நெட்டைக் கொக்கு

பறவை இனம்

நெட்டைக் கொக்கு (Demoiselle crane) என்பது கருங்கடலில் இருந்து மங்கோலியா மற்றும் வடகிழக்கு சீனா வரையிலான மத்திய யூரோசைபீரியாவில் காணப்படும் ஒரு கொக்கு இனம் ஆகும். இவை துருக்கியில் சிறிய அளவில் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த கொக்குகள் வலசை செல்லும் பறவைகளாகும். மேற்கு யூரேசியாவிலிருந்து வரும் பறவைகள் ஆப்பிரிக்காவில் குளிர்காலத்தைக் கழிக்கும், ஆசியா, மங்கோலியா, சீனாவிலிருந்து வரும் பறவைகள் இந்திய துணைக் கண்டத்தில் குளிர்காலத்தைக் கழிக்கும். இந்த பறவை இந்தியாவின் பண்பாட்டில் குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்தது, இது கூஞ்ச் அல்லது குர்ஜா என்று அழைக்கப்படுகிறது. [3]

நெட்டைக் கொக்கு
இராசத்தானின் சுருவில் உள்ள தால் சாப்பர் சரணாலயத்தில் கூட்டம்
CITES Appendix II (CITES)[2]
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
Gruidae
பேரினம்:
Grus
இனம்:
G. virgo
இருசொற் பெயரீடு
Grus virgo
(லின்னேயஸ், 1758)
[originally Ardea]
Range of G. virgo     Breeding      Passage      Non-breeding
வேறு பெயர்கள்
  • Anthropoides virgo (Linnaeus, 1758)
  • Ardea virgo Linnaeus, 1758
  • Grus ornata Brehm, CL, 1855

விளக்கம்

முகம்

நெட்டைக் கொக்கு 85–100 செமீ (33.5–39.5 அங்குலம்) நீளம், 76 செமீ (30 அங்குலம்) உயரம் மற்றும் 155–180 செமீ (61–71 அங்குலம்) இறக்கை நீளம் கொண்டது. இதன் எடை 2–3 கிலோ (4.4–6.6 பவுண்ட்) ஆகும். [4] நெட்டைக் கொக்கு கருவால் பெருங்கொக்கை விட சற்றே சிறியது என்றாலும் அதைவிட உயரமானது. மேலும் அதே போன்ற சிறகுத்தோற்றத்தைக் கொண்டுள்ளது. காதோடு வெள்ளைக் கோடு செல்லக் காணலாம். கழுத்து கறுப்பு நிறம். கழுத்திலிருந்து நீண்ட தூவிகள் மார்புவரை தொங்கக்காணலாம்.

இவை உரத்த குரலில் குரல் எழுப்பக் கூடியவை. மற்ற கொக்குகளைப் போலவே இது ஒற்றைக் காலில் நின்றிருக்கும்.

நெட்டைக் கொக்கின் மென்மையான கன்னி போன்ற தோற்றத்திற்காக ராணி மேரி அன்டோனெட்டாவின் பெயரிடப்பட்டது. [5]

நடத்தையும் சூழலியலும்

வைஸ்பேடன் அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் உள்ள நெட்டைக் கொக்கின் முட்டை

பாலைவனப் பகுதிகள், பல வகையான புல்வெளிகள் (வெள்ளம், மலை, மிதமான மற்றும் வெப்பமண்டல புல்வெளி) உள்ளிட்ட பல்வேறு சூழல்களில் நெட்டைக் கொக்குகள் வாழ்கின்றன. இவை பெரும்பாலும் ஓடைகள் அல்லது ஏரிகளுக்குள் கூட்டமாக காணப்படும். கூடு கட்டும் போது, இவற்றையும் இவற்றின் கூடுகளை மறைக்கும் அளவுக்கு மறைவிடமான பகுதியில் கூடுகட்டுகின்றன. அதேசமயம் இவை முட்டைகளை அடைகாக்கும் போது வேட்டையாடிகளைக் கவனிக்க ஏற்ற அளவுக்கு குறுகிய தாவரங்கள் உள்ள இடமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றன.

நெட்டைக் கொக்குகள் உலகின் கடினமான வலசையை மேற்கோள்கின்றன. ஆகத்து பிற்பகுதியில் இருந்து செப்டம்பர் வரை, இவை 400 பறவைகள் வரை கூட்டமாக ஒன்றாக கூடி, குளிர்காலத்தில் வலசை செல்ல தயாராகிறன. தெற்கு நோக்கி வலசை புறப்படும் போது, நெட்டைக் கொக்குகள் அனைத்து கொக்குகளையும் போல, தலையையும், கழுத்தையும் நேராக முன்னோக்கியும் கால்களை நேராக பின்னால் நீட்டியும் பறக்கின்றன. அப்போது அவை 16,000–26,000 அடிகள் (4,900–7,900 மீட்டர்கள்) உயரத்தை அடைகின்றன. இந்தக் கடினமான பயணத்தில் அவை இமயமலைகளைக் கடந்து இந்தியாவில் குளிர்காலம் அதிகமாக இருக்கும் இடங்களுக்குச் செல்கின்றன. இந்தப் பயணத்தில் இதில் பல பறவைகள் சோர்வு, பசி, பொன்னாங் கழுகுகளால் வேட்டையாடப்படுதல் போன்றவற்றால் இறக்கின்றன. கைபர் கணவாய் வழியாக எல்லையைக் வரம்பை கடப்பது போன்ற எளிமையான பாதைகள் சாத்தியம், என்றாலும், இவை செல்ல விரும்பும் பாதை எண்ணற்ற இடப்பெயர்வு சுழற்சிகளால் கடினமாக இணைக்கப்பட்டுள்ளது. இவை குளிர்காலத்தில் வந்திறங்கும் இடங்களில் கருவால் பெருங்கொக்குகளுடன் திரள்வதைக் காணலாம். அவற்றின் மொத்த எண்ணிக்கை 20,000 பறவைகள் வரை எட்டுகிறது. இந்தக் கூட்டத்தில் நெட்டைக் கொக்குகள் தனி சமூக குழுக்களை பராமரிக்கிறன. மீண்டும் இவை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், கூடுகட்டும் பகுதிக்குச் செல்ல வடக்கு நோக்கி நீண்ட பயணத்தை மீண்டும் மேற்கொள்கின்றன.

இந்தியாவில் இராசத்தானில் உள்ள கிச்சானில், உள்ள கிராமவாசிகள் இடம்பெயர்ந்து வரும் இந்தக் கொக்குகளுக்கு உணவளிக்கிறனர். மேலும் இங்கு ஆண்டுதோறும் பெருவாரியாக கூடும் பறவைகள் காணதக்க காட்சிகளாக மாறிவிட்டன.

நெட்டைக் கொக்கு செம்பட்டியலில் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களில் கவலைக் குறைந்ததாக மதிப்பிடப்படுகிறது. ஆப்பிரிக்க-யூரேசிய புலம்பெயர் நீர்ப்பறவைகளின் பாதுகாப்பு ஒப்பந்தம் ( AEWA ) பொருந்தக்கூடிய பறவை இனங்களில் இதுவும் ஒன்றாகும்.

பண்பாட்டில்

இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் பிஷ்னோய் கிராமத்தில் உள்ள நெட்டைக் கொக்குகள் ( க்ரஸ் விர்கோ )

நெட்டைக் கொக்கு வட இந்திய மொழிகளில் கூஞ்ச் /குர்ஜன் ( கூஞ்ச், குர்ஜான் கூன்ஜம், கூர்ஜ் ) என்று அழைக்கப்படுகிறது. மேலும் இப்பகுதியின் இலக்கியம், கவிதை , மொழிச்சொற்களில் இது முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. அப்பகுதியில் அழகான பெண்களை பெரும்பாலும் கூஞ்ஜுடன் ஒப்பிடப்படுகிறனர். ஏனெனில் அதன் நீண்ட, மெல்லிய வடிவம் அழகானதாகக் கருதப்படுகிறது. வீட்டிலிருந்து வெகுதூரம் சென்றவர்கள் அல்லது அபாயகரமான பயணங்களை மேற்கொள்பவர்களுக்காக குறிப்பிடப்படும் உருவக குறிப்புகளில் பெரும்பாலும் கூஞ்ச் பற்றி செய்யப்படுகின்றன. [6]

இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ள கிச்சனில் நெட்டைக் கொக்குகள்

கூஞ்ச் என்ற பெயர் சமசுகிருத சொல்லான க்ராஞ்சில் இருந்து பெறப்பட்டது. இது கொக்குக்கான இந்தோ-ஐரோப்பிய சொல்லாகும். [3] இந்து இதிகாசமான ராமாயணத்தை இயற்றிய வால்மீகிகியின் வாழ்கை குறித்த பழங்கதையில், ஜோடியான நெட்டைக் கொக்குகளில் ஆண் கொக்கு கொல்லபட்ட காட்சியால் ஏற்பட்ட துன்பத்தால் அவரது முதல் வசனம் உருவானதாகக் கூறப்படுகிறது. ஒன்றோடு ஒன்று அன்பைப் பரிமாறிக் கொண்டிருந்த கொக்குகளில் ஆண் கொக்கு கொல்லப்பட்டதால் பெண் கொக்கு சோகத்தில் தவிப்பதைப் பார்த்து, அவர் வேடனை ஒரு வசனத்தால் சபித்தார். இந்த தருணத்திற்கு முந்தைய அனைத்து கவிதைகளும் மனிதரால் உருவாக்கப்பட்டவை அல்ல என்று வட இந்தியாவில் பாரம்பரியமாக கருதப்படுவதால், நெட்டைக் கொக்குகள் பற்றிய இந்த வசனம் மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் கவிதை என்று கருதப்படுகிறது.  

இடம்பெயர்வுகளின் போது கூஞ்சின் பறவை பறக்கும் அமைப்பு பண்டைய இந்தியாவில் காலாட்படை அமைப்புகளுக்கு முன் உதாரணாக இருந்தது. மகாபாரத இதிகாசத்தில் குருசேத்திரப் போரின் இரண்டாம் நாளில் போரிடும் இரு தரப்பினரும் கூஞ்ச் வியூக அமைப்பை ஏற்றுக்கொண்டதை விவரிக்கிறது. [7]

பாஷ்டோவில் இந்த பறவை (ஜான்ரே) என்று அழைக்கப்படுகிறது. உருதுவில் இதைக் குறிப்பிடும் கூஞ்ச் என்ற பெயர் அழகான பெண்ணைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல ஜான்ரே என்னும் பாஷ்டோ என்ற சொல்லும் அழகானப் பெண்ணைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நெட்டைக்_கொக்கு&oldid=3771418" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்