார்கள் என்ற செய்தியை ஆப்டிமஸ் வின்வெளியில் அனுப்புவதோடு படம் முடிவடைகிறது.

இறுதியில் பெயர்கள் போடப்படும்போது சாம் கல்லூரிக்கு திரும்புகிறார்.

கதாப்பாத்திரங்கள்

  • சாம் விட்விக்கி (Sam Witwicky) ஆக ஷியா லாபிஹப் நடித்துள்ளார்.
  • சாமின் காதலியாக மீகேலா பேன்ஸ் என்ற பெயரில் மெகன் பாக்ஸ் (Megan Fox) நடித்துள்ளார்.
  • மேஜர் வில்லியம் லினாக்ஸாக, ஜோஷ் டுஹாமெல் (Josh Duhamel) நடிக்கிறார்.
  • டைரஸ் கிப்சன், ராபர்ட் எப்ஸ் (Robert Epps) பாத்திரத்தில் நடித்துள்ளார்.
  • சாமின் கல்லுரி விடுதி அறையில் அவனுடன் ஒன்றாக வசிக்கும் நண்பன் லியோ சிபிட்ஸ் பாத்திரத்தில் ரேமன் ராடிரிகெஸ் (Ramón Rodríguez)நடித்துள்ளார்.
  • பூமியில் டிரான்ஸ்ஃபாமர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பு செய்த துறையின் ஏழாவது பிரிவின் முன்னாள் ஏஜண்டான செய்மர் சைமன்ஸ்சாக, ஜான் டர்ட்ரோ (John Turturro) நடித்துள்ளார்.[3]
  • கெவின் டன் மற்றும் ஜூலி வைட் சாமுடைய பெற்றோரான ரான் மற்றும் ஜூடி விட்விக்கியாக நடிக்கிறார்கள்.[4]
  • ஜான் பெஞ்சமின் ஹிக்கி அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான, தியோடர் காலொவேயாக நடிக்கிறார்.
  • கிளென் மார்ஷொவர் N.E.S.T. யின் தலைவரான ஜெனரல் மார்ஷொவராக நடிக்கிறார்.
  • மேத்யு மார்ஸ்டன் (Matthew Marsden) கிராஹாமின் பாத்திரத்தை நடிக்கிறார்.
  • ரெயின் வில்சன் சாமுடைய ஒழுக்கங்கெட்ட பேராசிரியர் ஆர்.ஏ. கோலனாக நடிக்கிறார்.[5][6]

குரல் நடிகர்கள்

ஆட்டோபாட்கள்

  • பீட்டர் கல்லன் ஆட்டோபாட்டின் தலைவரான ஆப்டிமஸ் பிரைமுக்கு குரல் கொடுக்கிறார்.
  • மார்க் ரையன் சாமுக்கு நண்பனாகி தன்னை தன்னுடைய ஐந்தாவது வாரிசான ஷெவ்ரலெ கமாரோவாக உறுமாற்றிக்கொள்ளும் ஆட்டோபாட்டான பம்பல்பீ. மார்க் ரையன் ஒரு SR-71 பிளாக்பர்டாக உருமாறும் ஒரு சீக்கர் மற்றும் முன்னாள் டிசெப்டிகானான, ஜெட்ஃபையருக்கும் குரல் கொடுக்கிறார்.
  • ரெனோ வில்சனும், டாம் கென்னியும் இரட்டையர்களென்று அழைக்கப்படுகின்ற மட்ஃபிளாப் மற்றும் ஸ்கிட்ஸுக்கு குரல் கொடுக்கிறார்கள்.
  • ஜெஸ் ஹார்னெல், ஒரு GMC டாப்கிக்காக உருமாறு ஆட்டோபாட்கள் ஆயுத வல்லுநரான, ஐயன்ஹைடுக்கு குரல் கொடுக்கிறார்.[7]
  • ராபர்ட் பாக்ஸ்வர்த் ஒரு தேடல் மற்றும் மீட்பு ஹம்மராக H2 உருமாறும் ஆட்டொபாட் மருத்துவரான ராட்செட்டுக்கு குரல் கொடுக்கிறார்.[7]
  • கிரே டெலைல் இரண்டு சகோதரிகளுக்கு மற்றும் மோட்டர் சைக்கிள்களாக உருமாறும் மூன்று பெண் டிரான்ஸ்ஃபார்மர்களுக்கு குரல் கொடுக்கிறார். படத்தின் பிற்பகுதியில் இது கைவிடப்பட்டாலும் மூன்று மோட்டர் சைக்கிள்களும் முதலில் ஒரே சுயநினைவைக் கொண்டு ஓட்டப்படுவதாகவும் ஒரே ரோபோவாக இணையக்கூடிய ஆற்றல் உள்ளவைகளாகவும் இருந்தன.[8] இந்த ஆற்றல் இந்த படத்தின் புதின (நாவல்) வடிவத்தில் இன்னமும் காணப்படுகிறது.[9] அதிகாரப்பூர்வமனான பொம்மை வரிசையில் தனித்தனி பெயர்கள் அளிக்கப்பட்டிருந்தாலும் சகோதரிகள் ஒன்றாக படத்தில் “ஆர்ஸி” என்றே அழைக்கப்படுகின்றன. மேலும் டெலைல் “ஆர்ஸி”க்கு குரல் கொடுப்பதாகவே படப்பெயர் பட்டியல் கூறுகிறது.
    மூன்று சகோதரிகள் பெயர்கள்:
    • பொம்மை வரிசையில் ஆர்ஸி என்றழைக்கப்படும் ஒரு இளஞ்சிவப்பு ட்யுகாட்டி 848.[10]
    • பொம்மை வரிசையில் கிரோமியா என்று அழைக்கப்படும் ஒரு நீள சுசூக்கி பி-கிங்க் 2008.[10]
    • பொம்மை வரிசையில் எலிடா ஒன் என்றழைக்கப்படும் ஒரு ஊதா நிற MV அகஸ்டா F4 R312[11].[12] ஏதோ ஒரு நிலையில் அவள் ஃப்ளேர்அப் என்று அழைக்கப்பட இருந்தாள்.[13]
மூன்று மோட்டர் சைக்கிள்களும் ஸ்போர்ட்ஸ்பைக் தனிப்பயனாக்கி வடிவமைப்பாளர் ரெட்ரோSBK -வினால் தனிப்பயனாக்கப்பட்ட அம்சங்களை சித்தரிக்கின்றன.[14]
ஆர்ஸி முதலில் 2007 ஆம் ஆண்டு படத்தில் ஒரே மோட்டர் சைக்கிளிலிருந்து ரோபோவாக உருமாறுவதாக இருந்தது. ஆனால் மற்ற படங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறியதாக இருப்பதாக எண்ணங்கள் இருந்ததால் இது கைவிடப்பட்டது.[15] மேலும் 2007 ஆம் ஆண்டு படத்தின் பொம்மை வரிசையிலும் உடனிணைந்த வண்ணத்தொடர்களிலும் அவளும் மற்ற பெண் டிரான்ஸ்ஃபார்மர்களும் காட்சியளித்தாலும் அவளுடைய பாலினத்தை விவரிக்க சமயம் போதாதலும் 2007 ஆம் ஆண்டு படத்திலிருந்து கைவிடப்பட்டதாக எழுத்தாளர்கள் கூறினர்.[16] ரோபோவின் பாலினத்தை விவரிக்க வேண்டுமா வேண்டாமா என்பதில் எழுத்தாளர்கள் உறுதியற்று இருந்ததார்கள். படப்பிடிப்பு முடிந்த நிலையிலும் இது முடிவெடுக்காத நிலையிலிருந்தது. இறுதியில் இந்த பிரச்சனை முடிவடைந்த-படத்தில் தீர்க்கப்படாமலே காணப்பட்டது.[17] எரின் நாஸ் ஆர்ஸி ஓட்டும் ஹாலோகிராம்களின் பாத்திரத்தை நடிக்கிறார்.[18]
  • ஆண்டரே சொக்ளியோசோ, வெள்ளிநிற ஷெவ்ரலெ கார்வெ ஸ்டின்கிரே (Chevrolet Corvette Stingra) கதாபாத்திரமான சைட்ஸ்வைப்பிற்கு குரல்கொடுக்கிறார். அவனுடைய கரங்களில் ஒரு வெளியே எடுக்கக்கூடிய வாள்-போன்ற பிளேடுகள் காணப்படுகின்றன. அவன் 2007 ஆம் ஆண்டு படத்தில் போன்கிரஷ்ஷர் நடமாடினது போலவே ஸ்கேட்டிங்க் செய்தே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு போகிறான். இதை உருவாக்குவதற்கான யோசனையை அதன் வடிவமைப்பவர்கள் ரோலர் டெர்பி விளையாட்டு வீர்ர்களை பார்த்து பெற்றுக்கொண்டனர்.[19] சைட்ஸ்வைப் ஒரு G1-ஆக இருந்ததால் முதலில் ஒரு லாம்பார்கினியாக எழுதப்பட்டது ஆனால் பே இறுதியில் அதை ஸ்டின்கிரே-ஆக்க முடிவு செய்தார்.[20]
  • ஜோல்ட், அவனுடைய மின்னியங்கி கார் மாதிரிக்கு ஏற்றார் போல் ஒரு ஜோடி மின்னியங்கி சவுக்குகள் கொண்ட ஒரு நீள ஷெவ்ரலெ வோல்ட் ஆகும்.[21] படத்தின் கார் வழங்குனரான ஜெனரல் மோட்டார்ஸ், வோல்ட்டை விளம்பரப்படுத்த விரும்பியதால் அவன் கதாபாத்திரங்களில் இறுதியாக சேர்க்கப்பட்டான்.[22] ஏற்கனவே எழுத்தாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்திற்கு முன் எழுத்தாளர்கள் ஒரு காரை சேர்க்க விரும்பியிருந்தனர். ஆகவே பிற்பாடு ஆட்டோபாட் அணியில் நன்றாக பொருந்தக்கூடிய ஒரு பாத்திரத்தை அவர்கள் உருவாக்கி பே அதை சேர்க்க அங்கீகரிக்க வலியுறுத்த அவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது.[23] காருடைய வடிவமைப்பு “குணாதிசயத்தை” பிரதிபலிக்கும் வகையில் வோல்ட்டுடைய பாத்திரம் படமெடுப்பவர்களால் ஜோல்ட் என்று பெயரிடப்பட்டதைக் குறித்து வெல்பர்ன் மகிழ்ச்சித் தெரிவித்திருந்தார்.[24]
  • மைக்கெல் யார்க், கெவின் மைக்கெல் ரிச்சர்ட்சன் மற்றும் ராபின் அட்கின் டௌனீ, த டைனஸ்டி ஆஃப் பிரைம்ஸின் (Dynasty of Primes) மூன்று அங்கத்தினர்கள் மற்றும் த ஃபாலன் முன்பொரு காலத்தில் அங்கத்தினராக இருந்த ஏழு அசல் டிரான்ஸ்ஃபார்மர்களுக்கும் குரல் கொடுக்கின்றனர்.

டிசப்டிகான்கள்

  • ஹுகோ வீவிங் என்பவர் டிசெப்டிகானின் தலைவனான மெகட்ரானுக்கு பின்னணி குரல் கொடுக்கிறார்.[25]
  • டோனி டாட் டைனஸ்டி ஆஃப் பிரைம்களின் ஒரு அங்கத்தினரும் மெகட்ரானின் தலைவனுமான த ஃபாலனுக்கு குரல் கொடுக்கிறார்.
  • சார்லி ஆட்லர் ஒரு F-22 ராப்டராக உருமாறும் விமான தளபதியான ஸ்டார்ஸ்கிரீமிற்கு குரல் கொடுக்கிறார்.
  • ஃபராங்க் வெல்க்கர் மெகாட்ரானின் தகவல் தொடர்பு நிபுணரான சவுண்ட்வேவிற்கு குரல் கொடுக்கிறார்.[26]
    • சவுண்ட்வேவின் அடியாளான ராவேஜ் ஒரு பெரிய ஒற்றை-கண் மலைச்சிங்கத்தைப் (பூமா) போல் காட்சியளித்தது.[16]
      • ஃப்ராங்க் வெல்ட்டர், ஒரு ஒற்றைக்கண் சவரகக்கத்தியளவு மெல்லிய ரோபோவான ரீட்மானுக்குக் குரல் கொடுக்கிறார்.
      • ஜான் டி கிராஸ்டா, த டாக்டருக்கு (பொம்மை வரிசையில் ஸ்கால்பெல் என்றழைக்கப்படுகிறது) குரல் கொடுக்கிறார்.[16][27]
  • இசபெல் லூகாஸ், ஆலிஸ் என்ற ஒரு ப்ரிடெண்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தில் கூறப்படாவிட்டாலும், புதினத்திலும் வண்ணத்தொடர்களிலும் அவளுடைய பூமி உருவத்தில், அவள் ஒரு இன்ப பூங்காவிலுள்ள ஆலிஸ் இன் வண்டர்லேண்ட் வடிவத்தின் நகலாக இருப்பதாக விவரிக்கின்றன.
  • டாம் கென்னி, ஒரு நீள வானொலி-இயக்கப்பட்ட பொம்மை இராட்சத டிரக்கான வீலிக்கு குரல் கொடுக்கிறார்.[28] திரைப்பட புதினத்தில் அவனுக்கு “வீல்ஸ்” என்று பெயர்.
  • கிரைண்டர் என்பது ஒரு CH-53E சூப்பர் ஸ்டால்லியான் ஹெலிகாப்டராக உருமாறும் ரோபோவாகும்.[29]
  • கட்டுமான வாகனங்களாக உருமாறும் டிசெப்டிகானின் ஒரு துணை-பிரிவு ரோபோக்களான த கன்ஸ்டிரக்டிகான்கள்.
    • கால்வின் விம்மர் டெமாலிஷருக்கு குரல் கொடுக்கிறார். Demolishor,[30] ஒரு வெள்ளை மற்றும் சிவப்பு டெரெக்ஸ் O&K RH 400 நீர்மயியல் சுரங்க அகழ்வியந்திரமாக உருமாறுகிறது.[31]
    • கெவின் மைக்கேல் ரிச்சர்ட்ஸன் ரேம்பேஜுக்கும் குரல் கொடுத்திருக்கிறார்.
    • ஸ்கிரேப்பர் ஒரு மஞ்சள் கேட்டர்பில்லர் 992G ஸ்கூப் லோடராக உருமாறுகிறான்.
    • ஃப்ராங்க் வெல்க்கர் டிவாஸ்டேட்டர் என்ற ஒரு 46 அடி உயரமான (சற்றே குணிந்த) பிராம்மாண்டமான ரோபோவுக்கு குரல் ஒலிகளை வழங்கினார். டிவாஸ்டேட்டராக உருப்பெறும் வாகனங்களாவன:
      • ஒரு கருப்பு மற்றும் வெள்ளிநிற மேக் கான்கிரீட் மிக்ஸர் டிரக் தலையாக இருக்கிறது. பொம்மை வரிசையில் இது மிக்ஸ்மாஸ்டர் என்று அழைக்கப்படுகிறது.
      • ஒரு சிவப்பு டெரெக்ஸ் ஓ&கே ஆர்.எச் 400 நீர்மயியல் சுரங்க அகழ்வியந்திரம் முண்டமாக இருக்கிறது. இது பொம்மை வரிசையில் ஸ்கேவஞ்சர் என்றழைக்கப்படுகிறது.
      • ஒரு மஞ்சள் கேட்டர்பில்லர் 992ஜி ஸ்கூப் லோடர் (மணல் அல்லது மற்ற பொருட்களை அள்ளிக்கொட்டும் இயந்திரம்) வலது கரமாக விளங்குகிறது. இது பொம்மை வரிசையில் ஸ்கிரேப்பர் என்று அழைக்கப்படுகிறது.
      • ஒரு மஞ்சள் கொபெல்கோ சி.கே2500 தவழும் பாரந்தூக்கி (கிரேன்) இடது கரமாகிறது. இது பொம்மை வரிசையில் ஹைடவர் என்று அழைக்கப்படுகிறது.
      • எம்930 என்ற வடிவ எண்ணைப் பெற்ற ஒரு மஞ்சள் டிராக் லோடர் வலது கையாகிறது. இது முதலில் கன்ஸ்டிரக்டிகான்கள் தரையிறங்குகிற பளுதூக்கி (ஃப்ரைட்டர்) விமானத்தில் காணப்படுகிறது.
      • ஒரு சிவப்பு கேட்டர்பில்லர் 773பி முனை டம்ப் டிரக் (பொருட்களை சரியத்தள்ளும் வண்டி)
      • ஒரு பச்சை கேட்டர்பில்லர் 773பி டம்ப் டிரக் வலது காலாக உருவெடுக்கிறது. இது பொம்மை வரிசையில் லாங்க் ஹால் என்றழைக்கப்படுகிறது.
      • ஒரு மஞ்சள் கேட்டர்பில்லர் டி9எல் புல்டோசர் இடது காலாகிறது. இது பொம்மை வரிசையில் ரேம்பேஜ் என்றழைக்கப்படுகிறது.
    • ஒரு பெயரிடப்படாத கன்ஸ்டிரக்டிகான் ஒரு ஸ்டான்லி யூபி 45எஸ்வி யுனிவெர்ஸல் பிராசஸெர் இணைப்புடன் ஒரு மஞ்சள் வால்வோ ஈசி700சி தவழும் அகழ்ப்பானாக மாறுவதைப் பார்க்கமுடிகிறது.
    • மெகட்ரானை மீட்பதற்கான மீட்புப் பணியில் ஒரு பெயரிடப்படாத (“பொடியன்” என்றழைக்கப்படுகிறது) கன்ஸ்டிரக்டிகான்.
  • ஆட்டோபாட்களால் கண்டுபிடிக்கும் வரை சீனாவின் சாங்காய் டெமாலிஷருடன் ஒளிந்து கொண்டிருக்கும் ஒரு வெள்ளிநிற ஆடி ஆர்8 ஆன சைட்வேஸ்.[32]
  • ஸ்கார்பொனா என்ற இராட்சத ரோபோ தேள்.
  • எகிப்திலுள்ள ஒரு யுத்தத்தில் போன்கிரஷ்ஷரைப் போலவே காணப்படும் ஒரு டிசெப்டிகான் காணமுடிகிறது.
  • படத்தில் பூமி உருவங்களில்லாத மற்ற பெயரிடப்படாத டிசெப்டிகான்கள் இன்செக்டிகான்கள் மற்றும் ஆல்ஸ்பார்க்கின் சில்லினால் சாமுடைய சமையலறையில் உயிரடையும் சில சமையல் கருவைகள் உட்பட மற்ற சிறிய ரோபோக்களும் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன.

தயாரிப்பு

உருவாக்கம்

2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாராமௌண்ட் டிரான்ஸ்ஃபார்மர்ஸ்க்கான பின் தொடர்ச்சி ஜூன் 2009ன் இறுதியில் வெளியிடப்படும் என்று கூறினர்.[33] படத்தின் தயாரிப்பின் போது 2007-2008 அமெரிக்க எழுத்தாளர்கள் சங்கத்தின் வேலைநிறுத்தம் மற்றும் அமெரிக்க இயக்குநர்கள் சங்கம் மற்றும் திரை நடிகர்கள் சங்கத்தின் சாத்தியமான வேலை நிறுத்தங்கள் ஆகியவை இந்த படம் மேற்கொண்ட தடைகற்களாகும்.

2007 ஆம் ஆண்டு படத்திற்காக நிராகரிக்கப்பட்ட கதாபாத்திரங்களை சித்தரித்து பே சண்டை காட்சிகளின் அசைவுபடங்களை உண்டாக்கிக் கொண்டிருந்தார். 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்க இயக்குநர்கள் சங்கம் வேலைநிறுத்த்ததில் சென்றிருந்தால் தொடர்களை அனிமேஷன் வல்லுநர்கள் முடித்திருக்க முடியும். ஆனால் இந்த வேலை நிறுத்தம் இறுதியில் நடைபெறவேயில்லை.[34][35] அமெரிக்க இயக்குநர்கள் சங்கம் 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வேலை நிறுத்தத்தில் சென்றிருந்தால் டிரான்ஸ்ஃபார்மர்ஸ்க்கும் அதன் பின் தொடர்ச்சிக்கும் இடையே ஒரு சிறிய பணித்திட்டத்தை (பிராஜெக்ட்) செய்ய இயக்குநர் திட்டமிட்டிருந்தார். “குழந்தை உங்களிடம் இருக்கிறது அதை வேறு யாரும் எடுத்துக் கொள்ள நீங்கள் விரும்பமாட்டீர்கள்” என்பது அவருக்குத் தெரிந்திருந்தது.[36] படத்திற்கு டாலர்200 மில்லியன் பட்ஜெட் வழங்கப்பட்டது. இது 2007 ஆம் ஆண்டு படத்தைவிட டாலர்50 மில்லியன் அதிகமாகும்.[37] மேலும் அசலில் நிராகரிக்கப்பட்ட சில சண்டை காட்சிகள் பின் தொடர்ச்சியில் எழுதப்பட்டன. அதில் ஆப்டிமஸ் படத்தில் மறுபடியும் அறிமுகப்படுத்தப்படுவது ஒன்றாகும்.[38] இரண்டு பின் தொடர்ச்சிகளை ஒரே நேரத்தில் படமெடுக்க ஸ்டூடியோ முன்மொழிந்தது என்று லொரன்ஸோ டி பொனவெண்ட்சுரா கூறினார். ஆனால் அவரும் பேயும் இந்த தொடருக்கு அது ஏற்ற திசை கிடையாதென்று ஒத்துக்கொண்டனர்.[39]

எழுத்தாளர்கள் ரொபர்ட்டோ ஆர்சியும் அலெக்ஸ் குர்ட்ஸ்மேனும் அவர்களின் மிகவும் நெருக்கடியான நேர அட்டவணையால் முதலில் இந்த பின் தொடர்ச்சியை வேண்டாமென்று நிராகரித்திருந்தனர். மே 2007 ஆம் ஆண்டு மே மாதம் ஸ்டூடியோ மற்ற எழுத்தாளர்களை தேடிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுடைய வேலைகேட்டலில் அவ்வளவு கவரப்படாததால் ஆர்ஸியும் குர்ட்ஸ்மேனும் மறுபடியும் திரும்ப அவர்களை இணங்க வைத்தனர்.[34] ஸ்டூடியோ எஹ்ரன் க்ரூகரையும் ஒப்பந்தப்படுத்தினார்கள். பேயும் ஹாஸ்பிரோ தலைவர் பிரையன் கோல்ட்னரும் க்ரூகருக்கு டிரான்ஸ்ஃபார்மர்ஸைப் பற்றிய தொன்மவியல் (புராண கதைகளைப் பற்றிய) அறிவு குறித்து கவரப்பட்டனர்.[40] மேலும் அவர் ஆர்ஸிக்கும் குர்ட்ஸ்மேனுக்கும் நண்பராக இருந்தது ஒரு காரணமாகும்.[41] இந்த எழுத்தாளர் முப்படை டாலர்8 மில்லியன் சம்பளம் பெற்றனர்.[34] திரைக்கதை 2007-2008 ஆம் ஆண்டு அமெரிக்க எழுத்தாளர்கள் சங்கத்தின் வேலைநிறுத்தத்தால் தடைப்பட்டது. ஆனால் தயாரிப்பு தாமதங்களைத் தவிர்ப்பதற்காக எழுத்தாளர்கள் இரண்டு வாரங்கள் ஒரு காட்சியுருவாக்கத்தில் வேலை செய்து வேலை நிறுத்தம் தொடங்குவதற்கு முந்தைய இரவு அளித்தனர்.[41] பே இந்த திட்டவரைவை ஒரு அறுபது-பக்க திரைப்படிவமாக விரிவாக்கினார்.[42] இதில் அவர் சண்டைக் காட்சிகளை நீக்கிவிட்டு இன்னும் பல நகைச்சுவைகளை சேர்த்து[41] பெரும்பாலான புதிய கதாப்பாத்திரங்களை சேர்த்தார்.[17] மூன்று எழுத்தாளர்களும் இரண்டு ஹோட்டல் அறைகளில் பேயால் நான்கு மாதங்கள் “பூட்டப்பட்டு” திரைக்கதையை முடித்தனர்: க்ரூகர் தன்னுடைய சொந்த அறையில் எழுதினார். மூவரும் ஒரு நாளுக்கு இரண்டு முறை சந்தித்து ஒவ்வொருவருடைய வேலைகளை கலந்தாலோசித்தனர்.[43]

ஆர்சி படத்தின் கருப்பொருள் “வீட்டை விட்டு வெளியே இருப்பது” என்று விளக்கினார். ஏனென்றால் ஆட்டொபாட்கள் சைபர்டிரானை சீர்செய்ய முடியாததால் பூமியில் வாழ நினைக்கின்றனர் அதே நேரத்தில் சாம் கல்லூரிக்கு செல்கிறார்.[44] மனிதர்களுக்கும் ரோபொக்களுக்கும் இடையேயான கவனம் “இன்னும் அதிகமாக சமநிலையடைய”[45] “ஆபத்துகளும் இலாபங்களும் அதிகரிக்க” மற்றும் அறிவியல் புதின அம்சங்கள் இன்னும் கவனம் செலுத்தப்பட அவர் விரும்பினார். படத்தில் கிட்டதிட்ட நாற்பது ரோபோக்கள் இருப்பதாக லொரன்சோ டி பொனவெண்ட்சுரா கூறினார்.[37] ஆனால் ILMன் ஸ்கார் ஃபாரார் உண்மையில் அறுபது இருப்பதாக கூறினார்.[46] நகைச்சுவையை இன்னும் நன்றாக “கட்டுப்படுத்த” ஆர்ஸி விரும்பியதாகவும்[47] மிகவும் “பகிரங்கமான” நகைச்சுவைகளை டிரான்ஸ்பார்மர்ஸ் தொன்மவியலுக்குண்டான ஒரு முக்கியத்துவத்துடன் சமன்படுத்தியதாக கூறினார்.[48] சூழலை சற்று இறுக்கமாக்கி இரசகிகர்களை திருப்தியாக்க விரும்பியதாக பேயும் ஆமோதித்தார்.[49] மேலும் அவருக்கே உரிய நகைச்சுவையுணர்வு இருந்தாலும் “தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளை படங்களுக்கு கொண்டுவருவது பாதுகாப்பானது தான்” என்ற உணர்வை பெறுவார்கள் என்று கூறினார்.[39] குர்ட்ஸ்மேன் படத்திற்கான தலைப்பை உருவாக்கினார்.[50] படமெடுப்பவர்கள் வண்ணத்தொடர் கதாப்பாத்திரமான ஜி.பி பிளாக்ராக் சேர்க்கப்பட வேண்டுமென்று விரும்பினர் ஆனால் பே அது மிகவும் கேலிக்கையாக வண்ணத்தொடர்ப் போன்று இருக்குமென்று எண்ணினார்.[51]

டிரான்ஸ்ஃபார்மஸ் திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாக டாம் டிசாண்டோவிற்கு "மிகவும் நல்ல யோசனை ஒன்று" உருவானது. அந்த யோசனை டைனபாட்களை அறிமுகப்படுத்துவதாகும்.[52] அதே நேரத்தில் பே 2007 ஆம் ஆண்டு திரைப்படத்தில் விடப்பட்ட சரக்கு வானூர்தியில் ஆர்வம் கொண்டிருந்தார்.[53] ஆர்ஸி கூறியதாவது: இந்த கதாப்பாத்திரங்களை ரிவென்ஞ் ஆஃப் த ஃபாலனில் அவர்கள் ஒருங்கிணைக்கவில்லை. ஏனெனில் டைனபாட்களின் உருவத் தேர்வை நியாயப்படுத்துவதற்கு அவர்களால் ஒரு வழியை யோசிக்க முடியவில்லை [44] மற்றும் சரக்கு விமானத்தில் பொருத்தவும் முடியவில்லை.[54] டினோபாட்களை அவர் நிராகரித்துவிட்டார். ஏனெனில் அவருக்கு டைனாசுரஸை பிடிக்காது. இதை ஆர்ஸியே ஒப்புக்கொள்கிறார். "இந்த துறையில் நான் கொஞ்சம் வித்தியாசமானவன் என்று எனக்குத் தெரியும்" என்று அவர் சொன்னார்.[55] ஆனால் ரசிகர்களின் மத்தியில் இது பிரபலமாக இருந்ததன் காரணத்தினால் படம் எடுக்கும் போது அவைகளை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது.[56] மேலும் அவர் "பல்லிகளின் கூட்டத்திற்கு முன்பாக டிரான்ஸ்ஃபார்மர் தன்னை எப்படி உருமாற்றிக்கொள்வான் என்பது எனக்கு தெரியவில்லை. திரைப்படம் ரீதியாக தான் நான் சொல்கிறேன். ரசிகர்கள் இந்த கற்பனையை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு வரவேற்றால் ஒருவேளை எதிர்காலத்தில் டைனபாட்கள் உருவாக்கப்படலாம்"[57] எனினும் படத்தைப் பற்றி மைக்கில் பேவிடம் கேட்ட போது டைனபாட்களை அவர் வெறுப்பதாகவும் திரைப்படத்தில் அதை உருவாக்கும் எண்ணம் கூட அவருக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.[58]

படத்தயாரிப்பின் போது படத்தில் எந்த டிரான்ஸ்ஃபாமர்கள் தோற்றமளிக்கும் என்ற வாதத்தை அதிகரிப்பதற்காக தவறான தகவல்களை பே பரப்ப முயற்சித்தார். ரசிகர்களை படத்தின் கதையை விட்டு திசை திருப்புவதும் இதன் நோக்கமாயிருந்தது. எனினும் அவருடைய அந்த முயற்சி பயன் தரவில்லை என்பதையும் ஆர்ஸி ஒப்புக்கொண்டார்.[54] MTV அலைவரிசையும் காமிக் புக் ரீசோர்ஸஸ் இணையதளமும் மவுரி மற்றும் ஃபர்மேனை நேர்காணல் எடுத்தது. அந்த நேர்காணலின் போது மவுரியும் ஃபர்மேனும் ஆர்ஸி மற்றும் த ஃபாலன் திரைப்படத்தில் இடம்பெறுவார்கள் என்ற செய்தியை வெளியிட்டுவிட்டனர். இதனை மறைப்பதற்காக ஸ்டூடியோ அந்த நேர்காணலை தணிக்கை செய்துவிட்டது.[59] மெகாட்ரான் மறுபடியும் உயிர்ப்பெற்று வரமாட்டான் என்றும் அவனுடைய புதிய டேங்க் உருவத்தில் பொம்மை கதாப்பாத்திரம் மட்டும் தான் உள்ளது என்று எம்பையரிடம் பே கூறினார்.[37] 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் திரைப்படத்தில் மெகாட்ரான் திரும்ப வருவான் என்று ஆர்ஸிக்கு மட்டும் உறுதியளிக்கப்பட்டது.[60] படபிடிப்பின் முதல் வாரத்தில் தினசரி கால்ஷீட்டுகள் இரகசியமாக வெளியே வருவதைப் போல் போலியாக செய்ததாக பே கூறினார்.[61] அந்த தாள்களில் ராமோன் ராட்ரிகஸ் இடம்பெறுவதாகவும் ஜெட்ஃபையர் மற்றும் இரட்டையர்கள் தோன்றுவதாகவும் செய்திகள் இருந்தன.[62]

படப்பிடிப்பு

2008 ஆம் ஆண்டு மே மாதம், கலிபோர்னியாவில் படப்பிடிப்பு ஆரம்பித்தது.[3] முன்னால் ஹக்கஸ் ஏர்கிராஃப்ட் பிளேய விஸ்தாவில் தான் ஒலிப்புகா அரங்குகளை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த திரைப்படத்தில் வரும் பெரும்பாலான உட்புற காட்சிகள் இந்த இடத்தில் தான் படமாக்கப்பட்டது.[63] பென்சில்வானியாவின் பெத்லஹமில் உள்ள பெத்லஹேம் ஸ்டீல் தளத்தில் சண்டைக்காட்சிகளுக்காக ஜூன் 2 முதல்[42] மூன்று நாட்கள் செலவிடப்பட்டன. இந்த காட்சிகள் ஷாங்காயின் ஒரு பகுதியை குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது.[64] அதற்கு பிறகு ஸ்டீவென் எஃப். உட்வார்-ஹேஸி மையத்தில் படப்பிடிப்பு எடுக்கப்பட்டது.[65] அதற்கு பிறகு படக்குழு ஃபிலதெல்ஃபியாவுக்கு ஜூன் 9ம் தேதி அன்று சென்றனர். அந்த நாட்டில் செயலில் இல்லாத PECO ரிச்மண்ட் மின் உற்பத்தி நிலையம், யுனிவர்சிட்டி ஆஃப் பென்சில்வானியா, டிரெக்ஸில் யூனிவர்சிட்டி, ஈஸ்டன் ஸ்டேட் பெனிடென்ஷியரி, ஃபேர்மவுண்ட் பார்க், ஃபிலதெல்ஃபியா சிட்டி ஹால், ரிட்டென்ஹவுஸ் ஸ்கொயர் மற்றும் வரலாற்று புகழ்பெற்ற சான்ஸ்லர் தெரு (பாரிஸில் உள்ள பிலேஸ் டி லா கான்கோர்டுக்கு அருகில் உள்ள ஒரு தெருவை குறிக்கிறது) மற்றும் வானமேக்கர்கள் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு எடுக்கப்பட்டது.[66][67][68][69] ஜூன் மாதம் 22 ஆம் தேதி, அந்த குழு பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டிக்கு சென்றார்கள்.[70] யுனிவர்சிட்டி ஆஃப் பென்சில்வானியாவில் உள்ள சில மாணவர்களை மறுபடியும் காட்சிகளை படபிடிப்பு செய்வதற்கு ப்ரின்ஸ்டனை பே தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றும், திரைப்படத்தில் ப்ரின்ஸ்டனின் பெயரை எழுதப்போகிறார் என்றும் அந்த கல்லூரி மாணவர்கள் நம்பி மிகவும் ஆத்திரமடைந்தனர். எனினும் யுனிவர்சிட்டி ஆஃப் பென்சில்வானியாவும் ப்ரின்ஸ்டனும் தங்களுடைய பெயர்களை படத்தில் பயன்படுத்துவதற்கு பேவுக்கு அனுமதிக்கொடுக்கவில்லை. இதற்கு "வேடிக்கையான 'அம்மா' காட்சி" தான் காரணமாக இருந்தது. இந்த காட்சிக்காகத்தான் இருவரும் "பள்ளிக்கூடத்தை குறிப்பிடவேண்டாம்" என்று யோசித்தனர். அந்த காட்சியில் சாமின் தாய் மாரிவானா-லேஸ்டு ப்ரவுனீஸை உண்டுவிடுகிறார்கள். இது ஒரு வேடிக்கைகாக தான் காட்சியாக்கப்பட்டது.[71]

எகிப்த்தில் படப்பிடிப்பிற்கென்று மூன்று நாட்கள் செலவிடப்பட்டன.

படப்பிடிப்புக்கு ஜூன் 30 அன்றிலிருந்து ஒரு ஓய்வை பே திட்டமிட்டார். அந்த நேரத்தில் அவருடைய கவனத்தை அசைவுபடங்களிலும் இரண்டாம் பிரிவு காட்சிகளிலும் திருப்பினார். ஏனெனில் அந்த நேரம் 2008 ஆம் ஆண்டில் திரைப்பட நடிகர்கள் சங்கம் வேலைநிறுத்தம் நடத்தப்படுவதாக இருந்தது.[72] ஷாங்காய் சண்டைக்கான படப்பிடிப்பு காலிஃபோர்னியாவின் லாங் பீச் அதற்கு பிறகு தொடரப்பட்டது.[73] செப்டம்பர் மாதத்தின் போது நியூ மெக்ஸிக்கோவில் உள்ள ஹாலோமான் விமானப்படைத் தளத்திலும் வைட் சாண்ட் மிஸைல் ரேஞ்சிலும் படக்குழு படப்பிடிப்பு நடத்தினர். இந்த இரண்டு இடங்களும் 2007 ஆம் ஆண்டு திரைப்படத்தில் குவத்தார் (Qatar) என்று குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. இப்போது எடுக்கப்படும் திரைப்படத்தில் அதே இடங்கள் எகிப்த்தை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.[74] லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஓர் அளவுத்திட்ட மாதிரி பிரமிட்களை மிகவும் அருகில் காட்டப்படும் சில காட்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டது.[37] டக்ஸன் சர்வதேச விமானநிலையம் மற்றும் 309வது ஏரோஸ்பேஸ் மெயிண்டனன்ஸ் அண்டு ரீஜெனெரேஷன் க்ரூபின் விமான புதைக்கிடங்கில் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு எடுக்கப்பட்டது. அந்த படப்பிடிப்பு எடுப்பதற்காக, பிரைம் டைரெக்ட்டிவ் (ஸ்டார் டிரெக்கிற்கான ஓர் ஆதாரம்) என்ற ஒரு பொய்யான தலைப்பை சொல்லி படமெடுத்தனர்.[75] ஜூலையிலிருந்து இந்த இடம் தாமதமாக்கப்பட்டது.[76] கேம்ப் பெண்டில்டனிலும் டேவிஸ் மான்தன் விமானப்படை தளத்திலும் கூட படப்பிடிப்பு எடுக்கப்பட்டது.[63]

எகிப்தில் உள்ள கீஸா பிரமிட் வளாகத்திலும், லக்ஸரிலும் முதல் பிரிவு (ஷியா லாபிஹாஃபையும் சேர்த்து) மூன்று நாட்களுக்கு படப்பிடிப்பு எடுக்கப்பட்டது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு படப்பிடிப்பு மிகவும் இரகசியமாக எடுக்கப்பட்டது. ஆனால் லோரென்ஸோ டி போனாவென்ச்சுராவின் படி 150 அமெரிக்கர்களும் உள்ளூர் எகிப்தியர்கள் பலரும் சேர்ந்த ஒரு குழு "மிகவும் அமைதியான படப்பிடிப்பை" எடுக்க உதவிசெய்தனர்.[77] சாஹி ஹவாஸை சந்தித்ததன் மூலம் பிரமிட்டில் படப்பிடிப்பு எடுப்பதற்கு எகிப்து அரசாங்கத்திடமிருந்து பே அங்கிகாரம் பெற்றுக்கொண்டார். அவர் சொன்ன சில வார்த்தைகள் பேவின் நினைவுக்கு வந்தது. அவை "அவருடைய கைகளை என்னுடைய தோலில் போட்டு, 'என்னுடைய பிரமிட்டை சேதப்படுத்திவிடாதீர்கள்' என்று சொன்னார்.'"[63] ஐம்பதடி உயர கேமரா கிரேன் (பளு தூக்கும் இயந்திரம்) படப்பிடிப்பு இடத்தில் பயன்படுத்தப்பட்டது.[37] அதன் பிறகு படப்பிடிப்பிற்காக ஜோர்டனில் நான்கு நாட்கள் கழிக்கப்பட்டன; ராயல் ஜோர்டானியன் விமானப்படை, பெட்ரா, வாடி ரம், சால்ட் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு எடுப்பதற்கு உதவியது. ஏனெனில் அந்த நாட்டின் இளவரசர்களில் ஒருவருக்கு 2007 ஆம் ஆண்டு திரைப்படம் பிடித்திருந்தது.[78][79] பாரிஸில் உள்ள ப்ளேஸ் டி லா கான்கார்டில் படப்பிடிப்பு தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. ஈஃபில் டவர் மற்றும் ஆர்க் டி டிரையோம்ஃபே ஆகியவற்றின் இரண்டாவது பிரிவு படப்பிடிப்புகள் அங்கே எடுக்கப்பட்டன.[80] 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி, வானூர்திகளை எடுத்துச்செல்லும் USS ஜான் சி. ஸ்டென்னிஸில் படப்பிடிப்பு நிறைவடைந்தது.[81]

2007 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் ஐந்து வெவ்வேறு நகரப்பகுதிகளில் எடுக்கப்பட்டதன் காரணத்தினால் அந்த படத்தின் முடிவில் வரும் சண்டைக்காட்சி குழப்பதை ஏற்படுத்துவதாகவும் புரிந்துகொள்வதற்கு கஷ்டத்தை கொடுப்பதாகவும் இருந்தது என்று பே குறிப்பிட்டார். இந்த 2009 ஆண்டு படத்தில் இறுதி சண்டைக்காட்சிகள் எகிப்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சண்டைக்காட்சியில் என்ன நடக்கிறது என்பதை எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் எடுக்கப்பட்டுள்ளது.[82]

விளைவுகள்

2007 ஆம் ஆண்டு படத்தை விட 2009 ஆம் ஆண்டு படத்தில் ரோபோக்களை வடிவமைப்பதில் ஹாஸ்பிரோ மிகவும் அதிகமாக ஈடுப்பட்டிருந்தது.[47] ரோபோக்களை இணைப்பதன் மூலமாக இரண்டாம் தொடரில் இன்னும் அதிகமான வரவேற்பை எதிர்பார்க்க முடியும் என்று படத்தயாரிப்பாளரிடம் ஹாஸ்பிரோவும், டகரா டாமியும் யோசனை வழங்கினர்.[83] மாற்று உருவங்கள் முந்தைய படத்தில் இருந்தது போலவே இந்த படத்திலும் வைக்கவேண்டும் என்று அவர்கள் கூறினர். இந்த காரணத்தினால் மக்கள் மறுபடியும் அதே போன்ற பொம்மைகளை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது என்று கூறினர்.[84] பே உண்மையான F-16 ஃபைட்டிங் ஃபால்கன் மற்றும் பீரங்கி டாங்கிகளை படப்பிடிப்பில் உள்ள சண்டைக்காட்சிகளுக்கு பயன்படுத்தினார்.[39] புதிய ஆட்டோபாட் கார்கள் பல ஜெனெரல் மோட்டார் நிறுவனத்தால் தான் விநியோகம் செய்யப்பட்டது. அந்த கார்கள் திரையில் மிகவும் வித்தியாசமாக தெரியவேண்டும் என்பதற்காக அவை அதிகமான நிறங்களால் நிறப்பட்டிருந்தன.[24]

ஸ்காட் ஃபாரர் விஷுவல் எஃபெக்ட்ஸ் மேற்பார்வையாளராக திரும்பிவந்தார். இந்த படத்தில் ஒளிஅமைப்பு சற்று ஆழமானதாகவும் டிசெப்டிகான்களுக்கு இன்னும் மர்மமான கதாபாத்திரங்கள் இருக்குமென்றும் எதிர்பார்த்தார். நீட்டிக்கப்பட்ட காலகெடுவினால் தயாரிப்புக்குப் பின்னான வேலை ஒரு “சர்க்கஸாக” இருக்குமென்று ஸ்காட் ஃபாரர் கூறியிருந்தார்.[85] ஒரு பெரிய செலவுப்பட்டியலுடனும் சிறப்புக் காட்சிகள் நன்றாக வேலை செய்யப்பட்டதனாலும் டிரான்ஸ்ஃபார்மர்களுக்கான பங்கு இன்னும் பெரிதாக இருக்குமென்று தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்தனர். "டான் மார்ஃபி, 'ஆப்டிமஸ் ப்ரைமை அசைவுப்படமாக்குவதற்கு மிகவும் அதிகமான செலவானதன் காரணத்தினால் மட்டுமே சில காட்சிகளில் மட்டுமே அவன் இடம்பெற்றிருக்கிறான் [2007 ஆம் ஆண்டு திரைப்படம்]' என்று என்னிடம் கூறினார் என்று பீட்டர் கூலென் நினைவுகூர்ந்தார். ஆனால் 'அடுத்தமுறை திரைப்படம் மிகவும் வெற்றிகரமாக ஓடினால் நீ அதிகமான காட்சிகளில் இடம்பெறுவாய்' என்று அவர் கூறினார்".[86][86] ரோபோக்களின் முகங்களின் அண்மை காட்சிகளை படத்தில் அதிகமாக சேர்ப்பதற்கு மைக்கில் பே விரும்பினார்.[87] "அசைவுப்படம் செய்பவர்கள் இன்னும் அதிகமான “நீர் வாரியடிக்கும் காட்சிகள், மோதல்கள், மண்தூசியில் சண்டையிடுதல் அல்லது மரங்களில் மோதுதல், [...] நகர்தல், பொருட்கள் நொறுங்கி உடைதல்” போன்றவைகள் செய்ற்படுத்தினார்கள் என்று ஃபாரர் கூறினார். “அவைகள் [ரோபொக்கள்] உமிழ்ந்தன காற்றை உரிஞ்சியெடுக்கின்றன, வியர்க்கின்றன, பெருமூச்சு விடுகின்றன”. IMAXன் அதிகரித்த நுணுக்கங்களின் அசைவுக்காட்சிகளின் ஓர் ஒற்றை சட்டகத்தை படப்பிடிப்பு செய்வதற்கு 72மணிநேரங்கள் தேவைப்பட்டன.[46][88] 2007 ஆம் ஆண்டு படத்திற்கு ILM 15 டெராபைட்கள் பயன்படுத்தியிருந்தனர். இதன் தொடரும் படத்தில் அவர்கள் 140 டெராபைட்கள் பயன்படுத்தியிருந்தனர்.[79]

பெரும்பாலான டிசெப்டிகான்களின் ரோபொ மற்றும் மாற்று உருவங்கள் கணினியால் செய்யப்பட்டவை தான் என்று குறிப்பாக ஆர்ஸி கூறியிருந்தார். இதனால் அவர்கள் தயாரிப்பு-பின் நிலையில் எளிதாக கூடுதல் காட்சிகளை சேர்க்க முடிந்தது.[89]

இசை

டிராஸ்ஃபார்மர்ஸ்: ரிவஞ்ச் ஆஃப் த ஃபாலன் என்ற படத்திற்கான இசை ஸ்டீவ் ஜாபிளான்ஸ்கீ அவர்களால் இயற்றப்பட்டது. இவர் சோனி ஸ்கோரிங்க் (Sony Scoring Stage) ஸ்டேஜிலுள்ள ஹாலிவுட் ஸ்டூடியோ சிம்ஃபனியின் 71- உறுப்பினர் குழுவைக் கொண்டு அவருடைய இசையை பதிவு செய்ய இயக்குநர் மைக்கேல் பேயுடன் மீண்டும் இணைந்தார்.[90]

ஜாப்ளான்ஸ்கீயும் (Jablonsky) அவருடைய இசைத் தயாரிப்பாளர் ஹான்ஸ் சிம்மரும் (Hans Zimmer) லின்கின் பார்குடைய இசையாகிய “நியு டிவைட்” (New Divide) என்ற பாடலுக்கு பல்வேறு அம்சங்களில் தத்தம் பாணிகளில் மெருகேற்றினார்கள்.[91][92]

வெளியீடு மற்றும் சந்தைப்படுத்துதல்

டிரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரிவஞ்ச் ஆஃப் த ஃபாலன் முதல் முறையாக 2009 ஆம் ஆண்டு ஜூன் 8 அன்று ஜப்பானின் டோக்கியோவில் திரையிடப்பட்டது.[93] 2009 ஆம் ஆண்டு ஜூன் 19 அன்று ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்டபின் அது வட அமெரிக்காவிலுள்ள வழக்கமான மற்றும் IMAX திரையரங்குகளில் ஜூன் 24[94] (ஆனால் சில திரையரங்குகள், சிலர்மட்டுமே பார்க்கக்கூடிய தேதிக்கு முந்தைய திரையிடுதலை ஜூன் 22 அன்று நடத்தின) அன்று வெளியிடப்பட்டது. மூன்று சண்டைக் காட்சிகள் IMAX புகைப்படக்கருவிகளில் (கேமரா) படமெடுக்கப்பட்டன்.[49] மேலும் ரோபொக்கள் சண்டையிடும் காட்சிகள் உட்பட வழக்கமான திரையரங்கப் பதிப்பில் இடம்பெறாத கூடுதல் காட்சிகள் IMAX வெளியீட்டில் இடம்பெற்றன.[95] 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மின்கடிதத்தில் ஆர்ஸி, IMAX படப்பகுதி 3D ஆக இருக்கலாமென்று கருத்துத் தெரிவித்திருந்தாலும் பே பிற்பாடு தன்னை ஒரு “பழங்கால” படமெடுப்பவரென்று கருதுவதாகும் [96] 3D ஒரு ஏமாற்று வித்தையாக உணர்ந்ததாககவும் கூறினார். மேலும் திண்மத்தோற்றம் காட்டுகின்ற (ஸ்டீரோஸ்கோப்பிக்) புகைப்படக்கருவிகளைப் பயன்படுத்துவதைப் பார்க்கிலும், IMAX ல் படமெடுப்பதும் சற்று எளிதாக இருந்ததாகவும் கூறினார்.[97]

படத்தை உலகளாவிய முறையில் சந்தைப்படுத்த கூடுதல் $150 மில்லியன் செலவழிக்கப்பட்டது.[98] ஹாஸ்ப்ரோவின் ரிவஞ்ச் ஆஃப் த ஃபாலன் பொம்மை வரிசையில் புதிய மற்றும் திரும்ப வருகின்ற கதாபாத்திரங்களின் புதிய அச்சுகளும் 2007 ஆம் ஆண்டு உருவங்களின் புதிய அச்சு அம்சங்கள் அல்லது புதிய வண்ணத் திட்டங்களும் காணப்பட்டன.[30] முதல் தொகுப்பு மே 30 அன்று வெளியிடப்பட்ட்து. ஆனால் பம்பல்பீயும் சவுண்ட்வேவும் முன்கூட்டியே முதல் முறையாக வெளிவந்தன.[99] இரண்டாவது தொகுப்பு 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வந்தது. இதில் உருமாறும் ரோபொக்களுக்குள்ளே பொருந்துகின்ற 2 1/4 - இஞ்ச் மனித நடிகர்கள் மற்றும் பந்தயத் தடத்தில் பயன்படுத்தக்கூடிய கார்களின் உருமாறாத நகல்கள் போன்ற பொம்மைகள் புதிதாக கொண்டுவரப்பட்டன. மூன்றாவது தொகுப்பு நவம்பரில் வருகிறது மற்றும் அதற்கடுத்த ஐந்து தொகுப்புகள் 2010 ஆம் ஆண்டில் வரும். பர்கர் கிங்க் 7-இலெவன், LG ஃபோன்கள், கேமார்ட், வால்-மார்ட், யூடுயூப், நைக் இங்க், மற்றும் M&M, மேலும் ஃபிலிப்பைன்ஸில் ஜாலிபீ ஆகியவை படத்தில் உற்பத்திப்பொருள் முன்வைப்பு (பிராடெக்ட் பிளேஸ்மண்ட்) பங்காளர்களாக இருந்தனர்.[100] ஜெனரல் மோட்டர்ஸுடைய நிதிநிலை சிக்கள்களினால் அது இந்த பின் தொடர் படத்தின் விளம்பரப்படுத்தலில் அதிகம் ஈடுபட முடியவில்லை. ஆனால் பாராமௌண்ட் GM உடனோ இல்லாமலோ அவர்களுடைய சந்தைப்படுத்தும் பிரச்சாரம் இன்னமும் மிகவும் பெரிதென்றும் 2007 ஆம் ஆண்டு படத்தின் வெற்றியை அடிப்படையாக்க் கொண்டதென்றும் குறிப்பிட்டனர்.[101][102][103] 2009 ஆம் ஆண்டு ஜூன் 21 அன்று கைல் புஷ் இன்ஃபினியான் ரேஸ்வேயில் ரிவஞ்ச் ஆஃப் த ஃபாலன் /M&M சின்னம் பொறிக்கப்பட்ட காரை ஓட்டினார்.[104] இண்டியானாபொலிஸ் 500ல் ஜாஷ் டுஹாமெல் ஒரு 2010 கமேரோவை ஓட்டினார்.[105] சீனாவில் படம் வெளியிடப்பட்ட போது ஒரு வாக்ஸ்வேகன் ஜெட்டாவை பயன்படுத்தி பம்பல்பீயின் ஒரு வடிவம் உருவாக்கப்பட்டது.[106]

அச்சு ஊடகங்கள்

த ரெய்ன் ஆஃப் ஸ்டார்ஸ்கிரீம் வண்ணத்தொடர் புத்தகத்திற்காக ஒன்று சேர்ந்த கிரிஸ் மௌரியும் ஓவியர் அலெக்ஸ் மில்னும் IDW பப்ளிஷிங்கின் படத்தின் முன்னோட்டத்திற்காக மறுபடியும் ஒன்று சேர்ந்தனர். முதலில் டெஸ்டினி என்று பெயரிடப்பட்டு ஐந்து பகுதி தொடராக இருக்கவிருந்தது,[107] அலையென்ஸ் மற்றும் டிஃபையன்ஸ் என்ற தலைப்புகளில் ஒரே சமயத்தில் வெளியிடப்படும் இரண்டு தொடர்களாகப் பிரிக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு அலையென்ஸ் மில்னால் வரையப்பட்டு 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கியது: இது மனித மற்றும் ஆட்டொபாட் கண்ணோட்டங்களின் கவனம் செலுத்துகிறது.[108] அதற்குப்பின் ஆரம்பித்த டிஃபையன்ஸ் டான் கன்னாவால் வரையப்பட்டு இரண்டு படங்களில் ஒன்றுக்கு முன்பு துவங்குவதாக நிறுவப்பட்டு சண்டை துவங்கிய ஆரம்பக்கட்டங்களை சித்தரிக்கிறது.[109]

2007 ஆம் ஆண்டு படத்திற்குப் பின் இரண்டு படங்களுக்கும் பாலமாக இருந்து ஆலன் டீன் ஃபாஸ்டர் முதலில் இன்ஃபில்டிரேஷன் என்று பெயரிடப்பட்டிருந்த Transformers: The Veiled Threat ,[110] எழுதினார். எழுதும்போது அவர்கள் இருவருடைய கதைகளும் ஒன்றோடொன்று முரண்படாத அளவுக்கு ஃபாஸ்டர் IDW உடன் சேர்ந்து பணிபுரிந்தார்.[111]

இரண்டாவது படத்திற்கு நேரடியாக சம்பந்தப்பட்ட முதல் அச்சிடப்பட்ட ஊடகம் ஹார்பர் காலின்ஸால்(ISBN 0061729671), வெளியிடப்பட்ட 32-பக்க வண்ணம் தீட்டும் மற்றும் செயல்பாட்டு புத்தகமாகும். இது 2009 ஆம் ஆண்டு மே 5ம் தேதி கிடைக்கப்பெற்று படத்தின் முக்கிய சூழ்ச்சிக் குறிப்புகளை வெளிப்படையாக அளித்த முதல் அதிகாரப்பூர்வமான மூலமாக இருந்தது.

2009 ஆம் ஆண்டில் ஜூன் 1ம் தேதி DK பப்ளிஷிங்க் படத்தின் கதாபாத்திரங்கள் பற்றிய உண்மையான குறிப்புகளை வழங்கும் நோக்கத்தில் டிரான்ஃபார்மர்ஸ்: த மூவி யூனிவர்ஸ் (ISBN 0756651727) என்ற 96-பக்க புத்தகத்தை வெளியிட்டது. எனினும் இந்தத் தரவில் படத்துடன் ஒப்பிடும் போது எண்ணற்ற பிழைகளும் முரண்பாடுகளும் இருப்பதாக கணிக்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு ஜூன் 10ம் தேதி சைமன் ஃபர்மேனால் எழுதப்பட்ட படத்தின் வண்ணத்தொடர் வடிவு (ISBN 160010455X) வெளியிடப்பட்டது.[112]

மேலும் ஆலன் டீன் ஃபாஸ்டர் படத்திற்கான புதின வடிவத்தையும் எழுதினார் (ISBN 0345515935).[113]

இதற்கிடையில் டான் ஜாலி, ஃபாஸ்டர் எதிர்நோக்கிய படிப்பவர்களைவிட இளைய சமுதாயத்தினரை இலக்காக வைத்த 144-பக்க டிரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரிவஞ்ச் ஆஃப் த ஃபாலன்: த ஜூனியர் நாவல் (ISBN 0061729736) என்ற புத்தகத்தை எழுதினார்.

இறுதியாக படத்தை உருவாக்குவதில் திரைக்குப்பின்னே நடந்த சம்பவங்களை ஆவணப்படுத்தும் வண்ணம் டிரான்ஸ்ஃபார்மர்ஸ்: தி ஆர்ட் ஆஃப் த மூவீஸ் (ISBN 1848563736) என்று தலைப்பிடப்பட்ட ஒரு புத்தகம் வெளியானது.

உடனிணைந்து வெளிவந்த மற்ற சிறிய வெளியீடுகளாவன: டிரான்ஸ்ஃபார்மர்ஸ் ரிவஞ்ச் ஆஃப் த ஃபாலன்: த லாஸ்ட் பிரைம் (ISBN 0061729728), டிரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரிவஞ்ச் ஆஃப் த ஃபாலன்: த ரீயுஸபல் ஸ்டிக்கர் புக் (ISBN 0061729744), டிரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரிவஞ்ச் ஆஃப் த ஃபாலன்: மேட் யு லுக்! (ISBN 006172971X, டிரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரிவஞ்ச் ஆஃப் த ஃபாலன்: ரைஸ் ஆஃப் த டிசெப்டிகான்ஸ் (ISBN 0061729701), டிரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரிவஞ்ச் ஆஃப் த ஃபாலன்: ஸ்பாட் த ‘பாட்ஸ் (ISBN 006172968X), டிரான்ஸ்ஃபார்மர்ஸ் ரிவஞ்ச் ஆஃப் த ஃபாலன் மிக்ஸ் அண்ட் மேட்ச் (ISBN 0794418791), ஆப்ரேஷன் ஆட்டோபாட் (ISBN 0061729663), வென் ரோபொஸ் அடாக் (ISBN 0061729655) மற்றும் டிரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரிவஞ்ச் ஆஃப் த ஃபாலன் வால் கேலண்டர் (ISBN 0768899451)

வீடியோ கேம்

ரிவஞ்ச் ஆஃப் த ஃபாலனின் ஐந்து வீடியோ கேம் வடிவங்கள் இதுவரை வெளியாகியிருக்கின்றன:

  • பிளே ஸ்டேஷன் 3 மற்றும் Xbox 360 வடிவம் (லக்ஸோஃப்ளக்ஸ் மூலமாக உருவாக்கப்பட்டது, ஆக்டிவிஷன் மூலமாக வெளியிடப்பட்டது)[114][115]
  • PS3 மற்றும் Xbox 360 வடிவம் போன்றே விண்டோஸ் (Windows) வடிவத்திற்கான (பீனாக்ஸ் மூலமாக உருவாக்கப்பட்டது) விளையாட்டுகள்[116]
  • வை (Wii) மற்றும் பிளே ஸ்டேஷன் 3 வடிவம் (கிரோம் ஸ்டூடியோஸினால் உருவாக்கப்பட்டது))[117]
  • பிளேஸ்டேஷன் கணினி-மாற்றப்படக்கூடிய (போர்டபுள்) வடிவம் (சேவேஜ் எண்டர்டேய்ன்மெண்ட் மூலமாக உருவாக்கப்பட்டது)[118]
  • நிண்டெண்டோ DS வடிவம் (விகேரியஸ் விஷன்ஸ் மூலமாக உருவாக்கப்பட்டது). இது இரண்டு விளையாட்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது, ஆட்டோபாட்கள் மற்றும் டிசெப்டிகான்கள்.

வீட்டு உபயோகத்திற்கான ஊடகங்கள் (ஹோம் மீடியா)

2009 ஆம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி அன்று ரிவஞ்ச் ஆஃப் த ஃபாலனின் இரு-வட்டு ப்ளூ-ரே மற்றும் DVD பதிப்புகள் கிடைக்கப்பெற்றன.[119] 2009 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீட்டு உபயோக வெளியீடு என்று வாக்களிக்கப்பட்டது.[சான்று தேவை] சார்லி டெ லௌசிரிகாவினால் தயாரிக்கப்படும் படத்தின் ப்ளூ-ரே வெளியீட்டில் IMAX முறையில் படமெடுக்கப்பட்ட காட்சிகள் பலதரப்பட்ட உருவ விகிதங்கள் காண முடியுமென்று மைக்கல் பே முன்னமே அறிக்கையிட்டிருந்தார். வால்மார்ட்டில் ஒரு சிறப்பு IMAX பதிப்பு பிரத்யேகமாக கிடைக்கிறது.[120]வீட்டுபயோக வடிவங்கள் மூன்று மணி நேரத்திற்கு மேலான கூடுதல் (போனஸ்) உள்ளடக்கம் அடங்கியுள்ளது. அதில் பல ஊடாடும் அம்சங்களும் உள்ளன. அதில் ஒன்று “தி ஆல்ஸ்பார்க் எக்ஸ்பெரிமெண்ட்” ஆகும். இது இந்த தொடரில் மூன்றாவது படத்திற்கான மைக்கல் பேயின் திட்டங்கள் வெளியாக்குகின்றன. டார்கெட் என்ற விற்பனையாளரிடம் டிவிடி மற்றும் ப்ளூ-ரே வடிவங்களில் தகடுகளைக் கொள்ள ஒரு உருமாறக்கூடிய பம்பல்பீ கொள்கலன் அளிக்கப்படும். மேலும் படத்தின் இரண்டு-தகடு பதிப்புகள் டிவிடி மற்றும் ப்ளூ-ரே இரண்டுமே பாராமௌண்டுடைய ஆக்மெண்டட் ரியாலிட்டி என்ற ஒரு சிறப்பம்சத்தை வெளியாக்கும் முதல் படமாகும். இதன் மூலம் பயன்படுத்துபவர் படத்துடைய அட்டைப் பகுதியை ஒரு வெப்கேமரா முன்பாக அசைப்பதனால் ஒரு கணினி திரையில் ஆப்டிமஸ் பிரைமின் 3D வடிவத்தை கையாள முடியும்.[121] டிவிடியின் முதல் வார விற்பனைகள் 7.5 மில்லியன் பிரதிகளை எட்டியது. படத்தின் ப்ளூ-ரே வடிவம் 1.2 பிரதிகள் விற்று 2009 ஆம் ஆண்டின் அதிகம் விற்கப்பட்ட ப்ளூ-ரே படமானது.[122]

வரவேற்பு

விமர்சனங்கள்

படம் “பொதுவாக இருவேறு கருத்துகள் உட்பட எதிர்மறை” விமர்சனங்களை சினிமா விமர்சகர்களிடமிருந்து பெற்றது.[123] ராட்டன் டொமாட்டோஸ் சேகரித்த 227 விமர்சனங்களின் அடிப்படையில் ரிவஞ்ச் ஆஃப் த ஃபாலன் சராசரியாக 19% ஒட்டுமொத்த அங்கீகரிப்பைப் பெற்றது.[124] ஒப்பிட்டுப்பார்க்கும் போது மெடாகிரிடிக் சேகரித்த 32 விமர்சனங்களில் 35 சதவிகிதம் என்ற மதிப்பெண்ணை கணக்கிடப்பட்டது.[123] விமர்சகர்களின் எதிர்மறை வரவேற்பிற்கு மாறாக பார்வையாளர்களுடைய வரவேற்பு பொதுவாக நேர்மறையாகவே இருந்தது. எனினும் சினிமாஸ்கோர் வாக்கெடுப்புகளில் A+ முதல் F என்ற அளவுகோலில் சராசரியான சினிமா பார்வையாளர்கள் படத்திற்கு “B+” என்ற மதிப்பையே வழங்கினார்கள். மாறாக முதல் படம் “A” என்ற மதிப்பைப் பெற்றிருந்தது.[125]

ஹௌஸ்டன் கிரானிக்கல் இந்த படத்தை “நன்றாக எண்ணெயிடப்பட்டு, சத்தமாக விஞ்சியெழும்பும் கோடைக்கால கிளர்ச்சியூட்டும் வாகனம், தேவையான அனைத்தையும் செய்கிறது அதைவிட சற்று அதிகமாகவும் செய்கிறது” என்று விமர்சித்தது. வெரேய்ட்டியிலிருந்து ஜார்டன் மிண்ட்ஸர் டிரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரிவஞ்ச் ஆஃப் த ஃபாலன் இந்த முழு படத்தொகுப்பையும் மிகவும் மேம்பட்ட அளவிலான செயற்கை நுண்ணறிவிற்கு கொண்டு செல்கிறதென்று கூறினார். எண்டர்டெய்ண்மெண்ட் வீக்லி “ரிவஞ்ச் ஆஃப் த ஃபாலன் மோட்டர் எண்ணெயால் தடவப்பட்ட பாப்கார்னை மிகவும் அதிகமான அளவில் கொட்டி கொழித்திருக்கலாம். ஆனால் அது உங்களுடைய உள்ளார்ந்த 10-வயதினரின் அழிக்கும் பசிக்கு எப்படி தீணி போடவேண்டும் என்று நன்கு அறிந்திருக்கிறது” என்று குறிப்பிட்டது. த வாஷிங்க்டன் போஸ்டின் கூற்றுபடி, டிரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரிவஞ்ச் ஆஃப் த ஃபாலன் , பர்ல் ஹார்பரை விட கேவலமாக விமர்சிக்கப்பட்ட படமென்று கூறினது.[126] த ஹாலிவுட் ரிப்போர்ட்டரில் ரே பென்னட் தன்னுடைய விமர்சனத்தில் “முன் பின் அறியாதவர்களுக்கு அது மிகவும் சத்தமாகவும் நுண்ணியதாகவும் இருக்கிறது. 147 நிமிடங்களில் அது சற்று அதிகமாகவே நீளமாயிருக்கிறது” என்றார்.[127] 2007 ஆம் ஆண்டு படத்திற்கு மூன்று நட்சத்திரங்கள் வழங்கிய ராஜர் எபர்ட் ரிவஞ்ச் ஆஃப் த ஃபாலனுக்கு ஒரே ஒரு நட்சத்திரமே வழங்கியிருந்தார். “தாங்க முடியாத நேரத்திற்கு கொடுமையான ஒரு அனுபவம்” என்று அவர் படத்தை குறை கூறினார்.[128] பிற்பாடு தன்னுடைய பிளாகில் இந்த படத்தைப் பற்றி எழுதும் போது “ஒரு நாள் வரும். டிரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரிவஞ்ச் ஆஃப் த ஃபாலன் என்ற படம் திரைப்பட வகுப்புகளில் ஆய்வு செய்யப்பட்டு மரபு கலாச்சார திரைப்படவிழாக்களில் திரையிடப்படலாம். பின்னோக்கிப் பார்க்கும்போது அது ஒரு சகாப்தத்தின் முடிவாக பார்க்கப்படும். நிச்சயமாக இன்னும் அநேக CGI-அடிப்படையான சண்டை காவியங்கள் செய்யப்படலாம். ஆனால் இதைப் போன்று பெருமிதம் கொண்ட மிகைபடுத்திய, புரியாத, நீளமான (149 நிமிடங்கள்) அல்லது செலவுமிக்க ($190 மில்லியன்) படம் இனிமேலும் தயாரிக்கப்படாது".[129] ரோலிங்க் ஸ்டோன் விமர்சகர் பீட்டர் டிராவெர்ஸ் “டிரான்ஸ்ஃபார்மர்ஸ் 2 ” இந்த பத்தாண்டின் மிக மோசமான படமென்று கருதப்படுவதற்கு தகுந்தது என்று கூறி படத்திற்கு ஒரு நட்சத்திரம் கூட அளிக்கவில்லை."[130] தி ஏ.வி. கிளப் படத்திற்கு C- அளித்தது.[131]

மட்ஃபிளாப் மற்றும் ஸ்கிட்ஸ் என்ற கதாபாத்திரங்களுக்கு கணிசமான எதிர்மறை வரவேற்பு வந்திருக்கிறது. அவை இனவெறிசார்ந்த மாறாநிலைகளைக் (ஸ்டீரியோடைப்) கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றன. த நியூயார்க் டைம்ஸின் மனோலா டார்கிஸ் “ஜார்ஜ் லூகாஸ் ஜார் ஜார் பிங்க்ஸை வெளிவிட்டதைப் போல ஹாலிவுட்டில் இசைவாணர்கள் இன்னமும் புழக்கத்திலிருக்கிறார்கள் என்பதைக் கதாபாத்திரங்கள் சுட்டிக்காட்டுகின்றன” என்று கூறினார்.[132] ஒரு திரைப்படத்திலேயே இவை தான் மிகவும் ஆச்சரியமூட்டுகின்ற அளவுக்கு இனவெறியூட்டும் கேலிச்சித்திரங்களாக காணப்படுகின்றன என்று கூறினால் முற்றிலும் மிகையாகாது” என்று விமர்சகர் ஸ்காட் மெண்டல்சன் கூறுகிறார்."[133] எய்ண்ட் இட் கூல் நியூஸை நிறுவிய ஹாரி நாவல்ஸ் சற்று மேலே போய் தன்னுடைய வாசகர்களை “இந்த படத்திற்கு ஆதரவளிக்க வேண்டாமென்று” கேட்டுக் கொண்டார். ஏனென்றால் “நீங்கள் [உங்கள் குழந்தைகளை] இருப்பதிலேயே ஒரு கேவலமான நகைச்சுவை, மாறாநிலைகள் (ஸ்டீரியோடைப்ஸ்) மற்றும் இனவெறியூட்டும் படத்திற்கு அழைத்து செல்வீர்கள்” என்று கூறியிருந்தார்.[134] இயக்குநர் பே தன்னுடைய திரைப்படத்தை “நல்ல ஆரோக்கியமான வேடிக்கையளிக்கும்” திரைப்படமென்று கூறி பாதுகாக்க முயற்சித்து “நாங்கள் கூடுதல் தனித்தன்மைகளைச் சேர்க்க விரும்புகிறோம் அவ்வளவு தான்” என்று வலியுறுத்தினார்.[135] ரொபர்ட்டோ ஆர்ஸியும் அலெக்ஸ் குர்ட்ஸ்மேனும் இந்த சர்ச்சைக்கு பதிலளிக்கும்போது “இங்கே உட்கார்ந்துகொண்டு அதை நியாயப்படுத்த எங்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது. அப்படி செய்வது முட்டாள்தனமானதென்று நினைக்கிறேன். யாராவது அதனால் புண்படுத்தப்பட்டார்கள் என்றால் அது அவர்களைப் பொறுத்தது. நாங்கள் அதைப் பார்க்கும்போது கூட மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனோம் அது நாங்கள் எடுத்த தேர்வுதான். இதிலிருந்து ஒன்று மட்டும் வெளியாகிறது நாங்கள் படத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் இயக்குவது கிடையாது என்பது தான்."[136]

பாக்ஸ் ஆபீஸ்

பெரும்பாலும் இருதரப்பு மற்றும் எதிர்மறை விமர்சக வரவேற்பு இருந்திருந்தாலும் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் எண்ணிக்கைகளைப் பார்க்கும்போது பெருத்த எண்ணிக்கையில் மக்களை வசீகரித்துள்ளது.ரிவஞ்ச் ஆஃப் த ஃபாலன் அதனுடைய நள்ளிரவு முதல் காட்சியில் டாலர்16 மில்லியன் சம்பாதித்தது. அந்த நேரத்தில் புதன் நள்ளிரவு முதல் காட்சியில் அதுவே மிக அதிகமான வசூலாக இருந்தது. படம் அங்கிருந்து வரலாற்றிலேயே பெரிய புதன் வெளியீட்டை சாதித்தது. அதன் முதன் நாளிலேயே மொத்தம் டாலர்62 மில்லியன் வசூலைப் பெற்றது. கூடுதலாக த டார்க் நைட்டிற்கு பிறகு இதுவே இரண்டாவது-பெரிய வெளியீடு தினத்தை அடைந்தது. திரைப்படம் அதன் முதல் வாரயிறுதியில் டாலர்108.9 மில்லியன் சம்பாதித்தது. இதனால் இது 2009 ஆம் ஆண்டில் மிக அதிகமான வாரயிறுதி வசூலாகவும் வரலாற்றில் ஏழாவது இடத்தையும் பிடித்தது. முதல் ஐந்து நாட்களில் டாலர்200 மில்லியன் வசூலித்து த டார்க் நைட்ஸிற்கு பிறகு முதல் ஐந்து நாள் வசூலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. த டார்க் நைட்ஸ் முதல் ஐந்து-நாள் வெளியீட்டில் டாலர் 203.7 மில்லியன் வசூலித்து முதல் இடத்தை வகிக்கிறது.

ரிவஞ்ச் ஆஃப் த ஃபாலன் ஒரு நெருக்கமான வித்தியாசத்தில் முதல் இரண்டு வாரங்களுக்குத் தொடர்ந்து வசூலில் முதல் இடத்தை வகித்தது. ஆரம்ப ஸ்டூடியோ கணிப்புகள் அதற்கு அந்த வாரத்தின் புதிய வெளியீடுடன் சமநிலையக் காட்டின Ice Age: Dawn of the Dinosaurs ஆனால் உண்மை எண்ணிக்கைகள் வந்தபோது ரிவஞ்ச் ஆஃப் த ஃபாலன் டாலர்42,320,877 வசூலித்து மறுபடியும் முதல் இடத்தைக் கைப்பற்றியது.[137] மேலும் 2009ல் உள்ளூரில் $300 மில்லியன் குறியீட்டை அடைந்த முதல் படமாகவும் அது இருந்தது.[138]

வெளியிடப்பட்டு ஒரு மாதத்திற்குள் 2009 ஆம் ஆண்டு ஜூலை 20 அன்றுக்குள் ரிவஞ்ச் ஆஃப் த ஃபாலன் 2007 ஆம் ஆண்டு டிரான்ஸ்ஃபார்மர்ஸ் படத்தின் அனைத்து வசூலையும் விஞ்சியது.[139] மேலும் ஜூலை 27 அன்று, படம் வெளியாகி ஒரு மாதத்திற்குப் பிறகு அது அமெரிக்காவில் டாலர்379.2 மில்லியனை எட்டியது. இதனால் இந்த படம் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அந்நாட்டின் மிக அதிகமாக வசூலித்த 10 படங்களில் இடம்பெறுகிறது.[140] டிரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரிவஞ்ச் ஆஃப் த ஃபாலன் சீனாவில் இதுவரையும் மிகவும் அதிகமாக வசூலித்த படமாக இருக்கிறது.[141]

2009 ஆம் ஆண்டு அக்டோபர் 13 அன்று நிலவரப்படி இந்த திரைப்படம் அமெரிக்காவில் சுமார் டாலர்402,095,833 வசூலித்ததாக அறிவிக்கப்படுகிறது. இது வெளிநாடுகளில் சுமார் டாலர்430,635,467 சேர்த்து மொத்தம் உலகளவில் சுமார் டாலர்832,747,337 வசூலித்திருக்கிறது. இதன் மூலம் ஹாரி பாட்டர் அண்ட் த ஹாஃப்-பிளட் பிரின்ஸ் மற்றும் Ice Age: Dawn of the Dinosaurs திரைப்படங்களுக்கு அடுத்து 2009 ஆம் ஆண்டில் மூன்றாவது அதிகம் வசூலித்த படமாகிறது.[142] 2009ல் $400 மில்லியன் எட்டிய முதல் படமும் இது தான்.

தொடர்படம்

பிறருக்கு முன்பாக நிலைமையைக் கைப்பற்றும் வகையில் பாராமௌண்டும் ட்ரீம்வொர்க்ஸும் ரிவஞ்ச் ஆஃப் த ஃபாலன் முடிவடையும், முன்னர் மூன்றாவது டிரான்ஸ்ஃபார்மர்ஸ் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியாக 2011 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதியை அறிவித்தனர். பதிலுக்கு பே, “நான் டிரான்ஸ்ஃபார்மர்ஸிடமிருந்து ஒரு வருடம் ஓய்வெடுத்துக்கொள்கிறேன் என்று கூறியிருந்தேன். டிரான்ஸ்ஃபார்மர்ஸ் 3 தேதி குறிப்பிடுவதில் பாராமௌண்ட் தவறு செய்துவிட்டார்கள் - அவர்கள் என்னிடம் தொலைபேசியில் கேட்டார்கள் - நான் ஜூலை 4ஆம் தேதிக்கு சரின்று சொன்னேன் - ஆனால் 2012 ஆம் ஆண்டில் - அச்சச்சோ! 2011 இல்லை! அப்படியென்றால் நான் செப்டம்பரிலிருந்தே ஆயத்தமாக வேண்டும். வாய்ப்பே இல்லை. ரோபொக்களிடம் சண்டையிடுவதிலிருந்து என் மூளைக்கு சற்று ஓய்வு தேவை” என்றார்."[143] ரிவஞ்ச் ஆஃப் த ஃபாலன் போலவே தொடர் படத்திற்கு ஆர்ஸியும் குர்ட்ஸ்மேனும் திரும்பி வருவார்களென்று உத்தரவாதமளிக்க ஆர்ஸி மறுத்தார். ஏனென்றால் “போர் அடித்து விடுமோ” என்று அஞ்சினார்கள்.[144] “அளவுகள் பெரிதடைவதற்காகவது” அவர் யூனிகிரானை அறிமுகப்படுத்த விரும்பியதாக கூறியிருக்கிறார்.[22] உடன் - எழுத்தாளரான ஆர்ஸி இன்னும் அதிகமான மூன்று- வடிவங்கள்-மாறக்கூடிய கதாபாத்திரங்களில் கவனம் செலுத்துவதும் சுவாரசியமாக இருக்குமென்று கூறினார்.[145]

2009 ஆம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி மைக்கல் பே டிரான்ஸ்ஃபார்மர்ஸ் 3 திரைப்படம் ஏற்கனவே தயாரிப்புக்கு-முன் நிலைக்கு சென்றுவிட்டதென்றும் அதனுடைய திட்டமிடப்பட்ட தேதி 2012 ஆம் ஆண்டுக்கு பதிலாக 2011 ஆன் ஆண்டு ஜூலை 1 அன்று என்று வெளிப்படுத்தினார். மேலும் எஹ்ரன் க்ரூகர் மறுபடியும் எழுத்தில் ஈடுபடப்போவதாகவும் ஷியா லெபூஃபும் மேகன் ஃபாக்ஸும் தங்களுடைய பாத்திரங்களாகிய சாம் மற்றும் மிகேலாவை முறையே மறுபடியும் சித்தரிக்கப்போவதாக கூறினார்.[146] முதல் இரண்டு படங்களை எழுதியிருந்த ரொபர்ட்டோ ஆர்ஸியும் அலெக்ஸ் குர்ட்ஸ்மேனும் தொடரில் மூன்றாவது படத்தை எழுத திரும்பிவரமாட்டார்கள்.[147][148]

ரிவஞ்ச் ஆஃப் த ஃபாலனின் ப்ளூ-ரே வடிவில் ஒரு மறைந்திருந்த கூடுதல் ஒளிப்பதிவில் பே டிரான்ஸ்ஃபார்மர்ஸ் 3 செய்வதற்கான தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார். ரிவஞ்ச் ஆஃப் த ஃபாலனை விட அவசியம பெரிதாக இல்லாவிட்டாலும் இந்த புராணக்கதைகளில் இன்னும் ஆழமாக சென்று, அதிகம் பாத்திரச் செறிவை அளிக்கவும் அதை இன்னும் மர்மத்தன்மையுடனும் உணர்ச்சிப்பூர்வமாக்கவும் விரும்பியதாகக் கூறியிருக்கிறார். அந்த நிகழ்படம் யூனிகிரானின் படங்களையும் காண்பிக்கிறது.[149]

குறிப்புகள்

புற இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை