திராவிட மொழிக் குடும்பம்

தென்னிந்தியாவில் முதன்மையாகப் பேசப்படும் மொழிக்குடும்பம்

திராவிட மொழிகள் (Dravidian languages) பெரும்பாலும் தென்னாசியாவில் பேசப்படும் 86 மொழிகளை உள்ளடக்கிய ஒரு மொழிக் குடும்பமாகும்.[1] இம்மொழிகளை 215 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பேசுகின்றனர்.[2] இவை தெற்கு, தென்-மத்தி, மத்தி, வடக்கு என நான்கு குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன. இவற்றில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியன இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்நான்கு மொழிகளும் முறையே தமிழ் நாடு, ஆந்திரப் பிரதேசம், கருநாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் அலுவல் மொழிகளாகத் திகழ்கின்றன.

திராவிடம்
புவியியல்
பரம்பல்:
தெற்காசியா, அதிகமாக தென் இந்தியா
மொழி வகைப்பாடு:உலகிலுள்ள பெரிய மொழிக் குடும்பங்களில் ஒன்று
முதனிலை-மொழி:முதனிலைத் திராவிட மொழி
துணைப்பிரிவு:
வடக்கு
மத்தி
தெற்கு
எத்னாலாக் குறி:17-1265
ISO 639-2 and 639-5:dra

Distribution of subgroups of Dravidian languages:

     வடக்கு
     மத்தி
     தென் மத்தி
     தெற்கு

தென்னிந்திய மொழிகள்பற்றி ஆராய்ந்து, 'திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பத்தின் ஓர் ஒப்பிலக்கணம்' என்ற நூலை 1856-இல் எழுதிய இராபர்ட்டு கால்டுவெல், இந்த நான்கு மொழிகளுடன், தென்னிந்தியாவிலிருந்த வேறு சில மொழிகளையும் சேர்த்து, அவற்றைச் சுட்டுவதற்காகத் 'திராவிட' என்ற சொல்லை உருவாக்கினார்.[3] பின்னர் வந்த ஆய்வாளர்கள், திராவிட மொழிகளைச் சேர்ந்த மேலும் சில மொழிகள், மத்திய இந்தியா, வட இந்தியா, பாகித்தானிலுள்ள பலூச்சித்தான், நேபாளம் ஆகிய இடங்களில் வழங்கி வருவதை எடுத்துக்காட்டினர்.

வரலாறு

பொ.ஊ.மு. 1500 அளவில், ஆரியர் இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன், இந்தியா முழுவதும் திராவிட மொழிகளே வழங்கி வந்தன என்பது பல ஆய்வாளர்களது கருத்து.[4] திராவிட மொழிகளில் இருந்து இந்திய ஆரிய மொழிகளுக்குச் சென்றிருக்கும் நாமடங்கு ஒலியன்கள் முதலிய மொழியியல் சான்றுகள் கிடைத்தாலும் இதை அறுதியிட்டுக் கூறும் அளவிற்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. சரசுவதி - சிந்து பள்ளத்தாக்குகளில் வளர்ச்சிபெற்ற நாகரிகமும் திராவிட நாகரீகமே என்ற கருத்தும் பல முன்னணி ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.[4] அரப்பா, மொகஞ்சதாரோ முதலிய சிந்துவெளிப் பள்ளத்தாக்கு நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்ட, இன்னும் வாசிக்கப்படாத எழுத்துக்களும், அக்காலத்தில் வழங்கிய திராவிட மொழிக்கானவையே என்பதும் அவர்கள் கருத்து. ஆனால் , பல ஆய்வாளர்கள் அக்கருத்தை மறுத்தும் வருகிறார்கள். சிந்துவெளிக் குறியீடுகள் எந்த மொழிக்கு உரியவை என்பது இன்னும் அறியப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

திராவிட மொழிகள் இந்தியத் துணைக்கண்டத்தில் அவற்றின் புவியியற் பரம்பலைக் கருத்திற் கொண்டு ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை:

  1. தென் திராவிடம்
  2. தென்-நடுத் திராவிடம்
  3. நடுத் திராவிடம்
  4. வட திராவிடம்
  5. வகைப்படுத்தப்படாதவை

என்பனவாகும்.

இவற்றுள் தென் திராவிடப் பிரிவில் 34 மொழிகளும், தென்-நடுத் திராவிடப் பிரிவில் 21 மொழிகளும், நடுத் திராவிடப் பிரிவில் 5 மொழிகளும், வட திராவிடப் பிரிவில் 5 மொழிகளும், வகைப்படுத்தப் படாதவையாக 8 மொழிகளுமாக மொத்தம் 73 மொழிகள் கண்டறியப் பட்டுள்ளன.இவற்றுள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கும் திராவிடப் பெருமொழிகளாகும்.தமிழையும் அதன் கிளைமொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளையும் ஒரு காலத்தில் தமிளியன் அல்லது தமுலிக் என்று வழங்கினர்.

சான்று:திராவிட மொழிகள், ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடநூல், தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம், சென்னை.

வகைப்பாடு

திராவிடம் 
 தெற்கு  
 தெற்கு (SD I)
 (தமிழ்துளு-கன்னடம்
 தமிழ் 

தமிழ்

மலையாளம்

 குடகு 

குடகு மொழி

குறும்பா மொழி

கோத்தர் மொழி

தோடா மொழி

 கன்னடம்–படுக 

கன்னடம்

படுக மொழி

 துளு 

கொற்ற கொரகா

துளுவம் (பெல்லாரி மொழி?)

குடியா

 தென்-மத்தி (SD II) 
 (தெலுங்கு–குயி) 
 கோண்டி–குயி 
 கோண்டி 

கோண்டி

மாரியா

முரியா

பர்தான்

நாகர்ச்சால்

கிர்வார்

கொண்டா

முகா டோரா

கூய் மொழி

குவி மொழி

கோயா மொழி

மண்டா மொழி

பெங்கோ மொழி

 தெலுங்கு 

தெலுங்கு

செஞ்சு

 மத்தி 
 (கொலாமி–பார்சி) 

நைக்கி

கொலாமி

ஒல்லாரி (கடபா)

துருவா மொழி

 வடக்கு 
 குடக்கு–மல்டோ 

குடக்கு (ஒரன், கிசன்)

 மல்டோ 

Kumarbhag Paharia

Sauria Paharia

பிராகுயி மொழி

பரம்பல்

மொழிவகைபேசுவோர் எண்ணிக்கைஇடம்
தமிழ்தெற்கு70,000,000தமிழ்நாடு, புதுச்சேரி (காரைக்கால்), ஆந்திரப் பிரதேசம் (சித்தூர், நெல்லூர் பகுதிகள்), கருநாடகம் (பெங்களூர், கோலார்), கேரளம் (பாலக்காடு, இடுக்கி), அந்தமான் நிக்கோபார் தீவுகள், ஆங்காங், சீனா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவூதி அரேபியா, குவைத், ஓமான், கம்போடியா, தாய்லாந்து, மொரிசியசு, சீசெல்சு, ஆத்திரேலியா, தென்னாப்பிரிக்கா, செருமனி, கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அரபு அமீரகம், மியான்மர், ரீயூனியன், தென்னாப்பிரிக்கா.
கன்னடம்தெற்கு38,000,000கருநாடகம், கேரளம் (காசர்கோடு மாவட்டம்), மகாராட்டிரம் (சோலாப்பூர் மாவட்டம், சாங்கலி, மிராச்சு, லாத்தூர்), தமிழ்நாடு (சேலம், உதகமண்டலம், சென்னை), ஆந்திரப் பிரதேசம் (அனந்தபூர், கர்னூல்), தெலுங்கானா (ஐதராபாத்து (இந்தியா) மேதக், மகபூப்நகர்)
மலையாளம்தெற்கு38,000,000கேரளம், இலட்சத்தீவுகள், மாகே மாவட்டம் (புதுச்சேரி), தெற்கு கன்னடம் மாவட்டம், குடகு மாவட்டம் (கருநாடகம்), கோயம்புத்தூர், நீலகிரி, கன்னியாகுமரி (தமிழ்நாடு), ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்க ஐக்கிய நாடு, சவூதி அரேபியா, குவைத், ஓமான், ஐக்கிய இராச்சியம், கத்தார், பகுரைன்
துளுவம்தெற்கு1,700,000கருநாடகம் (தெற்கு கன்னடம் மாவட்டம், உடுப்பி), கேரளம் (காசர்கோடு மாவட்டம்)
பியரி மொழிதெற்கு1,500,000கருநாடகம் (தெற்கு கன்னடம் மாவட்டம், உடுப்பி), கேரளம் (காசர்கோடு மாவட்டம்)
படுக மொழிதெற்கு400,000தமிழ்நாடு (நீலகிரி மாவட்டம்)
குடகு மொழிதெற்கு300,000கருநாடகம் (குடகு மாவட்டம்)
குறும்பா மொழிதெற்கு220,000தமிழ்நாடு (நீலகிரி மாவட்டம்)
காணிக்காரர் மொழிதெற்கு19,000தமிழ்நாடு (நீலகிரி மாவட்டம்), கேரளம்
கொற்ற கொரகாதெற்கு14,000கருநாடகம் (தெற்கு கன்னடம் மாவட்டம், உடுப்பி மாவட்டம்), கேரளம் (காசர்கோடு மாவட்டம்)
இருளாதெற்கு4,500தமிழ்நாடு (நீலகிரி மாவட்டம்)
தோடாதெற்கு1,100தமிழ்நாடு (நீலகிரி மாவட்டம்)
கோத்தர்தெற்கு900தமிழ்நாடு (நீலகிரி மாவட்டம்)
அல்லர்தெற்கு300கேரளம்
தெலுங்குதென் மத்தி75,000,000ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ஏனாம் மாவட்டம் (புதுச்சேரி), அந்தமான் நிக்கோபார் தீவுகள், தமிழ்நாடு
கோண்டிதென் மத்தி2,000,000மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம், சத்தீசுகர், தெலுங்கானா, ஒடிசா
முரியாதென் மத்தி1,000,000சத்தீசுகர், மகாராட்டிரம், ஒடிசா
கூய்தென் மத்தி700,000ஒடிசா
மாரியாதென் மத்தி360,000சத்தீசுகர், தெலுங்கானா, மகாராட்டிரம்
குவிதென் மத்தி350,000ஒடிசா
பெங்கோதென் மத்தி350,000ஒடிசா
கோயாதென் மத்தி330,000ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீசுகர்
பர்தான்தென் மத்தி117,000தெலுங்கானா, சத்தீசுகர், மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம்
செஞ்சுதென் மத்தி26,000ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா
கொண்டாதென் மத்தி20,000ஆந்திரப் பிரதேசம், ஒடிசா
நாகர்ச்சால்தென் மத்தி7,000மத்தியப் பிரதேசம், சத்தீசுகர், மகாராட்டிரம்
மண்டாதென் மத்திl4,000ஒடிசா
கொலாமிமத்தி115,000தெலுங்கானா, மகாராட்டிரம்
துருவாமத்தி80,000சத்தீசுகர்
ஒல்லாரிமத்தி23,000ஆந்திரப் பிரதேசம், ஒடிசா
நைக்கிமத்தி10,000ஆந்திரப் பிரதேசம், மகாராட்டிரம்
பிராகுயிவடக்கு4,200,000பலூசித்தான் (பாக்கித்தான்)
குடக்குவடக்கு2,000,000சத்தீசுகர், சார்க்கண்டு, ஒடிசா, மேற்கு வங்காளம்
சவ்ரியா பகரியாவடக்கு120,000பீகார், சார்க்கண்டு, மேற்கு வங்காளம்
குமார்பக் பகரிய்வடக்கு18,000சார்க்கண்டு, மேற்கு வங்காளம்

எண்கள்

ஒன்று முதல் பத்து வரையான எண்கள் பல்வேறு திராவிட மொழிகளில் கொடுக்கப் பட்டுள்ளன.

எண்தமிழ்தெலுங்குகன்னடம்துளுமலையாளம்குறுக்கோலமிபிராகுயிமூலத் திராவிடம்
1ஒன்றுஒக்கட்டிஒந்துonjionnu ஒந்நுoaokkodasi*oru(1)
2இரண்டுரெண்டுஎரடுradurandu ரண்டுindiŋirāirā*iru(2)
3மூன்றுமூடுமூருmūjinnu மூந்நுmūndmūndiŋmusi*muC
4நான்குநாலுகுநாலக்குnālunālu நாலுkhnāliŋčār (II)*nāl
5ஐந்துஐதுஐதுainuañcu அண்சுpancē (II)ayd(3)panč (II)*cayN
6ஆறுஆறுஆறுājiāru ஆறுsoyyē (II)ār(3)šaš (II)*caru
7ஏழுஏடுēluēluēzhu ஏழுsattē (II)ē(3)haft (II)*eu
8எட்டுஎணிமிதிஎண்ட்டுēmaeu எட்டுahē (II)enumadī (3)hašt (II)*eu
9ஒன்பதுதொம்மிதிஒம்பத்துormbaonbatu ஒம்பதுnaiyē (II)tomdī (3)nōh (II)*to
10பத்துபதிகத்துpattupathu பத்துdassē (II)padī (3)dah (II)*pat(tu)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை