பதுளை

இலங்கையின் பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்

6°59′5″N 81°3′23″E / 6.98472°N 81.05639°E / 6.98472; 81.05639

பதுளை

பதுளை
மாகாணம்
 - மாவட்டம்
ஊவா மாகாணம்
 - பதுளை
அமைவிடம்6°59′02″N 81°03′22″E / 6.984°N 81.056°E / 6.984; 81.056
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 680 மீட்டர்

கால வலயம்இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
(2001)
 - நகரம் (2001)
69971

 - 40920

பதுளை (Badulla, බදුල්ල சிலவேளைகளில் வதுளை) இலங்கையின் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள மாநகரசபை ஆகும். பதுளை என்பது பதுளை மாவட்டத்தினதும் ஊவா மாகாணத்தினதும் தலைநகரமுமாகும். பதுளை கண்டிக்குத் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையின் கடைசி தொடருந்து நிலையமான பதுளை, ஆளிஎலை தொடருந்து நிலையத்துக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகளில் இந்நகரை அடையலாம்.

புவியியலும் காலநிலையும்

பதுளை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 680 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 23 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2000-2500 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.

மக்கள்

இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாநகரசபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர்.2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:

பிரிவுமொத்தம்சிங்களவர்இலங்கைத் தமிழர்இந்தியத் தமிழர்முஸ்லிம்கள்பரங்கியர்ஏனைய
மொத்தம்69971489393183109216083135710
நகரம்409202996027171989551989537
கிராமம்19790182693595155474654
தோட்டப்புறம்9261710107841717015

2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:

பிரிவுமொத்தம்பௌத்தர்இந்துஇஸ்லாம்கத்தோலிக்கம்ஏனைய கிறிஸ்தவம்ஏனைய
மொத்தம்6997148191128856807132073830
நகரம்40920293854051618687839525
கிராமம்19790181207525941821420
தோட்டப்புறம்92616868082272602015

கைத்தொழில்

இங்கு மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது.

குறிப்புகள்


உசாத்துணைகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பதுளை&oldid=3851885" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை