தீப் சிங் சித்து

சந்தீப் சிங் சித்து (Sandeep Singh Sidhu) (2 ஏப்ரல் 1984 – 15 பிப்ரவரி 2022) தீப் சித்து என்று பரவலாக அறியப்பட்ட இவர் சீக்கிய சமூக செயற்பாட்டாளரும், வழக்கறிஞரும் ஆவார். இவர் பஞ்சாபி மொழித் திரைப்படங்களில் நடித்தவர். [2][3]

தீப் சிங் சித்து
பஞ்சாப் வாரிசுகள் இயக்கத்தின் முதல் தலைவர்
பதவியில்
செப்டம்பர், 2021 – 15 பிப்ரவரி 2022
பின்னவர்அம்ரித்பால் சிங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சந்தீப் சிங் சித்து

(1984-04-02)2 ஏப்ரல் 1984
உதேகாரன், முக்த்சர் சாகிப் மாவட்டம், பஞ்சாப், இந்தியா
இறப்பு15 பெப்ரவரி 2022(2022-02-15) (அகவை 37)
கார்கோடா, சோனிபத் மாவட்டம், அரியானா இந்தியா [
வேலைவழக்கறிஞர், சமூக ஆர்வலர்[1]
அறியப்படுவதுசமூக செயற்பாட்டாளர், நிறுவனர்:பஞ்சாப் வாரிசுகள் இயக்கம்

2019ல் பஞ்சாப் அரசியலில் நுழைந்த சித்து, முதலில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவளித்தார். பின்னர் 2020-2021ல் இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார்.[4]இவர் சாலை விபத்தில் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் சீக்கிய சமூக & அரசியல் அமைப்பான பஞ்சாபின் வாரிசுகள் இயக்கம்[5] ஒன்றை ஆரம்பித்தார்.[6][7][8]

இளமை வாழ்க்கை

தீப் சிங் சித்து 2 ஏப்ரல் 1984 அன்று பஞ்சாபில் சீக்கிய குடும்பத்தில் பிறந்தவர்.[9][10][a] [2][12][13]இவரது தந்தை ஒரு வழக்கறிஞர் மற்றும் இவரது நான்காவது அகவையில் தனது தாயைப் பறிகொடுத்தவர்.[14]தீப் சிங் சித்துவின் இரண்டு சகோதரர்கள் சுர்ஜித் மற்றும் மன்தீப் சிங் ஆவார்.[15][16]சித்து பாட்டியாலாவில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றவர்.[17]தீப் சிங் சித்து பஞ்சாபிய மொழித் திரைப்படங்களில் நடித்தார்.[18]

தொழில்

திரைப்பட நடிகராக வருவதற்கு முன்னர் தீப் சிங் சித்து மும்பையில் வழக்கறிஞர் தொழில் செய்து வந்தார்.[19][12]

அரசியல்

தீப் சிங் சித்து 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனது நண்பரான சன்னி தியோல் எனும் திரைப்பட நடிகருக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் தீப் சிங் சித்து, அஜ்மீர் சிங் எழுதிய பஞ்சாப் மற்றும் சீக்கிய வரலாறு மற்றும் காலிஸ்தான் இயக்க நூல்களை படித்தார். 2020-2021ல் இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார்.[20]

2021 தில்லி குடியரசு நாள் அணி வகுப்பின் போது, விவசாயிகளில் ஒரு பிரிவினர் தீப் சிங் சித்து தலைமையில் பேராணியாக தில்லி செங்கோட்டைக்குச் சென்று, அங்கு கம்பத்தில் பறந்து கொண்டிருந்த இந்திய தேசியக் கொடியை அகற்றி விட்டு, சீக்கியக் கொடி ஏற்றப்பட்டது.[21][22] [23][24] [24][25]தில்லி செங்கோட்டை கலவரத்திற்கு காரணமானவர் என தீப் சிங் சித்து மற்றும் சாதனா மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.[26][27][28][29] [30][31].[32][33][34]16 ஏப்ரல் 2021 அன்று சித்து பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.[35]

பஞ்சாபின் வாரிசுகள் இயக்கம்

செப்டம்பர் 2021ல் இந்திய அரசிடமிருந்து வேளாண் குடிமக்களின் உரிமைகளுக்காக, பஞ்சாபின் வாரிசுகள் (Waris Punjab De) எனும் அரசியல் இயக்கத்தை நிறுவினார். [36][37][11]

மரணம்

15 பிப்ரவரி 2022 அன்று தீப் சிங் சித்து தமது 37வது அகவையில் அரியானா மாநிலத்தில் சாலை விபத்தில் காலமானார்.[38][39][40][41]

இதனையும் காண்க

குறிப்புகள்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தீப்_சிங்_சித்து&oldid=3781046" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்