தாயுமானவர் (திரைப்படம்)

திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் இயக்கத்தில் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தாயுமானவர் (Thayumanavar) 1938 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் எம். எம். தண்டபாணி தேசிகர், சி. எஸ். செல்வரத்தினம் பிள்ளை மற்றும் பலர் நடித்திருந்தனர். பி. நரசிம்ம ராவ் இசையமைப்பில் பாடல்களை எழுதியவர் பாபநாசம் சிவன்.[1]

தாயுமானவர்
இயக்கம்டி. ஆர். சுந்தரம்
தயாரிப்புஜெயபாரதி பிலிம் கம்பனி
கதைடி. ஆர். செட்டியார்
இசைபிங்கல நரசிம்ம ராவ்
நடிப்புஎம். எம். தண்டபாணி தேசிகர்
சி. எஸ். செல்வரத்தினம் பிள்ளை
டி. ஈ. கிருஷ்ணமாச்சாரி
பி. ஜி. வெங்கடேசன்
எம். எஸ். தேவசேனா
பி. சாரதாம்பாள்
என். எஸ். ரத்னாம்பாள்
பி. எஸ். ஞானம்
ஒளிப்பதிவுபி. கே. கிருஷ்ண ஐயர்
வெளியீடுதிசம்பர் 31, 1938
ஓட்டம்.
நீளம்19000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

முத்துக்கிருஷ்ண நாயக்கர் திருச்சிராப்பள்ளியை ஆண்டு வருபவர். ஒரு நாள் வேதாரண்யம் கோவிலுக்குச் செல்கிறார். அங்கே தர்மாதிகாரி இவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கிறார். அதனால் மனம் மகிழ்ந்து அவரை தனது அமைச்சராக்குகிறார். அந்த அமைச்சருக்கு தாயுமானவன் என்ற மகன் இருக்கிறார். முத்துகிருஷ்ண நாயக்கர் இறந்த பின்னர் அவரது மகன் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தாயுமானவனை தனது அமைச்சராக்கிக் கொள்கிறார். தாயுமானவன் மிகுந்த அறிவாளியாகத் திகழ்கிறார். நாட்டின் வளர்ச்சியில் அரசனுக்கு உறுதுணையாக உள்ளார். அவர் தத்துவத்திலும், ஆன்மீகத்திலும் மிக ஈடுபாடு கொண்டிருந்தார். தாயுமானவரது சக்தியை உணர்த்த அரசன் விரைவில் அவரைப் பின்பற்றும் சீடராக மாறுகிறார். தன்னுடைய ஆற்றலால் பல அற்புதங்களை நடத்திய தாயுமானவன் காலப்போக்கில் மரணத்தைத் வென்று துறவியாகிறார்

நடிகர்கள்

தி இந்து நாளிதழ் தொகுப்பிலிருந்தும் ,பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் தொகுப்பிலிருந்தும் எடுக்கப்பட்டது.

  • எம். எம். தண்டபாணி தேசிகர்
  • எம். எஸ். தேவசேனா
  • இ எஸ். செல்வரத்னம் பிள்ளை
  • பி. சாரதாம்பாள்
  • டி. இ. கிருஷ்ணமாச்சாரி (டிஇகே)
  • என். எஸ். ரத்னாம்பாள்
  • பி. தி வெங்கடேசன்
  • பி. எஸ். ஞானம்

தயாரிப்பு

1930 களின் போது பல படங்களில் ஞானிகளின் வாழ்க்கைக் கதைகள் இடம்பெற்றன. எம்.எம்.தண்டபானி தேசிகர் கர்நாடக இசையில் நன்கு பயிற்சி பெற்றிருந்ததாலும், மதம் சம்பந்தமான அறிவு கொண்டவரென்பாதாலும் தயாரிப்பாளர்களின் வெளிப்படையான தேர்வாக இருந்தார். முன்னதாக பட்டினத்தார் அதற்குப் பின்னர் நந்தனார் போன்றவை இவர் நடித்திருந்த படங்களாகும்

ஒலித்தொகுப்பு

பிங்கல நரசிம்ம ராவ் இசையமைத்திருந்தார். பாடல்களை பாபநாசம் சிவன் எழுதியுள்ளார். 1,500 பாடல்களுக்கு மேல் பாடியுள்ள எம்.எம்.தண்டபானி தேசிகர் இந்த படத்தில் இடம் பெற்ற 31 பாடல்களில் பெரும்பாலானவற்றை பாடியிருந்தார்

படம் இழப்பு

இந்த படத்தின் அச்சு தற்போது இல்லை என அறியப்படுகிறது.

வரவேற்பு

திரைப்பட வரலாற்று ஆசிரியர் ராண்டார் கை இந்த படம் "தண்டபாணி தேசிகரின் சிறந்த பாடல்களுக்காகவும் மற்றும் புனித இடங்களைக் கொண்ட காட்சிகளுக்காகவும் எப்பொழுதும் நமது நினைவிலிருக்கும் என 2012இல் எழுதுகிறார்."

உசாத்துணை

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை