துரை வையாபுரி

துரை வைகோ அல்லது கோபால்சாமி துரை வையாபுரி என்பவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகச் செயலாளராவார்[4][5][6] இவர் மதிமுக பொதுச்செயலாளார் வை. கோபால்சாமியின் மகனாவார்.

துரை வையாபுரி
பிறப்பு1972
தேசியம்இந்தியர்
பணிஅரசியல்வாதி
அரசியல் கட்சிமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
பெற்றோர்
  • வைகோ (தந்தை)
  • ரேணுகாதேவி (தாய்)
வாழ்க்கைத்
துணை
கீதா[1]
பிள்ளைகள்
  • வருண்
  • வானதிரேணு
[2][3]

இளமைக் காலம்

இவர் 1972 ஆம் ஆண்டு வைகோ மற்றும் ரேணுகாதேவி ஆகிய தம்பதியர்க்கு மகனாகப் பிறந்தார். சென்னை சின்மயா வித்யாலயா பள்ளி மற்றும் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்தார்[7]

அரசியல் வாழ்க்கை

இவர் மதிமுக கட்சியின் முக்கியத் தேர்தல் பரப்புரையாளர்களுள் ஒருவராக இருந்தார்.[8] மதிமுக கட்சியின் இணையத்தளப் பிரிவிலும் இயங்கி வருபவர்.[9][10] 2014 இந்தியப் பொதுத் தேர்தலின் போது பா.ஜ.க. கட்சிக்கு ஆதரவாகவும்[11] தே.மு.தி.க. கட்சிக்கு ஆதரவாகவும்[12] தேர்தல் பரப்புரையில் இறங்கியவர். இவர் 2014இல் பட்டாசு தொடர்பாக இந்திய மத்திய அரசு விடுத்த புதிய சட்டத்தை எதிர்த்து, சிவகாசியில் உந்துருளி ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார்.[13] இவர் 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் மதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை ஆற்றினார்.[14] 2021 அக்டோபரில் மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளராகப் பதவியேற்றார்.[15]

தொழில்

இவர் "இந்திய புகையிலை குழுமம்" என்னும் நிறுவனத்தில் பங்குத்தொகை வைத்திருக்கிறார்.[16] இந்த பங்குத்தொகை விவகாரம் மதிமுகவின் எதிர்த்தரப்புக் கட்சிக்காரர்களால் அதிகம் விமர்சிக்கப்படுகிறது.[17][18] மேலும் இவர் வீ இரியாலிட்டி (V Realty) தனியார் வரையறுக்கப்பட்டது என்ற நிறுவனத்துக்கு இயக்குநராகவும் உள்ளார்.[19]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=துரை_வையாபுரி&oldid=3915853" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை