துல்லா பட்டி

அப்துல்லா பட்டி (Abdullah Bhatti) என்ற இயற்பெயருடைய துல்லா பட்டி (Dulla Bhatti அல்லது Dullah Bhatti) புகழ்பெற்ற பஞ்சாபிய நாட்டுப்புற நாயகனும் பேரரசர் அக்பர் ஆட்சியில் முகலாயருக்கு எதிராகப் போராடிய விடுதலை வீரரும் ஆவார். இவர் பஞ்சாபின் மைந்தர் என்றும் பஞ்சாபின் இராபின் ஊட் என்றும் பரவலாக்க் குறிப்பிடப்படுகின்றார். இவர் 1599இல் மரணமடைந்தார்.[1]

துல்லா பட்டி
மியானி சாகிபு கப்ரிசுத்தான் (கல்லறை)யில் நல்லடக்கம்
பிறப்புநடு-16ஆவது நூற்றாண்டு
சந்தல் பார், பஞ்சாப் பகுதி, இந்தியா
(தற்கால பாக்கித்தான்)
இறப்பு1599
லாகூர், பஞ்சாப் பகுதி, இந்தியா
(தற்கால பாக்கித்தான்)
மற்ற பெயர்கள்அப்துல்லா பட்டி

வாழ்க்கை

துல்லா பட்டி ராஜ்புத் முஸ்லிம் பட்டி இனத்தைச் சேர்ந்தவர்; ஊரக விவசாயி அல்லது நிலக்கிழாராக இருந்தார்.[2] இளைஞராக, உள்ளூர் பஞ்சாபிகளுக்கு மொகலாய அரசினர் இழைத்த அநீதியைக் கண்டு பொங்கி எழுந்து அவர்களுக்கு எதிராக மாறினார். மொகலாயர்களுக்கு எதிராக கரந்தடிப் போர் முறையில் போரிட்டு 10, 12 ஆண்டுகளுக்கு வெற்றியும் பெற்று வந்தார்.[3] இருப்பினும் சிலர் காட்டிக் கொடுத்தமையால் மொகலாயர்களிடம் இறுதியில் தோல்வியடைந்தார்.[4] லாகூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டார். 1599இல் அங்கு தூக்கிலிடப்பட்டார்.[5]

பரவல் இலக்கியத்திலும் பண்பாட்டிலும் இடம் பெற்றமை

  • பஞ்சாபியருக்கு இன்றும் பட்டி மிகப் பெரிய நாயகனாக விளங்குகின்றார். மரபுவழி நாட்டார் பாடல்களில் இவர் பெரிதும் இடம் பெறுகிறார்.[6]
  • மரபுசார் தாதி நிகழ்ச்சிகளில் நினைவு கூரப்படுகிறார்; காட்டாக கவிதைகள் நடிக்கப்படுகையில் , நடிகர்கள் இவரது வீரச் செயல்களை செய்து காட்டுகின்றனர்.
  • பல நூல்களும், புனைவுக் கதைகளும் நாடகங்களும் இவரது வாழ்க்கையையும் வீரச் செயல்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. இதில் 1973இல் பாக்கித்தானிய எழுத்தாளர் நஜம் உசைன் சையது எழுதிய தக்த் லாகூர் என்ற நாடகம் மிகவும் புகழ்பெற்றது.
  • பல உருது மற்றும் பஞ்சாபி திரைப்படங்கள் இவரை வைத்து எடுக்கப்பட்டுள்ளன; 1956இல் வெளியான புகழ்பெற்ற இயக்குநர் அன்வர் கமால் பாஷாவின் துல்லா பட்டி குறிப்பிடத்தக்கதாகும்.


மேற்சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=துல்லா_பட்டி&oldid=2641844" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை