பள்ளியின் முதல் நாள்

பள்ளியின் முதல் நாள் (First day of school) ஒரு கல்வியாண்டின் முதல் நாளாகும். இது வழக்கமாக வடக்கு அரைக்கோளத்தில் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரிலும் ,தெற்கு அரைக்கோளத்தில் சனவரி அல்லது பிப்ரவரியிலும் இருக்கும், ஆனால் இந்த கால அளவானது நாட்டுக்கு நாடு வேறுபடும்.

பள்ளியின் முதல் நாளின் போது மாணவர்கள்.

ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா

எகிப்து

எகிப்தில், கல்வி ஆண்டு பொதுவாக செப்டம்பர் மூன்றாம் பிற்பகுதியில் (குறிப்பாக செப்டம்பர் கடைசி பத்து நாட்களில் முதல் சனிக்கிழமை) தொடங்குகிறது. எடுத்துக்காட்டாக, 2019 இல், பள்ளி செப்டம்பர் 21, சனிக்கிழமை தொடங்கியது, 2018 இல், அது செப்டம்பர் 22 சனிக்கிழமை தொடங்கியது. இந்த தேதிகள் கல்வி அமைச்சகம் (எகிப்து) மற்றும் உயர்கல்வி அமைச்சகம் [1] ஆகியவற்றால் வழங்கப்படுகின்றன. இவை உள்ளூர் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் பொருந்தும். இருப்பினும், தனியார் நிறுவனங்களாக இருப்பின் அவர்களது விருப்பதிற்கு ஏற்ப நாளினைத் தேர்வு செய்யலாம். பொதுப் பள்ளிகள் மற்றும் தேசியப் பள்ளிகளுக்கான கல்வி ஆண்டு இரண்டு பருவங்களைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் சுமார் 15 வாரங்கள் இருக்கும் . ஆனால் இந்தக் கால அளவானது தரம் அல்லது பாடங்களைப் பொறுத்து மாறுபடலாம்.

மொராக்கோ

மொராக்கோவில், கல்வியாண்டு செப்டம்பரில் தொடங்கி சூன்/சூலை தொடக்கத்தில் முடிவடைகிறது. பருவம் 1 (இலையுதிர் காலம்): செப்டம்பர் - சனவரி வரை , பருவம் 2 (வசந்த காலம்): பிப்ரவரி - சூன்/சூலை தொடக்கத்தில் முடிவடைகிறது.

இந்தியா

இந்தியாவில் கோடை விடுமுறைக்குப் பிறகு சூன் மாதம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. ஆரம்ப, இடைநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் உட்பட K-12 முழுமைக்கும் இது பொருந்தும். மாநில வாரியப் பள்ளிகள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் ஆண்டுத் தேர்வுகளை நடத்துகின்றன, மேலும் கோடை விடுமுறைக்குப் பிறகு சூன் மாதத்தில் புதிய கல்வி ஆண்டு தொடங்கும். இருப்பினும், ICSE மற்றும் CBSE போன்ற சில வாரியங்களுக்கு இது மாறுபடும். அவர்களின் ஆண்டுத் தேர்வுகள் பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படுகின்றன, அதன் பிறகு புதிய கல்வி ஆண்டு மார்ச் கடைசி வாரத்தில் தொடங்குகிறது.

இந்தோனேசியா

இந்தோனேசியாவில், பள்ளியின் முதல் நாள் பொதுவாக சூலை நடுப்பகுதியில் இருக்கும்.

ஈரான்

ஈரானில், பள்ளியின் முதல் நாள் செப்டம்பர் பிற்பகுதியில் இருக்கும்.

இஸ்ரேல்

இஸ்ரேலில் பள்ளியின் முதல் நாள் செப்டம்பர் 1 ஆக இருக்கும் அன்றைய நாள் ஓய்வு நாளாக இருந்தால் செப்டம்பர் 2ஆம் நாள் பள்ளி திறக்கப்படும் தொடக்கப்பள்ளிக்கு சூன் 30-ம் தேதியும், மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு சூன் 20-ம் தேதியும் பள்ளிக் கடைசி நாள்.

போர்ச்சுகல்

போர்ச்சுகலில் பள்ளி செப்டம்பர் தொடக்கத்தில், முதல் வாரத்தில் தொடங்குகிறது. 2019 ஆம் ஆண்டில் பள்ளி செப்டம்பர் 10-13 க்கு இடையில் தொடங்குகிறது. [2]

சான்றுகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை