டேவிட் குடால்

டேவிட் வில்லியம் குடால் ( David William Goodall 4 எப்பிரல் 1914 – 10 மே 2018 ) என்பவர் பிரித்தானியாவில் பிறந்த ஆத்திரேலிய வாழ் உயிரியல் அறிவியலாளர் ஆவார். சுற்றுப்புறவியலின் புள்ளி விவரங்கள் மற்றும் மரம் செடி கொடி பற்றிய ஆய்வு செய்தவர்.[1][2]

பிறப்பு, படிப்பு, பணிகள்

டேவிட் குடால் இலண்டன் பல்கலைக்கழகத்தில் பயின்று அறிவியலில் பட்டம் பெற்றார். தக்காளிச் செடி பற்றிய ஆய்வுகள் செய்து முனைவர் பட்டம் பெற்றார். இக்கால கட்டத்தில் அவரால் இரண்டாம் போரில் கலந்து கொள்ள முடியவில்லை.[3]1948 இல் ஆத்திரேலியாவுக்குச் சென்று குடியேறினார். மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பணி செய்தார். 1952 முதல் 1954 வரை கோல்ட் கோஸ்த் பல்கலைக்கழகத்தில் பயிரியல் துறை ஆசிரியராகப் பணி புரிந்தார். 1953 இல் மெல்போர்ன் பல்கலைக் கழகத்தில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்றார்.

அக வாழ்க்கை

குடால் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார்.நான்கு குழந்தைகளும் 12 பெயரக் குழந்தைகளும் இவருக்கு உண்டு.தமது மரபியல் தம்மை இத்தனை ஆண்டுகள் வாழ வைத்தது என்றும் உ யிரோடு வாழ செயலூக்கத்துடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.[4]தமது 90 அகவை வரை டென்னிஸ் விளையாடினார்.கவிஞராகவும் நடிகராகவும் இருந்தார்.[5][6]

இறுதிக்காலம்

நூற்று நான்கு ஆண்டுகள் வாழ்ந்த டேவிட் குடால், சுவிட்சர்லாந்தில் அந்த நாட்டின் இசைவைப் பெற்று, ஆங்கு சென்று, ஒரு மருத்துவமனையில் தம்மைத் தாமே மாய்த்துக் கொண்டார். இந்தச் செய்தி அறிவு உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.[7]

உசாத்துணை

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=டேவிட்_குடால்&oldid=3759519" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை