தி சாண்ட்மேன் (தொலைக்காட்சித் தொடர்)

தி சாண்ட்மேன் (ஆங்கில மொழி: The Sandman) என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் புனைகதை திகில் புனைவு நாடகத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் இதே பெயரில் நீல் கெய்மென் என்பவரால் (1989-1996) எழுதி, டிசி காமிக்ஸால் வெளியிடப்பட்ட வரைகதை புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு நீல் கெய்மென், டேவிட் எஸ். கோயர் மற்றும் ஆலன் கேய்ன்பெர்கு ஆகியோரால், நெற்ஃபிளிக்சு என்ற ஓடிடித் தளத்திற்க்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொடரை டிசி என்டர்டெயின்மென்டு மற்றும் வார்னர் புரோஸ். தொலைக்காட்சி தயாரிக்கிறது. இது சாண்ட்மேன் என்ற பெயரிடப்பட்ட கனவுகளின் அரசனனின் கதையைச் சொல்கிறது. இந்தத் தொடரில் நடிகர் டாம் இஸ்டர்ரிட்ஜ்[4][5] என்பவர் மார்பியஸாக நடிக்க, விவியென் அச்செம்போங் மற்றும் பாட்டன் ஓஸ்வால்ட்டு ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

தி சாண்ட்மேன்
வகை
மூலம்
தி சாண்ட்மேன்
படைத்தவர்
முன்னேற்றம்
நடிப்பு
  • டாம் இஸ்டர்ரிட்ஜ்
  • பாய்ட் கோல்ப்ரூக்கு
  • விவியென் அச்சியாம்பாங்
  • பாட்டன் ஓஸ்வால்ட்டு
இசைடேவிட் பக்கிலி
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
பருவங்கள்1
அத்தியாயங்கள்10
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்
  • சாம்சன் முக்கே
  • இயன் சிமித்
  • அலெக்சாண்டர் நியூமன்-வைசு
  • ஆண்ட்ரூ கொலர்டன்
படப்பிடிப்பு தளங்கள்ஐக்கிய இராச்சியம்
ஒளிப்பதிவு
  • வில் பால்டி
  • ஜார்ஜ் இசுடீல்
  • சாம் ஹெஸ்மேன்
தொகுப்பு
  • டேனியல் காபே
  • ஷோஷானா டான்சர்
  • ஜாமின் பிரிக்கர்
  • கெல்லி ஸ்டுய்வேசன்ட்
ஓட்டம்37–54 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைநெற்ஃபிளிக்சு
ஒளிபரப்பான காலம்ஆகத்து 5, 2022 (2022-08-05)
வெளியிணைப்புகள்
இணையதளம்

தி சாண்ட்மேனை திரைப்படத்திற்கு மாற்றியமைக்கும் முயற்சிகள் 1991 இல் தொடங்கி, பல ஆண்டுகளாக வளர்ச்சி தடை பெற்றது. பின்னர் 2013 இல் டேவிட் எஸ். கோயர் என்பவர் இந்தத் தொடரின் திரைப்படத் தழுவலை வார்னர் புரோஸ். நிறுவனத்திற்கு வழங்கினார். இந்த தொடரை டேவிட் எஸ். கோயர் மற்றும் ஆலன் கேய்ன்பெர்கு உடன் இணைந்து ஜோசப் கார்டன்-லெவிட் என்பவர் தயாரிக்கத் திட்டமிடப்பட்டனர், அத்துடன் ஜோசப் கார்டன்-லெவிட் நடிக்கவும், இயக்கவும் திட்டமிடப்பட்டது. இருப்பினும், 2016 இல் படைப்பு வேறுபாடுகளால் வெளியேறினார். பின்னர் படத்தின் நீடித்த வளர்ச்சியின் காரணமாக, வார்னர் புரோஸ். நிறுவனம் தொலைக்காட்சியில் கவனம் செலுத்தியது.[6] அத்துடன் ஜூன் 2019 இல் இந்த தொடரை நெற்ஃபிளிக்சு என்ற ஓடிடி தளத்திற்க்கு தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, மேலும் படப்பிடிப்பு அக்டோபர் 2020 முதல் ஆகஸ்ட் 2021 வரை நீடித்தது.

சாண்ட்மேன் ஆகத்து 5, 2022 அன்று திரையிடப்பட்டது.[7] இது பொதுவாக விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, நடிகர்கள் தேர்வு, தயாரிப்பு வடிவமைப்பு, ஆடைகள், அதன் மூலப்பொருளுக்கான விசுவாசம், காட்சி விளைவுகள் மற்றும் நிகழ்ச்சிகள், குறிப்பாக ஸ்டுரிட்ஜ் மற்றும் டேவிட் தெவ்லிஸ் ஆகியோரின் நடிப்பு பாராட்டப்பட்டது. இருப்பினும் சிலர் இதன் வேகத்தையும் கதையையும் விமர்சித்தனர்.

கதை கரு

மோர்பியசு எனும் சாண்ட்மேன், கனவுகளின் ஆளுமை மற்றும் ஏழு எண்ட்லெஸில் ஒருவர், இவர் 1916 இல் ஒரு அமானுஷ்ய சடங்கில் பிடிக்கப்பட்டார். 106 ஆண்டுகள் சிறைபிடிக்கப்பட்ட பிறகு, சாண்ட்மேன் தப்பித்து தனது சாம்ராஜ்யமான தி ட்ரீமிங்கில் ஒழுங்கை மீட்டெடுக்க புறப்படுகிறார்.

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை