அழுகிய தக்காளிகள்


அழுகியத் தக்காளிகள் (Rotten Tomatoes) திரைப்பட மதிப்புரைகளுக்காகவும் செய்திகளுக்காகவும் ஆகத்து 1998இல் துவங்கப்பட்ட வலைத்தளம் ஆகும்; இது பரவலாக திரைப்பட மதிப்புரைத் திரட்டி என அறியப்படுகின்றது. இத்தளத்தில் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. மோசமான நாடகங்களை எதிர்த்து பார்வையாளர்கள் அழுகியத் தக்காளிகளை எறியும் வழக்கத்தை ஒட்டி இதன் பெயர் அமைந்துள்ளது. இதனை சென் டுயொங் துவக்கினார். இதன் உரிமை சனவரி 2010 முதல் பிக்ஸ்டெர் என்ற நிறுவனத்திற்கு மாறியது. 2011இல் இந்த நிறுவனத்தை வார்னர் புரோஸ். வாங்கியது.

அழுகியத் தக்காளிகள்
Rotten Tomatoes
வலைத்தள வகைதிரைப்பட மதிப்புரை திரட்டி, பயனர் சமூகம்
உரிமையாளர்என்பிசியுனிவர்சல் (காம்காஸ்ட்)
வார்னர் புரோஸ். (டைம் வார்னெர்)[1][2]
வணிக நோக்கம்ஆம்
பதிவு செய்தல்விருப்பத் தேர்வு
வெளியீடுஆகத்து 12, 1998; 25 ஆண்டுகள் முன்னர் (1998-08-12)
அலெக்சா நிலை 552 (Dec 2015)[3]
உரலிrottentomatoes.com

2007இலிருந்து இந்த வலைத்தளத்தின் தலைமை ஆசிரியராக மாட் அட்சிட்டி இருந்து வருகின்றார்.[4] இந்த வலைத்தளத்தின் உள்ளூர் பதிப்புக்கள் ஐக்கிய இராச்சியம், இந்தியா மற்றும் ஆத்திரேலியாவில் வெளியாகின்றன. 2009இன் துவக்கத்திலிருந்து செப்டம்பர் 2010 வரை இந்த வலைத்தளத்தின் உள்ளடக்கத்தையும் நிகழ்ச்சி நடத்துபவர்களையும் கொண்டு கரண்ட் தொலைக்காட்சியில் வாரமொருமுறை தி ராட்டன் டொமட்டோசு ஷோ ஒளிபரப்பானது.

முதல் பத்து திரைப்படங்கள்

அழுகியத் தக்காளிகள் தளத்தின் "எக்காலத்தும் முதல் 100 திரைப்படங்களிலிருந்து" முதல் பத்து இடங்கள் [5]
எண்திரைப்படம்ஆண்டுதர மதிப்பீடுமதிப்புரைகளின்
எண்ணிக்கை
1தி விசார்டு ஆப் ஆசு193999%108 [6]
2தி தேர்ட் மேன்1949100%76[7]
3சிட்டிசன் கேன்1941100%70[8]
4தி கேபினட் ஆப் டாக்டர் கேலிகரி1920100%48[9]
5ஆல் அபவுட் ஈவ்1950100%63[10]
6மாடர்ன் டைம்சு1936100%53[11]
7தி காட்பாதர்197299%84[12]
8ஈ.டி. த எக்ஸ்ரா டெரஸ்ரியல்198298%112[13]
9மெட்ரோபொலிஸ்192799%115[14]
10சிங்கிங் இன் தி ரைன்1952100%48[15]

*தகுதிபெறும் திரைப்படங்கள் விமரிசகர்களிடமிருந்து குறைந்தது 40 மதிப்புரைகளைப் பெற்றிருக்க வேண்டும். தரமதிப்பீடு சரிக்கட்டப்பட்ட புள்ளிகளின் அடிப்படையிலானது.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அழுகிய_தக்காளிகள்&oldid=3458406" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை