தெய்வ வாக்கு

தெய்வ வாக்கு (Deiva Vaakku) 1992 இல் வெளிவந்த இந்திய தமிழ்த்திரைப்படம் ஆகும். இப்படத்தை எம். எஸ். மாது இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் கார்த்திக் மற்றும் ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை டி. சிவா தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்த இத்திரைப்படம் 1992 செப்டம்பர் மாதம் 11 அன்று வெளியானது. இப்படம் சராசரி லாபத்தையே ஈட்டியது.[1][2] தெலுங்கு மொழியில் "சங்கீர்த்தனா" என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டு 1997 ல் வெளிவந்தது.

தெய்வ வாக்கு
இயக்கம்எம். எஸ். மாது
தயாரிப்புடி. சிவா
கதைஎம். எஸ். மாது
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். ரவிசங்கர்
படத்தொகுப்புஜி. ஜெயச்சந்திரன்
ஆர். ஆர். இளவரசன்
கலையகம்அம்மா கிரியேஷன்ஸ்
விநியோகம்அம்மா கிரியேஷன்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 11, 1992 (1992-09-11)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச் சுருக்கம்

அம்சவேணி (ரேவதி (நடிகை)) குழந்தைப்பருவம் முதலே தேவியின் அருள் வாக்கினை சொல்லி வருபவராக இருக்கிறார். அதனால் அந்த கிராமமே அவரை மிகவும் மரியாதையாகவும் நன்றியுடனும் பார்க்கிறது. ஒரு சமயம் கிராமத்தில் ஏற்பட்ட கடும் வறட்சிக்குப் அம்சவேணியின் அருள் வாக்கு அருள்கிறார். பின்னர் தேவியின் அருளால் மழை பொழிகிறது. அவருடைய சகோதரன் என்று சொல்லிக் கொண்டு அக்கிரமத்தில் வசித்து வரும் வல்லத்தார் (விஜயகுமார்) தனது தங்கையின் சக்திகளைப் பயன்படுத்தி தன்னைப் பணக்காரக்கிக் கொள்கிறார். அக்கிராமத்தில் தம்பித்துரை (கார்த்திக்) என்பவன் வசித்து வருகிறான். அவன் குடிகாரனாக இருந்தாலும் அவனது எண்ணம் மிகவும் மேன்மையானதாக இருக்கிறது. இவன் மீது அம்சவேணிக்கு காதல் உண்டாகின்றது. அம்சவேணி சாதாரன வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு தன்னைத் திருமணம் செய்து கொள்ள தம்பித்துரையை வற்புறுத்துகிறாள்.

இதனை அறிந்த வல்லத்தார் அம்சவேணியின் முடிவில் அதிருப்தி அடைகிறார். அவர்கள் இருவருக்கும் இடையேயான வசதி வாய்ப்புகளைக் கொண்டும் இத்திருமணத்தை மறுக்கிறார். மேலும், அம்சவேணியின் அருள் வாக்கினால் தனக்கு வரும் பணம் வராமல் நின்று போய் விடும் என்பதாலும் அவர்கள் இருவரும் இணைவதை எதிர்க்கிறார். எனவே தம்பித்துரை தனது சகோதரியை திருமணம் செய்வதிலிருந்து பல்வேறு வழிகளில் தடுக்க முயற்சிக்கிறார். கடைசியில் வல்லத்தார் அவரது முயற்சியில் வென்றாரா? அல்லது தம்பித்துரை மற்றும் அம்சவேணி வாழ்வில் இணைந்தனரா? என்பது மீதிக்கதையாகும்.

நடிகர்கள்

ஒலிப்பதிவு

தெய்வ வாக்கு
ஒலிப்பதிவு
வெளியீடு1992
ஒலிப்பதிவு1992
இசைப் பாணிபடத்தின் ஒலிப்பதிவு
நீளம்24:29
இசைத் தயாரிப்பாளர்இளையராஜா

இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். இதன் இசை 1992 இல் வெளியானது. ஐந்து பாடல்கள் கொண்ட இதன் பாடல்களை வாலி, கங்கை அமரன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[3] இப்படத்தில் இடம் பெற்ற "வள்ளி வள்ளி என வந்தாள்" என்ற பாடல் சிவரஞ்சனி இராகத்தை அடிப்படையாகக் கொண்டு இசைக்கப்பட்டிருந்தது.[4]

தடம்பாடல்பாடியவர்(கள்)பாடலாசிரியர்காலம்
1"கத்துதடி ராக்கோழி"இளையராஜாவாலி4:49
2" இந்த அம்மனுக்கு எந்த ஊரு"இளையராஜாவாலி4:53
3"ஊரெல்லாம் சாமியாக"ஜெயச்சந்திரன், எஸ். ஜானகிகங்கை அமரன்4:54
4"ஒரு பாட்டாலே சொல்லி"எஸ். பி. பாலசுப்பிரமணியம்கங்கை அமரன்4:58
5"வள்ளி வள்ளி என"இளையராஜா, எஸ். ஜானகிவாலி4:55

விமர்சனம்

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இவ்வாறு எழுதியது "இங்கே கதைக்களம் மிகவும் சுமாராக இருக்கிறது, திரைக்கதை அவ்வளவு ஈர்க்கக்கூடியதாக இல்லை. ஆனால் திறமையாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரேவதியின் அருமையான நடிப்புத்திறன் ஒட்டு மொத்தப் படம் நகர்வதற்கு மிகவும் துணை போகிறது."[5] "நியூ ஸ்டிரைட் டைம்ஸ்" இவ்வாறு எழுதியது. "கோவிலில் உள்ள குறி சொல்லிகளிடம் அடிக்கடி சென்று ஆலோசனை பெற விருப்பம் உள்ளவர்களுக்கு இப்படம் பிடிக்கும்" என எழுதியது.[6]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தெய்வ_வாக்கு&oldid=3873166" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை